ல சிவாலயங்களிலுள்ள சுயம்பு லிங்கங்கள் வெளிப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஒரே விதமாகத்தான் உள்ளன. பசுக்கள் காட்டி லுள்ள புற்றில் பால்சுரந்த இடத்திலும், நிலத்தை உழும்போதோ, ,வனத்தை வெட்டித் திருத்தும்போதோ மண் வெட்டி, கலப்பை பட்டு ரத்தம் பீறிட்ட இடங்களிலும் லிலிங்கங்கள் கண்டெக்கப் பட்டு, அங்கே கோவில்கள் உருவானதாக வரலாறுகள் கூறுகின்றன. திருச்சி மாவட்டத்திலுள்ள ஊட்டத்தூர் ஆலய வரலாறும் அத்தகையதே. ராஜராஜசோழன் காலத்தில் வில்வவனமாக இருந்த இப்பகுதியை படைகள் தங்குவதற்காக வெட்டித் திருத்தியபோது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. அகழ்ந்தபோது சுயம்புலிலிங்கம் வெளிப் பட்டது. அவருக்கு சுத்த ரத்தினேஸ்வரர் என திருப் பெயர் சூட்டி ஆலயம் அமைத்தான் மன்னன் என்கிறது தல வரலாறு. இங்குள்ள அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்னும் திருப்பெயருடன் விளங்குகிறாள்.

""இவ்வாலய மூலவருக்கு தேனாபிஷேகம் செய்து அந்தத் தேனை உட்கொண்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்குகின்றன'' என்கிறார் பெரம்பலூர் கார்த்தி கேயன். இவ்வாலய இறைவனை அடிக்கடி வந்து தரிசித்துச் செல்வது இவரது வழக்கம்.

nataraj

மூலவருக்கு இடப்புறத்தில் பத்தடி உயரமுள்ள தாண்டவ நடராஜர் உள்ளார். இவர் உருவானவிதம் மிகப்பெரிய அதிசய வரலாறாக உள்ளது. ஆம்; மலைகளிலுள்ள பாறை இடுக்குகளில் பல விதமான மரங்கள் வளர்வது இயற்கை. அப்படிப்பட்ட மரங்களில் ஒன்றுதான் தெய்வீகத் தன்மைகொண்ட நசிமணம் எனும் மரம். இதன் வேர்கள் மட்டுமே பஞ்சநதம் எனும் தெய்வீகக் கற்பாறைகளைக் குடைந்துசெல்லும் ஆற்றல் படைத்தவை. அப்படிப்பட்ட பாறையை கொல்லிலிமலைப் பகுதியில் கண்டுபிடித்து, ஓராண்டு தவமிருந்து, அந்தப் பாறையிலிருந்துதான் மேற்படி நடராஜரை உருவாக்கியுள்ளனர் சித்புருஷர்கள். அவர்கள்மூலமே இந்த நடராஜரை இக்கோவிலிலில் அமைத்துள்ளனர்.

Advertisment

இந்த நடராஜர் விக்ரகம் நவரத்தினங்களின் ஒளி வீச்சுடன்- இருளிலும்கூட பிரகாசிக்கும் தன்மையுடையது. மேலும் ஆசியாவிலேயே பஞ்சநதக்கல்லால் உருவான நடராஜர் வேறு எங்குமே இல்லை என்கிறார்கள் ஆலய ஊழியர்கள்.

""48 முடிச்சுகள் போட்ட வெட்டிவேரை மாலை யாகத் தொடுத்து, அதை இந்த நடராஜரின் உடலிலில் சாற்றி அர்ச்சனை செய்து, இங்குள்ள பிரம்ம தீர்த்த கிணற்று நீரை ஐந்து லிலிட்டர் கேனில் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, அந்த வெட்டிவேரை ஊறவைத்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து குடித்துவந்தால், சிறுநீரகக்கல் அடைப்புக் கோளாறுகள் (கிட்னி பாதிப்பு) உட்பட அனைத்தும் நிவர்த்தியாகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல; பல மாநிலங்களில் இருந்தும்கூட தினசரி இங்குவந்து நடராஜரை வழிபட்டு, வெட்டிவேர் நீர்மூலம் நோய் தீர்க்க வந்து செல்கிறார்கள். அதே போல் நோய் நீங்கியவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த தினசரி வந்தவண்ணம் உள்ளனர்'' என்கிறார் இவ்வாலய அர்ச்சகர் நடராஜ குருக்கள்.

அச்சமயம் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப் பட்டவர்கள் திருப்பூரிலிருந்தும், கரூர் மாவட்டத்திலிருந்தும் பலர் வந்திருந்தனர். அதில் கரூர் அருகேயுள்ள உப்பிடமங்கலம் வெங்கட்- லதா தம்பதிகளிடம் கேட்டோம். ""கிட்னி பாதிப்பு உள்ளதாக டாக்டர்களால் கண்டறியப்பட்டு, பலர் இங்குவந்து வெட்டிவேர் தீர்த்தநீரைக் குடித்து சரியாகியுள்ளனர் என்ற தகவலை பலர் மூலம் கேள்விப்பட்டோம். எங்களுக்கும் அது போன்று பிரச்சினை உள்ளதால் இறைவனை நாடி நம்பிக்கையோடு இங்கு வந்துள்ளோம்'' என்றார்கள்.

Advertisment

nataraj-kovil

இவ்வாலயத்தை உருவாக்கிய ராஜராஜ சோழன் நோய்வாய்ப்பட்டு மிகுந்த சிரமத் துக்குள்ளானபோது, இவ்வாலய இறைவன் முன்புள்ள பிரம்ம தீர்த்த நீரை வெட்டிவேர் கலந்து அருந்தி உடல்நலம் பெற்றார் என்கின்றன கல்வெட்டுச் செய்திகள்.

இந்த நடராஜர் அருகிலேயே அவரது நடனக் கோலத்தை தலைசாய்த்து ஓரக் கண்களால் பார்த்து ரசிக்கிறாள் அம்பாள் சிவகாமசுந்தரி.

மூலவர் சுத்த ரத்தினேஸ்வரர் லேசாக சாய்ந்த நிலையில் உள்ளதால், அவருக்கு எதிரே உள்ள நந்திகளும் தலைசாய்த்து இறைவனைப் பார்த்த வண்ணம் உள்ளன.

மூலவருக்கு எதிரே ஒரு நந்தி மட்டும் கிழக்கு நோக்கித் திரும்பியுள்ளது. இதற்கும் ஒரு வரலாறு உண்டு. சப்த நதிகள் என்று சொல்லப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளிடையே யார் பெரியவர் என்று போட்டி ஏற்பட்டது.

அதைத் தீர்த்துவைக்கும் படி சிவபெருமானிடம் சென்று முறையிட, அவர் அந்தப் பொறுப்பை நந்தியெம் பெருமானிடம் ஒப்படைத்தார். நந்திபெருமான் கிழக்கு நோக்கித் திரும்பி அந்த ஏழு நதிகளையும் குடித்தார். அதில் கங்கை மட்டும் அவர் வாய்வழியே மீண்டும் வெளியேறியதாம். இதன்காரணமாக இக்கோவில் அருகே ஓடும் ஆறு நந்தியாறு என்றழைக்கப் படுகிறது. இது கங்கையைப்போன்று புனிதமான நதியாகக் கருதப்படுகிறது.

இவ்வாலயத்தில் இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகள், வள்ளி- தெய்வானையோடு முருகன், கஜலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, மகாவிஷ்ணு, சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், பைரவர், வீரபத்திரர், நவகிரகங்கள், நாயன்மார்கள் உள்ளனர்.

இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றி, நெய்விளக்கேற்றி பொங்கலிலிட்டு, பாயசம் வைத்து வழிபட்டால் திருமணத்தடை நீங்குகிறது. வாகன ஓட்டிகள் தெரிந்தோ தெரியாமலோ விபத்துகளில் உயிர்பலிலி ஏற்படக் காரணமானவர்கள் இங்குவந்து வழிபட்டால் பாவ விமோசனம் கிடைக்கும். இவ்வாலய தட்சிணாமூர்த்தியை மாசிமாத வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லிலி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

இக்கோவிலிலின் சபாமண்டபத்தின் விதானத் தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களின் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குக்கீழே மன்னர் கள் காலத்தில் வேள்விகள் நடத்தப்பட்டுள்ளன. ""இப்போதும் அதுபோன்ற யாகங்கள் அவ்வப் போது நடக்கின்றன. அப்படி நடத்தினால் உடனுக் குடன் தாங்கள் வேண்டிய பலன் கிடைக்கிறது'' என்கிறார்கள் இங்குவரும் பக்தர்கள்.

சுயதொழில் செய்வோர் அதில் உயரவும், பணியில் பதவி உயர்வு பெறவும், நோயுற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அவற்றிலிலிருந்து நிவாரணம் பெறவும் இவ்வாலய இறைவனை வழிபட்டு எலுமிச்சை சாதத்தை தானமாகத் தந்தால் உடனடி பலன் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

nataraj-kvoil

கீர்த்தி பெற்ற இச்சிவாலயத்தைச் சுற்றிலும் தெய்வங்கள் ஆட்சிபுரிகின்றன. இந்த ஊர் வாஸ்துமுறைப்படியே அமைந்துள்ளது. ஊருக்கு மேற்கே சிறுகுன்றின்மீது ராஜராஜசோழன் வழிபட்ட இன்னொரு சிவாலயம் சிதிலமடைந்திருந்ததை ஊர்மக்கள் இப்போது புதுப்பித்து வருகிறார்கள். இவ்வாலய இறைவன் சோதீஸ்வரர்; அம்பிகை சொர்ணாம்பிகை. ஊருக்கு முகப்பில் ராஜகணபதி கம்பீரமாக தனிச்சந்நிதியில் உள்ளார். ஊருக்கு வட கிழக்கில் பார்ப்போரை மெய்சிலிலிர்க்க வைக்கும் பத்தடி உயர செல்லிலியம்மன் அருளும் கோவில் உள்ளது. சோழமன்னன் போருக்குப் புறப்படும்முன்பு இங்கு வந்து அம்மனை வேண்டி உத்தரவு கிடைத்த பிறகே புறப்பட்டுச்சென்று வெற்றியோடு திரும்பு வாராம்.

மற்றும் திரௌபதை யம்மன், அங்காளம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. கோதண்டராமர் கோவிலும் உண்டு. ஊரை மையமாக வைத்து திரும்பிய திசையெங்கும் ஆலயங்களாக ஜொலிலிக்கிறது ஊட்டத்தூர்.

இவ்வூருக்கு இப்பெயர் எப்படி வந்தது? பிரம்மன் பாவவிமோசனம் பெற இவ்வாலய இறைவனை பூஜை செய்யவந்தார். அப்போது தண்ணீர் வேண்டுமே என அவர் பூமியில் லேசாகத் தோண்ட, நீர் ஊற்றாகப் பெருக்கெடுத்து ஓடியதாம். அதனால் ஊற்றுப் பெருக்கெடுத்த ஊர் என்றாகி, காலப்போக்கில் மருவி ஊற்றத் தூர் என்றும், இப்போது பேச்சு வழக்கில் ஊட்டத்தூர் என்றும் அழைக்கப் படுகிறது. 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது இக்கோவிலிலுள்ள பிரம்மதீர்த்தக் கிணற்றிலிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறி ஓடியதாம்.

இவ்வாலய இறைவனைப்பாட அப்பர் சுவாமிகள் வரும்போது ஐந்துமைல் தூரத்திலேயே திகைத்து நின்றுவிட்டார். காரணம், நின்ற இடத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை பூமியில் சிவலிலிங்கங்களாகக் காட்சியளித்தனவாம். எனவே, நின்ற இடத்தில் இருந்தபடியே இவ்வாலய இறைவனைபாடிச் சென்றுள்ளார். அவர் நின்று பாடிய இடம் இன்று பாடாலூர் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாலய வரலாறு 1,400 ஆண்டு களுக்கு முந்தையது என்று கண்டறியப் பட்டுள்ளது. மேலும் ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை எழுப்ப இப்பகுதி மலைகளிலிலிருந்தே கற்களைக் கொண்டுசென்றாராம். இப்படி இவ்வாலயம் மற்றும் இவ்வூரை பற்றிய தகவல்கள 50-க்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆதாரங்கள்மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட வரலாற்றோடுகூடிய இவ்வாலய இறைவன், மக்களின் தேவைகளை நிறைவேற்றி குறைகளை நீக்கி, சிறுநீரக நோய்கள் போன்ற மனிதர்களுக்கு ஆபத்தான நோய்களைத் தீர்த்து நல்லருள் புரிகிறார்.

அமைவிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம் பலூருக்குத் தெற்கே பாடாலூர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஊட்டத்தூர். போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளன. ஆலய திறப்பு நேரம்: காலை 7.00 மணிமுதல் 12.00 மணிவரை; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை. தொடர்புக்கு: அலைபேசி: 97880 62416.