Advertisment

நோய்களிலிருந்து காக்கும் நவரத்தினங்கள்! - பொ.பாலாஜிகணேஷ்

/idhalgal/om/navaratnams-protect-against-diseases-b-balajiganesh

பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ரத்தினக் கல் உண்டு. அந்த ரத்தினக் கல்லை அணிந்தால் அந்த கிரகத்தின் அருள் கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.

Advertisment

பொதுவாக நவரத்தினங்கள் கிரகங் களின் கெடுபார்வையைக் குறைத்து நமக்கு நன்மை செய்கின்றன என பரவலாக நம்பப்படுகிறது. ஒருசிலர் அதிர்ஷ்டத்துக்காக நவரத்தினங்களை கைகள் மற்றும் கழுத்தில் மோதிரம், மற்றும் செயின்களாக அணிந்து கொள்கின்றனர்.

நவ முத்திரைகள் எவ்வாறு உடலைக் காத்து அழகுபடுத்துகிறதோ அதேபோல நவரத் தினங்களும் உடலை நோய்களிலிருந்து காக்கிறது. அத்துடன் பிறரது பார்வை நம்மீது படியும்படியாக வசீகரத் தோற்றத் தையும் ஏற்படுத்துகிறது. என்னென்ன நவரத்தினங்கள் என்ன மாதிரியான நோய்களை குணபடுத்துகின்றன என பார்க்கலாம்.

1. மாணிக்கம்

மாணிக்கக் கல்லின் அதிபதி சூரிய பகவானவார். மாணிக்கக் கல்கொண்ட ஆபரணத்தை அணிவதால் ரஜோ குணம் அதிகரிக்கும். இந்த கல் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்தும். பய உணர்வைப் போக்கி தைரியத்தைத் தரும். அத்துடன் நரம்பு

பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ரத்தினக் கல் உண்டு. அந்த ரத்தினக் கல்லை அணிந்தால் அந்த கிரகத்தின் அருள் கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.

Advertisment

பொதுவாக நவரத்தினங்கள் கிரகங் களின் கெடுபார்வையைக் குறைத்து நமக்கு நன்மை செய்கின்றன என பரவலாக நம்பப்படுகிறது. ஒருசிலர் அதிர்ஷ்டத்துக்காக நவரத்தினங்களை கைகள் மற்றும் கழுத்தில் மோதிரம், மற்றும் செயின்களாக அணிந்து கொள்கின்றனர்.

நவ முத்திரைகள் எவ்வாறு உடலைக் காத்து அழகுபடுத்துகிறதோ அதேபோல நவரத் தினங்களும் உடலை நோய்களிலிருந்து காக்கிறது. அத்துடன் பிறரது பார்வை நம்மீது படியும்படியாக வசீகரத் தோற்றத் தையும் ஏற்படுத்துகிறது. என்னென்ன நவரத்தினங்கள் என்ன மாதிரியான நோய்களை குணபடுத்துகின்றன என பார்க்கலாம்.

1. மாணிக்கம்

மாணிக்கக் கல்லின் அதிபதி சூரிய பகவானவார். மாணிக்கக் கல்கொண்ட ஆபரணத்தை அணிவதால் ரஜோ குணம் அதிகரிக்கும். இந்த கல் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்தும். பய உணர்வைப் போக்கி தைரியத்தைத் தரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களையும் குணப்படுத்தும். மாணிக்கக் கல்லை அணிபவர்கள் புத்திக் கூர்மை மிக்கவர்களாகத் திகழ்வார்கள். இந்தக் கல் தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளைப் போக்கும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். இந்தக் கல்லை தலை யணை யின் அடியில் வைத் துத் தூங்கி னால் தீய கனவுகளிலிருந்து விடுபடலாம்.

Advertisment

bb

2. முத்து

முத்தின் அதிபதி சந்திர பகவானவார். முத்தை பெரும்பாலும் பெண்களே அதிகம் அணிகிறார்கள். ஆனாலும் ஆண்கள் மோதிர மாக அணிந்து கொள்வது அவர்களின் கோபத் தைத்தணிக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதுதவிர இதயக் கோளாறு, எலும்புருக்கி நோய், வாதம், பித்தம், மூளை வளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய் களின் தாக்கத்தை முத்து குறைக்கும் என சொல்லபடுகிறது.

3. மரகதம்

மரகதக் கல்லின் அதிபதி புதன் பகவானவார். மரகதக் கல் மனதில் கற்பனை வளத்தைப் பெருக்கும். ஆண்களின் மலட்டுத் தன்மை யைப் போக்கும். அத்துடன் உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதக் கல்லை அணிந்தால் உடல்வளர்ச்சி பெறும். மரகதக் கல்லை உற்று நோக்கினால் களையிழந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலைப் பெருக்கும் தன்மை கொண்டது வயிற்றுக் கடுப்பைப் போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக உதவும். மரகதத்தை வெள்ளியில் மோதிரமாக செய்துபோட்டால் இதயக் கோளாறு, ரத்த கொதிப்பு, புற்று நோய், தலைவலி, நுரையீரல் சம்பந்தமான நோய்களின் வீரியம் குறையும்.

4. புஷ்பராகம்

புஷ்பராகக் கல்லின் அதிபதி குரு பகவானவார். இந்தக் கல்லை மோதிரமாக அணிந்தால் நம்மில் மறைந்து கிடக்கும் திறமைகள், தனித்தன்மைகளை பிறர் வியக்கும்படியாக வெளியில் கொண்டுவரும். கோபம் குறையும், மனம் அமைதியாக இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம், குடல் சம்பந்தபட்ட நோய்களிலிருந்து நம் உடலைக் காக்கும். நல்ல செரிமான சக்தியை ஊக்குவிக்கும். மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு ஆகியவற்றிலிருந்து காக்கும்.

5. பவளம்

பவளக் கல்லின் அதிபதி செவ்வாய் பகவானவார். இதை அணிவதால் வேகம், பதற்றம் அதிகரிக்கும். பவளத்தை மோதிர மாக செய்துபோட்டால் ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய் கள் அனைத்தும் கட்டுப்படும். ஆரம்ப நிலை கருச்சிதைவைத் தடுக்கும். பவழத்தை சரியான விகிதத்தில் பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை யும் தடுக்கும். வெள்ளைநிற பவளத்தை புஷ்பராகக் கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயைக் கட்டுபடுத்தும். மலட்டுதன்மையைப் போக்கும்.

6. வைரம்

வைரக் கல்லின் அதிபதி சுக்கிர பகவானவார். வைரத்தை மோதிரமாகவோ, காதணி யாகவோ அல்லது செயினாகவோ அணிந்தால் நல்ல பலனைத் தரும். தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வைரமானது மலட்டுத் தன்மையைப் போக்கும் மற்றும் இதயத்துக்கு வலிமையை சேர்க்கும். கருப்பைக் கோளாறை சரி செய்யும். சர்க்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும். வாதம், பித்தம் போன்ற நோய்களிலிருந்து உடலைக் காத்து ஆண்மைத் தன்மையை நீடிக்க வைக்கும்.

7. வைடூரியம்

வைடூரியக் கல்லின் அதிபதி கேது பகவானவார். வைடூரியத்தை மோதிரமாக அணிந்தால் நம் மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையான மனதையும், பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனத்தெளிவு கொடுக்கும். வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைடூரியக் கல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். வலிப்பு, தோல் நோய் களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

8. நீலம்

நீலக் கல்லின் அதிபதி சனி பகவானவார். நீலக் கல்லை மோதிரமாக அணிந்தால் கீல் வாதம், இடுப்பு வாதம், நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், வலிப்பு ஆகியவற்றிக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். பித்த சம்பந்தமான நோய்களையும். வயிற்று கோளாறுகளை சரிப்படுத்தும். அதிக உடல் பருமனைக் குறைக்கும்.

9. கோமேதகம்

கோமேதகக் கல்லின் அதிபதி ராகு பகவானவார். இந்தக் கல்லை பயன்படுத்தினால் ஈரல்வலி, குடல்வாதம், ரத்தப் புற்று, வெண்குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்தும். பசியின்மையைப் போக்கும்.

om011123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe