நாகதோஷம் அகற்றி நல்லருள் புரியும் நாகேஸ்வரமுடையார் - கோவை ஆறுமுகம்

/idhalgal/om/nageswaramudaiyar-who-removes-nagatosham-and-understands-goodness-coimbatore-arumugam

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'

-திருவள்ளுவர்

உலக ஆசைகள் மனதி-ருந்து இற்றுப்போவதில் வெற்றிகண்ட குருவானவரின், உண்மையும் சக்தியும் சேர்க்கும் அருஞ்செயலின் மேன்மை ஒளியில் ஒன்றிப்போய் இணைந்துகொள்கிறபோது, மயக்கத்தையும் கலக்கத்தையும் தரும் இருவினைகளையும் கடந்த இறைவனின் திருவடிகளை விரும்புபவர்களின் நல்வினை- தீவினை ஆகிய இருவினைகளும் விலகி ஓடிவிடும் என்பதே இதன்பொருள்.

குருநாதர் ஒருவர் தன் சீடர்களுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார். வழியில் லட்சக்கணக்கான எறும்புகள் ஒரு பெரிய பாம்பை கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. சமாளிக்க வழியின்றி குற்றுயிரும் குலையுயிருமாய் போராடிக்கொண்டிருந்தது பாம்பு.

siv

சீடர்கள் பதறினர். குருவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. விநாடிக்கும் குறைவான நேரம் கண்களை மூடி தியானித்த குருநாதருக்கு உண்மை விளங்கியது. உடனே அவர் கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து பாம்பின்மீது தெளித்து, "ம்' என்று குரல் கொடுத்தார். அடுத்த விநாடியில் எறும்புகள் அனைத்தும் விலகி ஓடின. பாம்பும் உயிரைத் துறந்து நற்கதி பெற்றது.

குருவும் சீடர்களும் நடக்கத் தொடங்கினர்.

அப்போது சீடர் ஒருவர், "குரு தேவா... எறும்புகள் பாம்பைக் கடித்துக் குதறிய காட்சியைப் பார்த்ததும் நாங்கள் கலங்கி னோம். சரி; ஆனால் உங்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் வந்ததே! அதுதான் புரியவில்லை...'' என்று இழுத்தார்.

அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட குரு, "சிலர் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் தெரிந்தே தீவினைகளில் இறங்கிவிடுகின்றனர். அதன் பலன்தான் இது'' எனக் கதை சொல்லத் தொடங்கினார்.

"பிருந்தாவனத்திலிருக்கும் கண்ணன் கோவிலில் மகந்த் என்பவர் தலைமைப் பூசாரியாக இருந்தார். மக்களெல்லாம் அவரை நம்பி தர்ம கைங் கர்யங்களுக்காக நிறைய செல்வங்களை ஒப்படைத் தனர். ஆனால் அந்தப் பூசாரியோ அந்த செல்வங் களைத் தனக்கும், தன் குடும்பத்திற்கும் உபயோ கப்படுத்தி சுகபோகமாக வாழத்துவங்கினார். தெய்வ கைங்கர்யத்திற்கு உரியதைத் தன் கைப்

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'

-திருவள்ளுவர்

உலக ஆசைகள் மனதி-ருந்து இற்றுப்போவதில் வெற்றிகண்ட குருவானவரின், உண்மையும் சக்தியும் சேர்க்கும் அருஞ்செயலின் மேன்மை ஒளியில் ஒன்றிப்போய் இணைந்துகொள்கிறபோது, மயக்கத்தையும் கலக்கத்தையும் தரும் இருவினைகளையும் கடந்த இறைவனின் திருவடிகளை விரும்புபவர்களின் நல்வினை- தீவினை ஆகிய இருவினைகளும் விலகி ஓடிவிடும் என்பதே இதன்பொருள்.

