வகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து வருபவர் சந்திரன். சூரியனை வெங்கதிரோன் என்றும், சந்திரனை தண்கதிரோன் என்றும் அழைப்பர். உணவு, பயிர், அமுதம், இன்பம், கவிதை, காதல், தண்மை, பாற்கடல், குமுதமலர், கள், பெண் ஆகிய இன்பப் பொருட்களோடெல்லாம் தொடர்புடையவர் சந்திரன். சந்திரனை விரும்பாத மக்களே இல்லை. இவருக்கு லோகப்பிரியன் என்ற பெயரும் உண்டு.

ss

இப்படி எல்லாருக்கும் பிரியமான சந்திரனுக்கு உள்ளத்தைக் கவரும் கதைகள் பல உள்ளன. வயது முதிர்ந்த ஒரு பெண்ணுக்கு நான்கு ஆண் குழந்தைகள். அவர்களுக்கு சூரியன், சந்திரன், வருணன், வாயு என்று பெயர் வைத்து வளர்த்துவந்தாள் அந்தத் தாய். ஒருநாள் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் நடந்த விருந்தில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு வந்தது. தாயின் அனுமதியோடு விருந்துக்குப் புறப்பட்டார்கள். அப்போது தாயார், ""மகன்களே, விருந்தில் பரிமாறப் படும் பட்சணங்களில் ஏதாவது ஒன்றை எனக்குக் கொண்டுவாருங்கள்'' என்று சொல்லிஅனுப்பினாள்.

நான்குபேரும் விருந்தில் கலந்துகொண்டனர்.

Advertisment

இலைகளில் வடை, வாழைப்பழம், இனிப்பு என்று வகைவகையாகப் பரிமாறப்பட்டன. அந்த பட்சணங்களில் ஒவ்வொன்றையும் இலையில் வைக்கும்போதே கையில் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான் சந்திரன். மற்ற மூவரும் எல்லாவற்றையும் தின்றுவிட்டனர்.

விருந்து முடிந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள் பிள்ளைகள். அவர் களை எதிர்பார்த்திருந்த அன்னை, ""எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?'' என்று ஆவலோடு கேட்டார். சூரியனோ, ""சிறுவர்களுக்கு பந்தியில் பலகாரங்களே வைக்கவில்லை அம்மா'' என்றான். வருணனோ, ""கொஞ்சமாகதான் போட்டார்கள். அதை சாப்பிட்டுவிட்டேன் தாயே'' என்றான். வாயுவோ, ""உனக்கு பட்சணம் கொண்டுவர வேண்டும் என்பதை மறந்து போனேன் அன்னையே'' என்றான். சந்திரன் மட்டும் தான் கொண்டுவந்திருந்த பட்சணங்களை எடுத்து தாயாரிடம் கொடுத்தான். தாய்க்கு சந்திரன்மீது அளவுகடந்த அன்பு பொங்கியது.

""நீதானப்பா எனக்கு உகந்த பிள்ளை. உத்தமபுத்திரன். மற்ற மூவரும் தங்கள் வயிறு நிறைந்தால் போதுமென்று உண்டுவிட்டனர். நீ மட்டுமே எனக்காக பட்சணங்களை தாய்ப் பாசத்தோடு கொண்டுவந்தாய். உன்னால் உலகமக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். உன்னைத்தவிர மற்ற மூவரையும் மக்கள் அவ்வப்போது திட்டட்டும். உன்னை மட்டும் எப்போதும் களிப்போடு வாழ்த்தட்டும்'' என்று வரமளித்தார் அந்தத் தாய்.

Advertisment

அதனால்தான் சூரியன் சுட்டெரிக்கும்போது "பாழும் சூரியன்... இப்படி கொளுத்துகிறான்...'

