வெகு உன்னத வைகாசி மாதம் வருகிறது. விசாக நட்சத்திரத்தில் மாதம் வருவதால் மாதப்பெயரே விசாகம். தமிழில் வைகாசி. வைகாசி விசாகம் என்றால் முருக பக்தர்களுக்கு ஒரு குதூகலம்! எல்லா கோவில்களிலும் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடக்கும். காரணம்- அதுவே முருகன் உதித்த நாள். சிவபக்த சூரபத்மாதியரை அழிக்கத் தோன்றிய சிவ மறுவுருவமே முருகன். பராசக்தியே வேலாக மாறினாள். வினோத உருவம்; வினோத ஆயுதம்.
சிவன் தனது ஐந்து முகங்களான ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் மற்றும் அதோமுகம் (வெளியே தெரியது) இவற்றிலிருந்து தீப்பொறிகள் தோன்ற, அதனை வாயுவும் அக்னியும் மாற்றி மாற்றி ஏந்தி கங்கை நதியில் இட்டனர். கங்கை சரவணப் பொய்கையில் இட்டாள். (பராசக்தி தான் தாங்கவேண்டாமா என்று சரவணப் பொய்கையாக மாறினாளாம்!) அதனில் ஆறு தாமரைப் பூக்களில் தீப்பொறியானது குழந்தையாக மாறியது. ஆறு கார்த்திகைப் பெண்கள் விழுந்து குழந்தைக்குப் பாலூட்டினர்.
அச்சமயம் அங்கு சிவனும் உமையும் வந்தனர். உமை குழந்தைகளை அழைத்து அணைக்க, ஓருடல், இருகால்கள், ஆறு முகங்கள், 12 கரங்களுடன் முருகன் தோன்றினான். அந்த நாளே வைகாசி விசாகம்.
ஒன்று சேர்ந்ததால் அவன் கந்தன்.
சிவஜோதி ஸ்வரூபன்- ஆக சிவகுமாரன்.
அக்னி ஏந்தியதால் அவன் அக்னி பூ.
வாயுவும் ஏந்தியதால் அவன் வாயுகுமாரன்.
சிவஜோதியை கங்கையில் இட்டதால் காங்கேயன்.
சரவணத்தில் உதித்ததால் சரவணபவன்.v ஆறுமுகம் கொண்டதால் ஷண்முகன்- ஆறுமுகன்.
பக்தர்களுக்கு ஆதாரமாக- பற்றுக்கோடாயிருப்பதால் அவன் கந்தன்.
பல முருகன் கோவில் குளத்தை "சரவணப் பொய்கை' என்பர். முருகன் உதித்த சரவணப் பொய்கையைக் காண இயலாது.
ஒவ்வொரு முகத்துக்கும் தனித்தனியே சகஸ்ர நாமங்கள் (1008) உள்ளன. நாம் பரவலாகச் செய்வது அறிந்தது. அதோமுகத்துக்குரிய "அசிந்த்ய சக்தயே நம:' என்று துவங்கும் நாமாவளியே அறுவர் அமர்ந்து, இந்த சகஸ்ரநாமம் செய்ய, ஷண்முக சகஸ்ர நாமம் என்பர். (அது உசிதமல்ல).
அறுவர் அமர்ந்து
வெகு உன்னத வைகாசி மாதம் வருகிறது. விசாக நட்சத்திரத்தில் மாதம் வருவதால் மாதப்பெயரே விசாகம். தமிழில் வைகாசி. வைகாசி விசாகம் என்றால் முருக பக்தர்களுக்கு ஒரு குதூகலம்! எல்லா கோவில்களிலும் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடக்கும். காரணம்- அதுவே முருகன் உதித்த நாள். சிவபக்த சூரபத்மாதியரை அழிக்கத் தோன்றிய சிவ மறுவுருவமே முருகன். பராசக்தியே வேலாக மாறினாள். வினோத உருவம்; வினோத ஆயுதம்.
சிவன் தனது ஐந்து முகங்களான ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் மற்றும் அதோமுகம் (வெளியே தெரியது) இவற்றிலிருந்து தீப்பொறிகள் தோன்ற, அதனை வாயுவும் அக்னியும் மாற்றி மாற்றி ஏந்தி கங்கை நதியில் இட்டனர். கங்கை சரவணப் பொய்கையில் இட்டாள். (பராசக்தி தான் தாங்கவேண்டாமா என்று சரவணப் பொய்கையாக மாறினாளாம்!) அதனில் ஆறு தாமரைப் பூக்களில் தீப்பொறியானது குழந்தையாக மாறியது. ஆறு கார்த்திகைப் பெண்கள் விழுந்து குழந்தைக்குப் பாலூட்டினர்.
அச்சமயம் அங்கு சிவனும் உமையும் வந்தனர். உமை குழந்தைகளை அழைத்து அணைக்க, ஓருடல், இருகால்கள், ஆறு முகங்கள், 12 கரங்களுடன் முருகன் தோன்றினான். அந்த நாளே வைகாசி விசாகம்.
ஒன்று சேர்ந்ததால் அவன் கந்தன்.
சிவஜோதி ஸ்வரூபன்- ஆக சிவகுமாரன்.
அக்னி ஏந்தியதால் அவன் அக்னி பூ.
வாயுவும் ஏந்தியதால் அவன் வாயுகுமாரன்.
சிவஜோதியை கங்கையில் இட்டதால் காங்கேயன்.
சரவணத்தில் உதித்ததால் சரவணபவன்.v ஆறுமுகம் கொண்டதால் ஷண்முகன்- ஆறுமுகன்.
பக்தர்களுக்கு ஆதாரமாக- பற்றுக்கோடாயிருப்பதால் அவன் கந்தன்.
பல முருகன் கோவில் குளத்தை "சரவணப் பொய்கை' என்பர். முருகன் உதித்த சரவணப் பொய்கையைக் காண இயலாது.
ஒவ்வொரு முகத்துக்கும் தனித்தனியே சகஸ்ர நாமங்கள் (1008) உள்ளன. நாம் பரவலாகச் செய்வது அறிந்தது. அதோமுகத்துக்குரிய "அசிந்த்ய சக்தயே நம:' என்று துவங்கும் நாமாவளியே அறுவர் அமர்ந்து, இந்த சகஸ்ரநாமம் செய்ய, ஷண்முக சகஸ்ர நாமம் என்பர். (அது உசிதமல்ல).
அறுவர் அமர்ந்து ஆறு சகஸ்ர நாமங்களும் செய்ய அதுவே ஷண்முக சகஸ்ரநாமம் என்பது பொருந்தும்.
அவதாரம் காரணமாக தேவசேனாபதியாகி க்ரௌஞ்சன், தாரகாசுரன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய எல்லா அசுரர்களையும் அழித்தான். அத்தினமே கந்த சஷ்டி என்று, தீபாவளி அமாவாசைக்கு அடுத்த சுக்ல சஷ்டி என பிரதான உற்சவம்.
கண்ணன் பகவத் கீதையில் "ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த:'- சேனைகளில் நான் கந்தன் என்பார். ஆகவேதான் கந்த பக்தர்கள் கண்ண பக்தர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
கந்தன் பொன்மய- சிவப்பு நிறமுள்ளவன். ராதாகிருஷ்ணன் என்போமே, அந்த ராதைக்கும் கந்தனின் விசாக நட்சத்திரம்.
நிறமும் சொர்ணமயமே.
ராதைக்கும் கண்ணனுக்கும் திருமணமானதும் வைகாசிப் பௌர்ணமி விசாகத்திலேயே.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தன்று (சதுர்த்தசி) முடிகொண்டானில் சமாதியான ஒரு நூதன "ஆலங்குடி பெரியவாள்' பற்றி சிந்திப்போமே.
ரமண மகரிஷி போன்று கோவணமே அணிந்த சந்நியாசிக்கோலம். ஸ்ரீமத் பாகவதத்தில் தான் மூழ்கி, மற்றவர்களையும் பக்தி வெள்ளத்தில் ஆழச்செய்யும் வினோத சந்நியாசி! ஸ்ரீமத் பாகவதத்தில் "ராஸலீலை' வருமே! கண்ணன் பல உருவம் தாங்கி, கோபியர்களுடன் நள்ளிரவில் (நமது ஐப்பசிப் பௌர்ணமி) ஆடித்திளைத்தானே! சந்நியாசி அதனை எவ்வாறு ரசிக்க முடியும்- விவரிக்க முடியும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். யாவரும் பிரம்ம ஸ்வரூபமாயிற்றே! "காமம்' என்கிற பேச்சே கிடையாது! காமன்- மன்மதன் வந்து பார்த்துத் திகைத்தானாம்.
தட்சிணாமூர்த்தியான சிவன், மோகினியின்மேல் மோகம்கொண்டு ஹரிஹர புத்திரன் உண்டானானான் என்றால் அதற்குக் காரணம் காமமா? அல்ல; அவதார காரணம். ராஸலீலை ஐந்து அத்தியாயங்களை நாம் வாசிக்க என்ன பலன் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. காமம் என்பது அறவே அகலும். ஸ்யாம சுந்தரன், ராதாமீது பிரேமை பக்தி ஆழ்ந்து எழும். பிரேம பக்தி, மாதுர்ய பக்தி என்பது கத்தியின்மீது நடப்பது போன்றதே! பக்குவ மனதில்லையேல் விபரீதமாகும். உலகம் சிரிக்கும்.
நன்னிலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. (குருத்தல ஆலங்குடி அல்ல). அங்கு ஹரித வம்சத்தில் கிருஷ்ண பக்த வைதீக தம்பதியருக்கு விசாக நட்சத்திரத்தில் முருகனுக்கு உகந்த கந்த சஷ்டியில் (23-10-1863) பிரகலாத அம்சமாக உதித்தவர். பெயர் ராமகிருஷ்ணன். புத்தி சாதுர்யமான குழந்தை. எளிதில் எதனையும் கிரகிக்கும். ஐந்து வயதில் படிப்பு ஆரம்பம்; ஏழு வயதில் பூணூல், 16 வயதிற்குள் வேத, உபநிடத, ஆகம சாஸ்திரங்கள், புராணங்கள், சிட்சை, வியாகரணம் என அனைத்தும் நன்கு பயின்றவன்.
ராமகிருஷ்ண பரஹம்சர் எந்த குருவையும் நாடவில்லை. பிராம்மணி தேவி, தோடாபுரி போன்றவர்கள் அவரை நாடிப் பயில்வித்தனர். முத்துஸ்வாமி தீட்சிதர், குமரகுருபரர், அருணகிரிநாதர், கச்சியப்பர் ஆகியோருக்கு முருகனே விநோத குருவருள் புரிந்தான்.
இவருக்கு "பாலகிருஷ்ணானந்த ஸரஸ்வதி' என்கிற ஸ்வாமிகள் கனவில் ஸ்ரீமத் பாகவதத்தைத் தந்து, நரசிம்ம மந்திரம் உபதேசித்தார். அன்றுமுதல் நரசிம்ம மந்திர ஜெபம், ஸ்ரீமத் பாகவத படனமே! காஞ்சி காமகோடி மட கோவிந்தபுர ஸ்ரீபோதேந்தர ஸ்வாமிகள் மடம் வந்து, அவரது நாம மகிமை கிரந்தங்கள் வாசித்து பகவன் நாமம், ஸ்ரீமத் பாகவதம் இவற்றில் ஆழ்ந்தார்.
பெற்றோர் ராமகிருஷ்ணனுக்கு மணம் செய்ய விரும்பினர். அவருக்கோ இல்லறத்தில் ஈடுபட விருப்பமில்லை. வானப்ரஸ்த ஆசிரமம் ஏக விரும்பினார். ஆயினும் தகப்பனார் ஆசை, கட்டளைக்குப் பணிந்து மணந்தார். பெண் கன்னிகையாக தனது பிறந்தகத்திலேயே வளர்ந்தாள். சில மாதங்களில் அவள் இறக்க, கர்மாக்களைச் செய்தார். ஆக தாம்பத்திய உறவே அல்லாத மணந்த பிரம்மச்சாரியாகத் திகழ்ந்தார்.
பெற்றோர் மறுமணம் செய்விக்க விரும்பினர். அவர் தீவிரமாக மறுத்தார். கட்டாயம் செய்வதை உணர்ந்து, சமர்த்த ராமதாசர்போல் வீட்டைத் துறந்தார். நரசிம்ம ஜெபம், ஸ்ரீமத் பாகவத படனம், பிரவசனம், பஜனை, ஆடல், பாடல் போன்றவற்றிலேயே ஆழ்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாப்பிரபு, மீராபாய் போன்றோரின் மனோநிலை- பக்தியின் ஆழம் எவ்வாறு இருந்தது?
அதேநிலை இவருக்கும். சுயநிலைக்கு வந்து பசி எடுத்தாலோ பகவன் நாம ஜெபம், பஜனமே அவருக்கு போஜனம் போன்று. ஒருசமயம் சில குதர்க்கவாதிகள், "உணவுக்காகவே அவர் படனம், பஜனை செய்கிறார்' என்று சொல்ல, மூன்று வருடகாலங்கள் அன்ன ஆகாரம் ஏதுமின்றி இருந்தாராம். அவரது படத்தைப் பார்த்தாலே தெரியும்- எலும்பு தெரியும் உடல்.
பனங்குடி ஸ்வாமிகள் என்பவரை சந்தித்து, சந்நியாச ஆசிரமும் பெற்றார். குருவானவர் சீடனின் பக்த உன்மத்த நிலையுணர்ந்து, "ஸ்வயம் பிரகாச ஆனந்த ஸரஸ்வதி' என்னும் தீட்சாநாமத்தைச் சூட்டினார். ஆனால் ஆலங்குடியில் பிறந்ததால் "ஆலங்குடி ஸ்வாமிகள்' என்ற பெயரே நிலைத்தது. அவதூதராய் (ஆடையின்றி) இருந்தவர் மக்கள் வேண்ட, ரமண மகரிஷி போன்று கோவணம் தரித்தார்.
அவருக்கு ஸ்ரீமத்பாகவத ஸ்ரீதர்ய வியாக்யனம் மிகவும் பிடித்தமானது. எனவே அவரது உபன்யாசங்கள், விரிவுரை அதனை ஒத்தே இருக்கும். "கோதண்ட ராமய்யர்' என்னும் அவரது சீடர்மூலம் வாசிப்பாராம். உபன்யாசம் வெறும் கதையாக இல்லாமல், தத்துவம், பக்தி ஆழத்தைப் பரிமளிக்கும். காமாட்சிபுரம், ஸ்ரீரங்கம், திட்டச்சேரி, வேப்பத்தூர், கோடிமங்கலம், தேதியூர், விஷ்ணுபுரம், ஆனந்ததாண்டவபுரம், கூத்தனூர், ராதாமங்கலம், கோனேரி ராஜபுரம் போன்ற இடங்களில் பாகவத உபன்யாசங்கள் செய்துள்ளார். அதனைக் கேட்ட ஒருசிலர் இன்னும் உளராம். "ஸ்மரணே சுகம்' என்பர். இக்காலங்களில் உபன்யாசம் ஒரு பொழுதுபோக்கு. சிரிக்கப்பேசுவது, சங்கீதம் அதிகம், படாடோபம், ஆகாரததிற்கு முக்கியத்துவம் என்றாகிவிட்டது என்கிறார்கள். சிந்திக்க வேண்டியதே!
நரசிம்ம பக்தரானதால் பிரகலாத நரசிம்ம லீலைகளை ஆழ்ந்து ரசித்துக் கூறுவாராம். அதுபோன்று கஜேந்திர மோட்ச நிகழ்வையும் விரும்பி ரசித்துக் கூறுவாராம். யானையின் காலை முதலை கவ்வ, விதியற்று தாமரைப் பூவை ஏந்த "ஆதிமூலமே' என்று அலறிக்கூறவில்லையா! பகவான் அருளவில்லையா!
அதனாலேயோ என்னவோ, ஒருசமயம் அவர் நதியில் நீராடும்போது முதலை காலைக் கவ்வியதாம். இவரும் "நாராயண அகிலகுரோ பகவான் நமஸ்தே' என்று வேண்ட, முதலை காலை விட்டதாம். புண் ஆற, ஆயுர்வேத நிபுணர்கள் காய்ச்சிய எண்ணெய் விட்டனராம். அந்த வேதனையை அவர் உணரவேயில்லை. தன் உடல் என்கிற எண்ணம் இருந்தால்தானே. ரமண மகரிஷிக்கு ஆபரேஷன் செய்தபோது- மயக்க மருந்து எதையும் ஏற்கவில்லையே! மகான்களின் மகிமை புரிந்துகொள்ள இயலாதது! அவரது சீடர்கள், பக்தர்கள் தங்களது கஷ்டங்களைக் கூறினால், ஸ்ரீமத் பாகவதத்தின் சில கட்டங்கள், துதிகளைக்கூறி, "இதனை ஒரு மண்டலம் ஜபி; யாதும் சரியாகும்' என்பார். செய்து பயனடைந்தோர் பலர். (அதிசயங்கள், அனுபவங்கள் விவரிக்கப்போயின், இது வெகுவாக விரிந்துவிடும்.)
ராமாயணப் படனம், உபன்யாசம் என்றால் ஒரு பலகை போட்டுவைப்பர்.
அனுமன் வந்து கேட்டு ரசிப்பார் என்பது ஐதீகம். அதுமாதிரி அமர்ந்த அனுமனைக்கண்ட ஆழ்ந்த பக்தர்களும் உண்டு.
ஒருமுறை இவர் பாகவதப் பிரவசனம் "காளிங்க நர்த்தனம்' செய்துகொண்டிருந்தபோது ஒரு பாம்பு இவரை நோக்கி வந்ததாம். கதை கேட்பவர்கள் பயந்து, தடிகொணர்ந்து அடிக்க எண்ணினர்.
அவரோ, "யாதும் செய்ய வேண்டாம். அமைதியாய் பிரவசனம் கேட்கவும்' என்றார். பாம்பு பலகையின் கீழே போயிற்று. காளிங்க நர்த்தனக் கதை முடிந்தது. அவரே பலகையை எடுத்தார். அங்கு பாம்பைக் காணவில்லை. வந்த பாம்பு பாகவதம் கேட்க வந்த, காளிங்கனோ, பரீட்சித்தைக் கடித்த பாம்போ, நாகராஜ சுப்ரமண்யனோ? எவர் அறிவர்.
ஆலங்குடி ஸ்வாமிகள் முடிகொண்டான் கிராமத்தில் (கூத்தனூர்- பூந்தோட்டம் சரஸ்வதி கோவில் அருகே) ஸ்ரீமத்பாகவத உபன்யாசம், நரசிம்ம அவதார லீலைகளை சொல்லிக்கொண்டிருந்தார்.
அன்று நரசிம்ம ஜெயந்தி சாயசந்தி வேளை.
துதி முடிய, கபாலத்திலிருந்து ஜ்யோதி கிளம்பியது. சமாதி ஆனார். வேத விதிப்படி அவரது உடல் (17-5-1935) சமாதி செய்யப்பட்டது. இவ்வருட ஆராதனை 28-5-2018. இரண்டு வாரத்திற்கு பஜனை, வேதகோஷங்கள், பாகவத சப்தாக்ஷம் என நடக்கின்றன. குருவருள் பெற்று மகிழ்வோமே!