ஒரு காலத்தில் திருமணமென்றால் அந்த வீட்டில் உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். சுமார் ஒருமாத காலத்திற்கு அந்த வீட்டில் குதூகலமும் கொண்டாட்டமுமாக இருக்கும். ஊரிலுள்ள பணக்காரரின் வீடு பெரியதாக இருக்கும். அந்த வீட்டில் ஒரு பெரிய கூடமும், பரந்த இடமும் இருக்கும். அந்த கூடத்தில் திருமணத்தை நடத்திவிட்டு, பரந்த இடத்தில் பந்தல் போட்டு விருந்து வைத்து திருமணத்தை இனிதே முடிப்பார்கள்.
பிறகு கோவி-ல் திருமணத்தை நடத்தும் பழக்கம் வந்தது. அதன்பிறகு கோவில்களிலுள்ள சத்திரங்களில் திருமணத்தை நடத்தினார்கள். பிறகு சிறு சிறு கல்யாண மண்டபங்கள் தோன்றின. இப்போது திருமண மண்டபம் இல்லாமல் திருமணமே நடைபெறுவதில்லை. மண்டபத்திற்கே லட்ச ரூபாய் கணக்கில் வாடகை கொடுக்கிறார்கள். போதாக் குறைக்கு சாப்பாடு, இதர வைதீக சடங்குகள் செய்ய தனியாக ஒப்பந்தம் போட்டு, அதற்கொரு பெருந்தொகையை செலவழித்து திருமணத்தை நடத்துகின்றனர்.
ஆலயங்களில் நடத்தும் திருமணங்களில் அக்னி பகவானே முன்னின்று ஹோமங்களை நடத்துகிறார். இந்திரன் தலைமையில் வேதங்கள் முழங்க, அந்தந்த கோவில்களிலுள்ள தேவர்களும், தேவதைகளும், சித்தர்களும், மகான்களும் மணமக்களுக்கு பரிபூரண அருளாசியை அள்ளி வழங்குகின்றனர். இந்த அருளாசியால் மணமக்களின் எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாகப் பிரகாசிக்கும்.
ஆனால் இன்றைய திருமண மண்டபங்களில் நடத்தும் திருமணத்தில் இறைவனின் ஆசி அறவே கிடைப்பதில்லை. திருமண மண்டபத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் "காலி' செய்து கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில், அவசர கோலத்தில் திருமணம் நடந்து முடிந்துவிடுகிறது. அடுத்தவருக்கு மண்டபத்தைக் கொடுக்கவேண்டுமென்று அறைகுறையாக சுத்தம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். அதனால் முந்தைய திருமணத்தின்போது ஏற்பட்ட தோஷங்கள் போவதில்லை.
நாம் நடத்தும் திருமணங்களில் சில தோஷங்கள் நிறைந்திருக்கும் நிலையில், அடுத்தவர்களுடைய தோஷமும் கலந்து விடுகிறது. நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து திருமண நாளைக் குறிக்கும் காலம் இப்போது போய்விட்டது. எந்தத் தேதியில் திருமண மண்டபம் கிடைக்கிறதோ அந்தத் தேதியில் திருமணநாள் வைக்கப்படுகிறது. ஆல், அரசு போன்ற சமித்துகள் (குச்சிகள்) மற்றும் பசு நெய் போன்றவற்றை உபயோகப்படுத்தி, பிழையில்லாமல் சரியான மந்திரத்தைச் சொல்லி ஹோம ஆஹுதி செய்வதைவிட்டு புளியன், வேம்பு, சவுக்குக் குச்சிகள் என்று எது கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தி ஹோமம் செய்கிறார்கள். கலப்பட நெய்யை ஊற்றுகிறார்கள். பணத்தை மட்டுமே குறிவைத்து நடத்தும் இந்த ஹோமங்கள், தோஷங்களால் பயனற் றுப் போய்விடுகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thousand.jpg)
மங்கள இசை என்பது நாதஸ்வரத் துடன்கூடிய மேளம் வாசிப்பதுதான். ஆனால் இப்போது மேளக்காரர்கள் ஒரே முகூர்த்தத்தில் பல திருமணங்களை ஒப்புக்கொண்டு இங்கும் அங்கும் மாறிமாறி ஓடிஓடி, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று வாசிக்கின்றனர்.
