Advertisment

மெட்டி சாஸ்திரம்! - கவிதா பாலாஜிகணேஷ்

/idhalgal/om/metti-shastra-kavita-balajiganesh

திருமணத்திற்கு சாட்சியாக திருமாங்கல்யம் மட்டுமின்றி, ஒரு பெண்ணுடைய காலில் மெட்டி அணிவதும் சிறப்பம்சமாக இருக்கிறது. பெண்கள் அணிந்துகொள்ளும் மெட்டியில் விதவிதமான வடிவங்கள் இருந்தாலும், வட்டவடிவிலான எளிய வளையங்களை அணிந்துகொள்வதே விசேஷமானது. மெட்டியை விதவிதமான வடிவங்களில் அணிந்துகொண்டால் ஆபத்து வருமா? சாஸ்திரங்கள் இதைப்பற்றி என்ன கூறுகின்றன?

Advertisment

திருமணமான பெண்களுக்குத் திருமாங்கல்யத்தில் எப்பொழுதும் மஞ்சள் கயிறு சேர்ந்திருக்கவேண்டும். சிலருடைய சம்பிரதாயப்படி சரடாக திருமணத் தின்பொழுதே அணிவது வழக்கம். சரடு அணிந்தாலு

திருமணத்திற்கு சாட்சியாக திருமாங்கல்யம் மட்டுமின்றி, ஒரு பெண்ணுடைய காலில் மெட்டி அணிவதும் சிறப்பம்சமாக இருக்கிறது. பெண்கள் அணிந்துகொள்ளும் மெட்டியில் விதவிதமான வடிவங்கள் இருந்தாலும், வட்டவடிவிலான எளிய வளையங்களை அணிந்துகொள்வதே விசேஷமானது. மெட்டியை விதவிதமான வடிவங்களில் அணிந்துகொண்டால் ஆபத்து வருமா? சாஸ்திரங்கள் இதைப்பற்றி என்ன கூறுகின்றன?

Advertisment

திருமணமான பெண்களுக்குத் திருமாங்கல்யத்தில் எப்பொழுதும் மஞ்சள் கயிறு சேர்ந்திருக்கவேண்டும். சிலருடைய சம்பிரதாயப்படி சரடாக திருமணத் தின்பொழுதே அணிவது வழக்கம். சரடு அணிந்தாலும் அதனை மாங்கல்யத்துடன் சேர்க்கும் இடங்களில் மஞ்சள் நூல்கொண்டு கட்டிச் சேர்ப்பது முறையானது!

Advertisment

மஞ்சள் நூல் மங்களத்தின் அடையாளமாக விளங்குகிறது. இதை அணிந்துகொள்ளும் பெண்களின் கணவன் தீர்க்காயுளுடன் இருப்பார் என்பது நியதி.

dd

அதுபோல அருந்ததி என்னும் நட்சத்திரத்தைப் பார்த்து கணவன் தன் மனைவியின் கால் விரல்களில் வெள்ளியிலான மெட்டியைப் போட்டுவிடுவது ஒரு சம்பிரதாயமாகும். இதனால் ஒருமித்த தம்பதியினராக வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது. மெட்டியை தங்கத்தில் அணியக்கூடாது. இப்படி அணியப்படும் மெட்டி விதவிதமான வடிவங்களில் இப்போது விற்பனைக்கு உள்ளன. பெண்கள் எல்லாவற்றையும் வாங்கி விதவிதமாக விரல்களில் அணிந்துகொள்கின்றனர்.

விருப்பம்போல மெட்டியை பெண்கள் கண்டிப்பாக அணியக்கூடாது. அவரவரின் குலவழக்கப்படி எப்படியான மெட்டியை அணிந்து கொள்ள வேண்டுமோ அப்படியான மெட்டியை, கால் கட்டை விரலின் பக்கத்திலிருக்கும் இரண்டாவது விரலில் அணியவேண்டும்.

மெட்டி தேய்ந்துவிட்டால் அதனை உடனே மாற்றிவிடவேண்டும். மெட்டி தேயத்தேய தம்பதிகளுக்கிடையே பரஸ்பர ஒற்றுமையும் தேய்ந்துகொண்டே வருமென்னும் ஐதீகமுண்டு. எனவே மெட்டி அணிபவர்கள் அதனை அதிகம் தேய்ந்துவிடாமல் பாதுகாப்பது அவசிய மாகும்.

பெண்ணின் காலில் அணியும் மெட்டி, நரம்புகளைத் தூண்டச்செய்து கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் என்பதுதான் இதனுடைய தார்மீகக் கருத்தாக இருக்கிறது. எனவே நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத் திற்குப் பின்னாலும், ஒவ்வொரு காரணங்கள் நிச்சயம் மறைந்திருக்கும்.

dd

அந்தவகையில் பெண்கள் மூன்று விரல்களில் மெட்டி அணிவதென்பது கணவனுக்கு ஆபத்தைத் தேடித்தரும் அபசகுனமான செயலாகும். ஒன்று அல்லது இரண்டு விரல்களில் மட்டுமே பெண்கள் மெட்டி அணியவேண்டும். மூன்றாவது விரலில் அணிந்தால் அது கணவனுடைய ஆயுளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறது சாஸ்திரங்கள். மெட்டி அணியும்பொழுது விரலுக்கு நடுவே மெட்டி நிற்கவேண்டும். விரல் முழுவதும் உள்ளே சென்றுவிடக் கூடாது. எனவே உங்களுடைய கால் விரலுக்கு ஏற்ப சரியான அளவுகளில் மெட்டியை வாங்கி அணியவும்.

தேவையில்லாமல் மெட்டியைக் கழற்றி வைப்பதும் கூடாது. பெண்ணின் காலில் அணிந்திருக்கும் மெட்டியானது எப்பொழு தும் அணிந்தபடியே இருக்க வேண்டும். அவர் கள் நடக்கும்பொழுது தரையில்பட்டு எழும் மெட்டியின் ஓசையானது, குடும்பத்தில் சுபிட்சத்தை நல்கும் இனிய மங்கல ஒலியாகும். எனவே மெட்டி அணியும்பொழுது இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசிய மாகும்.

om011222
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe