Advertisment

பழனியில் பரவசத்தில் ஆழ்த்திய முத்தமிழ் முருகன் மகாநாடு! - சக்தி

/idhalgal/om/muthamil-murugan-mahanadu-palani-sakthi

டந்த ஆறு மாதங்களுக்குமுன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அறநிலையத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில்தான் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வந்தார்.

Advertisment

அதன் அடிப்படையில்தான் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் இருக்கும் பழனி யாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாடு, இரண்டு நாட்கள் மிகவும் விமர்சை யாக நடந்தது. 24-ஆம் தேதி காலை 8.00 மணிக்கு நூறடி உயரக் கம்பத்தில் மாநாட்டுக் கொடியை தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றினார். அதைத் தொடர்ந்து, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், பழனி பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் உட்பட, ஆதீனங்களும் முக்கிய பிரமுகர்களும் கண் காட்சிகளைப் பார்வையிட்டனர்.

Advertisment

tt

கல்லூரி வளாகத்தில் அறுபடைவீடு களைக் குறிக்கும் வகையிலான ஆறு நுழைவு வாயில்கள், பிரதான நுழைவுவாயில் பகுதி யில் கயிலை மலையில் சிவபெருமான், பார்வதி, கங்காதேவி அமர்ந்திருப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருந்தது. முருகனின் வரலாற்றைக் காண 3டி தொழில் நுட்பத் துடன்கூடிய திரையரங்கம், முருகனை அருகிலிருந்து காணும் வகையிலான வி.ஆர் தொழில் நுட்பத்துடன்கூடிய அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங் கில் வி

டந்த ஆறு மாதங்களுக்குமுன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அறநிலையத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில்தான் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வந்தார்.

Advertisment

அதன் அடிப்படையில்தான் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் இருக்கும் பழனி யாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாடு, இரண்டு நாட்கள் மிகவும் விமர்சை யாக நடந்தது. 24-ஆம் தேதி காலை 8.00 மணிக்கு நூறடி உயரக் கம்பத்தில் மாநாட்டுக் கொடியை தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றினார். அதைத் தொடர்ந்து, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், பழனி பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் உட்பட, ஆதீனங்களும் முக்கிய பிரமுகர்களும் கண் காட்சிகளைப் பார்வையிட்டனர்.

Advertisment

tt

கல்லூரி வளாகத்தில் அறுபடைவீடு களைக் குறிக்கும் வகையிலான ஆறு நுழைவு வாயில்கள், பிரதான நுழைவுவாயில் பகுதி யில் கயிலை மலையில் சிவபெருமான், பார்வதி, கங்காதேவி அமர்ந்திருப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருந்தது. முருகனின் வரலாற்றைக் காண 3டி தொழில் நுட்பத் துடன்கூடிய திரையரங்கம், முருகனை அருகிலிருந்து காணும் வகையிலான வி.ஆர் தொழில் நுட்பத்துடன்கூடிய அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங் கில் விநாயகர், வள்ளி, தெய் வானையுடன் முருகன், சிவன், பார்வதி, மீனாட்சி என பல தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன.

அருணகிரிநாதர் அரங்கு

விழாமேடையில் காலை 9.35 மணிக்கு ஏறிய அமைச்சர் சேகர்பாபு, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் விழாவைத் தொடங்கினார். காலை 9.40 மணிக்கு சீர்காழி சிவ சிதம்பரம் இறை வணக்கப் பாடல் மெய்சிலிர்க்கும் வண்ணம் ஒலித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வர் காணொளி வாயிலாக ஸ்டாலின், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வாழ்த்துரை வழங்கினார். இந்த வாழ்த்துரையில், பழனி, திருச்செந்தூர் உட்பட ஏழு முருகன் திருத்தலங்களில் பல திருப்பணி கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, முருகனின் ஆய்வுக் கட்டுரை மலரை அமைச்சர் ஐ. பெரியசாமி வழங்க, அதை நீதியரசர் பாலசுப்பிரமணி பெற்றுக்கொண்டார். மேலும், ஆதினப் பெருமக்கள், சுப்பிரமணியன், புகழேந்தி, சிவஞானம், வேல்முருகன் ஆகிய நீதியரசர் கள் முருகனின் புகழைப் பற்றி பக்திப் பெருக்கு டன் உரையாற் றினர்.