குருநாதர் ஒருவர் தன் சீடர்களுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார். வழியில் லட்சக்கணக்கான எறும்புகள் ஒரு பெரிய பாம்பை கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. சமாளிக்க வழியின்றி குற்றுயிரும் குலையுயிருமாய் போராடிக்கொண்டிருந்தது பாம்பு.

siv

சீடர்கள் பதறினர். குருவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. விநாடிக்கும் குறைவான நேரம் கண்களை மூடி தியானித்த குருநாதருக்கு உண்மை விளங்கியது. உடனே அவர் கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து பாம்பின்மீது தெளித்து, "ம்' என்று குரல் கொடுத்தார். அடுத்த விநாடியில் எறும்புகள் அனைத்தும் விலகி ஓடின. பாம்பும் உயிரைத் துறந்து நற்கதி பெற்றது.

குருவும் சீடர்களும் நடக்கத் தொடங்கினர்.

அப்போது சீடர் ஒருவர், "குரு தேவா... எறும்புகள் பாம்பைக் கடித்துக் குதறிய காட்சியைப் பார்த்ததும் நாங்கள் கலங்கி னோம். சரி; ஆனால் உங்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் வந்ததே! அதுதான் புரியவில்லை...'' என்று இழுத்தார்.

அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட குரு, "சிலர் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் தெரிந்தே தீவினைகளில் இறங்கிவிடுகின்றனர். அதன் பலன்தான் இது'' எனக் கதை சொல்லத் தொடங்கினார்.

"பிருந்தாவனத்திலிருக்கும் கண்ணன் கோவிலில் மகந்த் என்பவர் தலைமைப் பூசாரியாக இருந்தார். மக்களெல்லாம் அவரை நம்பி தர்ம கைங் கர்யங்களுக்காக நிறைய செல்வங்களை ஒப்படைத் தனர். ஆனால் அந்தப் பூசாரியோ அந்த செல்வங் களைத் தனக்கும், தன் குடும்பத்திற்கும் உபயோ கப்படுத்தி சுகபோகமாக வாழத்துவங்கினார். தெய்வ கைங்கர்யத்திற்கு உரியதைத் தன் கைப்படுத்திக்கொண்ட பூசாரியே பாம்பாக வந்து பிறந்தார். அவரிடம் செல்வம் தந்தவர்கள் எறும்பாகப் பிறந்து, பாம்பாக இருந்த பூசாரியைக் கடித்துக் குதறி னர். சீடனே, ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் கன்று தன் தாயிடம் எப்படி மிகச் சரியாகச் சென்று சேர்க்கிறதோ, அதுபோல அவரவர் செய்த நல்வினை- தீவினைகள் அவரவரை வந்தடையும். நல்லதே செய்தால் நன்மையே வந்தடையும்'' என்றார் குருநாதர்.

பின்விளைவுகளின் காரணத்தை அறிந்தோ, அறியாமலோ செய்த தவறு களைத் திருத்தி, அவர்களை அறம்சார்ந்த வாழ்க்கை வாழ வழிசெய்யும் அற்புதமானதொரு திருத்தலம்தான் சீர்காழியில் எழுந்தருளி யிருக்கும் நாகேஸ்வரமுடையார் திருக் கோவில். இறைவன்: ஸ்ரீ நாகேஸ்வரமுடையார்.

இறைவி: பொன்னாகர வல்லியம்மை.

விநாயகர்: மாணிக்க விநாயகர்.

விசேஷமூர்த்தி: சனி, நீலாதேவி, ராகு பகவான்.

புராணப்பெயர்: நாகளேச்சுரம்.

ஊர்: சீர்காழி.

தலவிருட்சம்: வன்னிமரம்.

தீர்த்தம்: கழுமலநதி தீர்த்தம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான இது, அப்பரால் பதிகம் பாடப்பட்டிருந்தாலும் தோவார வைப்புத்தலமாகவே விளங்கி வருகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோவில்.

திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையில் 71-ஆவது பதிகத்தில் மூன்றாவது திருத்தாண்டகத்தில் "ஈச்சரம்' என வரும் தலங்களை வகுத்து அருளிச் செய்துள்ளார்.

"நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகளேச்சுரம்

நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான

கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்

ss

குக்குடேச்சுரம்

அக்கீச்சுரம் கூறுங்கால்

ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம்

அயனீச்சுரம்

அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்

ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்றேத்தி

இறைவன் உறைசுரம் பலவும் இயம்புவோமே.'

-அப்பர்

தலவரலாறு

ராகுவும் கேதுவும் அசுரவடிவமாக இருந்த தங்களின் தோஷம் நீங்கத் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப்பதவியை அடைந்தனர். அவர்கள் பூஜித்த தலம் சீர்காழியிலுள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலாகும். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது அமிர்தம் வெளிப்பட்டது. நரை, திரை, மூப்பு சாக்காடு, பிணி முதலியவற்றை நீக்கும் மருந்தாக அமிர்தம் விளங்கியது. அதை உண்ண தேவர்களும் அசுரர்களும் போட்டியிட்டனர். அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி வடிவெடுத்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு முதலில் வழங்கினார். ஆனால் ஒரு அசுரன் மட்டும் தேவர் வடிவம்கொண்டு சூரிய- சந்திரர்களுக்கு நடுவே நின்று அமிர்தத்தை உண்டுவிட்டான்.

இதனையறிந்த சூரிய- சந்திரர்கள் மகாவிஷ்ணுவிடம் குறிப்பால் உணர்த்த, அவர் தன் கையிலிருந்த கரண்டியால் அசுரனை ஓங்கி அடித்தார். அதனால் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டது. தலையானது சிரபுரம் என்னும் தற்போதைய சீர்காழியிலும், உடல் மற்றொரு இடத்திலும் விழுந்தது. தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் பாம்புகளாக மாறின. இந்த அரவங்கள் சிவபெருமானை தியானித்து காற்றை மட்டும் உணவாகக்கொண்டு கடுந்தவம் புரிய, இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது அந்த அரவங்கள், தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய- சந்திரர்களை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் அருளுமாறு வேண்டின. சிவபெருமான், "சூரியன், சந்திரன் இருவரும் உலக உயிர்களுக்கு இன்றியமையாதவர்கள் என்றுகூறி, அவர்களை அமாவாசை- பௌர்ணமி, கிரகண நாட்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்த வரமளித்தார்.

மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகுவும்,

பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு கேதுவும் காட்சியளித்தனர். அத்துடன் அதுவரை இருந்த ஏழு கிரகங்களுடன் இவர்களைச் சேர்த்து ஒன்பது கிரகங்களாக விளங்கும்படி (நவகிரகங்கள்) வரமளித்தார். மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்ட அசுரனது தலை விழுந்த இடம் சீர்காழி. எனவே இத்தலம் சிரபுரம் என்றும், ஆதி ராகு, ஆதி கேது தலமாக நாகளேச்சுரம் என்றும், தற்போது சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோவில் என்றும் சிறப்புடன் விளங்கிவருகிறது.

ss

இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனத்தைக் காப்பதற்காக, விநாயகர் காக வடிவெடுத்து அகத்தியரின் கமண்டலத்திலிருந்த நீரைக் கவிழ்த்துவிட உருவான தீர்த்தமே கழுமல நதி. இந்த நதி ஆலயத்தின் மேற்குப் பகுதியில் ஓடுகிறது.

சிறப்பம்சங்கள்

=இறைவனின் திருநாமம் நாகேஸ்வர முடையார்; இறைவியின் திருநாமம் பொன்னாகர வல்லியம்மை.

=நாக மாணிக்கத்தை வைத்துப் பூஜைசெய்த மாணிக்க விநாயகர் க்ஷேத்திர விநாயகராக அருள்பாலிப்பது சிறப்பு.

=சனிபகவான் ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சந்நிதியில் இருப்பது காணக்கிட்டாத அபூர்வ அமைப்பாகும்.

=இத்தலத்தில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் சிறு சந்நிதியில் அருள்பாலிப்பது சிறப்பான ஒன்று. இந்த விநாயகரை வளர்பிறை சதுர்த்தியிலும், க்ஷேத்திர விநாயகரான மாணிக்க விநாயகரை தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தியிலும் வழிபட்டால் சங்கடங்கள் தொலைந்து சந்தோஷம் மலரும்.

= சிரபுரம் தவிர, பிரம்மபுரம், வேணுபுரம், புகலி, வெங்குருதோணிபுரம், பூந்தராய், புறவம், சண்பை காளிபுரம், கொச்சைவையம், கழுமலம் போன்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

=குழந்தையானது தான் வேண்டுவதைத் தாயிடம் முறையிடுவதுபோல, இத்தல அம்பிகையிடம் நாம் ஆத்மார்ந்தமாகச் சொல்லி வழிபட்டால் கெட்ட கனவு, தேவையற்ற பயத்தைப் போக்கி, பொன்னான வாழ்வழிப்பாள் இத்தல பொன்னாகர வல்லியமை.

=ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித்தனியே சந்நிதி விளங்கும் நாகேஸ்வரமுடையார் கோவிலில் ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து தானியத்தின்மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியத்தின்மீதும் தீபமேற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறைவதோடு நல்லது நடக்கும்.

=நான்குகால பூஜைகள் நடக்கும் இத்தலத்தில் தேய்பிறை அஷ்டமியன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் உண்டு.

=பிரதோஷம், மகாசிவராத்திரி, ஆடிவெள்ளி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் நடக் கின்றன. குறிப்பாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று 150 கிலோ அரிசி சாதத்தால் அன்னா பிஷேகம் செய்து, அதை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவது சிறப்பாகும்.

=அடிக்கடி கனவில் பாம்புகளைக் காண்போரும், ராகு காலத்தில் பிறந்தவர்களும் ஆதி ராகு தலமான இங்கு, ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்கள் வரும் நாட்களில், ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை சாற்றி வழிபடுவது நன்மை பயக்கும்.

சீர்காழி நகரின் கடைவீதியருகே சாலையோரத்தில் மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. நாகேஸ்வரமுடையார் கிழக்குநோக்கி லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமியும் அம்பாளும் தனித்தனியே சந்நிதி கொண்டிருந்தாலும் ஓரிடத்தில் நின்றால் இருவரையும் தரிசிக்கும் வண்ணம் அமைந் துள்ளது குறிப்பிடத்தக்கது. சிவாலயத் திற்குரிய அனைத்து சந்நிதிகளும் சிறப்பாக உள்ளன.

"தேவ மகிமை கொண்ட இத்தல ராகு பகவான் அனைத்துவிதமான சர்ப்ப தோஷங்களை அகற்றுவதோடு சந்தோஷ வாழ்வைத் தரவல்லவர்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான முத்து குருக்கள். மேலும் அவர் கூறுகையில், "அன்றாட ராகுகால வழிபாடு நடத்தப்பட்டாலும், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் சர்ப்பசாந்தி ஹோமம் நடப்பது சிறப்புவாய்ந்தது. பல தலைமுறைகளாக இந்த ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டைக் கடைப்பிடித்து வருகிறோம். பூஜையில் கலந்துகொண்டு பயனடைந்தவர்கள் ஏராளம்'' என்கிறார்.

காலை 6.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு:

ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோவில், சீர்காழி நகர், சீர்காழி அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம்- 609 110.

பொன் மாரிமுத்து, செயல் அலுவலர், அலைபேசி: 97515 02829, செல்வம், மெய்க்காவலர், அலைபேசி: 95977 92928. பூஜை விவரங்களுக்கு முத்து குருக்கள், அலைபேசி: 94437 85862.

சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் கடைவீதி அருகில் சாலையோரத்தில் ஆலயம் உள்ளது.

om011121
இதையும் படியுங்கள்
Subscribe