பாபாவின் அற்புதங்கள் - சாய்ராம்ஜி

/idhalgal/om/miracles-baba-sairamji

ம் சாய்ராம். நமது "ஓம்சரவணபவ' மாத இதழில், நாம் அனைவரும் இணைந்து செய்கிற கூட்டுப் பிரார்த்தனைக்கு எவ்வளவு சக்தியுள்ளது என்பதையும், சென்ற இதழ்களில் நமது சாயி சொந்தங்கள் எழுதி யுள்ள கடிதங்களிலிருந்து சற்குரு சாய்நாதர் நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ளார் என்பதையும், நம்பிப் பிரார்த்திப்போருக்கு நலன்களை உடனே நடத்திக் காட்டுபவர் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகி றது. மேலும், இந்த இதழில் நாமக்கல் காளீஸ்வரிக்கு பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்களைப் பார்த்தால் இன்னும் அது ஊர்ஜித மாகும்.

தூப் கிராமத்தில் சாந்த் பட்டீல் என்பவர் தான் மிகவும் நேசித்த தனது குதிரையைத் தொலைத்து விட்டு மனம் வருந்தித் துடித்து, அதைத் தேடிக் கொண்டிருந்த பொழுது, அவரது குதிரை எங்கிருக்கி றது என்பதை கண்டு பிடித்துச் சொல்லி− அதிசயிக்க வைத்தாரே பாபா! அது போலவே இப்பொழுதும் தமது பக்தர்களுக்கு எது காணாமல் போனாலும், கைவிட்டுப் போனாலும் அவற்றை மீண்டும் வரவழைத்துத் தருகிறார். வாசகர்கள் மற்றும் சாய்பக்தர்கள் இணைந்து நடத்தும் இந்தக் கூட்டுப்பிரார்த்தனையில் செய்கிற ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் வெற்றி உறுதி.

baba

நமது சாய்நாதர் தனது சாய் சத்சரித்திரத்தில், "என்னை நீ எங்கிருந்து கொண்டு நினைக்கிறாயோ அந்த இடமே சீரடி' என்றதுபோல, இன்று நாம் அவரை எண்ணி தியானம் செய்துப் பிரார்த்தித்தால் பிரார்த்தனை நிச்சயம் வெல்லும். சிவபெருமானுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் காசியும் சிதம்பரமும் திருவண்ணாமலையும் புகழ்பெற்றுள்ளதுபோல, பெருமாளுக்கு திருப்பதியும் திருவரங்கமும் உள்ளதுபோல, இன்று சாயிபாபாவுக்கு சீரடிபோல நமது சென்னை யிலும் தற்போது திகழ்கிறது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம். அதிலேயும் நாம் "ஓம்சரவணபவ' இதழ்மூலம் வெளிப்படும் பக்தர்களின் சாயி பக்தியைக் காணும் பொழுது, நம்மால் அளவிடவே இயலாதவகையில் அவர்களின் மனங் களில் குருவானவர் குடிகொண்டுள்ளார் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.

சக்திமிகுந்த சாயிபாபாவின் கூட்டுப்பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பினாலோ அல்லது தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ அதற்குண்டான பிரார்த்தனைகளை மதங்கடந்து, இனங்கடந்து எந்த நாட்டிலிருந்தாலும், அவர்களுடைய நியாய

ம் சாய்ராம். நமது "ஓம்சரவணபவ' மாத இதழில், நாம் அனைவரும் இணைந்து செய்கிற கூட்டுப் பிரார்த்தனைக்கு எவ்வளவு சக்தியுள்ளது என்பதையும், சென்ற இதழ்களில் நமது சாயி சொந்தங்கள் எழுதி யுள்ள கடிதங்களிலிருந்து சற்குரு சாய்நாதர் நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ளார் என்பதையும், நம்பிப் பிரார்த்திப்போருக்கு நலன்களை உடனே நடத்திக் காட்டுபவர் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகி றது. மேலும், இந்த இதழில் நாமக்கல் காளீஸ்வரிக்கு பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்களைப் பார்த்தால் இன்னும் அது ஊர்ஜித மாகும்.

