மறத்தொழிலை முடிக்கும்போது- அதாவது போர்த்தொழிலை முடிக்கும் போது துடிகொட்டும் நிலையும், கொற்றவைக்கு பரவுகடன் கொடுக்கும் நிகழ்வு முடிந்ததும், வென்றோர் சிறப்பையும் தோற்றோர் தேய்வையும் குறித்துப்பாடும் பாடல்களை பாணர்கள் முழங்குவார்கள். இதற்கு "கொற்றவள்ளை' பாடல்கள் என்று பெயர்.
இதுவே, முருகு அயர்தலின் கடைசி நிலை. இதில், மன்னவனின் ஓங்கிய புகழ் விளக்கியும், எதிர்த்துப் போரிட்டு மாண்ட பகைவர்களின் அழிவிற்கு இரங்கல் தெரிவிப்பதும்போல் பாடப்படும்.
மாறவேண்டும் மன்னன்!
இந்தத் தருணத்தில் மன்னவன் தன் சினத் தையெல்லாம் நீக்கி, தன் பிறந்தநாளின் பொழுது எவ்வளவு ஆனந்தத்தோடும், அருள்மனத்தோடும் இருப்பானோ, அந்த அளவிற்கு பொதுமனமுடைய புதுப்பொலிவுடன் மாறவேண்டும் என்பதுவே இதன் நோக்கமாகும்.
இதையே தொல்காப்பியர்-
"சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்,
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்'
ஆக மாற வேண்டுமெனக் குறிப்பிடுகிறார்.
இதன் பொருட்டு இளவலுக்கு சண்டிகை, சரப்பளி, வாகுமாலை, தோள்மாலை போன்றவற்றை, அரச விருந்தினர்களாக வந்த சிற்றரசர் கள் வெற்றிக் காணிக்கைகளாக அணிவித்து மகிழ்வார்கள்.
அதனைத் தொடர்ந்து, இளவலுக்கு அத்தை, மாமன் முறைப்பட்டவர்கள், நாபிக்குமேல் அணியும் உதரபந்தம், அதன்கீழ் இடையில் அணியும் அரைப் பட்டிகை, தாரகைச்சும்மை, மரவுரி போன்றவற்றை அணிவித்து சீர்செய்வார்கள்.
இதனைத்தொடர்ந்து, 600 வருடங்களுக்கு ஒருமுறை மடல் விரித்துப் பூக்கக்கூடிய பனைமரப் பூவினால் அலங்கரிக
மறத்தொழிலை முடிக்கும்போது- அதாவது போர்த்தொழிலை முடிக்கும் போது துடிகொட்டும் நிலையும், கொற்றவைக்கு பரவுகடன் கொடுக்கும் நிகழ்வு முடிந்ததும், வென்றோர் சிறப்பையும் தோற்றோர் தேய்வையும் குறித்துப்பாடும் பாடல்களை பாணர்கள் முழங்குவார்கள். இதற்கு "கொற்றவள்ளை' பாடல்கள் என்று பெயர்.
இதுவே, முருகு அயர்தலின் கடைசி நிலை. இதில், மன்னவனின் ஓங்கிய புகழ் விளக்கியும், எதிர்த்துப் போரிட்டு மாண்ட பகைவர்களின் அழிவிற்கு இரங்கல் தெரிவிப்பதும்போல் பாடப்படும்.
மாறவேண்டும் மன்னன்!
இந்தத் தருணத்தில் மன்னவன் தன் சினத் தையெல்லாம் நீக்கி, தன் பிறந்தநாளின் பொழுது எவ்வளவு ஆனந்தத்தோடும், அருள்மனத்தோடும் இருப்பானோ, அந்த அளவிற்கு பொதுமனமுடைய புதுப்பொலிவுடன் மாறவேண்டும் என்பதுவே இதன் நோக்கமாகும்.
இதையே தொல்காப்பியர்-
"சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்,
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்'
ஆக மாற வேண்டுமெனக் குறிப்பிடுகிறார்.
இதன் பொருட்டு இளவலுக்கு சண்டிகை, சரப்பளி, வாகுமாலை, தோள்மாலை போன்றவற்றை, அரச விருந்தினர்களாக வந்த சிற்றரசர் கள் வெற்றிக் காணிக்கைகளாக அணிவித்து மகிழ்வார்கள்.
