சாயி சொந்தங்களுக்கு வணக்கம்.

நம் "ஓம் சரவணபவ' மாத இதழின் மூலமாகவும், வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தின்மூலமாகவும் அநேக சாயி சொந்தங்கள் பயனடைந்துவருகிறார் கள். கடந்த மாதங்களில் நம்முடைய பிரார்த்தனைகளின் வெற்றிகளையறிந்து, உலகெங்கிலுமிருந்து வந்து நமது கூட்டுப் பிரார்த்தனைகளில் விரும்பிக் கலந்துகொள்கிறார்கள். ஏனெனில், குழந்தை வரம்வேண்டி பத்து ஆண்டுகள், பதினைந்து ஆண்டுகள் என்று கடந்திருந்தாலும், குறைகள் பல இருந்தாலும் பாபாவே கண் திறந்து பார்த்து, குறைகளைக் களைந்து, குழந்தை வரம் தந்துள்ளார். அப்படிப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே இன்றுவரை 551 என மலர்ந்திருக்கின்றன. இது இன்னும் வளரும். இதில் பல குழந்தைகள் வியாழக்கிழமைகளிலும்; இருபது சதவிகிதக் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாகவும் பிறந்திருக்கின்றன. அதிலும் பத்து சதவிகிதம் ஒன்று பெண் குழந்தையாகவும், இன்னொன்று ஆண் குழந்தையாகவும் பிறந்துள்ளன. பாபாவிற்கென்றே ஒரு தனித்தொட்டில் செய்யப்பட்டு, அதில் இந்த குழந்தைகளைக் கிடத்தி சீராட்டி, பாபாவின் பாதங்களில் வைத்து பக்தியுடன் நன்றி செலுத்துகிறார்கள் பெற்றோர்கள்.

விழுப்புரத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. இங்கு வேண்டிக்கொண்ட ஒரு வருடத்தில், நமது வழித்துணை பாபாவின் கருணையினா லும், ஸ்ரீமதி வரலக்ஷ்மி அம்மாள் அவர் களின் கரங்களால் எலுமிச்சங்கனி வாங்கி உண்டு, அதனால் கிடைத்த பாக்கியமாகவும் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. சமீபத்தில் நமது கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு நேரில்வந்து சாய்பாபாவிற்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்கள்.

இதேபோல நமது கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு கோரிக்கை நிறைவேறவில்லை எனில், அந்த பக்தர்களுக்காக பிரத்யேகமாக நானும், இன்னும் சில சாயி பக்தர்களும் ஒருவேளை உபவாசம் இருப்போம். அதன் பிறகு அந்த பிரார்த்தனை நிறைவேறும். அப்படியும் நிறைவேறவில்லையானால், ஒருநாள் மௌனவிரத மிருந்து அந்த பிரார்த்தனையை நிறைவேற்றியே ஆகவேண்டுமென்று சாயிபாபா விடம் மன்றாடுவோம். நிச்சயமாக நிறைவேற்றித் தருவார் பாபா.

Advertisment

வெளியூர், வெளிநாடுகளில் வாழ்பவர் களின் பல்வேறு இன்னல்கள் தீரவும், வியாபார வளர்ச்சிக்காகவும் பிரத்யேகமாக தனித்தனியே அஞ்சனமும், மந்திரமும் பாபாவின் சக்திமிகுந்த பாதங்களில் வைத்துப் பூஜைசெய்து அனுப்பி, அவர் களும் பயனடைந்துள்ளனர்.

குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ் என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், வர்ன் பன்க்ஷங் ஈட்ஹய்ய்ங்ப்-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசி எண்களிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை- 600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.

பாபாவின் அற்புதங்களை அனுபவித்தவர்கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.

Advertisment

இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப்போம்.

வேலை தந்த பாபா!

aa

என் பெயர் எம். முத்துசாமி. தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த நார்த்தவரம்காடு எனும் பகுதியில் வசிப்பவன். நான் பி.ஈ., படித்து முடித்தபிறகு சென்னைக்கு வந்து வேலை தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போது வண்டலூரிலுள்ள வழித்துணை பாபாவின் அற்புதங்களைக் கேள்விப்பட்டு அவரிடம் வேண்டிக்கொண்டேன். அதன் பின்னர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தின் அருகிலுள்ள "ஸ்ரீராம் கேட்வே' ஐ.டி. வளாகத்திலுள்ள ஒரு கம்பெனியிலிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்புவந்தது. அந்த அழைப்பிதழை எடுத்துக்கொண்டு நேராகக் கூட்டுப் பிரார்த்தனை கோபுரம் வந்து பாபாவிடம் ஆசிபெற்றுச் சென்றேன். அந்த நேர்முகத் தேர்வில் தேர்ச்சிபெற்று, அந்த நிறுவனத்தில் நிரந்தரமான வேலை கிடைக்கப்பெற்று மகிழ்வுடன் இருக்கிறேன்.

என் சொந்த ஊரில் ஒரு சிறிய வீடு கட்டியுள்ளேன். இதுவும் வழித்துணை சாய்பாபாவின் அருளால் முடிந்தது.

அவரிடம் உண்மையாக, நம்பிக்கையாக வேண்டிக்கொண்டால் அதை உடனே நிறைவேற்றி வைக்கிறார்.

அடுத்து, எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டுமென்று பாபாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதையும் அவர் நடத்திவைப்பார் என்று, அவரு டைய பொன்மொழியான நம்பிக்கை, பொறுமையைப் பின்பற்றி, அந்தக் காலமும் கனிந்துவருமென்று காத்துக் கொண்டிருக்கிறேன்.

மணமகனைத் தேர்வுசெய்த பாபா!

என் பெயர் மகாலக்ஷ்மி. வயது 28. நான் வேலூர் மாவட்டம், வாலாஜா வில் வசிக்கிறேன். எம்.பி.ஏ., முடித்து உதவிப் பேராசிரியையாக ஒரு சிறந்த கல்லூரியில் பணிபுரிகிறேன். எனக்குத் திருமணம் செய்ய என் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளாக வரன்பார்த்து வந்தார்கள். ஆனால் வருடங்கள்தான் போனதேதவிர, திருமணம் நடைபெறவில்லை. கடந்த மாதம் எனது தோழி திருமதி சத்தியாவுடன் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து பாபாவை வழிபட்டு, சாயி உபாசகர் சாய்ராம்ஜியிடம் எனது வேண்டுகோளைச் சொல்லி பிரார்த்தித்துக்கொண்டேன்.

அச்சமயமே எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்து விட்டது. பிறகு ஊர் வந்துசேர்ந்த ஓரிரு வாரங்களிலேயே நாங்கள் விரும்பியபடி, நான் எதிர்பார்த்தபடியான ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயமாகிவிட்டது. வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்த திருமண உடன்படிக்கை, பாபா வின் அருளால் கிடைத்த வரமாகவே கருதுகிறேன்.

இதில் எனக்கு உதவிசெய்த எனது தோழி சத்தியாவிற்கும், எனக்கு கண்ணிறைந்த கணவர் கிடைக்க சாய்பாபாவிடம் வேண்டிக்கொண்ட சாய்ராம்ஜி அப்பா விற்கும், கூட்டுப் பிரார்த்தனைக் குழுவுக்கும் நன்றி!

கவலைகள் தீர்ப்பார்!

என் பெயர் உஷாதேவி. கனடாவில் வசிக்கிறேன். "தெய்வம் மனுஷ ரூபேன' என்பார்கள். அதுபோல் சாயி என்கிற தெய்வம், பக்தன் எதை வேண்டினாலும் - அது யாரிடம், என்ன நடக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அதை அவன் பார்க்கிற ஒரு நண்பர்மூலமாகவோ, வேறுசில மிருகங்கள் மூலமாகவோகூட உணர்த்தி விடைகளைத் தருவார்; வேலைகளை முடிப்பார்.

அதற்கான நபர்களை அவரே தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்கிறார் என்பது சாயிபக்தர்கள் உணர்ந்த நிதர்சனமான அனுபவம். குறிப்பாக குழந்தையில்லா தம்பதியரின் குறையை உடனே தீர்த்தருளுகிறார். எனக்குத் தெரிந்து வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் வேண்டிக்கொண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 550 இருக்கும். உங்கள் குறைகளை மனப் பூர்வமாக பாபாவின் திருப்பாதங்களில் சமர்ப்பியுங்கள். கவலைகளை நிச்சயம் மாற்றிவைப்பார்.

என் மகனின் கல்விக் கட்டணத்தை செலுத்திய பாபா

என் பெயர் பி. பெருமாள். நான் சென்னை கே.கே. நகரில் வசிக்கிறேன். என் சொந்த ஊர் தேசூர் அருகிலுள்ள தென்னாத்தூர் என்ற கிராமம். என் மகனுக்குச் சென்ற 2019- செப்டம்பர் மாதக் கல்விக்கட்டணம் இரண்டாவது தவணை கட்ட பணமில்லாமல், நான் சுமார் பத்துபேரிடம் போன்மூலம் உதவிகேட்டேன். யாரும் உதவ முன்வரவில்லை. மனமுடைந்த நான், மதிய உணவு சாப்பிடாமல் மிக வருத்தத்தில் இருந்தேன். அப்போது என் செல்போனில் "யூ டியூப்'-ல் ஒரு வாசகம் பாபாவிடமிருந்து வந்தது. "நீ எத்தனை பேரிடம் உதவி கேட்டாலும் உனக்கு உதவ முன்வரமாட்டார்கள். அப்பா நான்தான் உதவமுடியும். மாலை ஆறு மணிக்குள் யார் ரூபத்திலாவது உனக்கு பணம் வந்துசேரும். கலங்காதே!' என்றிருந்தது. இது அப்பாவின் சத்தியவாக்கு.

இதைப் பார்த்ததும் என் கவலை மறந்து, மாலை மூன்று மணிக்கு மதிய உணவு சாப்பிட்டேன். அப்போது செல்போனில் ஒரு வீடியோ வந்தது. அதில் நான் சாப்பிடும் அதே நேரத்தில் பாபாவிற்கு உணவூட்டுவதுபோல் வந்தது. பாபா எனக்காக உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார் என்றுணர்ந்து நான் கண்கலங்கி அழுதேன்.

மாலை 5.30 மணிக்கு வேலை முடிந்து, நான் வேலை செய்யும் வீட்டு முதலாளி அம்மாவிடம், "நான் நாளை ஊருக்குச் செல்கிறேன். என் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் தேர்வெழுத முடியாது. என்னிடம் பணமில்லை. நான் இரவுக்குள் யாரிடமாவது கடன்பெற்று நாளை காலை 9.00 மணிக்குள் பணம் செலுத்தவேண்டும். அதனால் நாளை வேலைக்கு வரமுடியாது' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து அந்த அம்மா விடமிருந்து போன் வந்தது. உடனே வீட்டிற்கு வரும்படி சொன்னார். சென்று பார்த்தேன். அவர்கள் என் மகனின் கல்விக்கட்டணம் கட்ட முழுப்பணத்தையும் கொடுத்தார்கள். அப்போது மாலை 6.00 மணி. பாபா சொன்ன அதே நேரம். நான் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிப்போனேன். பாபாவின் வாக்கு சத்தியவாக்கு. அது என்றும் பொய்யாகாது என்பதை எனக்கு பாபா உணர்த்தினார்.

(தொடரும்)