தூப் கிராமத்தில் சாந்த் பட்டீல் என்பவர் தான் மிகவும் நேசித்த தனது குதிரையைத் தொலைத்து விட்டு மனம் வருந்தித் துடித்து, அதைத் தேடிக் கொண்டிருந்த பொழுது, அவரது குதிரை எங்கிருக்கி றது என்பதை கண்டு பிடித்துச் சொல்லி− அதிசயிக்க வைத்தாரே பாபா! அது போலவே இப்பொழுதும் தமது பக்தர்களுக்கு எது காணாமல் போனாலும், கைவிட்டுப் போனாலும் அவற்றை மீண்டும் வரவழைத்துத் தருகிறார். வாசகர்கள் மற்றும் சாய்பக்தர்கள் இணைந்து நடத்தும் இந்தக் கூட்டுப்பிரார்த்தனையில் செய்கிற ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் வெற்றி உறுதி.

baba

நமது சாய்நாதர் தனது சாய் சத்சரித்திரத்தில், "என்னை நீ எங்கிருந்து கொண்டு நினைக்கிறாயோ அந்த இடமே சீரடி' என்றதுபோல, இன்று நாம் அவரை எண்ணி தியானம் செய்துப் பிரார்த்தித்தால் பிரார்த்தனை நிச்சயம் வெல்லும். சிவபெருமானுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் காசியும் சிதம்பரமும் திருவண்ணாமலையும் புகழ்பெற்றுள்ளதுபோல, பெருமாளுக்கு திருப்பதியும் திருவரங்கமும் உள்ளதுபோல, இன்று சாயிபாபாவுக்கு சீரடிபோல நமது சென்னை யிலும் தற்போது திகழ்கிறது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம். அதிலேயும் நாம் "ஓம்சரவணபவ' இதழ்மூலம் வெளிப்படும் பக்தர்களின் சாயி பக்தியைக் காணும் பொழுது, நம்மால் அளவிடவே இயலாதவகையில் அவர்களின் மனங் களில் குருவானவர் குடிகொண்டுள்ளார் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.

சக்திமிகுந்த சாயிபாபாவின் கூட்டுப்பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பினாலோ அல்லது தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ அதற்குண்டான பிரார்த்தனைகளை மதங்கடந்து, இனங்கடந்து எந்த நாட்டிலிருந்தாலும், அவர்களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காதுகொடுத்துக் கேட்பார். உடனுக்குடன் அவரே பரிசீலித்து அதற்கான தீர்வளித்து நமது துன்பங்களைத் தீர்ப்பார்.

குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள, "இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ்' என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், "வர்ன் பன்க்ஷங் ஈட்ஹய்ய்ங்ப்'-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசியிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை-600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.

பாபாவின் அற்புதங்களை அனுபவித்தவர்கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெர்ந்தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.

இனி... பக்தர்கள் வாழ்வில் பாபா புரிந்த அற்புதங்கள்...

குழந்தை இல்லாக் குறைநீக்கும் குரு எந்தன் பாபா எனது பெயர் மாலிலினி. வயது 42. நான் இலங்கையில் பிறந்து தற்பொழுது லண்டனில் வசிக்கிறேன். ஆழ்ந்த முருக பக்தையான நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் இரண்டு ஆண்டுகளாக எனக்கும் எனது கணவருக்குமிடையே பிரிவு ஏற்பட்டுவிட்டது. காரணம், எனக்கு இனிமேல் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்று மருத்துவர் சொல்வதாக என்னிடம் கணவர் சொல்லி−வந்ததுதான். உண்மையில் எங்கள் இருவருக்குமே எந்த குறைபாடும் இல்லை என்றும், இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ள தகுதிபெற்றவர்கள் தான் என்றும் அடுத்து ஒரு மருத்துவரின் இரண் டாவது ஆலோசனையில் தெரியவந்தது. ஆனால் கணவரும் எனது மாமியாரும் என்னையே குறை சொல்லி−, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

நான் மிகவும் மன உளைச்சலிலில் இருந்த பொழுதுதான் வாராது வந்த மாமணியாக "ஓம்சரவணபவ' மாத இதழின்மூலமாக என் வீட்டிற்கு சாயிபாபா வந்தார். அந்தப் புத்தகத் தில் "பாபாவின் அற்புதங்கள்' கட்டுரையில் இடம்பெற்றிருந்த பாபாவின் திருமுகம் "நானிருக்கிறேன்; கவலை வேண்டாம்' என்று சொல்வதுபோல் உணர்ந்தேன். படித்தபோது அதில் சாயி உபாசகர் சாய்ராம்ஜி அவர்கள், இந்த இதழின்மூலம் கூட்டுப் பிரார்த்தனையைச் செய்வதாகவும், அதில் பல வாசகர்களும் சாயிபக்தர்களும் கலந்துகொண்டு பயனடைந்ததாகவும், 'இஆஇஆ டதஆவஊத' என்கிற யூ டியூப் சேனலைப் பார்க்கும்படியும் சொல்லியிருந்தனர். நானும் அதைப் பார்த்தேன். அதில் பாபாவின் அற்புதங்களை அனுபவித்த பல்வேறு பக்தர்கள் தங்களது அனுபவத்தைச் சொல்லிலியிருந்தனர். மேலும், சாய்ராம்ஜியின் துணைவியார் திருமதி வரலஷ்மி அம்மா, எலுமிச்சம்பழத்தை பாபாவின் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துத் தந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், அப்படி அந்த பழத்தைவாங்கி சாப்பிட்ட தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையே இதுவரை 500-க்குமேல் என்றும் அறிந்து கொண்டேன்.

உடனே சாய்ராம்ஜியைத் தொடர்பு கொண்டு எனது மனக்குறையைச் சொல்− கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவ்வாறே செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின்மூலமாக எனக்கு மாதம் தள்ளிப்போனது. கணவரும் நானும் மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை செய்ததில் நான் இரண்டு மாதம் கருவுற்றிருக்கிறேன் என்ற செய்தி கேட்டு, பாபாவிற்கு மனமுருக நன்றி சொன்னேன். அதேபோல இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவினருக்கும், "ஓம்சரவணபவ' இதழுக்கும் நன்றி சொல்லிலிக் கொள்கிறேன். இப்பொழுது எனது மாமியாரும்கூட மகிழ்ச்சி யடைந்து என்னுடன் அன்போடு இருக்கிறார். நானும் எனது கணவரும் எனது பிரசவத்திற்குப் பிறகு குடும்பத்தோடு சென்னை வந்து பாபாவை தரிசிக்கும் நாட்களுக்காகக் காத்துக்கொண்டி ருக்கிறோம்.

சாகாமல் காப்பாற்றிய சாய்பாபா என்னுடைய பெயர் பலராமன். நான் கீழ்க் கட்டளையில் வசிக்கிறேன். தனியார் நிறுவனத் தில் பணிபுரியும் நான் பல ஆண்டுகளாக சாயிபாபா பக்தன். ஒருநாள் நான் எனது இரு சக்கர வாகனத்தில் சென்று எனது நிறுவன முதலாளியைப் பார்த்துவிட்டுத் திரும்பிவரும் போது, பின்னால் வந்த ஆட்டோ என்மீது மோதி நிலைதடுமாறி விழுந்து, தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கேட்பாரற்றுக் கிடந்தேன். அப்பொழுது எனது நிலைமை மோசமாக இருந்தது. மருத்துவர்கள், விபத்து நடந்து ஒரு நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் அந்த மணித்துளிகளை "கோல்டன் ஹவர்' என்று சொல்வார்கள். எனக்கு அது கரைந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் நூறு மீட்டர் தொலைவிலேயே வீட்டிலிருந்த என் மனைவி சித்ராவுக்கு இது தெரியவில்லை.

இறுதியாக எனது நிலைமையைக் கண்ட நடராஜ் என்னும் சாயிபக்தர்தான் என்னைத் தூக்கிப் பார்த்துள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என்னை ஒரு ஆட்டோபிடித்து ஏற்றுகின்றபொழுது, எனது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்க எனது கைபேசியை எடுத்து, கடைசியாக வந்த அழைப்புகளைப் பார்வையிட்டு அழைக்க முயன்றுள்ளார்.

ஆனால் எனது கைபேசி பேட்டன் லாக் செய்யப் பட்டிருந்ததால் அவரால் அதை ஓபன் செய்து இயங்கச் செய்ய இயலவில்லை. பிறகு அவரே சமயோசிதமாக என் கைவில்களை ஒவ்வொன் றாக எடுத்துவைத்து ஒற்றி ஒற்றி எடுத்திருக்கி றார். எனது கைபேசி திறந்துகொண்டது. பிறகு எனது மனைவியை தொலைபேசியில் அழைக்க, அவர் ஓடிவந்திருக்கிறார். இருவருமாக சேர்ந்து குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக கோமா நிலையிலேயே இருந்துள்ளேன். என்னுடையது நடுத்தரக் குடும்பம். எனது பெற்றோர் ஊரில் விவசாயம் செய்கிறார்கள். இந்த நிலையில் விபத்தினால் திடீரென்று ஏற்பட்ட சுமார் 20 லட்சம் செலவினை எதிர் கொள்ள இயலவில்லை. இருந்தாலும் இதில் பாதிக்கும் மேலான தொகையினை சாயி பக்தர்களான எனது சொந்தங்களும் நண்பர் களும் இணைந்து செலுத்தி, இன்று என்னால் மீண்டும் நினைவுதிரும்பி பேசமுடிகிறது. சாப்பிட முடிகிறது. ஹெட் இஞ்சுரி என்று சொல்லப்படும் ஆபத்தான விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட எனது தலையி−ருந்து 4 ல 4 இஞ்ச் அளவு வட்டமாக மண்டை ஓட்டை வெட்டியெடுத்து, மூளையில் இரத்தம் கட்டியாகிவிட்டிருந்ததை நீக்கி மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை செய்து என்னைக் காப்பாற்றிய மருத்துவர்களும் சாயி பக்தர்கள். கோமா நிலையில் பல நாட்களாகப் படுத்துக் கிடந்த என்னைப் பரிவுடன் கவனித்த செவி−யர் சகோதர- சகோதரிகளும் சாயி பக்தர்கள்.

ஆரம்பத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டி ருந்த என்னை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்தக் கைகளுக்குச் சொந்தக் காரரும் சாயி பக்தர்தான். எனவே சாயிபாபாவே தான் என்னைக் காப்பாற்றியுள்ளார். இப்போதும் மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்துவரும் என்னை அருகி லேயே இருந்து கவனித்துவரும் எனது அருமை மனைவி சித்ராவும், எனது மாமியார் குரு லட்சுமியும், எனது பெற்றோரும்கூட சாயி பக்தர்களே. ஏன்- இன்னும் ஒருபடி மேலே சொல்லப்போனால் இதைப் படித்துக்கொண்டு எனக்காக இப்போது பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் நீங்களும்கூட சாயி பக்தர் கள்தானே!

வண்டி ஓட்டுகிறபோதும், வாழ்க்கையை ஓட்டுகிறபோதும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். இதைப்படிக்கும் எனது சாயி சொந்தங்கள் பொறுமையாகவும் நம்பிக்கையாகவும் செயல்பட்டு நல்வாழ்வு வாழ சாய்பாபாவின் "பொறுமை நம்பிக்கை' என்னும் பொன்மொழிகளைக் கடைப் பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான்கு வருடமாக காணாத மகனை நான்கே நாட்களில் தந்தார்!

நான் நாமக்கல் மாவட்டம், சிற்றூரில் வசிக்கிறேன். எனது பெயர் காளீஸ்வரி. எனது கணவர் மருத்துவர். எனவே எனது மகனையும் மருத்துவம் படிக்க தாய்லாந்து நாட்டிற்கு பல லட்சம் பணம் கட்டி அனுப்பிவைத்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் தொடர்பிலிருந்த மகன் அதன்பிறகு தொடர்பே இல்லாமல் போனான். எங்கிருக்கிறான், தொடர்ந்து படிக்கி றானா இல்லையா என்பது தெரியவில்லை. மாதா மாதம் செலவுக்கான பணம் மட்டும் அவன் நண்பனுடைய வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லிஅவன் சொல்லியிருந்தால், மகன் தனி யாக என்ன செய்கிறானோ என்கிற ஆதங்கத்தில் பணத்தை மட்டும் அனுப்பிக்கொண்டு மிகுந்த வேதனையில் இருந்தோம்.

நான் "ஓம்சரவணபவ' ஆன்மிக இதழைத் தொடர்ந்து படிப்பேன். அதில் "பாபாவின் அற்புதங்கள்' கட்டுரையைப் படித்து, அதில் சாய்ராம்ஜி தலைமையில் வாசகர்கள், பக்தர் கள் இணைந்து செய்யும் கூட்டுப்பிரார்த்தனை மகிமைகளை அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டு பிரார்த்தித்தாலாவது எனது மகனைப் பற்றிய தகவலாவது தெரிந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவருக்கு போன் செய்தேன்.

அவர், "உன் பையன் உயிருடன் உள்ளானம்மா. இன்னும் ஓரிரு மாதங்களில் வந்து உன்னைச் சந்திப்பான்' என்று சொன்னார். எத்தனையோ ஜோதிடர்கள், பூசாரிகளிடத்தில் நான் அருள் வாக்கு கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் வெவ்வேறுவிதமாகச் சொல்லிஎன் மனதைக் குழப்பிவிட்டிருந்தார்கள். ஆனால் சாய்ராம்ஜி என்னிடம் கூறியதுபோல, நான்கு ஆண்டுகளா கப் பேசவே செய்யாத என் மகன் நான்கே நாளில் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நலமாக இருப்பதாகவும், நல்ல விதமாகப் படிப்பதாகவும் தெரிவித்தான். அதன் பிறகு நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது மகன் விமானத்தில் புறப்பட்டு வீட்டிற்கு வந்துவிட்டான். வழித்துணை சாய்பாபா கருணையே கருணை! அவர் அற்புதங்களுக்கு அளவில்லை!

(தொடரும்)

om010819
இதையும் படியுங்கள்
Subscribe