Advertisment

நெல்மலையை அருளிய அதிசயம்! - மோ கணேஷ்

/idhalgal/om/miracle-blessed-paddy-fields-mo-ganesh

திருக்குவளை திருத்தலத்துடன் தொடர்புடையது குண்டையூர் சிவத்தலம். திருக்கோளி- எனப்படும் திருக்குவளைக்கு மிக அருகில் அமைந்த இத்தலம் சோழ நாட்டில் நெல்வளங் கொழிக்கும் ஊராகத் திகழ்ந்துள்ளது. இங்கே ஆதியில் ரிஷபத்தால் வழிபடப்பெற்ற ஈசராக விளங்குகிறார் ரிஷபபுரீஸ்வரர்.

ரிஷபதேவர் இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அப்பதியே பின்னர் மங்களாம்பிகை உடனுறை ரிஷபபுரீஸ்வரர் ஆலயமாகத் திகழ்கிறது. இதனால் ரிஷபத்தின் கொம்புகளைக் குறிக்கும்வண்ணம் இவ்வூர் கொண்டையூர் என்றிருந்து தற்போது குண்டையூர் ஆகியுள்ளது.

இவ்வூரில் வாழ்ந்த வேளாளர் குலத்தைச் சேர்ந்த சிவநேய தம்பதி களுக்கு மகனா கப் பிறந்தார் குண்டையூர்க் கிழார். பெரு நிலங் களைக்கொண்ட இவர் சிறு வயதிலிருந்தே மதுரை யம்பதிப் பெருமானான மீனாட்சி சுந்தரேஸ்வரர்மீது அலாதி பக்தி கொண்டிருந்தார். அடிக்கடி மதுரைக்குச் சென்று ஆலவாய் அண்ணலையும், அம்மை அங்கயற் கண்ணியையும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்படி ஒருநாள் திடீரென மதுரைக்குப் புறப்பட்டார். அது கார்காலம் என்பதால் அன்றைய தினம் இடிமின்னலுடன் பலத்த மழை பொழிந்தது. இவர் குண்டை யூரிலிருந்து கிளம்பி கோட்டூர் அருகிலுள்ள இருள்நீக்கி என்னும் ஊர்வரை எப்படியோ சிரமப்பட்டு சென்றுவிட்டார். ஆனால் அப்போது மழையின் வேகம் அதிகரிக்கவே, மதுரைக்குச் செல்லமுடியாமல் போகுமோ என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி வாக்காக... குண்டையூர் திரும்பிட கட்டளை யிட்ட கயிலைநாதர், அங்கேயே அவருக்குக் காட்சி தருவதாகக் கூறியருளினார்.

Advertisment

ss

அதன்படி மீண்டும் தனது ஊருக்கே திரும்பிச் சென்றார் குண்டையூர்க்கிழார். குண்டை யூரிலேயே ரிஷபாரூடராக காட்சிதந்த சுந்தரேசப் பெருமான், தான் மதுரையிலிருந்து இங்கு வந்ததன் சாட்சி யாக, பூக்கும்

திருக்குவளை திருத்தலத்துடன் தொடர்புடையது குண்டையூர் சிவத்தலம். திருக்கோளி- எனப்படும் திருக்குவளைக்கு மிக அருகில் அமைந்த இத்தலம் சோழ நாட்டில் நெல்வளங் கொழிக்கும் ஊராகத் திகழ்ந்துள்ளது. இங்கே ஆதியில் ரிஷபத்தால் வழிபடப்பெற்ற ஈசராக விளங்குகிறார் ரிஷபபுரீஸ்வரர்.

ரிஷபதேவர் இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அப்பதியே பின்னர் மங்களாம்பிகை உடனுறை ரிஷபபுரீஸ்வரர் ஆலயமாகத் திகழ்கிறது. இதனால் ரிஷபத்தின் கொம்புகளைக் குறிக்கும்வண்ணம் இவ்வூர் கொண்டையூர் என்றிருந்து தற்போது குண்டையூர் ஆகியுள்ளது.

இவ்வூரில் வாழ்ந்த வேளாளர் குலத்தைச் சேர்ந்த சிவநேய தம்பதி களுக்கு மகனா கப் பிறந்தார் குண்டையூர்க் கிழார். பெரு நிலங் களைக்கொண்ட இவர் சிறு வயதிலிருந்தே மதுரை யம்பதிப் பெருமானான மீனாட்சி சுந்தரேஸ்வரர்மீது அலாதி பக்தி கொண்டிருந்தார். அடிக்கடி மதுரைக்குச் சென்று ஆலவாய் அண்ணலையும், அம்மை அங்கயற் கண்ணியையும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்படி ஒருநாள் திடீரென மதுரைக்குப் புறப்பட்டார். அது கார்காலம் என்பதால் அன்றைய தினம் இடிமின்னலுடன் பலத்த மழை பொழிந்தது. இவர் குண்டை யூரிலிருந்து கிளம்பி கோட்டூர் அருகிலுள்ள இருள்நீக்கி என்னும் ஊர்வரை எப்படியோ சிரமப்பட்டு சென்றுவிட்டார். ஆனால் அப்போது மழையின் வேகம் அதிகரிக்கவே, மதுரைக்குச் செல்லமுடியாமல் போகுமோ என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி வாக்காக... குண்டையூர் திரும்பிட கட்டளை யிட்ட கயிலைநாதர், அங்கேயே அவருக்குக் காட்சி தருவதாகக் கூறியருளினார்.

Advertisment

ss

அதன்படி மீண்டும் தனது ஊருக்கே திரும்பிச் சென்றார் குண்டையூர்க்கிழார். குண்டை யூரிலேயே ரிஷபாரூடராக காட்சிதந்த சுந்தரேசப் பெருமான், தான் மதுரையிலிருந்து இங்கு வந்ததன் சாட்சி யாக, பூக்கும் மரமாக காட்டாத்தி மரத்தையும், பூத்துக் காய்க்கும் மரமாக ஆத்தி மரத்தையும் இருக்கச் செய்து மறைந்தார்.

அந்த நாள்முதல் குண்டையூர் ஈசனைக் கொண்டாடி மகிழ்ந்தார் குண்டையூர்க் கிழார். அதோடு, சுந்தரமூர்த்தி சுவாமிகள்மீது அலாதி அன்பு கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் சுந்தரரால் திருவாரூரில் ஏற்படுத்தப்பட்ட அன்னசாலைக்கு நெல் மற்றும் தானியங்களை அனுப்பிவந்தார்.

Advertisment

திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து, அங்கு சிலகாலம் வாழ்ந்த சுந்தரர், தன் காதல் மனைவிக்காக சிவபெருமானையே தூது அனுப்பினார். வீதியில் இறங்கி நடந்த பெருமான் "வீதிவிடங்கன்' எனப் போற்றப் பெற்றார்.

அடியார்களுக்கு அன்னமிடும் பெரும் தொண்டினை தினமும் செய்து வந்தார் சுந்தரர். சிவன்மீது பெரும்பக்தி கொண்ட நிலக்கிழார்கள், சுந்தரரின் இந்த அரிய தொண்டிற்காக திருவாரூருக்கு நெல்லினை வண்டி வண்டியாக அனுப்பியவண்ணம் இருந்தனர். இதனால் திருவாரூரில் சுந்தரர் உண்டாக்கிய அன்னசாலையில் எப்போதும் அன்னத்திற்குக் குறைவே இருக்காது.

அடியார்களை சோதிப்பதில் அள வில்லாத விருப்பம்கொண்ட அரனார், சும்மா விடுவாரா சுந்தரரை? ஒருசமயம் திடீரென பஞ்சம் ஏற்பட்டது. விளைச்சல் குறைந் தது. பசியும், பட்டினியும் பெருகி யது. சுந்தரர் பலரிடத்தில் ஆட்கள் அனுப்பியும் நெல் இல்லையென கைவிரித்தனர்.

dsdf

எப்போதும் திருவாரூர் அன்ன சாலைக்கு கூடுதலாகவே நெல் அனுப்பும் குண்டையூர்க் கிழார் இம்முறை அனுப்பிட நெல் இல்லாமல் மனம் வருந்தினார். சொந்த உபயோகத் திற்கு என்றால் விட்டுவிடலாம். அடியார் தொண்டாயிற்றே.... மனம் அலை மோதியது குண்டையூர்க் கிழாருக்கு. அதே நிலையில்தான் திருவாரூரில் அவதியுற்றார் ஆலால சுந்தரர்....

இதற்குத் தீர்வுதான் என்ன? இறைவனிடமே முறையிட்டனர் இருவரும்.

இரவு முழுவதும் மனம் வாடியபடி, உணவும் நீரும் உட்கொள்ளாமல் படுத்துறங்கினார் குண்டையூர்க் கிழார். அவரது கனவில் தோன்றிய கோளிலிநாதர், "வீட்டிற்கு வெளியே வந்து பார். நெல் மலையே உள்ளது' எனக்கூறி மறைந்தார். கண்விழித்து வெளியே வந்த குண்டையூர்க் கிழார் மலைப்பில் உறைந்து போனார். காரணம் நெல்மலையின் உயரம். ஆரவாரமிட்டார்; குதூகலமானார். இதை உடனே சுந்தரரிடம் தெரிவிக்கவேண்டுமெனத் துடித்தார்.

இதற்கிடையில் திருவாரூரில் நடந்ததோ வேறு... குண்டையூர்க் கிழார் கனவில் தோன்றிய கயிலைநாதர். அதே நேரத்தில் சுந்தரர் கனவிலும் தோன்றி, "சுந்தரா, நீ வேண்டிய நெல் குண்டையூர்க் கிழாரிடம் தயார் நிலையில் உள்ளது. பெற்றுக்கொள்' என்று கூறி மறைந் தார்.

அடுத்தகணமே திருக்குவளைக்குப் புறப் பட்டுச் சென்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அங்கு கோளி-நாதரை வணங்கிய பின்னர், குண்டையூரை அடைந்து, குண்டையூர்க் கிழாரை சந்தித்திட, கிழார் நெல் மலையைக் காண்பித்தார். அதைக்கண்டு பேரானந்தம் அடைந்த சுந்தரர், இதை எப்படி திருவாரூர் கொண்டுபோய்ச் சேர்ப்பதென திகைத்து நின்றார்.

திருக்குவளையை அடைந்து, கோளி-நாதர் பாதங்களைப் பற்றினார்.

"நீளநினைந் தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளி- எம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லு பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப் பணியே' என்று பதிகம் பாடிப் போற்றினார். கோளி-நாதர் மகிழ்ந்து, சுந்தரரைத் திருவாரூ ருக்கு அனுப்பிவைத்தார்.

அன்றிரவு அந்த அதிசயம் நிகழ்ந்தது. நெல்மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்கும்படி ஈசன் தனது பூதகணங்களுக்குக் கட்டளையிட்டார். இரவோடு இரவாக யாரும் அறியாதவண்ணம் சிவ பூதகணங்கள் நெல்மலையைத் திருவாரூர் கொண்டு சேர்த்தன. ஊர் முழுதும் கொட்டிப் பரப்பின.

பொழுதும் விடிந்தது. பஞ்சம் தீர்க்கும் நெல் மலையைத் தந்த பரமனுக்கு நன்றி கூறி பரமானந்தமடைந்தார் ஆளுடைய நம்பியார்.

கிழக்கு முகம்கொண்ட குண்டையூர் ஆலயம் தோரணவாயிலுடன் திகழ்கிறது. ஆலயத்தின் முன்னே பிரம்மாண்டமான ரிஷப தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. மதுரையின் காவல் தெய்வமான மதுரைவீரன், இங்கு ஈசனுக்குப் படைவீரனாக உடன் வந்ததால் மதுரைவீரனை வழிபடுவது இன்றும் இங்கு வழக்கத்தில் உள்ளது. மதுரைவீரன் பெயரால் வீரன்குளம், வீரன் தீர்த்தம் என்னும் பெயரில் மற்றொரு தீர்த்தமும் இங்குள்ளது.

ஆலயத்திற்குத் தென்புற வாயில் ஒன்றும் உள்ளது. அதுவும் தோரணவாயிலாக அமைந் துள்ளது. கிழக்குமுகமாக உள்ளே நுழைந்திட, தலவிருட்சமான ஆத்தி மற்றும் காட்டாத்தி மரங்கள் காணப்படுகின்றன. வன்னியும் இத்தலத்தின் இன்னொரு விருட்சமாகும்.

அதன்கீழ் சிவலிங்கமும், அம்பாள் சிலையும் காணப்படுகின்றன.

ss

நந்தியெம்பெருமான் தனி மண்டபத்தில் காணப்பெறுகிறார். வலப்புறம் குண்டையூர்க் கிழாரின் திருமேனி காணப்படுகிறது. உள்ளே செல்ல கிழக்குமுகமாக ஒரு வாயிலும், தென்முகமாக ஒரு வாயிலும் உள்ளன. உள்சுற்று, வெளிச்சுற்று என இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மகாமண்டபம் வவ்வால் நெத்தி மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபத்தில் நின்றவாறு கிழக்குமுகம் கொண்ட ஈசனையும், தென்முகம் கொண்ட அம்பிகையையும் ஒருசேர தரிசனம் செய்துவிடலாம். சுவாமி சந்நிதிக்கு வெளியே வலம்புரி விநாயகர் அருள்புரிகின்றார். சுவாமி சந்நிதி படிகளுடன் சற்று உயரத்தில் அமைந்துள்ளது. கருவறையில் கருணைக்கடலாக திருவருள் பொழிகிறார் சுந்தரேஸ்வரர். ரிஷபபுரீஸ்வரர் என்றும் அழைக்கப் படுகிறார்.

ஈசனை வணங்கி, உட் பிரகார வலம் வருகையில் நிருதி மூலையில் தல கணபதியான மகாகணபதியும், மேற்கில் வள்ளி- தெய்வானையுடனான முருகப்பெருமானும், வாயு மூலையில் கஜலட்சுமியும் சந்நிதி கொண்டருள்கின்ற னர். கோஷ்ட மாடங்களில் முறைப்படி தெய்வங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

மகா மண்டபத்தின் வலப்புறம் தனிச் சந்நிதியில் மீனாட்சியன்னை. சாந்தரூபியாக, கரத்தில் ஜெபமாலையுடன் அருள்மழை பொழிகிறாள். மங்களாம்பிகை என்கிற நாமமும் இவ்வன்னைக்கு உண்டு.

ஆரவாரமில்லாத அமைதியான ஆலயம். தினமும் இரண்டுகால பூஜைகள் நடக்கின்றன. தினமும் காலை 8.00 மணிமுதல் 10.00 மணிவரையும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும். இதர நேரங்களில் ஆலய அர்ச்சகரை அனுகி சுவாமி தரிசனம் செய்யலாம்.

சோழர்காலக் கோவில் சிதிலுமடைந்த பின்னர், நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கருங்கல்லால் கட்டமைக்கப்பட்டுள்ளது இவ்வாலயம். இவர்களே ஆலய நிர்வாகத்தையும் செய்துவருகின்றனர்.

இவ்வாலய முக்கிய விசேடமாக, சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா மாசி மாதத்தில் நெல் மகோற்வமாக ஐந்து நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மாசிமக நாளில் திருக்குவளையிலிருந்து குண்டையூருக்கு கோளி-நாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் புறப்பாடு நடைபெறும். அப்போது பூதகணங்கள் போல வேடமணிந்து பக்தர்கள் உடன் சென்று, குண்டை யூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சி யும், அங்கிருந்து திருவாரூருக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இந்த மாசிமகம் நெல் அட்டித் திருவிழா இத்தலத்தின் தனிச்சிறப்பா கும். நெல்லை கோட்டைபோல் கொட்டி வைத்திட நெல்மேடை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய சிவாலய விசேடங்கள் இங்கு சிறப்புற அனுசரிக்கப் படுகின்றன.

திருமணம் மற்றும் குழந்தைப்பேறு கிடைத்திட ஏழு பிரதோஷங்கள் இங்கு வந்து தீபமேற்றி சுவாமி மற்றும் அம்பாளை வழிபட, வேண்டிய வரம் கிட்டும்.

திருவாரூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், உள்ளது இத்தலம். திருவாரூர்- எட்டுக்குடி பேருந்து சாலையில் உள்ளது திருக்குவளை. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குண்டையூர்.

ஆலயத் தொடர்புக்கு: 9789 156179.

சங்கர் குருக்கள்: 8110 091116.

om011224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe