உலக பாபாவின் பந்தங்களே! தனி நூலைக் கட்டியிழுத்தால் தாங்காது அறுந்து விடும். ஆனால் பல நூலிழை இணைந்த கயிறாகக் கட்டியிழுத்தால் மிகப்பெரிய தேரே இழுக்கப் படும். அதுபோலதான் நமது வண்டலூர் வழித்துணை சாய்பாபாவின் கூட்டுப் பிரார்த்தனை கோபுரமும் அமைந் துள்ளது. கடந்த வாரம் நாம் உலகத் தேவையான "கரோனா வைரஸ் அழிக்கப்படவேண்டும்' என்று வேண்டிக்கொண்டு, நமது சாயி சொந்தங்கள் 54 பேர் ரயிலில் சீரடி சென்று, கையில் பதாகைகளை வைத்துக்கொண்டு, "பாபாவே! இந்த கொடிய கரோனா நோயினை உலகத்திலிருந்து விரட்டி யடியுங்கள்' என்று வேண்டிக்கொண்டு, சீரடி தெருக்களில் அனைவரும் சென்றோம். அப்போது சீரடி கடைக்காரர்களும், "சீரடி சன்ஸ்தான்' கோவில் அதிகாரி களும் நம்மோடு அந்த பிரார்த்தனை ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். நம்மைப் பாராட்டி உபசரிக்கவும் செய்தனர். பாபாவே நமது வேண்டுதலை அங்கீகரித்த தாக உணர்ந்தோம்.
பாபா வாழ்ந்த காலத்தில் சீரடி மக்களை காலராநோய் தாக்கியது. அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க பாபாவே கோதுமை மாவினை அரைத்து, சீரடி நகர எல்லைகளில் தூவச்செய்து அந்தக் கொடிய காலராநோயை எப்படி விரட்டி னாரோ, அதேபோல இன்று வந்திருக்கும் கொடிய வைரஸான கரோனாவை விரட்டவும் நமக்காக அற்புதம் செய்வார் என்று இந்த பிரார்த்தனையைச் செய்தோம். அதுபோல, இந்த கரோனா நோய் கண்டபிறகு ஒரு சில நாடுகளிலிருந்து இந்தியா திரும்ப இயலாமலிருந்த சில சாயி சொந்தங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் வேண்டிக்கொண்டு தாயகம் திரும்பியதையும் கண்டோம்.
கடந்த இரண்டு மாதங்களுக்குமுன்பு ஆஸ்திரேலிய நாட்டில் காடுகளும் வீடுகளும் காட்டுத்தீயால் கருகியபோது, அங்கிருந்த சாயி சொந்தங்கள் நம்மிடம் வேண்டிக்கொள்ள, நாமும் அந்த தீ உடனடியாக அணைக்கப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பொழுதே, அங்கு இயற்கையாக நல்ல மழைபெய்து காட்டுத்தீ அணைத்துவிட்டது என்னும் நல்ல செய்தி நம்மை வந்தடைந்தது. இன்றோ விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பலராலும் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டு
உலக பாபாவின் பந்தங்களே! தனி நூலைக் கட்டியிழுத்தால் தாங்காது அறுந்து விடும். ஆனால் பல நூலிழை இணைந்த கயிறாகக் கட்டியிழுத்தால் மிகப்பெரிய தேரே இழுக்கப் படும். அதுபோலதான் நமது வண்டலூர் வழித்துணை சாய்பாபாவின் கூட்டுப் பிரார்த்தனை கோபுரமும் அமைந் துள்ளது. கடந்த வாரம் நாம் உலகத் தேவையான "கரோனா வைரஸ் அழிக்கப்படவேண்டும்' என்று வேண்டிக்கொண்டு, நமது சாயி சொந்தங்கள் 54 பேர் ரயிலில் சீரடி சென்று, கையில் பதாகைகளை வைத்துக்கொண்டு, "பாபாவே! இந்த கொடிய கரோனா நோயினை உலகத்திலிருந்து விரட்டி யடியுங்கள்' என்று வேண்டிக்கொண்டு, சீரடி தெருக்களில் அனைவரும் சென்றோம். அப்போது சீரடி கடைக்காரர்களும், "சீரடி சன்ஸ்தான்' கோவில் அதிகாரி களும் நம்மோடு அந்த பிரார்த்தனை ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். நம்மைப் பாராட்டி உபசரிக்கவும் செய்தனர். பாபாவே நமது வேண்டுதலை அங்கீகரித்த தாக உணர்ந்தோம்.
பாபா வாழ்ந்த காலத்தில் சீரடி மக்களை காலராநோய் தாக்கியது. அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க பாபாவே கோதுமை மாவினை அரைத்து, சீரடி நகர எல்லைகளில் தூவச்செய்து அந்தக் கொடிய காலராநோயை எப்படி விரட்டி னாரோ, அதேபோல இன்று வந்திருக்கும் கொடிய வைரஸான கரோனாவை விரட்டவும் நமக்காக அற்புதம் செய்வார் என்று இந்த பிரார்த்தனையைச் செய்தோம். அதுபோல, இந்த கரோனா நோய் கண்டபிறகு ஒரு சில நாடுகளிலிருந்து இந்தியா திரும்ப இயலாமலிருந்த சில சாயி சொந்தங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் வேண்டிக்கொண்டு தாயகம் திரும்பியதையும் கண்டோம்.
கடந்த இரண்டு மாதங்களுக்குமுன்பு ஆஸ்திரேலிய நாட்டில் காடுகளும் வீடுகளும் காட்டுத்தீயால் கருகியபோது, அங்கிருந்த சாயி சொந்தங்கள் நம்மிடம் வேண்டிக்கொள்ள, நாமும் அந்த தீ உடனடியாக அணைக்கப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பொழுதே, அங்கு இயற்கையாக நல்ல மழைபெய்து காட்டுத்தீ அணைத்துவிட்டது என்னும் நல்ல செய்தி நம்மை வந்தடைந்தது. இன்றோ விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பலராலும் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் விடுமுறை என இயல்பு வாழ்க்கையே பாதிக்கபட்டிருக்கிறது. இன்னும் ஒருபடி மேலேபோய் வழிபாட்டுத் தலங்களுக்குக் கூட்டம் வருவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணமான கரோனா வைரஸ் களையப்படுவதற்கு நாமும் தொடர்ச்சியாக கூட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டுள்ளோம். இந்த பிரார்த்தனையைப் படிக்கிற நேரத்தில், கரோனா நோய் களையப்பட்டு உலகெங்கிலும் ஆரோக்கியமும் பாதுகாப்பும் பாபாவால் தரப்பட்டு, நாம் நல்ல இயல்பு வாழ்க்கையை மாறியிருப்போம்.
அனைவரும் கூட்டாகப் பிரார்த்திப்போம்.
குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள Baba Prayer என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், You Tube Channel-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசி எண்களிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த் தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை- 600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.
பாபாவின் அற்புதங் களை அனுபவித்தவர் கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.
இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப் போம்.
விதியினை மாற்றிய பாபா!
என் பெயர் ஹரிஹரன். வயது 52. மறைமலைநகரில் வசித்துவருகிறேன். கடந்த பல வருடங்களாக வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த் தனை கோபுரத்திற்கு வந்து நம்பிக்கையுடன் வழிபட்டுவருகிறேன். நான் ரியல் எஸ்டேட் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் முகவராக இருப்பதால், மக்களை சந்திக்கவேண்டி இரு சக்கர வாகனத்தில் அதிகமாகப் பயணம் செய்யவேண்டியுள்ளது. நானோ வாரத்தில் அதிக நாட்கள் வழித்துணை பாபாவிடம் வந்து சேவை செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன். வேறெந்த பழக்கமும் இல்லை. அதாவது சினிமாவுக்குப் போவது, தேவையில்லாமல் சுற்றுவது, வேறு சில பழக் கங்கள் என எதுவும் பாபா வின் அருளால் இல்லை. எந்த கஷ்டம் வந்தாலும் இந்த பாபா கோபுரத்தை நிறுவிய சாயிராம்ஜி அவர்களிடம் ஆலோசனை பெறுவேன். கடந்த மாதம் வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது, நான் யாரையோ எனது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மோதி விட்டதாகவும், அந்த நபர் அதிக பாதிப்படைந் ததால் காவல் துறையினரால் நான் கைது செய்யப்படுவதாகவும், அதைப் பார்த்து எனது குடும்பத்தினர் அனைவரும் அழுவதாக வும், மிகுந்த அவமானத்திற்கு உள்ளாவதாக வும் அதிகாலை நான்கு மணியளவில் கனவுகண்டேன்.
