"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்', "தன் வினை தன்னைச் சுடும்' என்பன பழமொழிகள்.
திருதராஷ்டிரனுக்கு ஏன் கண்கள் குருடாயின? ஏன் அவனுடைய நூறு பிள்ளைகள் இறந்துபோனார்கள்?
குருக்ஷேத்திரப்போர் முடிந்து தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், ""கிருஷ்ணா, நான் குருடனாய் இருந்த போதிலும் விதுரன் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?'' என்றார்.
அதற்கு கண்ணன் நேரடியாக பதில் சொல்லாமல், ""உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன்பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால் நீ கேட்டதற்கு நான் விடையளிக்கிறேன்'' என்று கதையைக் கூறினார்.
""நீதி தவறாது ஆட்சிசெய்த ஒரு அரசனிடம் வசிஷ்டரின் சீடன் ஒருவன் சமையல்காரனா கச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்தியேகமாக கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளி னால் வெகுசீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு ஒரு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசுபெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது. அதன்படி, அரண்மனைக் குளத்திலிலிலிருந்த அன்னப்பறவையின் குஞ்சு ஒன்றைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.
தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த் தத்தின் சுவையில் மயங்கிய மன்னன், அடிக்கடி அதை சமைக்கக் கட்டளையிட்டு சமையல்காரனுக்கு பெரும்பரிசும் அளித்தான். பின்னர் இதையறிந்த வசிஷ்டர் சீடனை சபித்தார்.
திருதராஷ்டிரா, இப்போது சொல்!
அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்?'' என்று கேட்டார்.
""சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும், அதைக் கண்டுபிடிக்காத விவேகமற்ற அரசன்தான் அதிக தவறிழைத்தவனாகிறான்!'' என்றான் திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், ""திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும் நியாயம் தவறாது "மன்னவன் செய்ததே தவறு' என கூறினாய். அத்தகைய நீதிபரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல் வாழ்க்கை யைத் தந்தது.
ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியது தான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னப்பறவையின் குஞ்சுகளை உணவாக சாப்பிட்டிருக்கிறாய்!
அந்த குஞ்சுகள்,
அவற்றின் தாய்ப்பறவைகள் எத்தகைய துயரும் வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கி றாய்! தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ- அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு உனக்கு கண்கள் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்! தெய்வத்தின் சந்நிதானத்தில் ஒருபோதும் நீதி தவறாது! அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!'' என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்தான் திருதராஷ்டிரன்.
இப்படி முற்பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ தவறு கள் செய்துவிட்டு, இப்பிறவியில் தொடர் தோல்விகளை சந்தித்து விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் களுக்கு விமோசனம் அளிக்கின்ற அற்புதமான ஒரு திருத்தலம்தான் திருநீடூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசோமநாத சுவாமி திருக் கோவில்.
இறைவன்: சோமநாத
சுவாமி, அருள்சோம நாதேஸ்வரர்.
இறைவி: வேயுறு தோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை.
உற்சவர்: சோமாஸ்கந்தர்.
ஆகமம்/ பூஜை: காரணாகமம்.
புராணப் பெயர்: திருநீடூர்.
ஊர்: நீடூர்.
விசேஷ விநாயகர்: மூன்று விநாயகர்- சிந்தாமணி கணபதி, செல்வமகா கணபதி, சிவானந்த கணபதி.
தலவிருட்சம்: மகிழ மரம்.
தீர்த்தம்: ஒன்பது தீர்த்தம்.
சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், அப்பர், சுந்தரரால் பாடல்பெற்றதும், தேவராப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரி வடகரையின் 21-ஆவது தலமாகப் போற்றப் படுவதுமான பெருமை வாய்ந்தது இவ்வாலயம். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் சிறப் பாக இயங்கிவருகின்றது.
"அல்லல் உன்னை தீர்த்திடுவானை
அடைந்தவர்க்கு அமுதாயிடுவானைக்
கொல்லை வல்லரவம் அசைத்தானைக்
கோல மார்கரி யின்உரி யானை
நல்லவர்க்கு அணியானவன் தன்னை
நானும் காதல் செய்கின்ற பிரானை
எல்லிலிலி மல்லிலிகையே கமழ நீடூர்
ஏத்தி நாமபணி யாவிட லாமே.'
-சுந்தரர்
உலகின் முடிவில் ஊழிக்
காலத்திலுங்கூட அழிக் கப்பட முடியாத நிலையில் நெடுங்காலமாக நிலைத் திருக்கும் காரணமாக நீடூர் எனப்பெயர் பெற்று விளங்குகிறது இத்தலம்.
தலப்பெருமை
தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் முன் வினைப் பயனால் அடுத்த பிறவியில் நண்டாகப் பிறந் தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர், ""திருநீடூரில் உள்ள சிவனை வழிபட விமோசனம் கிடைக்கப்பெறும்'' என்றார். அதன்படி தன்மசுதன் காவிரியாற்றில் நீராடி சிவனை வழிபட்டான். சிவன், அவனுக்கு அருள்சோமநாதேஸ்வரராகக் காட்சி கொடுத்ததுடன், அவன் தனக் குள் ஐக்கியமாவதற்கு வசதியாக லிலிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவிலிலிருந்த அசுரன் லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். நண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் உள்ளது.
