சாய்ராம்ஜி
6
அன்பு சாயி சொந்தங்களே! நமது பிரார்த்தனைக் குழுவில் அநேக சாயி சொந்தங்கள் படிப்படியாக வந்து இணைந்துகொண்டே உள்ளனர்.
அவர்களுக்கெல்லாம் நமது சாயிநாதரும் பல அற்புதங்களைச் செய்து கொண்டே இருக்கிறார். அவற்றை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
சென்னை அண்ணாநகரிலிருந்து வந்து நமது பிரார்த்தனைக் குழுவில் இணைந்துள்ள திருமதி வசந்தி மூர்த்தியின் வளையல்கள் காணாமல் போய்விட்டன. அது இருக்கின்ற இடத்தைப் பிரார்த்தனையில் துல்லிய மாகக் கணித்துச் சொல்ல, அந்த வளையல்கள் அதே இடத்தில் கிடைக்கப்பெற்றன. அதனால் அகம்மகிழ்ந்து கிட்டத்தட்ட 50,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளியிலான அழகிய கூஜா போன்ற ஒரு பாத்திரத்தை, பாபாவுக்கு பாலபிஷேகம் செய்யும் உபயோகத்திற்காக அன்புடன் வாங்கித்தந்தார்கள். அந்தக் குடும்பம் நலம்பெற பிரார்த்தனை செய்வோம்.
அதேபோல இன்னொரு அற்புதத்தையும் நமது வழித்துணை பாபா செய்தார். என்னவெனில், ஒரு சகோதரி பொன்னேரியிலிருந்து அழுது கொண்டே தொலைபேசியில் பேசினார். "எனது மகன் வேலையில் லாமல் மன உளைச்சலில் உள்ளான். இன்று நானும் அவனும் சண்டை யிட்டுக்கொண்டோம். சாப்பிடவே இல்லை. மனது வருத்தமாக உள்ளது' என்று அழுதார்! நானோ அந்த சகோதரியிடம், "அம்மா, உங்களது மகனைத் திட்டாதீர்கள். மன உளைச்சலிலுள்ள அவரை அமைதியாக ஆசுவாசப்படுத்துங்கள். அவர் ஆபத்தான சூழலில் உள்ளார்' என்று எச்சரித்தேன். இதைக்கேட்டு அந்த சகோதரி அடுத்துள்ள அறைக்குச் சென்று பார்த்துள் ளார். அந்த அறையில் அவரது மகன் மின்விசிறி யில் புடவையைக் கட்டி அதில் தொங்கியேவிட்டார்.
அதைப்பார்த்த அந்தத் தாய் உடனடியாக அருகி லுள்ளவர்களை அழைத்துக் காப்பாற்றி விட்டார்.
நேரத்தில் சொன்னதால், நேரவிருந்த தற்கொலை தடுக்கப்பட்டு ஒரு உயிர் காப்பாற் றப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தத் தாயும் மகனும் நமது வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து மனம் கசிந்து பாபாவை வணங்கினர்.
கூடியிருந்த பக்தர்களுக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பா

கூடியிருந்த பக்தர்களுக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பாபாவை நம்பி னால் எந்த இடரிலிருந்தும் காப்பார்.
சக்திமிகுந்த சாயிபாபா வின் கூட்டுப் பிரார்த் தனைக் குழுவில் கோரிக்கை களான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பினாலோ தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ மதங்கடந்து, இனங்கடந்து எந்த நாட்டிலிருந்தாலும், அவர்களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காது கொடுத்துக் கேட்பார். உடனுக்குடன் அவரே பரிசீலித்து அதற்கான தீர்வளித்து நமது துன்பங் களைத் தீர்ப்பார்.
குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ் என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், வர்ன் You Tube Channel-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசி எண்களிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை- 600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.
பாபாவின் அற்புதங்களை அனுபவித்தவர்கள், அந்த விவரங் களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெர்ந் தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.
இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப்போம்.
அற்புதம் நிகழ்த்தும் பாபா!
என் பெயர் ஆர். சண்முகம். சென்னை பல்லாவரத்திற்கு அருகிலுள்ள பொழிச்சலூரில் வசிக்கிறேன். வண்டலூர் வழியாக நான் பலமுறை சென்றுள்ளேன். அப்போதெல்லாம் இந்த கோவிலுக்கு வந்ததில்லை. வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை கோபுரத்தின் சிறப்பு, மகிமையை ஒருவர் தெரிவித்ததால், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்து பாபாவை வழி பட்டேன். எனது மகன் களுக்கு எவ்வளவோ இடங் களில் பெண் தேடி அலைச் சல் ஏற்பட்டபோது அந்த பிரார்த்தனையையும், எனது நீண்டநாள் பதவி உயர்வு வேண்டுதலையும் பாபாவின் பாதத்தில் வைத்தேன். பாபா கூறியதுபோல் நம்பிக்கையையும் பொறு மையையும் கடைப்பிடித்தேன்.
கூட்டுப்பிரார்த்தனையால் என் வேண்டுதல் நிறைவேறி நல்ல மருமகள்கள் கிடைத்தார்கள். அவர்களை எனது மகள்கள்போல நடத்து கிறேன். பதவி உயர்வால் கிடைக்கவேண்டிய தொகையும் வந்தது. மகிழ்ச்சி. இதனை நான் அநேக பக்தர்களுக்குத் தெரிவித்தேன். அவர் களும் இங்கு வருகைதந்து, வேண்டுதல் நிறைவேறி, மிக்க மனநிறைவோடு என்னைப் போல் வாரந்தோறும் தவறாமல் இங்கு வருகைதருகின்றனர். அற்புதங்கள் நிகழ்த்து கிறார் வழித்துணை பாபா!
கண்கண்ட தெய்வம்!
என் பெயர் எஸ். ஸ்ரீனிவாசன். சென்னை கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன். 21-8-2019 அன்று என் தாயார் வீட்டில் தவறி விழுந்து விட்டார். வயதோ 88. இடுப்பில் பலமாக அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என அஞ்சினேன். ஆனால் விழுந்த என் தாய் அவராகவே எழுந்து "ஒன்றுமில்லையடா' என கூறிவிட்டார். பலமான அடி இல்லை. ஆனால் இடுப்பைச் சுற்றி ரத்தம் உறைந்ததால் அதிக வலி. மருத்துவரிடம் காண்பித்த பின்னரும் வலி இருந்தது. அப்போதுதான் வழித்துணை பாபாவிடம் எனது வேண்டுகோளை வைத்து, என் தாயார் பழைய நிலைக்கு வரவேண்டுமென தியானித்துப் பிரார்த்தித்தேன். அவ்வண்ணமே இன்று எனது தாயார் நன்றாக அவராகவே அன்றாடப் பணி களைச் செய்துவருகிறார்.
அப்போதுதான் பாபா வின் கருணையைப் புரிந்து கொண்டேன். எனக்கு அனைத்துமே பாபாதான்.
அவரே தத்தாத்ரேயர். கண்கண்ட தெய்வம்.
சாயி கணேச, சாயி கணேச, சாயி கணேச பாஹிமாம்.
சாயி கணேச, சாயி கணேச, சாயி கணேச ரட்சமாம்.
அற்புதங்களை அள்ளித்தரும் வழித்துணை பாபாவை வேண்டுவோம். அனைத்தும் அருள்வார்.
தனிவழி காட்டிய பாபா!
என் பெயர் சரவணன். நான் உயர்தரமான பிரின்டிங் வேலைகளைச் செய்துவந்தேன். இந்தத் தொழிலில் முன்னோடி நிறுவனங்களில் வேலைசெய்து, தொழிலை நல்ல முறையில் கற்றுத்தேர்ந்து, தனியாகச் செய்துவந்தேன். நேர்த்தியாகவும், நேர்மையாகவும் தொழிலைச் செய்யவேண்டும் என்னும் நோக்கத்தில் ஒவ்வொரு நாளும் என் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன். இருப்பினும் சிலரது சூழ்ச்சியாலும், பொருளாதாரப் பிரச்சினையாலும் தொழிலில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது.
அச்சுத் தளவாடங்களையும், இயந்திரங் களையும் பெருமளவில் வைத்து நடத்திய தொழில் முடங்கிய அந்த நேரத்திலும்கூட எனக்கு நம்பிக்கையைத் தந்தது பாபாதான். எனது தொழிற்சாலைக்கு அருகிலேயே அமைந்திருந்த வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை கோபுரத்தில் நான் மழைக்காகவே ஒதுங்கினேன். அந்த நேரத்தில் எனக்கிருந்த வருத்தத்தை, சங்கடத்தை சாய்பாபாவிடம் கொட்டித் தீர்த்தேன்.
அதன்பின்னர், எனக்கு ஏற்பட்ட துன்பங்கள், எனக்கிருந்த மன உளைச்சல்கள் மழை நீரில் உப்பு கரைவதுபோல கரைந்தன.
வழித்துணை பாபா எனக் கான ஒரு தனிவழியைக் காண்பித்தார். ஆமாம்; எனது முற்கால நண்பர்கள் நான் அறிந்து வைத்திருந்த தொழில்நுட்பத்தைத் தெரிந்திருந்ததாலும், என்மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும் ஒரு அரசாங்க நிறுவனத் தில் பகுதி நேர விரிவுரையாளராக என்னை நியமித்தனர். அதன்மூலம் எனக்கு மிகப்பெரிய கௌரவத்தையும், எனது குடும்பத்தை நடத்த பொருளாதாரத்தையும், நான் கற்ற தொழிலை மறந்துவிடாமல் அதை மற்றவர்களுக்கும் கற்றுத்தருவதால் ஒரு ஆத்ம திருப்தியையும் எனக்கு அளித்துள்ளார் சாய்பாபா. இன்று நான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், பொருளாதாரப் பிரச்சினை இல்லாமலும் உள்ளேன். வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை கோபுரத்தின் உறுப்பி னர்களுக்கும், அதை வழிநடத்தும் சாய்ராம்ஜி அவர்களுக்கும் நன்றி.
முரட்டு ஆசாமியை திருத்திய பாபா!
எனது பெயர் மூர்த்தி. நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது மகள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவரையும், மருமகனையும் பார்த்துவர நானும் என் மனைவி வசந்தியும் கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றோம். அங்கிருந்தபோது எனது மனைவி தனது செல்போனில் யூ டியூப்பில் "இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ்' என்னும் சேனலைப் பார்த்துள்ளார். அதில் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை நிகழ்ச்சிகளைப் பார்த்து, சாய்ராம்ஜியைத் தொடர்புகொண்டு ஒருசில பிரார்த்தனைகளைச் செய்துகொண்டார். அவை நிறைவேறிக்கொண்டு வந்தன. பிறகு சென்னை வந்துவிட்டோம். சில நாட்கள் கழித்து எனது மனைவி வசந்தியின் தங்க வளையல் களைக் காணவில்லை. அதை என்னிடம் சொல்லவே இல்லை. தனது கைகளில் ரப்பர் வளையல்களை அணிந்திருந்தார். அதை நான் கவனிக்கவில்லை. எனது மனைவி வசந்தியோ எனக்கு பயந்து எங்கெங்கோ தேடியும் வளையல் கிடைக்கவில்லை. பிறகு குருஜியிடம் நேரில்சென்று பிரார்த்தித்து வளையல் தொலைந்துபோன விஷயத்தைச் சொல்லியுள்ளார். அவரும் பாபாவிடம் பிரார்த்தனை செய்து, "அவை உங்கள் வீட்டிலேதான் உள்ளன' என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறார். ஆனால் கிடைக்கவில்லை.
மற்றொரு நாள் மிகவும் மனம் சலித்த என் மனைவி குருஜியைத் தொடர்பு கொண்டு, "அண்ணா, எனது வளையல்கள் காணாமல்போன விஷயத்தை என் கணவரிடம் எவ்விதம் சொல்வேன்? அவரோ மிகவும் கோபக்காரர். நானும், எனது சொந்த வளையல்கள் கிடைக்கும்வரை வேறு வளையல்களை அணியமாட்டேன்' என்று வருத்தத்தோடு பேசியுள்ளார்.
அவ்வமயம் பாபாவே தெரிவித்தவாறு, "அந்த வளையல்கள் இரண்டும் உமது பீரோவிலுள்ள புடவைகளுக்கிடையில்தான் உள்ளன' என்று நேரில் பார்த்ததுபோல சொல்லியிருக்கிறார். அவர் சொன்னவாறே சென்று பார்த்தபோது அதே இடத்தில் அந்த வளையல்கள் இரண்டும் இருந்தன.
அதன்பின்னர் நானும் மனைவியுடன் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்குச் சென்றேன். அந்த கோபுரத்தின் படிகளின் கால்வைத்து ஏற முயல்கிறபோது என்னையும் அறியாமல் ஒரு அதிர்வு ஏற்பட்டு மிகமிக அற்புதமான ஒரு அனுபவத்தை உணர்ந்தேன். "நான் இங்கே குடிகொண்டிருக்கிறேன்' என்று பாபா எனக்கு உணர்த்துவதாக அது அமைந்தது. அதே ஆனந்த அனுபவத்தோடு பிரார்த்தனை கோபுரத்திற்குள்ளே நாங்கள் நுழைந்தோம். பிறகு ஆரத்தி நடந்தது. கூட்டுப் பிரார்த்தனை யின்போது சாய்ராம்ஜி திடீரென்று என்னை அழைத்துப் பேசும்படி சொன்னார். அதுதான் எனக்கு கன்னிப்பேச்சு. இதுநாள்வரை பேசியிராத எனக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருக்குமோ என்று எண்ணினேன். ஆனால் நான் பேசி முடித்ததும் அனை வரும் என்னை மிகவும் பாராட்டினார்கள்.
என்னை ஒரு முரட்டு ஆசாமியாக இதுநாள் வரை பார்த்துப் பழகிவந்த எனது மனைவிக்கு இது மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பாபாவை நம்பினோருக்கு நிச்சயம் துன்பமில்லை.