க்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக- பக்தர்களின் குறைகளைத் தீர்த்து கருணைபுரியும் வள்ளலாக விளங்கிவருபவர் ராமபக்த ஆஞ்ச னேயர். அவர் கோவில்கொண்டு அருளும் தலங்கள் பல உள்ளன.

Advertisment

அவற்றுள் ஒன்று திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், நெடுகல்லு கிராமத்திலுள்ள ஸ்ரீசீதாராம லட்சுமண சமேத சஞ்சீவி ஆஞ்சனேயர், சக்தி அம்மன் ஆலயம்.

Advertisment

சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயக் கருவறையில், ஒரே கல்லில் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சனேயரும், கிராமத்தை ரட்சித்துக் காக்கும் சக்தி அம்மனும், கீழே ஸ்ரீசக்கரமும் அமைந்திருப்பது சிறப்பு. சூரிய, சந்திரரும் உள்ளனர். இத்தகைய அமைப்பு வேறெங்கும் காணவியலா தது என்று இங்குவரும் பக்தர்கள் வியக்கிறார்கள்.

a

அனுமன் குழந்தையாக இருந்தபோது, வானில் சஞ்சரித்த சூரியனைப் பழம் என்றெண்ணி அதைப்பிடிக்க பறந்து சென்றார். அதைக்கண்ட இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்க, அவர் மயங்கி பூமியில் வீழ்ந்தார்.

அவ்வாறு அவர் வீழ்ந்த பகுதி இதுதான் என்றும்; இங்குள்ள சக்தி அன்னை மற்றும் ஸ்ரீசக்கரத்தின் அருளால் முன்னைக் காட்டிலும் பலமடங்கு வலிமைபெற்று எழுந்து நின்றார் அனுமன் என்றும் கூறப் படுகிறது.

பிரார்த்தனைத் தலமாக விளங்கும் இவ்வாலயம் கருங்கல் திருப்பணி செய்து புதுப்பிக்கப்பட்டு, கடந்த 2018, ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை திருமலை திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர் ஸ்ரீசடகோப ராமானுஜர் மற்றும் இளைய ஜீயர் ஸ்ரீகோவிந்த ராமானுஜர் ஆகியோர் சிறப்பாக நடத்திவைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய விழாவாக இது பேசப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சனேயர், சக்திஅம்மன் அருள்பெற்றனர்.

இந்த ஆலயத்தின் மகிமை பற்றி, ஆஞ்சனேயர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர், கே. முனிகண்ணையா கூறும்போது, ""இவ்வாலயத்துக்குச் சென்றாலே ஒரு ஆன்மிக அதிர்வலையை நம்மால் உணரமுடியும். இதற்குத் திருப்பணி மேற்கொள்ள பாலாலயம் செய்து சுவாமியை வெளியே வைத்திருந்தோம். வேலைகள் முடிந்ததும் சுவாமி சிலையைப் பீடத்தில் பொருத்தி ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

Advertisment

aa

அப்போது இவ்வாலயத்துக்கு எதிரேயுள்ள 200 ஆண்டுகள் பழமையான அரசமரத்தில் இரண்டு ஆஞ்சனேயர்கள் (குரங்குகள்) அமர்ந்துகொண்டு ஆரத்தியை தரிசித்தார்கள். அவை எங்கிருந்து வந்தன என்பது யாருக்கும் தெரியாது. ஆரத்தி முடிந்து பார்த்தபோது அவற்றைக் காணவில்லை. இதைக்கண்டு அங்கிருந்த அனைவரும் சிலிர்த்துப் போனார்கள்.

இந்த ஆஞ்சனேயரின் ஆற்றலுக்கு மற்றொரு சம்பவமும் சொல்ல வேண்டும். ஆலயத் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்த சமயம்... இரவு ஒன்பது மணியளவில் திருப்பணிக் குழுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பணிக்காக ஒரு லட்ச ரூபாய் தேவையென்று கேட்டார்கள். மறுநாள் காலை கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, "நீங்கள் ஆஞ்சனேயர் ஆலயத் திருப்பணி செய்துகொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். அதற்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்க விரும்புகிறேன்' என்றார்.

இதை எவ்வாறு வார்த்தைகளில் வர்ணிப்பது? அதேபோல, இவ்வாலய கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர், பின்னர் விலை மதிப்புமிக்க ஆவணத்தை தவறவிட்டு விட்டார். அவர் இங்குவந்து வீர ஆஞ்சனேயர் சந்நிதியில் மனமுருக வேண்ட, அது மீண்டும் அவருக்கு கிடைத்துவிட்டது. இதுபோல பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. எல்லாம் அந்த ஆஞ்சனேயரின் மகிமை!'' என்றார்.

இவ்வாலயத்தில் அம்மன், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சனேயர் ஆகியோரின் பஞ்சலோக விக்ரகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகள் இங்குவந்து வேண்டிக்கொண்டால் நிறைவேறுகின் றன என பக்தர்கள் கூறுகின்றனர். அவ்வாறு பயன்பெற்றவர் துலாபாரக் காணிக்கை செலுத்துகின்றனர்.

சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், திருத்தணியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், நகரியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலும், பொதட்டூர்பேட்டையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத்தலம். பேருந்து வசதிகள் உள்ளன.

-எம்.