மது சாயி சொந்தங்களுக்கும், பாபா கூட்டுப் பிரார்த்தனைக் குழு வினருக்கும், நம்மோடு இணைந்து சாயியின் புகழ் பாடிவரும் கோடானு கோடி பக்தர்களுக்கும் வணக்கம்.

Advertisment

இந்த வருடம் அக்டோபர் 8-ஆம் தேதி பாபாவின் 101-ஆம் ஆண்டு சமாதி தினம் வருகிறது. எனவே நாம் அனைவரும் சாயியின் அருளைப் பரிபூரணமாகப் பெறவேண்டும்.

அன்றைய தினம் நாம் அனைவரும் இணைந்து உலக நலனுக்காகவும், நமது நலனுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனையும், மகாஅன்னதானமும், பாபாவுக்கு பால்குடம் எடுத்து ஊர்வல நிகழ்ச்சியும் பாபாவின் அருளால் நடத்தவிருக்கிறோம். நமது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத் திற்கு அருகில் வசிப்பவர்களும் அல்லது இந்த பால்குட ஊர்வலத் திலும், ஏனைய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள பாக்கியமும் விருப்பமும் உள்ளவர்களும் முன்னமே தங்களது பெயர்களைப் பதிவிட்டுக் கலந்து கொள்ளலாம். அதற்கான கட்டணம் ரூ.500/-ஐ செலுத்தி பாபாவின் அருட் பிரசாதத்தைப் பெற்று குருவருளும் திருவருளும் பெறலாம்.

dda

Advertisment

சாய்நாதரின் அருள்மழையில் நனைந்து, தங்கள் அற்புத அனுபவங்களை "ஓம் சரவணபவ' இதழுக்காக எழுதும் அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. "ஓம் சரவணபவ' மாத இதழ் நிர்வாகத்தினரும் இதற்காக பக்கங்களை ஒதுக்கி உதவி வருகிறார் கள். இத்தகைய அற்புதங்களைச் செய்துவரும் சாய்பாபாவுக்கு நமஸ் காரங்களைத் தெரிவித்துக்கொள் கிறேன். அற்புதங்களை அனுப வித்து இவ்விதழில் எழுதிவரும் பக்தர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சக்திமிகுந்த சாயிபாபாவின் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பினாலோ தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ மதங்கடந்து, இனங் கடந்து எந்த நாட்டிலிருந்தாலும், அவர்களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காது கொடுத்துக் கேட்பார். உடனுக்குடன் அவரே பரிசீலித்து அதற்கான தீர்வளித்து நமது துன்பங்களைத் தீர்ப்பார்.

குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ் என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், வர்ன் பன்க்ஷங் ஈட்ஹய்ய்ங்ப்-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசி எண்களிலும் அணுகலாம். வழித் துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை- 600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.

Advertisment

பாபாவின் அற்புதங்களை அனுபவித்தவர்கள், அந்த விவரங் களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந் தெர்ந்தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.

இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப்போம்.

வாழவைத்த பாபா

என் பெயர் சித்ரா. நான் சென்னை- பெருங்களத்தூரில் காமராஜ் நகரில் வசித்துவருகிறேன். எனக்கு மூன்று குழந்தைகள். எனது கணவர் என்னையும், என் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். மனமுடைந்த எனக்கு பாபா ஆலயத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. எட்டு மாதம் பாபாவுக்கு சேவை செய்தேன். நிம்மதியின்றி இருந்த எனக்கு பாபா நல்ல முன்னேற் றத்தைக் கொடுத்தார். முதல் மகன் பி.ஈ. சிவில்; மகள் பி.ஈ., ஈஈஈ; இன்னொரு மகன் டிப்ளமோ. குழந்தைகளை படிக்கவைத்துவிட்டேன். மேலும் எனக்கு பாபா நல்ல சம்பளத்துடன்கூடிய வேலை கிடைக்கச் செய்தார். இப்பொழுது நான் நிம்மதி யாக இருக்கிறேன். சாய்ராம்ஜி கூட்டுப் பிரார்த்தனை செய்தால் அதில் சொல்லப்பட்ட, வேண்டிக்கொள்ளப்பட்ட அனைத் துப் பிரார்த்தனைகளும் வெற்றியடைகின்றன. அதுதான் இந்த வண்டலூர் பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தின் சக்தி. இப்பொழுது நான் ஒரு சிவனடியார் என்ற அற்புத பாக்கியத்தையும் வழங்கியிருக்கிறார். திருவேங்கீஸ்வரர் திருக்கூடத்தில் சிவ பூதகணங்கள் (சிவனடியார்) என்ற அற்புத ஆன்மிகப் பணியை வழித்துணை பாபா எனக்கு கொடுத்தது பெருமகிழ்ச்சி.

துணைவந்த பாபா

என் பெயர் ஆர். மகாலஷ்மி. நான் புதுப் பெருங் களத்தூரிலுள்ள சதானந்தபுரத்தில் வசிக்கிறேன். என் மகளுக்கு தெய்வபக்தி கிடையாது. அவள் வாழ்வில் எல்லாம் தடையாகவும், கஷ்டங்கள், அவமானங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. வண்டலூர் வழித்துணை பாபாவின் பாதத்தை என்று பிடித்தேனோ அன்றுமுதல் என் பெண்ணிடம் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. பாபாவின்மீது பக்தி, நம்பிக்கை, தினமும் விளக்ககேற்றுவது என என்மகளை முழுமை யாக மாற்றிக் கொடுத்து விட்டார். அவள் பணி புரியும் இடம் வெகுதூரத்தில் இருந்தது. அதையும் சரிசெய்து மிகவும் அருகில் கிடைக்கும்படி அருள்செய்தார். எங்கள் குடும்பத்திற்கு பாபா செய்ததுபோல் அனைவருக்கும் செய்யவேண்டும். அனைவரும் வண்டலூர் வழித்துணை பாபாவின் கோபுரத்திற்கு வாருங்கள். உங்கள் வாழ்விலும் பல அதிசயத்தையும் அற்புதத் தையும் செய்து காட்டுவார். வினைகள் யாவும் தீர்த்து வைப்பார்.

ஒருமுறை என் வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக இருந்ததால் யாரிடமும் சொல்லாமல் திருப்பதி செல்ல பஸ் ஏறிவிட்டேன். தனியாக வந்ததை நினைத்து பயந்தபோது, மூன்று மூதாட்டியர் "நாங்களும் திருப்பதிக்குச் செல்கிறோம்;

எங்களோடு வாம்மா' என்று கூறினார்கள்.

தன் மகள் தனியாகப் போவதற்கு பயப்படுகி றாள் என்றுணர்ந்த பாபா, என் பயத்தைப் போக்க துணைக்கு மூன்றுபேரை அனுப்பி வைத்தார். அதுமட்டுமா; நீண்டநாட்களாக திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆசைப்பட்டேன். அதையும் நிறைவேற்றி வைத்தார். எப்படி? அங்கப்பிரதட்சணம் செய்ய எங்கே போவது, யாரைக் கேட்பது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெண் என்னிடம் வந்து, "அக்கா நானும் அங்கப்பிரதட்சணம் செய்யப்போகிறேன், வாருங்கள் செல்வோம்'' என்று அழைத்தாள் பாருங்கள், அதுதான் பாபாவின் மகிமை. பிரதட்சணம் செய்ய டிக்கெட் வாங்க வேண்டுமாம். அது எனக் குத் தெரியாது. உள்ளே அனுப்பமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். பாபாவிடம் அழுதேன். அப்போது உடன் வந்தவர், ஒருவர் வரவில்லையென்று அந்த டிக்கெட்டை எனக் குக் கொடுத்தார். இதுதான் வழித்துணை பாபாவின் மகிமை. இன்னும் இதுபோல் எத்தனையோ அற்புதங்களைக் காணலாம்.

சேவைக்குப் பூமழை!

எத்தனையோ இடங்களில் உதி, சந்தனம், குங்குமம், பால் ஆகியவற்றை சாய்பாபா வரவழைத்து ஆசிர்வதித்து, அற்புதம் நிகழ்த்துவதுபோல, கடந்த 17-9-2019 அன்று காலை வண்டலூர் பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. சாய்திலகா என்கிற நான், வண்டலூர் வழித்துணை பாபா கோபுரத்தில் பல ஆண்டுகளாக சேவை செய்துவருகிறேன். பாபா என்றால் எனக்கு உயிர்போல. சாயி என்றால் என்னுடைய குடும்பத்திற்கே சர்க்கரைபோல. ஆமாம்; உண்மை அதுதான். அதனால் தான் நான் அன்று சாயிக்கு அலங்காரங்களைச் செய்து கொண்டிருக்கும்போது சாய்பாபா அகம் மகிழ்ந்து, நான் செய்த சேவையை ஆமோதித்து, என்னை வாழ்த்தும்விதமாகப் பூமாரி பொழிந்தார். அதைப்பார்த்த இன்னொரு சாயி பக்தையான பத்மினி மாமியும் ஆச்சரியப்பட்டு, உடன் சேர்ந்து சேவை செய்யும்போது அந்த நேரமும் சாய்பாபா பூமாரி பொழிந்து ஆசிர்வதித்தார். இதைக்கண்ட நமது சாயி சொந்தங்கள் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் உறைந்தே போயினர்.

மேலும் சத்தியமாக நடந்தது ஒரு அனுபவம்...

ஒருமுறை நான் வீட்டில் மாலை 6.00 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தேன். வாசல் கதவு திறந்திருந்தது. அப் போது ஒரே சத்தமாக இருந்தது- "அக்கா அக்கா' என அழைப்பதுபோல. வெளியில் வந்து பார்த்தபோது, வழக்கமாக வரும் பூனை ஒரு பெரிய நல்ல பாம்பை அசையவிடாமல் மிரட்டி, பூனை டீச்சர் போலும், பாம்பு ஸ்டூடண்ட் போலும் அமர்ந்திருந்தன.

அப்போது வெளியில் சென்றிருந்த அப்பா வர, "அப்பா, சோபாவிற்குப் பின்னால் பாம்பு உள்ளது' என்றேன். "என்ன, பாம்பா... நீ என்ன சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறாய்?' என்றார். "பாபாவே துணை' என்றேன். அது வரை பாம்பை அசையவிடாமல் பார்த்துக் கொண்டிருந்த பூனை அதன்பின்னர் சென்று விட்டது. பாம்பும் வெளியேறிவிட்டது. இதை என்னவென்று சொல்ல! பாபா பக்தர் களை ஒருபோதும் கைவிடமாட்டார் என உறுதியாக நம்பவேண்டும். நானும் என் குடும்பத்தினரும் பாபாவை உறுதியாகப் பற்றி வாழ்கிறோம்.

தொலைந்தது கிடைத்தது!

என் பெயர் சாய்சரண். எனது பெற்றோர் பெயர் செல்வம், கலா. நாங்கள் சென்னையில் வசித்துவருகிறோம். நான் சிறுவயதுமுதலே ஷீரடி சாயி பாபாவின் தீவிர பக்தன். கடந்த மூன்று வருடங்களாக வண்ட லூர் வழித்துணை பாபா ஆலயத்திற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாமல் வந்து விடுவேன். இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது எனது வழக்கம். கடந்த 23-7-2019 அன்று எனது வாகனம் திருட்டுப் போய் விட்டது. காவல் நிலையம் சென்று புகார் செய்துவிட்டு, பாபா ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தேன். என்னிடமிருந்த வாகனத்தின் சாவியை பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்துவிட்டுச் சென்றேன். திடீரென ஒருநாள் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. "உனது இருசக்கர வாகனம் கிடைத்துவிட்டது' என்றார் கள். இது பாபாவின் அருளால்தான் நடந் திருக்கிறது. பின்னர் இதைப்பற்றி வழித் துணை பாபா ஆலயத்திலுள்ள சாய்ராம்ஜி சுவாமியிடம் கூறினேன். அவரும் "பாபாவின் அற்புதத்தால்தான் இது நடந்தது,' என்றார். எல்லா சாயி சொந்தங்களும் நம்பிக்கையுடன் ஷீரடி சாயிபாபாவை வழிபட்டால் நம்மைத் தேடிவந்து அற்புதம் செய்வார். சாய்ராம்ஜி பூஜையில் பாடும் ஆரத்திப் பாடல் எல்லாருக்கும் கவலையை மறந்து புத்துணர்வு கொடுக்கும். அனைத்து சாய் சொந்தங்களும் வண்டலூர் வழித்துணை பாபாவை சரணடைவோம்.

குணமாக்கிய பாபா!

எனது பெயர் இராதா கிருஷ்ணன். நான் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறேன். எனக்கு சாயிபாபா கூட்டுப் பிரார்த்த னையின்மீது மிகமிக நம்பிக்கை. "ஓம் சரவணபவ' இதழில் சாயிபாபாவின் அற்புதங்களை எழுதும் பக்தர்களின் அனுபவங்களைப் படிக்கும்பொழுது, வாழ்கின்ற ஒரு கலியுகக் கடவுளாக பாபா இருக்கிறார் என்பது தெரிகிறது. நான் அதிகம் படித்தவனல்ல. இருந்தாலும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய், வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன். அது பாபாவின் திருவருள்தான். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் லட்சக் கணக்கில் செலவு வருமோ என்று பயந்த போது, 150 ரூபாயிலேயே அதை சரிசெய்து கொடுத்தார். சாய்ராம்ஜி அவர்கள் பாபாவின் சத்திமிகுந்த உதியைத் தந்து, அதில் ஒரு துளியை ஒரு டம்ளர் நீரில்போட்டு அருந்தி வரச் சொன்னார். அவ்வாறே பருகிவந்தேன். நோயிலிருந்து விடுபட்டேன். எனது வியா பாரத்திலும் போட்டியினாலும், போலீஸ் தொந்தரவாலும் மிகக் கஷ்டப்பட்டபோது, பாபாவை வேண்டி நம்பிக்கையோடு வியாபாரம் செய்து, இன்று காசு கையில் நிற்கிறது. எனது குடும்பத்தில் பிரச்சினை வந்தால் வழித்துணை பாபாவிடம் பிரார்த் தனை சீட்டு எழுதிப்போட்டு, மட்டைத் தேங்காயை எரியும் தூணியில் போட்டு வழிபட்டால் அவை உடனே சரியாகிவிடும்.

(தொடரும்)