பாபாவின் அற்புதங்கள்! 8 - சாய்ராம்ஜி

/idhalgal/om/miracles-baba-8-sairamji

லகெங்கிலுமுள்ள சாயி சொந்தங்களுக்கு அடியேனின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாண்டு அன்பு நிறைந்த, வெற்றி நிறைந்த, மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக நமது சாயிநாத ரின் அருளாலும், நமது கூட்டுப் பிரார்த்தனைகளில் பலனாலும், நம் பெற்றோர்களின் வாழ்த்து களாலும் கண்டிப் பாக நிகழும், நல்லவை யெல்லாம் நமக்குக் கிடைக் குமென்று நம்புவோம்.

bABAஇதுவரை அநேக அற்புதங்களை நமது சாயிபாபா நமக்கு நிகழ்த்தியிருக்கிறார். அவரு டைய அருள்மழையில் நாம் நனைந்துவருகிறோம்.

நம்பியவர்களைக் கை விடாத நல்ல சற்குருவாக, எட்டி வணங்கும் தெய்வங் களிடையே தொட்டு வணங்கும் தெய்வமாக, எல்லா மதங்களுக்கும் எல்லா தெய்வங்களுக்கும் பிரதிநிதியாக விளங்கும் நமது சாயிபாபா செய்யும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. நமது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வருகிற பிரார்த்தனைகள், வெளி மாநிலங்கள், வெளிநாடு கள் என விரிவடைந்துகொண்டே போகிறது. உலக சாயி பக்தர் களுக்கு இதுவொரு கலங்கரைவிளக்கமாகவே திகழ்கிறது. அதே போல சிறு குழந்தைகள், இளைஞர்கள், வயோதிகர்கள் என்று எல்லா வயதினரையும் பாபா ஈர்க்கிறார். அவர் நிகழ்த்திவரும் அற்புதங்களே இதற்குக் காரணம்.

சக்திமிகுந்த சாயிபாபாவின் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பி னாலோ தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ மதங்கடந்து, இனங் கடந்து எந்த நாட்டிலிருந்தாலும், அவர் களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காது கொடுத்துக் கேட்பார். உடனுக்குடன் அவரே பரிசீலித்து அதற்கான தீர்வளித்து நமது துன்பங்களைத் தீர்ப்பார்.

குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள Baba Prayerஎன்கிற மொபைல் அப்ளிகேஷனையும், You Tube Channel-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசி எண்களிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை- 600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.

பாபாவின் அற்புதங்களை அனுபவித்த வர்கள், அந்த விவரங்

பாபாவின் அற்புதங்களை அனுபவித்த வர்கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும். இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப்போம்.

கடன் கவலை தீர்ந்தது

என் பெயர் பி. பெருமாள். நான் சென்னை கே.கே. நகரில் வசிக்கிறேன். என் சொந்த ஊர் தேசூர் ஆகும். 12-9-2019 அன்று பாபா என்னிடம் வந்ததை உணர்ந்தேன். முதலில் ஈ உருவில் உணர்த்தினார். பிறகு கருப்பு எறும்பாகவும், பிறகு வீடு முழுவதுமாக எறும்பாகவும் காட்சிகொடுத்தார். வீட்டில் ஒரு பெரிய பாபா படம் வைத்து விளக்கேற்றி தினமும் காலை, மாலை, இரவு என்று தொடர்ந்து வழிபட்டு வருகிறேன். 25-ஆம் தேதி இரவு பாபாவிடம், "எல்லாரும் ஷீரடிக்குச் செல்கிறார்கள். எனக் கும் ஆவலாக உள்ளது. எப்படி- யாருடன் போகவேண்டும் என்று உணர்த்துங்கள் பாபா' என்று வேண்டினேன். என் செல்போனில் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் "இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ்' என்னும் நிகழ்ச்சி யூ.பில் வீடியோவாக வந்தது. அதில் ஷீரடியில் உள்ளதுபோல் பாபாவின் சமாதி, தூணி, பாதம், பாபா ராஜாவாக கம்பீரமாக அமாந்து காட்சிகொடுக்கும் சிலை என அனைத்தும் கண்டேன்.

மறுநாள் வியாழக்கிழமையன்று முதன்முதலாக வண்டலூர் வழித்துணை பாபா ஆலயத்திற்குச் சென்றேன். கடன் தொல்லையால் மன நிம்மதியற்று இருந்த சமயமது. நான் கோவிலுக் குள் அழுதுகொண்டே சென்று தரிசித்தேன். என் கைகளை பாபாவின் பாதத் தின்மேல் வைத்தவுடன் இதயம் துடிப்பதை உணர்ந்தேன். பிறகு பிரசாதம் அருந்திவிட்டு, தூனியின் அருகி லுள்ள பாபா படத்தை செல்போனில் படம் பிடித்துக்கொண்டு புறப்பட்டேன். அப்போது அங்கிருந்த சாய் வரலட்சுமியம்மா என்னைத் தடுத்து, "இங்கேயே இருந்து ஆரத்தி பார்த்து விட்டு, அன்னதானம் சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும்' என்று சொன்னார்கள்.

ஆனால் நான், "அடுத்த வாரம் வந்து பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவந்து, என் செல்போனில் எடுத்த பாபா படத்தைப் பார்த் தேன். அதில் பாபாவின் நெற்றியில் ஒரு வெள்ளைநிறக் கோடு பதிந் திருப்பதைக் கண்டேன். உடனே மேலே சென்று பாபாவின் படத் தைப் பார்த்தபோது அதில் எந்த வெள்ளைநிறக் கோடும் இல்லாதி ருப்பதைக் கண்டேன். உடனே ஒரு மட்டைத் தேங்காய் வாங்கி தூணியில் வைத்து வணங்கினேன்.

பிறகு பாபாவின் பாதத்தின் எதிரில் அமர்ந்து ஆரத்தியைக் கண்டு வணங்கி, தூணியின் அருகிலுள்ள பாபாவை மீண்டும் என் செல்போனில் பிடித்தேன். அதில் முன்பு காணப்பட்ட வெள்ளைத் தழும்பு உடைந்துகொட்டுவதுபோல இருந்தது. அப்போதுதான் வரலட்சுமி அம்மாவின் உடலில் பாபாவே வந்து என்னைத் தடுத்து நிறுத்தி, ஆரத்தி காணச் செய்து அன்னதானமும் சாப்பிட வைத்தார் என்பதை உணர்ந்தேன். என் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவரையே முழுமையாக சரணடைந்தேன். தற்போது என் கடன் கவலையும் தீர்ந்து ஆனந்தமாக உள்ளேன்.

வாழ்க்கையில் விழும் அடிகளுக்கு

சீரடியே தீர்வு!

"ஓம் ஷீரடி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தந்நோ சாய் பிரசோதயாத்.'

இரும்புலியூர் சாய் பக்தை ஞானாம் பாளாகிய எனக்கு ஸ்ரீசாய்பாபாவினால் நிகழ்ந்த அதிசயங்கள் எண்ணிலடங்காதவை யாகும்.

தத்தாத்ரேயரின் அவதாரமான வழித் துணை பாபா எங்கள் வாழ்க்கையின் அசௌகரியங்களை சிதைத்து, தீராத தடைகளைத் தகர்த்து, எங்கள் குடும்பத்திற்கு சௌபாக்கியங்கள் கொடுத்து, நிம்மதி யாகவும் அமைதியாகவும் வாழ அருள்புரிந்து வருகிறார்.

அவர் நிகழ்த்திய அதிசயமொன்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். விடிந்ததும் குடும்பத்தினர் யாவரும் மரணவாசலை நோக்கிப் பயணிக்கலாம் என்று தீர்மானித்து, கடைசியாக வண்டலூர் வழித்துணை பாபாவை நினைத்து விளக்கேற்றிப் பூஜை செய்துவிட்டு அமர்ந் திருந்தோம். அரைமணி நேரத்தில் செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது. எங்கள் வங்கிக்கணக்கில் ஐந்து லட்ச ரூபாய் சேர்ந்து விட்ட செய்தி அதிலிருந்தது. இறுதிநாள்வரை வங்கியில் நிராகரிக் கப்பட்ட லோன் "அப்ரூவல்' செய்யப் பட்டு, எங்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட் டதும் வண்டலூர் வழித்துணை பாபா நிகழ்த்திய அதிசயமே. எங்கள் தவறான முடிவை மாற்றி வாழவைத்தார் பாபா.

ஐந்து வருடமாக குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்ற என் பிள்ளையின் வழக்கு, பாபாவின் அருளால் எவ்விதத் தடையுமின்றி உடனே முடிந்தது.

baba

என் கணவரின் மூலநோய் தீர எவ்வளவோ சிகிச்சை மேற்கொண்டோம். ஆனால் எவ்வித பயனும் கிட்டவில்லை. மாறாக அளவுக்கதிகமான குருதி வெளியேறிக்கொண்டே இருந்தது. என்ன செய்வதென்று தெரியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். "வழித்துணை பாபாவே! நீங்கள்தான் என் கணவரின் துயரத்தைப் போக்கவேண்டும்' என்று மண்டியிட்டுக் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தேன். அடுத்த வியாழக்கிழமைக்குள் அவரின் நோய்க்கான தீர்வு கிடைத்தது மட்டுமின்றி, குருதி வெளியேறுவதும் நின்றுவிட்டது. எங்கள் இருப்பிடத்தின் அருகில் வசித்துவரும் சாய்பக்தர் ஒருவருக்கு இதயக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சாய்ராம்ஜி அவர்கள் தலைமையில்கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அன்றிரவே எதிர்பாராவிதமாக அவரின் உடல்நிலை முன்னேற்றமடைந்து, மறுநாளிரவு அவர் நலமுடன் வீடு திரும்பினார். இதுபோன்ற "மெடிக்கல் மிராக்கிள்' என்று சொல்லப்படும் அதிசயத்தை சாதாரணமாக நிகழ்த்துபவர் பாபா. இதை சாயி பக்தர்கள் பலரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் என்பது அனுபவப்பூர்வமான உண்மை. சாயி பாதங்கள் சரணம்.