இதில் அறைகுறை மங்கள வாத்தியமே மங்களமில்லாமல் அபசுரமாகி விடுகிறது.
"கான்ட்ராக்ட்' எடுப்பவர்கள் ஒரே மாதிரியான உணவுகளையே பரிமாறுகின்றனர். இந்த உணவை சிலர் சாப்பிட முடியாமல் இலையில் பாதியை விட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் அன்னதோஷம் ஏற்படுகிறது.
திருமணப் பத்திரிகைகள் தெய்வீகத் தன்மையையே இழந்துவிட்டன. இளஞ்சிவப்புடன்கூடிய மஞ்சள் நிறத் திலுள்ள காகிதத்தில் அச்சடிக்கவேண்டும். உள்ளே திருமணச் செய்திகளுடன், மேலே இருமுனைகளிலும் இரண்டு தேவதைகள் மாலையைக் கையில் ஏந்தி மாலையிட வருவதுபோல இருக்கும். இவை "மங்கள பஷிணி' என்ற திருநாமத்தைப் பூண்ட திருமண தேவதைகளாகும். இவை திருமணம் நல்லமுறையில் நடபெற ஆசிர்வதிப்பாக அர்த்தம். இதுதவிர பத்திரிகையின் தலைப்பில் நல்ல தெய்வீக சுலோகங்கள், குலதெய்வத்தின் படம் ஆகியவற்றை அச்சிடவேண்டும். இவையெல்லாம் ஆரம்ப ஆசிர்வாதம். இப்போதைய திருமணப் பத்திரிகைகளில் பெரும்பாலும் இவை இருப்பதில்லை.
"மெல்லிசை' என்ற பெயரில் திருமண மண்டபங்களில் 2அபசகுன திரை இசைப்பாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
பரமேஸ்வரனையும், பார்வதி தேவியையும் அழைத்து ஆசிபெறுவதை விட்டுவிட்டு அசுரனையும், ராட்சசியையும் பாடல்கள் மூலம் அழைக்கின்றனர்.
அர்த்தமுள்ள சடங்குகளையெல்லாம் தூர எறிந்துவிட்டு "ரிசப்ஷன்' என்ற கூத்தடிக்கும் கூட்டமாகத்தான் இருக்கின்றன. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்ற நிகழ்ச்சியே இப்போது காணோம். கல்யாண ஊர்வலம் என்பதே காணாமல் போய்விட்டது.
போதாக்குறைக்கு திருமண மண்டபத்தில் மது அருந்துவது, சீட்டாட்டம் ஆடுவது, மயக்கம் தரும் பாக்கைப் போட்டு குதப்பித் துப்புவது என்று எத்தனையோ தோஷங்களை ஏற்படுத்துகின்றனர்.
தோஷ தேவதை என்பவள் எங்கே தப்பு நடக்கும்- எப்போது தொற்றிக்கொள்ளலாம் என்று காத்துக்கொண்டே இருப்பாள். தோஷம் ஏற்பட்ட அடுத்தநொடி பற்றிக்கொள்வாள். அப்படிப் பற்றிக்கொண்டால் நமது வாழ்க்கை நிலை தடுமாறிப் போகும்.
திருமணத்தை நடத்துபவர்களும் சரி; திருமணத்திற்கு வருபவர்களும் சரி- புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் தம்பதிகளுக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவர்களை மனதார வாழ்த்திச் செல்லவேண்டும். இதை விடுத்துப் பாவம் செய்யக்கூடாது.
இறையருளுடன் நடக்கும் திருமணங்கள் ஆயிரங்காலத்துப் பயிராய் செழிக்கும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/thousand-t.jpg)