தல வரலாறு
தேவேந்திரன் காலை நேரத்தில் சிவபூஜை செய்வது வழக்கம். ஒருசமயம் அவன் பூலோகத்திற்கு வந்தபோது காலை நேரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் சிவலிலிங்கம் எதுவும் தென்படவில்லை. எனவே காவிரியாற்றின் மணலை அள்ளி லிலிங்கமாகப் பிடித்து பூஜைசெய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலைப் பாடினான். மகிழ்ந்த சிவன் இந்திரனுக்கு நடனக்காட்சி அருளினார். "கானநர்த்தன சங்கரா' என இந்திரன் வணங்கினான். அன்றுமுதல் இந்த சோமநாதருக்கு கானநர்த்தன சங்கரன் என்ற பெயர் உண்டாயிற்று. அதன் பொருள், பாடலுக்கு இரங்கி ஆடிய தேவர் என்பது. பூஜை முடிந்தபின்பு இந்திரன் லிலிங்கத்தை அப்படியே விட்டுச் சென்றான். பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பப்பட்டது. லிங்கத்தில் இந்திரனின் விரல்தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.
முனையடுவார் நாயனார் வரலாறு
63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார் திருநீடூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர். "அறைகொண்ட வேல்நம்பி முனையடுவார்க்கடியேன்' என்று திருத்தொண்டர்தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
பங்குனி பூசத்தன்று அவதரித்த இவர் சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர். பகைவர் களைப் போர்முனையில் வென்று பெற்ற பெரு நிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மையுடையவர். போரில் பகைவர்களிடம் தோற்றவர்கள் இவரிடம் வந்து துணைவேண்டி னால், நடுநிலைமையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி லிபேசிக்கொண்டு, அவர் களுக்காகப் போர் செய்து பொருள் ஈட்டி, சிவனடியார்களுக்கு அறுசுவைக் கறிகளுடன் திருவமுது செய்வித்துக்கொண்டிருந்தார் முனையடுவார் நாயனார். "போர்முனையிற் கொல்லும் தொழிலே புயினும் அடியார்க்கு அமுதளித்தல் பெரும் பேறாம்' என்று, நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாதுறையும் பெருவாழ்வு பெற்றார்.
சிறப்பம்சங்கள்
=இத்தல விருட்சம் மகிழமரத்தடியில் ஐந்து நிமிடம் அமர்ந்தால் மனச்சுமையை இறக்கிவிட்டு மகிழ்வுடன் வெளியே செல்வதுபோன்ற உணர்வு ஏற்படுவது அனுபவப்பூர்வமான ஒன்று.
=எந்த செயலை யும் செய்யும்முன்பு முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கி விட்டு, பின்பு பெரிய வர்களின் ஆலோசனைகளைக்கேட்டு அதன் படி செயல்பட வேண்டும் என்பர். அதன்படி இத்தலத்தில் விநாயகரே ஆலோசனை சொல் லும் விநாயகராக பெரியவர், பழையவர், புனிதமானவர் என்னும் மூன்றுநிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங் களை சிந்தாமணி கணபதி, செல்வமகா கணபதி, சிவானந்த கணபதி என்றழைக் கின்றனர். புதிய செயல் தொடங்குபவர்கள் இவர்களை வணங்கி ஆலோசனை கேட்டு அதன்பின்பே செயலாற்றுகின்றனர்.
=சித்தர் முதுமக்கள், படைக்கும் தொழில்புரியும் பிரம்மதேவர் உள்ளிட்ட மூர்த்தியரும் இம்மூன்று அம்சங்களையும் தியானித்த பிறகே தம் பணியில் ஈடுபட்டு குறைகள் நீங்கி இன்பம் பெற்றனராம். இதை முதல் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் இராஜராஜன் ஆகிய சோழ மன்னர்கள்காலக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
=இத்தலத்தின் தீர்த்தம் ஒன்பது தீர்த்தம் எனப்படுகிறது. புஷ்கரணி, செங்கழு நீரோடை, ஆனந்த தீர்த்தம், பத்ரகாளி தீர்த்தம், பருதிகுண்ட தீர்த்தம், சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, வருணதீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகிய ஒன்பதும் சேர்ந்து ஒரே தீர்த்தமாக ஒன்பது தீர்த்தம் என்று போற்றப்படுகிறது.
=இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது. ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து ஒரே தீர்த்தமாகப் போற்றப்படுகின்ற ஒன்பது தீர்த்தம் இங்குள்ளது. இந்த புஷ்கரணியில் நீராடினால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
=பாம்பைப்போலவே தனது ஆத்ம சக்தியை ஆட்டிய பாம்பாட்டிச் சித்தர் அருள்பெற்ற இத்திருத்தலத்தில் அம்பாள் வேயுறுதோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே, இவளுக்கு ஆதித்ய அபயவரதாம்பிகை என்றும் பெயர் உண்டு. மாங்கல்ய தாரண தேவதையான இவளே இத்தலத்து விருட்சமான மகிழமரமாகவும் நிற்கிறாள் என்கின்றனர். இந்த விருட்சத்தை தொழுதக்கால் மகிழ்வான இல்லறம் கிட்டுவதோடு, தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது சித்தர்தம் வாக்கு.
=கோவிலுக்கு வெளியே வடக்கு நோக்கி பத்ரகாளியம்மன் தனிச் சந்நிதி கொண்டு அருள்கிறாள். பத்ரகாளியம்பிகை இத்தல சிவனை வழிபட்ட பின்பே கயிலை சென்றதாக தலபுராணம் சொல்கிறது.
=ஒவ்வோர் ஆண்டும் சூரியனின் ஆதிக்கங்கொண்ட ஆவணி மாதத்தில் சுவாமிமீது சூரியஒளி படுவது சிறப்பு.
=சனி கிரகம் சூரியனை எதிர்த்து அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ளார். கிரகத்தின் எதிர்மறையான அம்சத்தை அகற்று வதற்காக சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில், கிழக்கு நோக்கி தனிச் சந்நிதிகொண்ட அனுக்கிரக மூர்த்தி யாக (திருநள்ளாறில் உள்ளதுபோல) அருள் கிறார்.
=ஸ்ரீநடராஜர், சிவகாமியம்மை சுதைச்சிற்ப வடிவில் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இந்த திவ்ய மூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விரதமிருந்து வழிபட்டால் உடலிலிலிலிலுள்ள மச்சம், மாறாத வடு, தோலிலில் ஏற்பட்ட வெள்ளைப்புள்ளிகள், கறுப்புப்புள்ளி கள், தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
=ஆடி மாதப் பௌர்ணமியன்று சிவனுக்கு "கற்கடக பூஜை" சிறப்பாக நடைபெறும்.
=தினசரி இரண்டுகால பூஜைகள் நடப்பதோடு சிவனுக்குரிய அனைத்து விஷேசங்களும் நடக்கும். குறிப்பாக சித்ரா பௌர்ணமி, புரட்டாசி நவராத் திரி, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத் திரி, பங்குனி குருபூஜையும் சிறப்பாக நடக்கின்றன.
கோவில் அமைப்பு
நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, இரண்டு பெரிய பிராகாரங்களுடன் கிழக்கு, தெற்கு என இரண்டு நுழைவாயில்களுடன் திகழ்கிறது ஆலயம்.
சுவாமி சந்நிதியில் நுழைந்தால் பழங்கால கல்தூண்கள் நம்மை வியக்க வைக்கின்றன. மூலவர் சோமநாத சுவாமி இருதள விமானம் எனும் கீர்த்திமிகு விமானத்தின்கீழ் வெகுநேர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.
சுவாமி சந்நிதி கோஷ்டத்தில் வரலாற்றுச் சிற்பம், தலபுராணச் சிற்பம், சோழர்காலக் கல்வெட்டுகளுடன் கோஷ்ட தெய்வங்கள் முறையாக உள்ளன. தீர்த்தக்கிணறும் உள்ளது. நடராஜர், பைரவர், சூரியன், சந்திரன் உள்ளனர்.
இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன், முனையடுவார் நாயனார் வழிபட்டதும்; அப்பர், சுந்தரரால் பாடப்பட்டதும்; சூரிய நாராயணனே தங்கி அம்மையப் பனை தொழுதேத்தியதும்; பெரும் பதவிக்காரனான தேவேந்திரனே உருவாக்கித் தொழுததும்; நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களிலிலிலிருந்து நம்மை விடுவிக்கின்றதும்; விய ஆண்டு பங்குனியில் (5-4-2007) கும்பாபிஷேகம் கண்டு பொலிலிவுடன் காட்சி தருவதும்; சகல பிறவிகளிலும் ஏந்திய சாபங் களை நீக்கி நீடூழி வாழ்விப்பதுமான நீடூர் தலத் தில் அருளும் நிமலனாம் ஸ்ரீசோமநாதசுவாமி உடனுறை வேயுறுதோளியம்மையை, முனையடுவார் நாயனார் குருபூஜை நாளான பங்குனி மாதம் 10-ஆம் நாள்- பிரம்மோற்சவ நிறைவு நாளான 13-4-2019 சனிக்கிழமை பூச நட்சத் திரத்தன்று தொழுவோம். தோஷங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடர்வெற்றி யடைவோம்.
காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத்தொடர்புக்கு:
சிவசுப்பிரமணிய சிவாச்சார்யார், அலைபேசி- 97868 79971.
மெய்க்காவலர்- சுப்பிரமணியன்.
சோமநாதசுவாமி திருக்கோவில்,
நீடூர் (அஞ்சல்), மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்- 609 203.
அமைவிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து வடக்கே பட்டவர்த்தி செல்லும் வழியில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. பேருந்து வசதி நிறைய உண்டு.
படங்கள்: போட்டோ கருணா