என்று, சூரியனால் பல நன்மைகள் இருந்தும்கூட மக்கள் திட்டுவதைப் பார்க்கி றோம். அதேபோல் மழையினால் உயிரினங் களுக்கு இன்றியமையாத நன்மைகள் இருந்தபோதும், விடாது மழைபெய்து சேதத்தை உண்டாக்கும்போது, "நாசக்கார மழை நிற்கமாட்டேன் என்கிறதே' என்று மக்கள் திட்டுவதைப் பார்க்கிறோம். வாயுபகவான் அனைத்து உயிர்களும் சுவாசிப்பதற்கும், தென்றலாகவும் வீசுகிறார். அதேநேரத்தில் கடும் புயற்காற்றாக மாறி வீசும்போது, "இந்த பேய்க் காற்று எப்போது நிற்கும்' என்று அவரையும் திட்டுகிறார்கள். ஆனால் சந்திரனை மட்டும் யாரும் திட்டுவதில்லை. சந்திரன் எனும் நிலவைக் கண்டால் எல்லாருக்குமே பரவசம்; ஆனந்தம்!

sssv

சந்திரன் மகாவிஷ்ணுவின் இதயத்திலிருந்து பிறந்தவர் என்றும், அமுதம் பெறுவதற்கு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது, கடலிருந்து லட்சுமிக்கு முன்பே தோன்றியவர் என்றும், அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் என்றும் புராணங்களில் உள்ளன.

தட்சன் தனது 27 மகள்களை (அசுவினி முதல் ரேவதிவரை 27 நட்சத்திரங்களாக உள்ளவர்கள்) சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அவர் களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் அதிக காதல் வயப் பட்டிருந்தான். இதனால் வருத்தமுற்ற மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். கோபமுற்ற தட்சன் சந்திரனை "சயரோக நோய் உண்டாகி தேய்பிறையாகக் கடவது' என சாபமிட்டான். இதனால் சந்திரனது உடல் தேய்ந்துகொண்டே போனது. சாபவிமோசனம் பெற சிவபெருமானை வேண்டித் தவமிருக்குமாறு தேவர்கள் ஆலோசனை சொல்ல, சந்திரன் சிவனை வேண்டிக் கடுந்தவமிருந்தான். சிவபெருமான், "மாதத்தில் பாதி நாள் தேய்ந்தும், அடுத்த பாதி நாள் வளர்ந்தும் வருவாய்' என்று வரமளித்தார். அதனால்தான் வளர்பிறை, தேய்பிறை உண்டாகின்றன என்று புராணம் கூறுகிறது.

சந்திரன் சிவபெருமானது இடது கண்ணாகக் கருதப்படுகிறார். சிவனின் தலையிலும் அலங்கரிக்கிறார். இப்படிப்பட்ட சந்திரனுக்கு பல பெயர்கள் உள்ளன. அமுதத்தை உண்டதால் சுதாகரன், குமுதமலரை விரும்பிய தால் குமுதப்பிரியன், வெண்மேனியன் என்ப தால் சசி, சசாங்கன், சசிதரன், ரோகிணியன் நாயகன் என்பதால் ரோகிணிபதி, பனியை உண்டாக்குவதால் ஷிமகரன், அந்தணர்களுக்கு தலைமை ஏற்றதால் விதராஜன், அத்திரி முனிவரின் மகன் என்பதால் ஆத்திரேயன், திருமகளோடு பாற்கடலில் தோன்றியதால் ரமாப்ரதா, 27 நட்சத்திரங்களை மனைவியாகக் கொண்டதால் கலாநிதி, நட்சத்திர நாயகன், உடுபதி, நிலா, அம்புலி, இந்து, மதி என பல பெயர்களைப் பெற்றுள்ளார் சந்திரன்.

மேலும் சந்திரன் வளர்பிறையில் சௌமியன்; தேய்பிறை யில் குரூரன்.

அன்பு, பாசம், தாய்மை, கவிதை, கற்பனை, ஆன்மிகம், காவியம், கலைகள், நீச்சல், விவசாயம், நீதி, நேர்மை, சுகபோகம், புகழ் போன்ற அனைத்தும் சந்திரனால் கிடைப்பவையே.

இவரின் ஆதிக்கத்தினால் மனித உடலில் மூளை, வயிறு, மார்பு, நீர் தொடர்பான நோய் களும் ஏற்படும். மேலும் உணவுகள், தேன், மது, உறக்கம், குதிரை, மாறுகண், காசநோய், பெண்களின் ஆடைகள், நறுமலர்கள் ஆகிய வற்றுக்கும் இவரே காரகன். ""சந்திரன் நிலை காரணமாக மேற்சொன்னவற்றில் இடையூறு கள், தடைகள் காணப்பட்டால் அவற்றிலிருந்து நிவர்த்திபெற பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சந்திரனை வழிபடலாம். வெண்ணிற ஆடைகள் அணி வித்து அலரி, அல்லி− மலர்களால் அர்ச்சித்து தயிர் சாதம், நெய் பாயசம், சுவையான இனிப்புகள் படைத்து சந்திரனுக்கு உகந்த நாளான திங்கட் கிழமைகளில் படையலிட்டு அபிஷேக ஆராதனை செய்தால் சந்திர தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். உடல் சம்பந்தப்பட்ட பல தொந்தரவுகளுக்கு இவரை வணங்கினால் நிவர்த்தி பெறலாம்'' என்கிறார்கள் சந்திரன் தனித் தன்மையோடு கோவில் கொண்டுள்ள திங்களூர் கார்த்திகேய குருக்கள் மற்றும் இக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சென்னை திருவான்மி யூர் சங்கர், முருகன், யுவராஜ் ஆகியோர்.

நவகிரக கோவில்களில் இரண்டாவதாக அமையப்பெற்றுள்ளது திங்களூர் சந்திரபகவான் கோவில். இவ்வூரில்தான் திருநாவுக்கரசர்மீது பெரும் பக்திகொண்ட அப்பூதி யடிகள் வாழ்ந்தார். அவர் நடத்திய தர்மசத்திரம், கல்விச்சாலைகள் பற்றிக் கேள்வியுற்ற நாவுக்கரசர் இவ்வூருக்கு வந்து அப்பூதி யடிகளை சந்தித்து பெருமிதம் கொண்டார். அப்போது நாவுக்கரச ருக்கு விருந்து படைக்க தனது மகனை தோட்டத் திற்கு வாழையிலை பறிக்க அப்பூதியடிகள் அனுப்ப, அவன் பாம்பு கடித்து இறந்து போனான். அதைச் சொன்னால் நாவுக்கரசர் விருந்துண்ணாமல் போய்விடுவாரோ என்று, மகனின் இறந்த உடலை மறைத்துவிட்டு நாவுக்கரசருக்கு விருந்து படைத்தனர். ஆனால் அவரோ, "உங்கள் மகனும் என்னோடு அமர்ந்து சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்' என வலி−யுறுத்தியதும், தங்கள் மகன் பாம்பு தீண்டி இறந்துபோன உண்மையைக் கூறினர்.

அதைக்கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் வேதனையுற்றதோடு, அவனது உடலை எடுத்துச்சென்று சிவாலயத்தில் கிடத்தி இறைவனை வேண்டிப் பாடினார். சிறுவனைக் கடித்த அந்த பாம்பே அங்கு வந்து சிறுவனின் உட−ல் ஏறிய விஷத்தை உறிஞ்ச, சிறுவன் உயிர்பிழைத் தெழுந்தான்.

இவ்வாலயத்தில் நாவுக்கரசர், அப்பூதியடி கள், அவர் மனைவி, மகன் ஆகிய நால்வருக்கும் சிலைகள் உள்ளன- சாட்சியாக.

இப்படி நாவுக்கரசரால் பாடல்பெற்ற திங்க ளூரில் இறைவன் கைலாசநாதராகவும், உமைய வள் பெரியநாயகியாகவும் காட்சிதருகிறார்கள்.

இங்கு சந்திர பகவானுக்கு தனிச்சந்நிதி உள்ளது.

பௌர்ணமி, அமாவாசையன்று வரும் திங்கட் கிழமைகளில் இவரை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். இதனால் மிகுந்த பலனுண்டு என்கிறார்கள் பக்தர்கள்.

அமைவிடம்: திருவையாறிலிருந்து கும்ப கோணம் செல்லும் சாலையில் கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது ஆலயம். அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. ஆலயத் தொடர்புக்கு அலைபேசி: 80981 72772.