சாயவே விடமாட்டார் சாயப்பா

என் பெயர் மகேஷ். எனது மனைவியின் பெயர் காமாட்சி. நான் பத்து லட்ச ரூபாய் கடன் தொல்லையால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். அத்தகைய மிகப்பெரிய தொகையினை நான் ஆட்டோ ஓட்டி எப்படித்தான் அடைப்பேனோ என்று மன உளைச்சலில் இருந்தேன். பிறகுதான் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் babaநடைபெறும் பிரார்த்தனையின் மகிமைகளை சக ஆட்டோ ஓட்டுநர்களின்மூலம் அறிந்தேன். பிறகு இந்த பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து சாய்ராம்ஜி அய்யாவிடம் சொல்லி கூட்டுப் பிரார்த்தனையை மனமுருகிச் செய்தோம். அதில் எனக்கிருக்கும் பத்து லட்ச ரூபாய் கடனை அடைத்து நிம்மதியாக வாழவேண்டும் என்றும்; நீண்டநாட்களாக எனக்குப் பெண் குழந்தை வேண்டுமென்று ஆசைள்ளது. அதையும் நிறைவேற்றித்தருமாறும் இரண்டு பிரார்த்தனைகளை வைத்தோம். அவற்றை சாயிபாபா ஏற்றுக்கொண்டு முதலில் பெண் குழந்தையை அருளினார்.

அக்குழந்தைக்கு கனிஷ்காஸ்ரீ என்று பெயரிட்டோம். சாயிபாபாவின் அருளால் பிறந்த எங்கள் குழந்தையை அதிர்ஷ்டம் மிகுந்ததாகக் கருதி மகிழ்ந்தோம். நாங்கள் எண்ணியவாறே கனிஷ்காஸ்ரீ பிறந்தவுடன், சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருந்த என்னை சென்னை அடையாறைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீனிவாசன் அழைத்து, தனக்கு நம்பிக்கையான பொறுப்புள்ள கார் ஓட்டுநர் தேவையென்றும், எனது கடன் தொகையான பத்து லட்சத்தை வட்டியில்லாமல் தருவதாகவும், கைநிறைய மாதச்சம்பளம் தருவதாகவும் கூறினார்.

அதன்படியே அவர் தந்த பத்து லட்சத்தைக் கொண்டு கடன் முழுவதையும் அடைத்து விட்டு, தற்பொழுது நிம்மதியாக, நிறைவான மாத ஊதியத்துடன் பாபாவின் அருளால் வாழ்ந்துவருகிறேன். சாயப்பா சாயவே விடமாட்டார். பாபா தரிசனம் பாப விமோசனம். வியாழன் தரிசனம் விடியல் நிதர்சனம்!

பத்து நிமிட அதிசயம்

என் பெயர் கே. லட்சுமி. அம்பத்தூரில் வசிக்கிறேன். என் கணவருக்கு முக்கியமான ஒரு "ஆபரேஷன்' செய்யவேண்டிய நிலை.

baba

என் வீட்டுப் பூஜையறையிலிருந்த பாபாவின் சிலையைத் தொட்டு வணங்கினேன். அப்போது அந்த சிலை தவறிக் கீழே விழுந்து, அவரது தலை தனியாகச் சென்று விட்டது. ஏனிப்படி நிகழ்ந்ததென்று பதறிப் போனேன். பாபாவை மனமுருகப் பிரார்த் தித்துக்கொண்டு, அவரது உதியை எடுத்துக் கொண்டு மருத்துவமனை சென்றேன்.

அன்றைக்கு ஆபரேஷன் நடைபெறு வதற்கு முன்பு பாபாவின் உதி யையும் படத் தையும் வைத் தோம். மருத்துவமனையில் அவருக்கு "டெஸ்ட் இன்ஜெக்ஷன்' சோதனை செய் யாமல் நேரடியாகச் செலுத்திவிட்டார்கள். இதன் காரணமாக கணவருக்கு வலிப்பு போன்று வந்து, சுயநினைவை இழந்து விட்டார். உடனே மருத்துவர்கள் அவருக்கு "ஆக்சிஜன்' செலுத்தி, வேறுவகையான ஊசி போட்டனர். நான் பாபாவை வேண்டிய வண்ணம் இருந்தேன். பத்து நிமிடத்தில் சுயநினைவு திரும்பிவிட்டது. அவருக்கு நடை பெறவேண்டிய ஆபரேஷன் நன்றாக முடிந்துவிட்டது. மருத்துவர்கள் "இது பாபாவின் அற்புதம்தான்' என்று கூறினார் கள். பாபா சிலை உடைந்ததற்குக் காரணம், எங்களுக்கு வந்த சோதனையை அவர் எடுத்துக் கொண்டார் என்று புரிந்துகொண்டு, பாபா சிலையின் தலையை ஒட்டவைத்து பாபா கோவிலில் வைத்துவிட்டேன். இது சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதமாகும்.

(தொடரும்)

om010120
இதையும் படியுங்கள்
Subscribe