இரண்டாம் நாளான 25-ஆம் தேதி மாநாட்டு மலரை உயர்நீதிமன்ற நீதியரசர் சுரேஷ் குமார் வெளியிட கோவை கௌமார மடம் குமரகுருபரர் சுவாமிகள் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரை யாற்றிய நீதியரசர் சுரேஷ்குமார். "தமிழ் மொழியின் செம்மையை உணர்ந்து, "முருகன்தான் தமிழ்; தமிழ்தான் முருகன்' என்றுணர்ந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ள அரசும், அறநிலையத்துறையும் பாராட்டுக்குரியது. இந்த மாநாட்டை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்வதற்கு பதிலாக, உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்'' என்று கூறியதைக்கேட்டு விழா அரங்கிலிருந்த பக்தர்களும், பொதுமக்களும் கரவோசை எழுப்பி வாழ்த்தினார்கள்.

அதன்பின் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, "இந்தியாவிலேயே அதிக கோவில்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். அதுபோல் நாங்கள் எப்பொழுதும் அமைச்சரை (சேகர்பாபு) தொடர்பு கொண்டாலும் கோவிலில் குடமுழுக்கு போன்ற பணிகளில்தான் இருக்கிறேன் என்பார். முதல்வர் சொன்னதுபோல் அமைச்சர் கோவிலில்தான் குடியிருந்து வருகிறார். இந்த மாநாட்டை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தியதற்கு மாவட்ட மக்கள் சார்பில் முதல்வருக்கும், அமைச்ச ருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். இரண்டு நாட்கள் நடந்த மாநாட் டில் கலை நிகழ்ச்சிகள், நாட்டியம், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி, கரகாட்டம், மயிலாட்டம் என பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப் பட்டன. இதைக் காண பெருந்திர ளான பக்தர்கள் வந்தனர். இரண்டு நாள் மாநாட்டில் மூன்று வேளை யும் காலை, மதியம், இரவு என சிற்றுண்டி முதல் சாப்பாடு வரை பலவகைகளில் தயாரித்து பக்தர் களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

மாநாட்டின் நிறைவு விழாவின் போது உயர்நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன் கலந்துகொண்டு சமய சொற்பொழிவாளர் கள், திருப்பணி மேற்கொண்ட ஆன்மிக, இலக்கியப் படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 16 பேருக்கு தங்கக் காசுடன் விருது களை வழங்கினார். தொடர்ந்து அறநிலையத் துறை சார்பில் 21 தீர்மானங்கள் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தில் "இந்த மாநாடுமூலமாக பழனியில் வேல் அமைக்கப்படும்' என்ற தீர்மானமும் முக்கியத்துவமாக இருந்தது. இந்த முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்கள் நடந்ததில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்துகொண்டு பழனி நகரையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், "உலக பக்தர்களையெல்லாம் ஒன்றிணைந்த இந்த நிகழ்வு சிறப்புக்குரியது. "முருகு' என்ற சொல்லில் தமிழ் மெய்யெழுத்துகளின் பிரிவுகளான வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்றும் உள்ளன. சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக் கியங்களிலும் முருகனைப் பற்றிப் பாடாத புலவர்களே இல்லை. தமிழக அரசு ஆறுபடை வீடுகளுக்கு இலவசமாக பக்தர்களை அழைத் துச் சென்றது, சக்தி தலங்ளுக்கு அழைத்துச் சென்றது என இதுபோல் காரியங்கள் செய்துவரும் ஆன்மிக அரசாக இந்த அரசு செய்துவருவது பாராட்டுக்குரியது'' என்றார்.

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வந்த வேலுப்பிள்ளை கணேஷ்குமாரிடம் கேட்டபோது, "கடந்த 2014-ல் சுவிட்சர் லாந்தில் 2-ஆவது அûத்துலக முருகன் பக்தி மாநாடு எனது தலைமையில் நடைபெற்றது. முதல் மாநாடு இலங்கையில் நடைபெற்றது. தமிழக அறநிலையத் துறை அமைச்சர் அழைத்ததின் பேரில் சுவிட்சர்லாந்தி லிருந்து பதினைந்து பேர் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறோம். இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழுக்கும் முருகனுக்கும் நடக்கக்கூடிய விழாவாகும். ஏற்பாடுகள் மிகவும் அருமையாக இருக்கிறது. முருகனுக்காக ஒரு மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறினார்.

"அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பக்தர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து இந்து சமயத்தினருக்கும் அடையாளமான இந்த மாநாடு இந்த முருகனின் புனித பூமியில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மாநாடு எங்கள் நாட்டில் மட்டுமல்ல; எந்த நாட்டிலும் நடந்ததில்லை. இந்த முயற்சியை முன்னெடுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டானுக் கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்- இம்மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான்.

கண்காட்சியைப் பார்வை யிட்டுக் கொண்டிருந்த பழனி யைச் சேர்ந்த குமார், பிரியா குடும்பத்தினரிடம் கேட்டபோது... "தைப்பூசம், பங்குனி உத்திரத்தில் தான் இப்படி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்ததைப் பார்த்திருக்கிறோம். ஆனால் முருகனுக்காக நடந்த இந்த முதல் மாநாட்டைக் காண பழனி நகரம் மட்டுமல்ல; மாவட்டம் முழுவதிலும் இருந்துமே ஏராளமான முருக பக்தர்களும், பொதுமக்களும் வந்திருக்கிறார்கள். இப்படி ஒரு மாநாடு இதுவரை நாங்கள் பழனியில் பார்த்ததில்லை. இதேபோல் தொடர்ந்து முருகனுக்காக மாநாடு நடத்தினால் அரசுக்கு நன்றிக்குரியவர்களாக இருப்போம்'' என்றனர்.

"தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் அறநிலையத்துறையில் இருக்கும் ஜே.சி., ஏ.சி., டி.சி., இ.ஒ. மற்றும் கோவிலில் பணிபுரியும் அலுவலர்கள், பழனியாண்டவர் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களும் இந்த மாநாட்டிற்காக அமைச்சரின் உத்தரவின் பேரில் இங்கு வந்திருக்கிறோம். இப்படி வந்த எங்களுக்கு நிகழ்ச்சிகளை ஒதுக்கி கண்காணிக்கவும், அதுபோல் நீதியரசர்கள், விவிஐபி, விஐபிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த பக்தர்கள், ஆதீனங்கள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோரை அழைத்து வருவதிலிருந்து திரும்ப அனுப்பும் வரை அவர்களைத் தங்கவைப்பதி லும் எங்களை நியமித்திருந்தனர். இந்த மாநாட்டிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தும்கூட, எந்த ஒரு இடத்திலும் கூச்சல் குழப்பமோ இல்லை. அதுபோல் இந்த மாநாட்டு அரங்கு முழுவதுமே குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த அளவுக்கு மின்சாரம் அதிகமாகப் பயன்பட்டும்கூட, அதை மின்சாரத்துறைமூலம் வாங்காமல் ஜெனரேட்டர்மூலமே பயன்படுத்தினோம். இப்படி இரண்டு நாள் இரவு- பகல் பார்க்காமல் எங்கள் அமைச்சர் சேகர்பாபு பம்பரமாக செயல்பட்டு வெற்றி யடைய வைத்திருக்கிறார்'' என்றனர் மாநாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான அலுவலர்கள் சிலர்.

om011024
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe