Advertisment

இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை! - யோகி சிவானந்தம்

/idhalgal/om/nature-god-god-nature-yogi-sivananda

சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் வெளி வந்த ஒரு தமிழ்ப் படத்தில் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகளை மீண்டும் ஒருமுறை முழுமையாகப் படித்து உணர்ந்து கொள்வோம். ஏனென் றால் இன்றைய இளம் தலைமுறைக்கு இத்தகைய கருத்துகளின் உண்மை புரிய வேண்டும்.

"சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

நான் சொல்லப் போற வார்த்தையை

நல்லா எண்ணிப் பாரடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதான்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்

காலம் தரும் பயிற்சி

உன் நரம்போடுதான் பின்னி வளரணும்

தன்மான உணர்ச்சி

மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா

வளர்ந்து வரும் உலகத்துக்கே

நீ வலது கையடா

தனியுடைமை கொடுமைகள் தீர

தொண்டு செய்யடா

தானா எல்லாம் மாறும் என்பது

பழைய பொய்யடா...

வேப்பமர உச்சியில் நின்னு

பேய் ஒண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க

உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நீ நம்பி விடாதே

நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே...'

Advertisment

இந்தப் பாடலை இப்போது நாம் நினைவு கூற வேண்டிய அவசியம் என்ன. 60 வருடங் களுக்குமுன்பு கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில், குற்றங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. இன்று நாடு கல்வி வளர்ச்சியில் மிக உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் இருந்தபோதும், பக்தி என்பது தனி மனிதனின் சுய ஒழுக்கத்தில் வெளிப் பட்டது. அன்றைய காலகட்டத்தில் கோவில் களில் கூட்டம் கூட்டமான வழிபாடுகள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரின் மனதிலும் பக்தி குடிகொண்டிருந்திருந்தது.

n

தம

சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் வெளி வந்த ஒரு தமிழ்ப் படத்தில் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகளை மீண்டும் ஒருமுறை முழுமையாகப் படித்து உணர்ந்து கொள்வோம். ஏனென் றால் இன்றைய இளம் தலைமுறைக்கு இத்தகைய கருத்துகளின் உண்மை புரிய வேண்டும்.

"சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

நான் சொல்லப் போற வார்த்தையை

நல்லா எண்ணிப் பாரடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதான்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்

காலம் தரும் பயிற்சி

உன் நரம்போடுதான் பின்னி வளரணும்

தன்மான உணர்ச்சி

மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா

வளர்ந்து வரும் உலகத்துக்கே

நீ வலது கையடா

தனியுடைமை கொடுமைகள் தீர

தொண்டு செய்யடா

தானா எல்லாம் மாறும் என்பது

பழைய பொய்யடா...

வேப்பமர உச்சியில் நின்னு

பேய் ஒண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க

உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நீ நம்பி விடாதே

நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே...'

Advertisment

இந்தப் பாடலை இப்போது நாம் நினைவு கூற வேண்டிய அவசியம் என்ன. 60 வருடங் களுக்குமுன்பு கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில், குற்றங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. இன்று நாடு கல்வி வளர்ச்சியில் மிக உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் இருந்தபோதும், பக்தி என்பது தனி மனிதனின் சுய ஒழுக்கத்தில் வெளிப் பட்டது. அன்றைய காலகட்டத்தில் கோவில் களில் கூட்டம் கூட்டமான வழிபாடுகள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரின் மனதிலும் பக்தி குடிகொண்டிருந்திருந்தது.

n

தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், தமிழ்நாட்டிலுள்ள திருக்கோவில்களின் எண்ணிக்கை சுமார் 43,635. சமண திருக் கோவில்களின் எண்ணிக்கை சுமார் 22; திருமடங்களின் எண்ணிக்கை சுமார் 45 ஆகும். திருமடத்துடன் இணைந்த கோவில் களின் எண்ணிக்கை 69 ஆகும்.

பாடல்பெற்ற 274 சிவத்தலங்கள், மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்கள் என மிகப் பழமையான ஆலயங்களும், சக்தி பீடங்களும், சிறு தெய்வ- குலதெய்வ ஆலயங்களும் என ஏராளமான ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன. இவ்வாறு பல்வேறுவிதமான தெய்வங்களின் ஆகச்சிறந்த வழிபாட்டுத் தலமாக தமிழகம் விளங்குகிறது. இதிலிருந்து நமது முன்னோர்களின் தெய்வபக்தியையும், இறைவழிபாட்டையும் நாம் புரிந்துகொள்ளமுடியும். இத்தகைய தெய்வங்களை நாம் வழிபடவும், கொண்டாடவும் நமக்கு எவரும் உபதேசிக்கத் தேவையில்லை. ஏனென்றால் பக்தி என்பது, நாம் பாரம்பரியமாக கொண்டாடும் ஒரு இயல்பான, வழிபாட்டு நிகழ்வாகும். இறைவனைப் பற்றிய உண்மைத் தன்மையை சொல்பவன் பணத்தாசை பிடித்தவனா கவோ, ஆடம்பரத்தை விரும்புவனாகவோ, பகட்டை விரும்புவனாகவோ, சுக வாழ்க்கை விரும்பும் ஏமாற்றுப் பேர்வழியாகவோ இருக்கமாட்டான். நாம் ஒவ்வொருவரும் உள்ளன்புடன்கூடிய பக்தியை, எவருடைய தயவுமின்றி அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்ய எந்தவொரு இடைத்தரகரும் தேவையில்லை. எந்தவொரு போலிச் சாமியாரும் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் நேரடியாக இறைவனோடு தொடர்பு கொள்ளமுடியும். அதற்கு பக்தி செலுத்தவேண்டும். அத்தகைய பக்தியைப்பற்றி திருமந்திர சிற்பி திருமூலர் அருளிச் செய்ததைப் பார்ப்போம்.

"அறிவறு ஞானத் தெவரும் அறியார்

பொறிவழி தேடிப் புலம்பு கின்றார்கள்

நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்

எறிமணி யுள்ளே இருக்கலு மாமே.'

அறிவின்மூலம்

அன்புகொண்டுணர்ந்த அறியப்பட வேண்டிய சிவப் பரம்பொருளான இறைவனை, அறியாமை யின்மூலம் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

அறிவின்மூலம் இறைவனை அறியவியலாத இவர்கள் பூஜை, வழிபாடு, மந்திரம், எந்திரம் என்று தங்களின் புலன்கள் காட்டும் வழியில் சென்று இறைவனை தேடிக்காண இயல வில்லை என்று தவிக்கிறார்கள். இவர்கள் இறைவனால் இதற்கென்றே அருளப்பெற்ற ஒழுங்குடைய உடம்பினுள்ளே, உள்ளத் துள்ளே இறைவனை இருக்கச்செய்து தியானிப்பார்களேயானால், ஒளிவிடும் மாணிக்கமணியினுள்ளோடும் ஒளிபோல, இறைவனது உள்ளத்துள்ளே ஒளி வடிவாய் இருப்பதைக் கண்டு, அந்தக் காட்சியிலேயே இன்புற்று இருக்கலாம்.

பக்தியைப் பற்றி வாழ்வியல் ஞானி திருவள்ளுவர்,

"பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார்'

என்கிறார். கண், காது, மெய்,

வாய், மூக்கு எனும் ஐம்பொறி

களின் வழியாகப் பிறக்கக்கூடிய பல்வேறு ஆசைகளையும் விட்டுவிட்டு, இறைவனது பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நெடுநாள் நிலைபெற்று புகழொடு வாழ்வர்.

இந்தக் குறளின் வழியாக நாம் அறிந்து கொள்ளவேண்டியது, இருந்த இடத்திலிருந்தே இறைவனைக் காணமுடியும் எனும் மகா உண்மையே ஆகும். அப்படியென்றால் இத்தனை ஆயிரம் பழமையான கோவில் கள் எல்லாம் எதற்கு? ஏனென்றால் நாம் வீட்டிலோ, ஒரு பொது இடத்திலோ உட் கார்ந்து இறைவனை நினைக்கும்பொழுது அதில் கவனச் சிதறலும், கவனக் குறைபாடும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவேதான் மிகப் பழமையான கோவில் களுக்குச் சென்று (கோவில்கள் எல்லாம் பிரபஞ்ச சக்தியின் இருப்பிடம்) ஏதேனுமொரு இடத்திலமர்ந்து கண்ணைமூடி இறைவனை மனதில் எண்ணி தியானிக்கும்போது சிவப் பரம்பொருளின் அளவற்ற அருளாசியை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.

கூடுதலாக அங்கு நமக்கு பிரபஞ்சத் திலுள்ள பல்வேறு விதமான நல்ல சக்திகளை யும் (பிரபஞ்ச பேராற்றல்) தூய்மையான பிராண சக்தியையும் நமது உடலும் உள்ளமும் உள்வாங்குகிறது. அதனால் நமது உடலினும் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. புத்தியின் செயல்பாட்டில் ஒரு ஞானவெளிப்பாடு நிச்சயமாக இருக்கிறது.

உடனே மனித மனம் அடுத்த கேள்வியை கேட்கிறது. "பூஜை செய்யவேண்டாமா? அபிஷேகம் செய்யவேண்டாமா? ஆரத்தி செய்யவேண்டாமா? இதுபோன்ற பூஜை, ஆரத்தி, அபிஷேகம் செய்வதன் உள்நோக்கம் என்னவென்றால், இதை எல்லாம் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் முதல் அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை ஆகும். இந்த இடத்தில் இந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருக்கும் மனித மனங்களில் ஒரு கவன குவிப்பு இறைவன்மீது இருக்கும். ஆகவேதான் இப்படியாகப்பட்ட பூஜை மற்றும் அபிஷேகங்களை செய்யும் நிகழ்வுகள் வழிவழி யாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

பக்தி செய்வது பற்றி அருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் தனது திருவருட்பாவில்,

"அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே

அடியேனேன் மனத்தகத்து எழுந்த

இருள்கெடல் வேண்டும் போற்றி எம் தாயே

ஏழையேன் நின்தனைப் பாடும்

தெருள்உறல் வேண்டும் போற்றி என் அறிவே

சிந்தை நைந்து உலகிடை மயங்கும்

மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே

மதிநதி வளர்சடை மணியே.'

என்று பாடுகிறார். பிறைத் திங்களும், கங்கை யும் விளங்கும் சடையையுடைய மாணிக்க மணி போன்றவனே. எனக்கு அருள்புரியும் அரசனே! உன்னைப் போற்றுகின்றேன். எனக்கு உன்னுடைய திருவருள் ஞானத்தை நல்குவாயாக! என் தாயானவனே! உன் அடியவனாகிய என் மனதின்கண் உள்ள மல (மும்மலங்கள்) இருளைத்தொலைத்தருளுக! எனக்கு அறிவாக உள்ள என் இறைவனே... அறிவிலியாக இருக்கும் நான், உன்னைப் புகழ்ந்து பாடுவதற்குரிய தெளிவினை அளித்தருள்க! என் குருவே! உலகியலில் மனம் நுழைந்து உடல் மெலிந்து வருந்துவதற்குக் காரணமான மருட்சியை (மனத்தளர்ச்சி, பய உணர்வு) நீக்கி அருள்புரிவாயாக.

பில்லி, சூனியம், ஏவல், கட்டு என்ற மாய வலைக்குள் ஒருவரும் சிக்கிக் கொள்ளக் கூடாது. போலிச் சாமியார்களின் பொய் உரைகளைக் கண்டு ஏமாறக்கூடாது. ஏனென் றால் இறைவன் உனக்குள்ளும் இருக்கி றான்; எனக்குள்ளும் இருக்கிறான். மனமானது இறைவன் குடியிருக்கும் இடமாகும்.

அந்த சிந்தனையை, அந்த எண்ணத்தை மறந்து விட்டு மாயை மீது கவனம் செலுத்தினால் ஒரு சிறிய பய உணர்வு படு பாதாளத்தில் தள்ளிவிடும். மனம்... மருந்துகளால் மீட்கமுடியாத மன நோயாளியாக மாற்றி விடும். திருமூலர் சொல்லும் உபாயமான "உன் அறிவே கடவுள்' என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதைப் புரிந்துகொண்ட அடுத்த நொடி, உன்னை எந்த மூடத்தனமான, அறிவிலித்தனமான செயல்களாலும் கட்டுப்படுத்த முடியாது. நம் அறிவு பகுத்தறிந்து செயல்பட்டால் இயற்கை யெனும் உண்மையே இறைவன் குடியிருக் கும் இடம் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளும். பக்தியைப் பற்றி அவ்வைக் குறள் கூறுவதைப் பார்க்கலாம்.

"செறிந்து அறிந்து நாடிச் செவ்விதாய் உள்ளே

அறிந்து அரனை ஆய்ந்துகொளல்.'

இறைவனின் நினைவோடு ஒன்றாகி, அறிவால் அவனை அறிந்துணர்ந்து, மனத்துக்குள்ளே மகேசனை உணர்ந்து தெரிந்து கொள்வாயாக.

இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை (பல தெய்வங்களை உள்ளடக்கிய பஞ்சபூதங்கள்) எனும் மகா உண்மையைப் பகுத்தறிந்து பக்தி செய்வோம். மடமை யைக் கொளுத்துவோம். மனிதம் வளர்ப் போம். புனிதமான சிவப்பரம் பொருளின் பிரபஞ்சப் பேரருளைப் பெற்றுக் கொள்வோம்.

om010824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe