அன்பு சாயி சொந்தங்களே! நமது கூட்டுப் பிரார்த்தனைக் குழு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஏனென்றால், உலகம் முழுவதும் சாயி பக்தி இயக்கம் வளர்ந்துவருவதும், பாபாவின் அற்புதங்கள் நடந்துவருவதும் கணக்கிலடங்கா வகையில் உள்ளன. எழுத்தில் எழுதுவது ஒரு நூறு செய்திகள் என்றால், எழுத இடமில்லாமல்- வெளியிட முடியாமல் இருக்கின்ற செய்திகள் அநேகம் அநேகம். அதில் சில வற்றை மட்டுமே நம்மால் வெளியிட முடிந்த நிலையில் உள்ளோம். அவ்வளவும் அற்புதங்கள்; அவ்வளவும் ஆனந்தங்கள்.
இது ஒரு உதவி. எப்படி யென்றால், துன்பத்தில் மூழ்கி யுள்ளவர்களுக்கு அவர்களின் கரம் பிடித்துத் தூக்கிவிட்டு, நமது வாழ்க்கையிலுள்ள திருமணத்தடை, கடன் பிரச்சினை, வேலையின்மை, கணவன்- மனைவி ஒற்றுமையின்மை என இதுபோன்ற எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் தீர வேண்டுதல்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பிரச்சினை வயதுக்குத் தகுந்தாற்போல வந்துகொண்டே உள்ளது.
அவற்றையெல்லாம் பொடிப் பொடியாக நொறுக்கிவிட்டு நமது வாழ்வில் ஒளிவீசச் செய்துகொண்டிருக்கிறார் சாயிபாபா. பாபா பக்தர்களின் கலங்கரை விளக்கமாகவே மாறிவிட்ட நமது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம் இதற்கொரு சான்று. "ஓம் சரவணபவ' மாத இதழின் வாசகர்கள் பலர் இதனால் பயனடைந்துள்ளார்கள்.
சக்திமிகுந்த சாயிபாபாவின் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பி னாலோ தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ மதங்கடந்து, இனங்கடந்து எந்த நாட்டிலிருந்தாலும், அவர்களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காது கொடுத்துக் கேட்பார். உடனுக்குடன் அவரே பரிசீலித்து அதற்கான தீர்வளித்து நமது துன்பங்களைத் தீர்ப்பார்.
குறிப்பு: இந்த பிரார

குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ் என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், வர்ன் பன்க்ஷங் ஈட்ஹய்ய்ங்ப்-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசி எண்களிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை- 600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.
பாபாவின் அற்புதங்களை அனுபவித்தவர்கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்து கொள்ளலாம். தேர்ந்தெர்ந்தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.
இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப்போம்.
தொலைத்ததைத் தந்த பாபா!
என் பெயர் எஸ். விஜயலக்ஷ்மி. நான் ஊரப்பாக்கத்திலிருந்து வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு மூன்றாண்டுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன். நான் இந்த கோவிலுக்கு வரும்போது ஏழு லட்ச ரூபாய் கடன் தொல்லை இருந்தது. இங்குவர ஆரம்பித்தபின் படிப்படியாகக் கடன் குறைந்து, தற்போது இரண்டு லட்ச ரூபாய் கடன் மட்டும் இருக்கிறது. வழித்துணை பாபாவை நம்பிவருகிற மக்களுக்கு, இந்த கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் குடிகொண்டிருக்கும் பாபா கண்டிப்பாக அருள்புரிவார்.
மேலும் 16-11-2019 அன்று என் கணவர் சிவக்குமார் மூன்று கிரெடிட் கார்டு மற்றும் பணம் ஆறாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத் தில் வரும்போது கிரெடிட் கார்டுகளும் பணமும் இருந்த பர்ஸ் எங்கேயோ விழுந்துவிட்டது. நான் பாபாவிடம், "எப்படியாவது பணம் கிடைக்கவேண்டும்' என்று மனதாரப் பிரார்த்தித்தேன். ஒரு மணி நேரத்தில் ஒருவர் என் கணவரிடம் வந்து, "இது உங்கள் பணம், கிரெடிட் கார்டுதானா?' என்று கேட்டார். என் கணவர் "ஆமாம்' என்று கூறியவுடன், அந்த நபர் என் கணவரிடம் அதைக் கொடுத்தார். என் கணவர், "நீங்கள் ஏதாவது சாப்பிடவேண்டும்' என்று கூறியவுடன், அவர் "எனக்கு ஒரு டீ மட்டும் போதும்' என்று கூறினார்.
நானும் உபசரித்து அனுப்பினேன். இதுதான் வழித்துணை பாபாவின் அருள். என் கணவரும் பாபாவின் அருமைபற்றி தெரிந்து கொண்டார்.
கண்போல காப்பார்!
என் பெயர் சாய் திலகா. நான் கடந்த இருபது வருடங்களாக அழகுக் கலை நிபுணராக (இங்ஹன்ற்ண்ஸ்ரீண்ஹய்) உள்ளேன். ஐந்து வருடங்களாக என் குடும்பத்தோடு வண்டலூர் வழித்துணை பாபா கோவிலுக்கு தினமும் வந்து சேவை செய்துகொண்டிருக்கிறோம்.
திடீரென்று என் இடது கண்ணில் பிரச்சினை ஏற்பட்டது. நான் தனியார் கண் மருத்துவமனை சென்று காண்பித் தேன். டாக்டர் பரிசோதித்துவிட்டு, "உன் கண்ணில் சில குறைபாடுகள் உள்ளன. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும்' என்றார். நான் வழித்துணை பாபாவிடம், "எனக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்தால் கண் மலர் வாங்கி சமர்ப்பிக்கிறேன்' என்று பிரார்த்தனை செய்துகொண்டேன். பாபாமீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் நாமும் ஏதாவது வேண்டிக்கொள்ளவேண்டுமல்லவா? இப்பொழுது கண்மலர் வாங்கி பாபாவிடம் சமர்ப்பித்துவிட்டேன். இனி என்னை நமது வழித்துணை பாபா கண்போல காப்பாற்றுவார்! ஓம் சாய்ராம்!
பரிசு தந்தார் பாபா!
என் பெயர் எஸ். நிட்டின். நான் பத்து வயது சிறுவன். நானும் என் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா அனைவரும் வண்டலூர் வழித்துணை பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று சேவை செய்வோம். அதிலும் என் பாட்டி பாபாவே கதியென அங்கேயே சேவை செய்து கொண்டிருப்பார்.
சென்ற மாதம் பள்ளியில் திருக்குறள் போட்டி கடைசி நேரத்தில் அறிவித்தார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படி மனப் பாடம் செய்வது? ஏனென்றால் ஒரேயொரு இரவு மட்டும்தான் இருக்கிறது. உடனே பாபாவை வேண்டிக்கொண்டேன். பின்னர் இரவு நெடுநேரம் படித்து மனப்பாடம் செய்தேன். விடிந்ததும் பள்ளி சென்றேன். போட்டியில் கலந்துகொண்டு எல்லா குறள் களையும் தவறில்லாமல் ஒப்பித்தேன். முதல் பரிசு எனக்குக் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பாபாவுக்கு நன்றி. நானும் பாபாவுக்கு சேவை செய்வேன்.
அதிசயிக்கச் செய்தார்!
என் பெயர் எஸ். அபிராமி. சென்னை ஆலப்பாக்கத்தில் வசிக்கிறேன். நான் ஒரு சாய் பக்தை! கடந்த நான்கு வருடங்களாக வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து பாபாவை தரிசித்து வருகிறேன். இதற்கு முன்பாக தன்னம்பிக்கை யில்லாமலும், தைரியமில்லாமலும், உடல் நிலை சரியில்லாமலும் இருந்தேன். வழித் துணை பாபாவை சரணடைந்தபிறகு, அவரிடம் மன்றாடி அழுதபிறகு, எனக்கு தைரியமும் தன்னம் பிக்கையும் தந்து, என் உடல்நலத்தையும் மேம்படுத்தி என்னை அதிசயிக்க வைத்தார். ஆகவே இவர்தான் என் கண்கண்ட தெய்வம். ஏதாவது ஒரு பிரச்சினையைத் தீர்க்க பாபாவிடம் வேண்டி னால், அதைத் தீர்த்துவைப்பதோடு, அது போன்ற பிரச்சினையிலிருந்து நிரந்தரமாக வெளிவந்து எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்பதையும் எனக்கு பாபா கற்றுத்தந்தார். ஒரு சிறு கஷ்டம் கொடுக்கிறார் என்றால், பெரிய கஷ்டத்திலிருந்து என்னைக் காப்பாற்றுகிறார் என்று பரிபூரணமாக உணர்த்தியிருக்கிறார் என்பது உண்மை.
எப்பொழுதும், எந்த இடத்திலும் எனக்கு கடவுளாகவும், குருவாகவும், நண்பராகவும் அனைத்துமாக இருந்து என்னை அவரே காப்பாற்றிவருகிறார். ஆகவே என் உயிர் உள்ளளவும் வழித்துணை பாபாவை மறக் காமலிருக்க அவரே துணைசெய்வார்.
வாழவைத்த பாபா!
என் பெயர் வி. செந்தில்நாதன். நான் வழித்துணை பாபா கோவிலுக்கு மூன்று வருடங்களாக வந்துகொண்டிருக்கிறேன்! முன்பு எதிலும் பற்று, தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். என் மனைவியும், மாமியாரும் கோவிலுக்கு தினமும் வருவார்கள். நான் அதிகமாக வந்ததில்லை. ஆனால், இப்பொழுது தினமும் பாபாவை தரிசிக்க மனம் ஏங்குகிறது. அவரை தரிசனம் செய்தால் தன்னம்பிக்கை, தைரியம், இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. பத்து வருடங்களாக நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். எவ்வளவோ கோவிலுக்குப் போய் வந்தும் குடிப்பதை என்னால் நிறுத்த இயலவில்லை. அந்த நேரத்தில் ஒருநாள் இந்த வழித்துணை பாபா கோவிலுக்கு வந்து அவரிடம் மண்டியிட்டு அமுது, சாய்ராம்ஜியிடம் குடியை நிறுத்த கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
வழித்துணை பாபா என் வாழ்க்கையில் மாபெரும் அதிச யத்தை நிகழ்த்தி விட்டார். இப்பொ ழுது எனக்கு குடிக்க வேண்டுமென்ற நினைவோ, எண் ணமோ வருவதில்லை. அந்த அளவுக்கு குடியை பாபா மறக்கச் செய்து, அதை வெறுக்கவும் செய்துவிட்டார்.
மேலும் வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டுமென்றும், எதைச் செய்ய வேண்டுமென்றும், எதைச் செய்யக் கூடாதென்றும் பாபா உணர்த்திவிட்டார்.
இப்பொழுது யார் என்னைக் கை விட்டாலும் பாபா கைவிடமாட்டார் என உணர்வுப்பூர்வமாய் உணர்ந்து விட்டேன். பாபா எனக்கு சில துன்பங் களையும் கொடுத்து, அதிலிருந்து பல வாழ்க்கை ரகசியங்களையும், மனிதரின் மறுமுகங்களையும் எனக்குக் காட்டியிருக் கிறார். அவர் எப்பொழுதும் என்னோடு குரு வாகவும் கடவுளாகவும் வழிகாட்டியாகவும் இருந்து வழிநடத்துகிறார். ஜெய் சாய்ராம்!
(தொடரும்)