மும்மூர்த்தி அவதார ஜகத்குரு! - மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/mummurti-incarnation-jagatguru-mumbai-ramakrishnan

தத்தாத்ரேயர் ஜெயந்தி 18-12-2021

த்தாத்ரேயரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒன்றிணைந்த வடிவம் என்பர். தட்சிணாமூர்த்திக்கு ஆலமரம், மாரியம்மனுக்கு வேப்பமரம் என்பது போல தத்தாத்ரேயருக்கு உரியது அத்திமரம். இது மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதிகம் காணப்படுகிறது. தத்தர் வழிபாடும் அந்த மாநிலத்தில்தான் அதிகம். அத்திமரம் பூக்காது. காய்களையே பார்க்கலாம். ஆகவேதான் அதிசயத்திற்கு உதாரணம் கூறும்போது, "அத்தி பூத்தாற்போல' என்பர்.

ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி (டேம்பே மகராஜ் 1854-1914) பல புராணங்களிலிருந்து தத்தாத்ரேயரைப் பற்றித் தொகுத்து 3,500 துதிகளில் "தத்த புராணம்' என்று செய்துள்ளார். குஜராத்திலும் தத்தர் வழிபாடு உள்ளது. ஸ்ரீரங்க அவதூத மகராஜ் என்பவர் "ஸ்ரீ குரு லீலாம்ருதம்' என்று எழுதியுள்ளார். ஸ்ரீ சரஸ்வதி கங்காதரர் என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் "குரு சரித்திரம்' என எழுதியுள்ளார். இது மகாராஷ்டிரத்தில் அதிகம் பாராயணம் செய்யப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து என்று பரவலாக சொல்லப்பட்டாலும், வியாசரின் ஸ்ரீமத் பாகவதம் (1-3) 22 அவதாரங்கள் என்று கூறும். அதனில் ஆறாவது அவதாரம் தத்தாத்ரேயர். இவரது அவதாரம் குறித்து வெவ்வேறு விதமாகக் கூறப்படுகிறது. ஓரிரண்டு சிந்திப்போம்.

ff

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒன்றிய வடிவமாக, மூன்று தலைகள், ஆறு கரங்களுடன், நான்கு வேதங்களே நான்கு நாய்களாகத்

தத்தாத்ரேயர் ஜெயந்தி 18-12-2021

த்தாத்ரேயரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒன்றிணைந்த வடிவம் என்பர். தட்சிணாமூர்த்திக்கு ஆலமரம், மாரியம்மனுக்கு வேப்பமரம் என்பது போல தத்தாத்ரேயருக்கு உரியது அத்திமரம். இது மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதிகம் காணப்படுகிறது. தத்தர் வழிபாடும் அந்த மாநிலத்தில்தான் அதிகம். அத்திமரம் பூக்காது. காய்களையே பார்க்கலாம். ஆகவேதான் அதிசயத்திற்கு உதாரணம் கூறும்போது, "அத்தி பூத்தாற்போல' என்பர்.

ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி (டேம்பே மகராஜ் 1854-1914) பல புராணங்களிலிருந்து தத்தாத்ரேயரைப் பற்றித் தொகுத்து 3,500 துதிகளில் "தத்த புராணம்' என்று செய்துள்ளார். குஜராத்திலும் தத்தர் வழிபாடு உள்ளது. ஸ்ரீரங்க அவதூத மகராஜ் என்பவர் "ஸ்ரீ குரு லீலாம்ருதம்' என்று எழுதியுள்ளார். ஸ்ரீ சரஸ்வதி கங்காதரர் என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் "குரு சரித்திரம்' என எழுதியுள்ளார். இது மகாராஷ்டிரத்தில் அதிகம் பாராயணம் செய்யப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து என்று பரவலாக சொல்லப்பட்டாலும், வியாசரின் ஸ்ரீமத் பாகவதம் (1-3) 22 அவதாரங்கள் என்று கூறும். அதனில் ஆறாவது அவதாரம் தத்தாத்ரேயர். இவரது அவதாரம் குறித்து வெவ்வேறு விதமாகக் கூறப்படுகிறது. ஓரிரண்டு சிந்திப்போம்.

ff

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒன்றிய வடிவமாக, மூன்று தலைகள், ஆறு கரங்களுடன், நான்கு வேதங்களே நான்கு நாய்களாகத் தோன்றும் உருவமே தத்தாத்ரேயர் என்பது யாவரும் அறிந்தது.

அத்திரி முனிவர்- அனுசுயா புத்திரர் நாரதர் கலகப் பிரியர் என்பர். அவரது செயல்கள் அனைத்தும் வினோதமாக நன்மையிலேயே நிறைவடையும்.

சப்த ரிஷிகளில் ஒருவர் அத்திரி முனிவர். பிரம்மாவின் நிழலி-ருந்து தோன்றியவர் கர்தம பிரஜாபதி.

அவரது மனைவி தேவஹூதி. அவர்கள் ஒன்பது பெண் குழந்தைகளைப் பெற்றனர். இரண்டாவது மகளே அனுசுயா. பிரம்மா கூறியபடி அத்திரி மகரிஷி அனுசுயாவை மணந்தார். அவளது கற்பின் திறத்தை வெளிப்படுத்த நாரதர் செய்த லீலையே தத்தர் அவதாரத்தில் முடிந்தது.

நாரதர் இரும்பாலான கடலையை எடுத்துக்கொண்டு சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரிடம் சென்று, "இதை சுண்டலாக்கித் தாருங்கள்; உண்ண வேண்டும்'' என்றார். அவர்கள், "என்ன நாரதா, இரும்பைக் காய்ச்சலாம். அது சிவக்கும். ஆறினால் இறுகிவிடுமே! இது உனக்குத் தெரியாதா?'' என்று சொல்லி நகைத்தனர்.

அடுத்து அவர் அனுசுயாவிடம் சென்று வேண்டினார். அவள் தனது கற்பின் மகிமையால் இரும்புக் கடலையை சுண்டலாக்கித் தந்தாள். மகிழ்வுடன் அதைப் பெற்றுக்கொண்ட நாரதர் லட்சுமி, சரஸ்வதி, பார்வதியிடம் சென்று சுண்டலைக் காண்பித்து, "இதோ பாருங்கள். அனுசுயா தனது கற்பின் வலிமையால் இரும்புக் கடலையை சுண்டலாக்கித் தந்தார். சாப்பிட்டுப் பாருங்கள்'' என்றார்.

இதுகண்டு மூன்று தேவியரும் கோபம் கொண்டனர். அவர்கள் தங்கள் கணவர்களிடம் அனுசுயாவின் கற்புக்குக் களங்கம் விளைவிக்குமாறு கூறினர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஆலோசித்து, துறவி வேடம்பூண்டு அனுசுயாவின் ஆசிரமத்துக்கு வந்து, "பிக்ஷாம்தேஹி' என்றனர். அப்போது அத்திரி மகரிஷி அங்கில்லை.

அவர்களை வரவேற்ற அனுசுயா அமரவைத்து உபசரித்து அன்னம் பரிமாற எத்தனித்தாள். அப்போது அவர்கள், "நீங்கள் ஆடையின்றி உணவு பரிமாறினால்தான் நாங்கள் உண்போம். இது எங்கள் விரதம்'' என்றனர். அதிதி உபசாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். என்ன செய்வதென்று யோசித்த அனுசுயா, தன் கணவரை நினைத்து அவர்கள் தலையில் நீர் தெளிக்க, மும்மூர்த்திகளும் குழந்தைகளாகிவிட்டனர்.

அந்தக் குழந்தைகளுக்கு பாலூட்டி தொட்டிலிட்டுத் தாலாட்டினாள்.

அப்போது ஆசிரமம் திரும்பிய அத்திரி முனிவர் தன் ஞான திருஷ்டியால் மும்மூர்த்திகளே மூன்று குழந்தைகளாக அங்கிருப்பதை அறிந்து வியந்தார்.

இந்த நிலையில் தங்கள் கணவர்களைக் காணாமல் தேடிய மூன்று தேவியரும், நாரதரிடம் கேட்டு விவரமறிந்து அனுசுயா தேவியின் ஆசிரமத்திற்கு வந்தனர். தங்கள் கணவர்களை முந்தைய நிலையில் தருமாறு வேண்டினர். அனுசுயாதேவி தன் கணவரை தியானித்து புனிதநீரை குழந்தைகள்மேல் தெளிக்க, மும்மூர்த்திகளும் பழைய உருப்பெற்றனர். அந்த மூன்று குழந்தைகளின் ஒன்றிய வடிவமாக தத்தாத்ரேயர் அவதாரம் நிகழ்ந்தது. அவர் அத்திரி மகரிஷி- அனுசுயா தம்பதியரின் மகனானார்.

தத்தாத்ரேயர் சிறுவயதிலேயே வைராக்கியம் பெற்றார். யோகத்தில் ஆழ்ந்து அவதூதரானார். (ஆடையற்ற உருவம்).

அத்வைத தத்துவத்தை 270 துதிகளில் "அவதூத கீதை' என்று செய்தார். கடைசி துதியான பலஸ்ருதி என்ன கூறுகிறது?

"தத்தாத்ரேய அவதூதேன நிமித்தம் ஆனந்த ரூபேண

யே படந்தி ச ஸ்ருண்வந்தி ச தேஷாம் ந ஏவ புனர்பவ.'

ஆனந்தரூபியான இந்த தத்தாத்ரேய கீதையை யார் வாசிக்கிறார்களோ- கேட்கிறார் களோ அவர்களுக்கு மறுபிறவி இல்லை.

அவதூதர் என்ற சொல்லுக்கு என்ன பொருள் கூறுகிறது? யார் வேதவாக்குகள், வேத உட்பொருளை அறிவாரோ- வேதாந்தமான உபநிடதங்களை மற்றவர்களுக்குத் துல்லியமாக உபதேசிப்பாரோ அவரே அவதூதர்.

"அவதூத' என்னும் சொல்லின் ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் கூறப்பட்டுள்ளது.

"ஆசாபாச வினிர்முக்த ஆதிமத்ய அந்த நிர்மல

ஆனந்த வர்ததே நித்யம் ஆகாரம் தஸ்ய லக்ஷணம்.'

அ- ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டவர். முதல், நடு, கடைசியிலும் பூரணர். களங்கமற்ற மனதுடையவர். எப்போதும் ஆனந்தத்தில் லயிப்பவர்.

"வாஸன வர்ஜித என வக்தவ்யம் ச நிராமயம்

வர்த்தமானேஷு வர்த்ததே வகாரம் தஸ்ய லக்ஷணம்.'

வ-ஆசைகள் அடக்கப்பட்டவர். பேச்சு பரவலாக உள்ளவர். நடக்கும் கால சூழ்நிலையில் உள்ளவர்.

"தூளிதூர காத்ராணி தூதசித்தோ நிராமய

வாரணா த்யான நிர்முக்தோ தூகார தஸ்ய லக்ஷணம்.'

தூ- எவரது உடல் சாம்பல் நிறமாக உள்ளதோ, மனம் தூய்மையானதோ, தியானத் தில் அமிழ்ந்துள்ளாரோ அவர்.

"தத்வசினி சிந்தா த்ருதாயேன சிந்தா சேஷ்டாவிவர்ஜிதா

தம் அஹங்கார முக்த தகார தஸ்ய லக்ஷணம்.'

த- யாரது எண்ணம் தூய்மையானதோ, மனம் சலனமற்றதோ, அகங்காரம், தான் என்னும் எண்ணம் அற்றதோ அவர்.

சாண்டில்ய உபநிடதத்தில் தத்தர் சாண்டில்ய மகரிஷி அதர்வணரை அணுகி, ஆத்ம லாபம், மோட்சமடைய அஷ்டாங்க யோகம் கூறுமாறு வேண்டினார்.

அவரும் இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அஷ்டாங்க யோகம் பற்றிக் கூறினார். அடுத்து பிரம்ம வித்தையைக் கூறுமாறு கேட்டார். "ஸத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்ம' என்றார். அதையறிந்தால் எல்லாம் அறியப்பட்டதே. அதற்கு உடல் இல்லை. சுட்டிக்காட்ட இயலாது. ஞானத் தாலே உணரலாம். "ஸத் சித் ஆனந்தம் கூடிய ஏக ரஸம். மங்களம், சாந்தம், அமிர்தம் பிரம்மம்' என்றார். "பிரம்மைவாஹம்- அதுவே நான்' என்று உபாசித்து லயிக்கிறவன், "ப்ரம்மவித் ப்ரம்மைவ பவதி'- பிரம்மனை உணர்ந்தவனே பிரம்மனாகி றான்.

இதற்கு தத்தாத்ரேயர் சுலோகம் உள்ளது.

"தத்தாத்ரேயம் சிவம் சாந்தம் இந்த்ர நீல நீபம் ப்ரபும்

ஆத்மமாயாரதம் தேவம் அவதூதம் திகம்பரம்'

என்று தொடங்கி, "இதி ஓம் தத் ஸத்யம் இதி உபநிஷத்' என முடிகிறது. நளினமான துதி. மகாராஷ்டிர அபங்கப் பாடல்கள் தத்தாத்ரேயர்மீது பல உள்ளன. மும்மூர்த்தி ஒன்றிய தத்த குருநாதரைத் துதித்து அருள் பெறுவோம்.

ஸ்ரீ தத்தாத்ரேய குரு பரப்ரம்மணே நம.

om011221
இதையும் படியுங்கள்
Subscribe