Advertisment

இம்மையிலும் மறுமையிலும் பெரும்பேறு தரும் பள்ளியறை பூஜை!- சுவாமி முனிஸ்வரன் ஜி

/idhalgal/om/most-school-prayers-world-and-next-swami-muniswaran-g

சிவாலயங்களில் இரவுநேரத்தில் கோவில் நடை சாற்றப்படுவதற்குமுன் நடைபெறும் பூஜை பள்ளியறை பூஜையாகும்.

Advertisment

அதாவது சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனைசெய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பதாகும்.

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம்வரும்போது, சிவபுராணம், பதிகங்கள் பாடிவரவேண்டும். இதை தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அடையலாம்.

பள்ளியறை பூஜைக்குப் பல்லக்குத் தூக்கி ஈசனைச் சுமந்துவரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகிறதோ, அவர்கள் மறுபிறவியில் பொறியி யல் வல்லுநர்களாகவும், பலமாடிக் கட்டடங் களுக்குச் சொந்தக்காரர்களாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள் என்பது நம்பிக்கை. பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

Advertisment

ff

திங்கள்

திங்கட்கிழமையன்று பள்ளியறை பூஜைக் குரிய பொருட்களை தானம் செய்து, அதில் கலந்து கொள்பவர்கள் அதன்பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களைத் தங்குதடையின்றி

சிவாலயங்களில் இரவுநேரத்தில் கோவில் நடை சாற்றப்படுவதற்குமுன் நடைபெறும் பூஜை பள்ளியறை பூஜையாகும்.

Advertisment

அதாவது சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனைசெய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பதாகும்.

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம்வரும்போது, சிவபுராணம், பதிகங்கள் பாடிவரவேண்டும். இதை தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அடையலாம்.

பள்ளியறை பூஜைக்குப் பல்லக்குத் தூக்கி ஈசனைச் சுமந்துவரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகிறதோ, அவர்கள் மறுபிறவியில் பொறியி யல் வல்லுநர்களாகவும், பலமாடிக் கட்டடங் களுக்குச் சொந்தக்காரர்களாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள் என்பது நம்பிக்கை. பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

Advertisment

ff

திங்கள்

திங்கட்கிழமையன்று பள்ளியறை பூஜைக் குரிய பொருட்களை தானம் செய்து, அதில் கலந்து கொள்பவர்கள் அதன்பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்.

செவ்வாய்

ஆயில்யம், கேட்டை, மூலம், பூராட நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம்வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ளவேண்டும்.

ஆயில்ய நட்சத்திரமும், செவ்வாய்க் கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத் தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாகத் தந்து, அவசியம் கலந்துகொள்ளவேண்டும்.

புதன்

அரசு மற்றும் தனியார் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன்கிழமை யன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்.

வியாழன்

அனைத்துவிதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருடம்வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ளவேண்டும். மேலும் அனுஷ நட்சத்திரமும் வியாழக் கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக் குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித் தரவேண்டும். கலந்துகொண்டு மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

வெள்ளி

கணவனுடைய நோய் பலகாலமாக இருந்தால் அது தீர, அவருடைய மனைவியானவர் வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மாலான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

சனி

அற்புதமான வாரிசை மகனாகவோ மகளாகவோ பெறவிரும்பினால் சனிக்கிழமை யன்று பள்ளியறை பூஜையில் கலந்துகொள்வ தோடு, அதற்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாகத் தரவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும், காணாமல்போய் பல ஆண்டுகள் ஆனவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும், அறிந்த பின்னர் திரும்பவரவும் மூன்றாண்டுகள்வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ளவேண்டும். அஸ்வினியும் ஞாயிற்றுக் கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள், பால், நைவேத் தியம் போன்றவற்றை வாங்கித் தரவேண்டும்.

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய், மின்விளக்கு தானம் செய்பவர்களுக்கு, பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்விதரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்.

பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் பெறும் வேலையில் சேர்வர். அவர்களது மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் அதிக சம்பளம் பெறும் வேலையில் இருப்பார்கள். குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள்வரை இப்படிச் செய் தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்.

பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங் கள் செய்து கொடுப்பவர்களும், பள்ளி யறை பூஜை நிறைவடைந்த பின்னர், ஏழை களுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர் களுக்கும் ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் பிறப்பார்கள்.

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்துகொண்டு, அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துவந்தால் சுகப்பிரசவம் ஏற்படும். நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் வலியில்லாத பிரசவம் உண்டாகும். குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும். இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால், அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாவதற்கு பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்.

பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியடைவார்கள். பலமடங்கு லாபம் அவர்களைத் தேடிவரும்.

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத் தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.

வெகுகாலமாக திருமணம் நடக்காமலிருக்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் இதில் கலந்துகொள்ளவேண்டும். ஒரு வருடத்திற்குக் குறையாமல் கலந்துகொள்வதன் மூலமாக அவர்களுக்கு இனிமையான மணவாழ்க்கை அமையும்.

பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் துவங்கு வதும் பெரும் புண்ணியத்தைத் தரும். யார் இதைச் செய்கின்றார்களோ, அவர்கள் மற்றும் அவர்களுடைய அடுத்த பதினான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இனிமையான இல்லறத்தை தமது வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள் என்பதை சித்தர்களின் தலைவரும், தமிழ் மொழியின் தந்தை யுமாகிய அகத்தியர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

om010422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe