அன்பு சாயி சொந்தங் களே! பாபாவின் மகிமை களை, பாபாவினால் வாழ்க்கை யில் ஏற்பட்ட மாற்றங்களை, அந்த மகானின் கருணை மழையில் நனைந்த அற்புத அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு நமது "ஓம் சரவணபவ' இதழில் அறிவித்த படி, அநேக சாயி பக்தர்கள் எழுதி அனுப்பியிருந்தார்கள். அதைக்கண்டு நாமும் மிகவும் ஆச்சரியம் அடைந்தோம். பாபாவின் மகிமைகளும், அவர் செய்யும் அற்புதங்களும் இன்று உலகப்பிரசித்தி பெற்று வருகிறது. சாதி, மதம் கடந்து அவரைத் தொழுகிற மக்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கிறார்கள். இன்று இந்த அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டதுபோல அநேக சாயி பக்தர்கள் தொடர்ச்சியாக உங்களது அனுபவங்களை நமது பாபா பிரார்த்தனை மையத்திற்கு எழுதி அனுப்பும்பொழுது, தங்களது புகைப் படத்தையும் சேர்த்து அனுப்பிவைத்தால் அது மேலும் சிறப்பாக இருக்கும். இந்தத் தொடரைப் படிப்பவர்கள், இதில் எழுதிய பக்தர்கள், இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் பாபாவின் அருட்பார்வை கிடைக்கப்பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ சாயிநாதரி டம் பிரார்த்திக்கிறேன்.
அதுபோல இந்தக் கூட்டுப் பிரார்த்தனை யில் முக்கிய ஒரு பிரார்த்தனையாக சென்னையைச் சேர்ந்த செல்வி என்கின்ற 12 வயதுப் பெண் சிறுமி- அதாவது அந்தப் பெண் சென்ற மாதம்தான் பூப்பெய்தி உள்ளாள். ஆனால் ஓரிரு மாதங்களிலேயே அவளுக்கு "சர்விகல் கேன்சர்' என்கின்ற புற்றுநோய் வந்து அவளது கர்ப்பப்பை சேதமடைந்துள்ளதாகவும், அதற்காக அறுவைச் சிகிச்சை செய்யவேண்டியுள்ள தாகவும், அவளது பெற்றோர்கள் நமது கூட்டுப்பிரார்த்தனைக் குழுவிடம் விண்ணப் பித்து, பாபாவின் கருணையால் அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை இல்லாமலே குணமடைய வேண்டிப் பிரார்த்திக்க வேண்டி னர். செல்வி என்கிற அந்தச் சிறுமிக்காக நாம் அனைவரும் இணைந்து பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சக்திமிகுந்த சாயிபாபா வின் கூட்டுப்பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பினாலோ அல்லது தொலைபேசி மூலமாகத் தெரிவித்தாலோ அதற்குண்டான பிரார்த் தனைகளை மதங்கடந்து, இனங்கடந்து எந்த நாட்டிலிருந்தாலும், அவர்களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காதுகொடுத்துக் கேட்பார். உடனுக்குடன் அவரே பரிசீலித்து அதற்கான தீர்வளித்து நமது துன்பங்களைத் தீர்ப்பார்.
குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள, "இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ்' என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், "வர்ன் பன்க்ஷங் ஈட்ஹய்ய்ங்ப்'-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசியிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணி யம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை-600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.
பாபாவின் அற்புதங்களை அனுபவித்த வர்கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரி யில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெர்ந்தெடுக்கப் படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.
இனி... பக்தர்கள் வாழ்வில் பாபா புரிந்த அற்புதங்கள்...
பொறுமைக்குப் பரிசு!
என் பெயர் தேவேந்திரபிரபு. நான் நாமக் கல் மாவட்டத்திலுள்ள திருச்செங் கோட்டில், ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியரா கப் பணிபுரிகிறேன். சில வருடங் களுக்குமுன்பு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் முயற்சிகள் அனைத் தும் தோல்வியடைந்தன. அதுவரை பாபா கோவிலுக்குச் சென்றிராத நான் அன்று பாபாவே அழைத்ததுபோல் கோவிலுக்குச் சென்றேன். அன்று வியாழக்கிழமை. எனக்கு வேலைகிடைக்க வேண்டுமென்று மனதார வேண்டிக்கொண்டேன். அடுத்த சில நாட்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.
ஆனால் அந்த வேலை எனக்குக் கிடைக்க வில்லை. மனமுடைந்த நான் என்ன செய்வ தென்று தவித்தபோது, சில நாட்களில் மற்றொரு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அதில் நான் தேர்ச்சிபெற்று வேலை யும் கிடைத்தது. இந்த இடத்தில்தான் பாபா வின் கருணை எனக்குப் புரிந்தது. ஏனெனில் முன்பு நான் நேர்காணலுக்குச் சென்ற கல்லூரி யைவிட இரண்டாவதாக இணைந்த கல்லூரியில் இரண்டு மடங்கு சம்பளம் அதிகம். பாபாவின் தாரக மந்திரம் பொறுமை மற்றும் நம்பிக்கை. இந்த பொறுமை யால்தான் எனக்கு இந்த அதிசயம் நடந்தது. இதுபோல் அனைத்து மக்களையும் ரட்சித்து, அவர்களின் வாழ்விலும் சாய் நாதர் அற்புதங்களை நடத்துவார் என்பது நிதர்சனமான உண்மை.
பிரிந்தவரை இணைத்த பாபா வந்தவாசி ஏ. துரைவரதன் என்னும் நான் எனது இதய நினைவுகளை "ஓம் சரவணபவ' இதழ்மூலம் பாசமாகப் பகிர்கிறேன். நான் சிறுவயது முதலே செல்வாக்காக வாழ்ந் தவன். கஷ்டம் என்பதே தெரியாது. அதற் கெல்லாம் காரணம் எனது தந்தைதான்.
அவர் ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமையா சிரியர். அவர் சிறுவயதில் பட்ட கஷ்டங் களை தனது மகன் சிறிதளவும் படக்கூடாது என்று பாசமாக வளர்த்தார். நானும் நன்றா கதான் படித்தேன். எனினும் அதிக செல்வாக் கினால் படிப்பதில் சற்று தொய்வாக இருந்து விட்டேன். ஆனாலும் நான் என்ன நினைத் தேனோ அனைத் தையும் எனது தந்தை நிறைவேற்றினார். அதனால், நானும் சுற்றுலா செல்வது, பொழுதுபோக்கு, கவிதை, கட்டுரை எழுதுதல், சமூகசேவை என்று அனைத் திலும் திறமையாக இருந்தேன். என்னைப் பலரும் பாராட்டினர்.
அவை எனக்கும் ஒரு உந்துசக்தியாக இருந்தன. அதற்கெல் லாம் என் அப்பா வின் பணத்தை செலவழித்தேன்.
அரசாங்க வேலை யில் சேரவேண்டு மென்பது எனது ஆசை. நிறைவேறவில்லை.
எனது மகிழ்ச்சியான சூழல் மாறத் தொடங்கி யது. ஒவ்வொருவருக்கும் ஒரு நேரம் வருமென்று சொல்வார்கள். அது எனக்கில்லை போலும். அதனால் எனது வாழ்வில் ஏமாற்றம், தொழிலில் ஏமாற்றம், நண்பர்களிடத்தில் ஏமாற்றம், எனது ஊர் மக்கள், உறவினர்கள் கிண்டல் செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் எனது திருமணமும் அதுநாள்வரை நடை பெறவில்லை. வயதோ 48 ஆகிவிட்டது. அதன்பின்பு சாய்பாபாவின் அற்புதங்கள் பற்றிக்கேள்விப்பட்டு அவரை வணங்க ஆரம்பித்தேன். இது பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். அப்போது எனது கஷ்டத்தை எண்ணிக்கொண்டு, அவர் நாமமான "ஓம் சாய்ராம்' என்று கூறிக் கொண்டே தினந்தினம் செல்வேன்.
அப்போது ஒருநாள் சாலையோரத்தில் பாபா உருவம் பொறித்த டாலர் ஒன்று கிடைத்தது. அதுமட்டுமின்றி, எனது கனவில் பாபா உருவத்தை நிலவில் கண்டேன். அதனால் அவர் கோவில்களுக்குச் சென்று வழிபட ஆரம்பித்தேன். என் பழைய நிலை மாறியது. ஆனந்தத்தில் திளைத்தேன். அதன் பின்பு அவரை மறந்துவிட்டேன். பத்தாண்டு களுக்குப் பிறகு தற்போது இரண்டு வருடங்களாக மீண்டும் அவர் நாமத்தைக் கூறுகிறேன். அவரது பல்வேறு ஆலயங் களுக்கும் சென்று வழிபடுகிறேன்.
அப்போதுதான் யூ-டியூப்பில் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை மையம் பற்றியும், "பாபாவின் அற்புதங்கள்' பற்றி சாய்சித்தர் சாய்ராம்ஜியின் இனிமை யான பேச்சுகள், அற்புதமான பஜனைகள், பக்தர்களின் அனுபவங்கள் பலவற்றையும் கண்டேன்.
அதன்பின்னர் சென்ற பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் மூலமாக எனது தொழில் வளர்ச்சிக்கு கூட்டுப் பிரார்த்தனைமூலம் எனது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சுவாமிஜிக்கு செய்தி அனுப்பி வைத்தேன். என்ன ஆச்சரியம்! நான் செய்யும் ரியல் எஸ்டேட் தொழில்மூலமாக மார்ச் 8-ஆம் தேதியன்று எனக்கு ஒரு நல்ல தொகை கிடைத்தது. பாபா கண் திறந்து விட்டார் என்று பேரானந்தம் அடைந்தேன்.
இதை நான் எழுதுவதற்கு முன்பு ஒரு பெண்மணி, ""சென்ற மே மாதம் 2-ஆம் தேதி எனது மகளைக் கூட்டிக்கொண்டு பாபா ஆலயத்திற்கு உங்களுடன் வந்தோம்.
அப்போது என் மகள் கணவனுடன் வாழாமல் என் வீட்டிற்கு வந்து தங்கி யிருந்தாள். "இன்றிலிருந்து 48 நாட்களுக்குள் உங்கள் மருமகனே அழைத்துச் செல்வார்' என்று அப்போது நீங்கள் கூறினீர்கள். இப்போது எனது மருமகன் போன் செய்து, வரும் ஞாயிற்றுக்கிழமை வந்து என் மகளை அழைத்துச் செல்வதாகக் கூறினார். பாபா நல்வழி காட்டிவிட்டார்'' என்று சொன்னார். இதை எழுதுவதற்கும் ஒரு அனுபவம் என்னவென்றால், சென்றவாரம் இரவு உறங்கச் செல்லும்போது "ஓம் சாய்ராம்' என்று 108 முறை எழுதிவிட்டு படுக்கவேண்டும் என்று தோன்றியது.
அவ்வாறே செய்தேன். என்ன ஆச்சரியம்! மறுநாள் இரவு 7.30 மணிக்கு யூ.டியூப்பைத் திறக்கும்போது, சாய்ராம்ஜி "உங்கள் வாழ்வில் கண்ட பாபாவின் அற்புதங்களை எழுதி அனுப்புங்கள்' என்று கூறுவதைக் கண்டேன். முந்தைய இரவு "ஓம் சாய்ராம்' என்று 108 முறை எழுதியதற்கே, அந்த அனுபவங்களை மறுநாளே என்னை எழுதவைத்துவிட்டாரே. அற்புதமல்லவா!
நிமிர்ந்து நடக்கிறன்
என் பெயர் வி.பி. கலாவதி. முதல் தரிசனத்திலேயே சாய்பாபா என்னைக் கருணையுடன் ஆட்கொண்டு அருளியது மட்டுமல்லாமல், அந்த நிகழ்வை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை யும் தந்திருக்கிறார். சுமார் மூன்று வருடங் களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். நெஞ்சுப்பகுதி யிலும், முதுகிலும் மிகக்கடுமையான வலி. மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனை சென்றால் ஏற்படும் செலவை நினைத்தும், வலியின் தீவிரத்தினாலும் செய்வதறியாது அமைதியாக இருந்தேன். (அது இதயநோய் அல்ல). இந்த நிலையில் சாய்பாபாவின் பக்தர் ஒருவர் ஒரு வியாழக்கிழமையன்று இரவு ஆரத்தி பூஜைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அன்றுதான் நான் சாய்பாபா கோவிலுக்கு முதன்முறையாகச் சென்று பாபாவை தரிசித்தேன். ஆரத்திப் பாடல்கள் இசைத்தார்கள். பூஜைகள் நடந்தன. நான் பாபாவிடம், "அப்பா, இந்த வலியிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள்' என்று வேண்டிக்கொண்டேன். பூஜைகள் முடிந்து ஆலயத்தில் இருந்தவர்களை ஓரிடத் தில் ஒன்றாக நிற்கவைத்து திருஷ்டி கழிப்பது போல சில சடங்குகளைச் செய்தார்கள். எங்களுக்குப் பிரசாதமும் தந்தார்கள். சாப்பிட்டுவிட்டு பாபாவை மீண்டும் ஒரு முறை வணங்கிவிட்டு ஆலயத்திலிருந்து வெளியே வந்தேன். அப்போதுதான் எனக்கு ஏற்பட்டிருந்த வலி சுத்தமாக இல்லாமல் போயிருந்ததை கவனித்தேன். அது எப்போது என்னைவிட்டு நீங்கியது என்பது தெரிய வில்லை. சாய்பாபாவை வணங்குவதிலும் இசையிலும் பூஜையிலும் ஆழ்ந்துவிட்டதால் என்னை மறந்திருந்துவிட்டேன். நிகழ்ந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை. இந்த விஷயத்தை என்னுடன் வந்தவரிடம் தெரிவித்தேன். அவர், "இது பாபாவின் கருணை' என்று சொல்லி, அவருக்கு நடந்த பல சம்பவங்களைக் கூறி எனக் குப் புரியவைத்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாபாவின் அன்பையும் கருணை யையும் முதல் தரிசனத்திலேயே பெற்ற பெருமகிழ்ச்சி ஒருபுறம்; நோய் முற்றிலுமாக குணமான அதிசயம் மறுபுறம்! வேறென்ன செய்வேன், பாபாவைச் சரணடைந்தேன். அவரது மகிமையை எல்லாரிடத்திலும் சொல்லி மகிழ்கிறேன். பாபாவின் பொற் பாதங்களில் பணிகிறேன். குருவருளும் திருவருளும் என் பெயர் சரண்யா. நான் பெருங் களத்தூரிலிருந்து, வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை கோபுரத்துக்கு வந்தேன். அக்கம்பக்கத்தினர் கூறிய கூட்டுப் பிரார்த்தனையின் மகிமையை அறிந்து வந்தேன். நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். என் கணவர் அதிகமாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு, வேலைக்குச் செல்வதில்லை. குடும்பத்திற்குத் தேவையான வருமானமில்லை. பிள்ளையைப் படிக்கவைக்கக்கூட பணமில்லை. இதுபோன்ற கஷ்டங்களுடன் நான் இங்கு வந்து வழிபட்டபோது, வழித்துணை பாபா அருளாலும் கூட்டுப்பிரார்த்தனையின் பலனாகவும் என் பிள்ளையின் படிப்பிற்குத் தேவையான கல்வித்தொகை எதிர்பாராமல் கிடைத்தது. அன்றிலிருந்து பாபாவைச் சரணடைந்தேன். துன்பங்களிலிருந்து மெல்லமெல்ல விடுபட்டேன்.
நான் இப்பொழுது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டி ருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவர்கள் என் கர்ப்பத்தை ஸ்கேன் எடுத்து அதன் அறிக்கையை என்னிடம் சொன்னபோது மிகவும் வேதனையடைந்தேன். "வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இல்லை. ஆகவே கருவைக் கலைத்து விடுங்கள்' என்று கூறினார்கள். மீண்டும் மிகவும் மனவருத்தத்துடன் பிரார்த்தனை மையத்திற்குச் சென்று முறையிட்டேன். எனக் காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அதன் பின்னர் எடுத்த ஸ்கேன் அறிக்கையில், "என் குழந்தை நன்றாக மூளை வளர்ச்சி அடைந்திருக்கிறது' என்று மருத்துவர்கள் சொல்லி அவர்களே ஆச்சரியப்பட்டார்கள்.
என் கணவரின் குடிப்பழக்கத்தையும் மாற்றி, மீட்டுக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில் பொறுமையாயிருக்கிறேன். நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் பாபாவின் குருவருளும் திருவருளும் நிச்சயம் கிடைக்கும்