அதை நான் வணங்கும் வழித்துணை பாபாவிடம் தெரிவித்து, "எனக்குத் தெரியாது. நீங்களே இதற்குண்டான மாறுதலைச் செய்யவேண்டும்' என்று நம்பிக்கையுடன் பிரார்த்தித்துக்கொண்டேன்.
அன்று முழுவதும் கனவை நினைத்து மிகவும் பயந்துகொண்டே, இரு சக்கர வாகனத் தில் கவனமாகப் பயணம் மேற்கொண்டேன். ஒரு கட்டத்தில் தாம்பரத்திலிருந்து கோவி லுக்கு வந்துகொண்டிருந்தபொழுது, எதிர் பாராமல் ஒரு சிக்னலில் என்னை ஒரு ஆட்டோ மோதிவிட்டு வேகமாகச் சென்று விட்டது. நான் நிலைகுலைந்து கீழே விழுந்தேன். தோளில் காயம் ஏற்பட்டது. சட்டை எல்லாம் கிழிந்து, மிகவும் பயந்து விட்டேன். பிறகு அப்படியே எழுந்து பாபா கோவிலுக்குப் போனேன். அங்குசென்று சாயிராம்ஜி அவர்களை சந்தித்து நடந்த வற்றைச் சொன்னேன். அவரும், "தலைக்கு வந்ததை தலைப்பாகையோடு போக வைத்தார் பாபா. பயப்படாதீர்கள்' என்று கூறி மந்திரித்து உதி தடவிவிட்டார். அதற்கு பிறகு நான் மருத்துவரிடமே போகவில்லை. அப்படியே சரியாகிவிட்டது. நான் கனவில் கண்டது போலல்லாமல், பெரிய அளவில் நடக்கவிருந்த விபத்தினை மிகச்சிறிய அளவில் நடக்கச்செய்து என்னைக் காப்பாற்றியருளினார் வழித்துணை பாபா.
குழந்தை பாபா
என் பெயர் கணேஷ். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிகிறேன். எனது மனைவியின் பெயர் சித்ரா. எங்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு வாரமும் குழந்தைக்காக வேண்டி நாங்கள் குடியிருக்கும் வண்டலூரிலிருந்து தாம்பரத்திலுள்ள மருத்துவமனைக்குச் சென்றுவருவோம். வியாழக்கிழமைகளில் மட்டுமே செல்வோம். அப்போது நமது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திலுள்ள சாய்பாபாவிடம் வேண்டிக்கொண்டோம். சாய்ராம்ஜி அய்யாவின் மனைவி திருமதி சாய்மாதா வரலக்ஷ்மி அவர்கள், பாபாவின் பாதங்களில் எலுமிச்சங்கனியினை வைத்து வழிபட்டு வாழ்த்து சொல்லிக்கொடுத்தார். அந்த எலுமிச்சங்கனியினை உண்டோம். குழந்தையில்லாத தம்பதிகள் இங்குவந்து வேண்டிக்கொண்டு எலுமிச்சங்கனியை வாங்கி உண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 572 என சொன்னார்கள்.
எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டியது. இன்று இந்த ஆலயத்திற்குவந்து, எங்களது குழந்தையை பாபாவின் மடியில் கிடத்தி நன்றி சொல்லிவிட்டு, குழந்தையை இங்கு நிறுவியுள்ள பாபாவின் தொட்டிலிலிட்டு சீராட்டினோம்.
இப்படி ஒரு அழகான பெண் குழந்தை பாக்கியத்தை எங்களுக்கு வழங்கி பாபா அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்.
சின்னம்மாவின் உயிரைக் காப்பாற்றிய சாயிபாபா
என் பெயர் பி. பெருமாள். கே.கே.நகரில் வசிக்கிறேன். சொந்த ஊர் தேசூர் அருகிலுள்ள தென்னத்தூர் கிராமம். என் சின்னம்மா வி. ஜானகி. அறுபது வயதான அவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். கடந்த 26-2-2020 அன்று உடல்நிலை சரியில்லா மல் தேசூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கும் முடியாமல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். மிக முடியாமல் போனதால் ஆம்புலன்ஸ்மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துவந்து சேர்த்து சிகிச்சை யளித்தனர். உணவுகளை டியூப்மூலம் மூக்கின் வழியாகத்தான் கொடுத்தனர்.
நான் வண்டலூர் சாயி சித்தரிடம் வந்து பாபாவின் உதியினை வாங்கிக்கொண்டு மருத் துவமனைக்குச் சென்று, அவருக்கு உதியை நெற்றியில் வைத்து, அவரின் கால்களைப் பிடித் துக்கொண்டு, அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டுமென்று பாபாவிடம் மனமுருக வேண்டிக்கொண்டேன். உதியை அவரின் தலையணைக்கு அடியில் வைத்து விட்டு வீட்டுக்கு வந்தும் பிரார்த்தனை செய்தேன்.
சாய்பாபா என் வேண்டுதலை ஏற்றுக்கொண் டார். என் சின்னம்மா பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அவரின் குடும்பத்தினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.
அதேபோல் நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் பேத்தி மோனிஷா படியில் விழுந்து, கால்மூட்டு விலகி, கட்டுப் போட்டு வந்தனர். நான் அவர்களுக்கு சாய்பாபா வின் உதியையும், பிரசாதமாக பிஸ்கட் பாக்கெட்டையும் கொடுத்தேன். உதியைத் தண்ணீரில் கலந்து தொடர்ந்து குடிக்கச் சொன்னேன். இரண்டே நாளில் மூட்டு சரியாகி கட்டு பிரித்துவிட்டனர். உதியால் ஒரே நேரத்தில் இருவரின் உடல்நிலையை குணமடையச் செய்த சாய்பாபாவிற்கு பல கோடி நன்றிகள்.
திருமணத்தடையை அகற்றிய பாபா!
என் பெயர் கோமதி. நான் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலுள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். சாயிபாபாவின் அதி தீவிர பக்தை. ஆகவே "Baba Prayer என்கிற You Tube Channel-ஐ அலைபேசியில் பார்த்தேன். அதில் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் பல சாயிபாபாவின் அற்புதங்கள் நடைபெறுகிதென்று அறிந்தேன். பல நாட்கள் திருமணத்தடை உள்ளவர்களும், நீண்டநாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாத வர்களும் வழித்துணை பாபாவிடம் வேண்டிக் கொண்டால் அதை சீக்கிரமாக நிறைவேற்றி வைக்கிறார் என்று அறிந்தேன்.
நானும் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து சாய்பாபாவை தரிசனம் செய்தேன். பிறகு, அங்குள்ள சாய்ராம்ஜி அவர்களிடம் என்னுடைய கோரிக்கையை- அதாவது நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபட்டு வருகிறதென்று தெரிவித்தேன். அதைக்கேட்டு அவர் எனக்காகப் பிரார்த்தனை செய்து பாபாவின் உதியைத் தந்து "விரைவில் உனக்கு நல்ல வரன் கிடைக்கும்' என்று கூறினார்.
அப்படியே நல்ல வரன் கிடைக்கப்பெற்று, டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அதற் காக நானும், என்னுடைய குடும்பத்தினர்கள் அனைவரும் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து நன்றிக்கடன் செய்யவேண்டுமென்று எண்ணும் போது, மீண்டும் வழித்துணை பாபா எனககு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.
என் வாழ்க்கையில் வழித்துணை பாபா விளக்கேற்றி வைத்துள்ளார். அவரிடம் நம்பிக்கை, பொறுமை என இரண்டு தாரக மந்திரத்தை மனதில்கொண்டு வேண்டிக் கொண்டால், அவர் நமக்குத் தேவையான எல்லா நல்ல கோரிக்கையையும் கண்டிப்பாக நிறைவேற்றிவைப்பார்.
(தொடரும்)