அதனைத் தொடர்ந்து, இளவலுக்கு அத்தை, மாமன் முறைப்பட்டவர்கள், நாபிக்குமேல் அணியும் உதரபந்தம், அதன்கீழ் இடையில் அணியும் அரைப் பட்டிகை, தாரகைச்சும்மை, மரவுரி போன்றவற்றை அணிவித்து சீர்செய்வார்கள்.
இதனைத்தொடர்ந்து, 600 வருடங்களுக்கு ஒருமுறை மடல் விரித்துப் பூக்கக்கூடிய பனைமரப் பூவினால் அலங்கரிக்கப்பட்டுள்ள வேல் கோட்டத்திற்குமுன் வேயப்பட்டிருக்கும் சிங்காரப் பந்தலுக்கு, இளவரசனை முதன்மந்திரியாகச் செயல்படும் அவனது நெருங்கிய உறவினர் அழைத்து வந்து அங்கிருக் கும் பொன்னாசனத்தில் அமரவைப்பார்.
பட்டயங்களாக அளிக்கப்படும் பகைவர் நாட்டு நிலங்கள்!
கணக்காயர்கள், பகைவர் நாட்டில் கைப்பற்றப்பட்ட நிலத்திலிருந்து கீழ்க்கண்ட நிலவுரிமைப் பட்டயங்களை வரிசையாக வந்து கொடுப்பார்கள்.
அவற்றில் முதன்மையானது, அரசிற்கே உரிமை உடைய
= அரசுடைமைப் பட்டயம்.
= பகை நாட்டில் குடியிருக்கும் குடி மக்களுக்கும், பொதுவான உரிமையுடைய பொதுவுடைமை நத்தநிலப் பட்டயம். நத்தம் என்றால், வீடுகள் கட்டுவதற்குப் பயன்படும் நிலமாகும்.
=வெட்கோக் காணி- குலாலர்களுக்கு விடப்படும் நிலம்.
= மருத்துவக் காணி- விஷ விருத்தி வைத்தியர்களுக்கு விடப்படும் நிலம்.
= சேனாதிபதி காணி- சேனைத் தலைவருக்கு விடப்படும் நிலம்.
= சேர்வார் காணி- மன்னருக்குத் தேவைப் படும்போதெல்லாம் படைக்கு ஆள்திரட்டித் தருவோர்க்கு விடப்படும் நிலம்.
= ஊராண்மைக் காணி- ஊர் நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கு விடப்படும் நிலம்.
= பூலுவன் காத்தான் காணி- நீர்ப்பாசன பராமரிப்பாளனுக்கு விடப்படும் நிலம்.
= நிலவாரப் பட்டயம்- பகைவர் நிலங்களை விவசாய சாகு படி செய்து அரசுக்கு வரி செலுத்துவோர்க்கு கொடுக்கப்படும் பட்டயம்.
= காராண் கிழமை- மன்னரிடம் பரிவட்டனை தானமாகப் பெறப்பட்ட நிலங்களுக்கான நேரடி உரிமைப் பட்டயம்.
= இறையிலிப் பட்டயம்- அரசு வரி, விதிப்பற்றதான நிலங்களுக்கான பட்டயம்.
= பூசைக்காணி- பூசை செய்வோருக்குச் செய்யும் தான நிலத்திற்கான உரிமைப் பட்டயம்.
= உவச்சக்காணி- கோவில் சடங்கில் தோல்கருவி இசைப்போர்க்கு வழங்கப்படும் நிலம்.
= மன்றாட்டுக் காணி- கோவில் நிர்வாகக் குழுவினருக்கு விடப்படும் நிலம்.
= குடிப்பற்று- நிலமற்ற குடிமக்களுக்கு தானமாக விடப்படும் நிலம்.
இவற்றோடு சமயச் சடங்குகளுக்காக கொடையளித்த நிலங்களான- நிமந்தபுரம், செங்கழுநீர்புரம், அமுது படிபுரம், மந்திரபோனகம், திருச்செந்நெல்புரம், உண்ணாழி புரம், திருமெழுக்குபுரம், புதுக்குபுரம், விளக்குப்புரம், திருவொத்தசாமபுரம், நந்தவன புரம் ஆகியவற்றுக்கான பட்ட யங்களையும், இவற்றுக்கெல் லாம் நில எல்லை காட்டும் திருக் கட்டுவக்கல்.
இவற்றை யாராருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டுமோ, அவர் களுக்கெல்லாம் இளவல் அன்போடு வழங்கியவுடன், பட்டத்துயானை இளவலை சுமக்கத் தயாராக இருக்கிறது என்பதை அறிவிக்கும் மங்கல இசை முழக்கம் வாசிக்கப்படும்.
அதற்குள், அங்கு வருகை தந்திருப்போர் அனைவருக்கும் திருவமுதும், அடைக்காவ முதும் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டி ருக்கும். அவற்றை உண்டு களிப்படைந்த மக்கள், இளவலை அரண்மனைக்கு வழியனுப்ப வரிசையாய் நின்று குலவை ஆரவாரமிடுவார்கள்.
திருவோலை நாயக்கர்கள், நடந்த நிகழ்வுகளைமெய்க்கீர்த்திகளாக எழுதி முடித்திருப்பர். அவற்றைப் பகைநாட்டில் கட்டயிருக்கும் கோவில் மடங்களில் செதுக்குவதற்கு, கல்தச்சர்களிடம் எழுதிய வற்றின் நகல் ஒன்றை ஒப்படைப்பர்.
படைப்பற்று ஊர்கள்!
தம் பேரரசோடு இணைக்கப்பட்ட பகை நாட்டில், நிலப்பரப்புகள், மலைத்தொடர்கள், ஆறுகள், ஆறுகள் பாய்ந்து பயன்பெறும் நிலப்பரப்பு, கடற்கரைப் பட்டினங்கள் ஆகியவற்றைச் சுற்றி, காவல் பெரும்படைப் பிரிவுகள் தங்கி, காவல் புரிவதற்கான வசதிகள் செய்துதரப்பட்ட ஊர்களுக்குத் திருப்படைப் பற்றூர்கள் என்று பெயர்.
இவ்வூர்களில் யானைக்கொட்டம், குதிரை லாடச்சாலைகள், படைக்கருவிப் பட்டறைகள், இவற்றிற்கெல்லாம் தேவைப்படும் மிருக வைத்தியர்கள், இரும்புக் கொல்லர்கள் ஆகிய அமைப்புகளோடு புதிதாக உருவாக்கப்படும். இந்த அமைப்புகள், எந்தெந்த எல்லைகளில் அமைக்கப்பட வேண்டும் என்பதை, போர் அனுபவமிக்க சேனாதிபதிகளே திட்டமிடுவர். இவற்றை செயல்முறைப்படுத்த சேர்வார்கள் துணை நிற்பர். எந்தெந்தப் பகுதிகளுக்கு, புதிதாக எவ்வளவு படைவீரர்கள் தேவை என்பதைக் கணக்கிட்டு சேனாதிபதிகள் சொன்னவுடன், அப்போர்த்திறன்களுக்குத் தகுதியுடையவர்களை சேர்வார்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
குதிரைகள் ஆய்வுக்கு துளைப்பொன் பரிசு!
இப்படைப்பற்றுகளுக்கான குதிரை களை நேர்த்தி செய்வதற்கும், புதிதாக வாங்கு வதற்குமான பணம், நிதி மந்திரியிடமிருந்து துளைப் பொற்காசுகளாகப் பெற்று கொள்வார்கள் வியாபாரிகள்.
துளைப்பொன் என்பது, அக்கசாலை எனப்படும். தங்க நாணயங்கள் அச்சடிக் கும் உலைக்கூடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, பண்டார நாயகரான, பொக்கிஷ அதிகாரிகளிடமிருந்து நிதிமந்திரியிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு கொடுக் கப்படும் காசுகளின் நடுவே துளையிடப் பட்டிருக்கும்.
இவ்வாண்டுக்குரிய துளைப்பொன்களைப் பெற்றுக்கொண்டு, குதிரை வியாபாரிகள் துறைமுகப்பட்டினங்களுக்குச் செல்வார் கள். அங்கு இறக்குமதியாகும் குதிரைகளை, தங்களோடு வந்திருக்கும் குதிரை மருத்துவ அறிஞர்களைக் கொண்டு சுழிபார்த்து விலை நிர்ணயம் செய்வார்கள். வாங்கிய குதிரைகளை, ஒரு வாரத்திற்கு அங்கேயே தங்கியிருந்து "குதிரை வாகடம்' அறிந்தவர் களைக் கொண்டு ஆய்வுசெய்வார்கள். குதிரை வாகடம் என்பது ஒரு குதிரையை ஆய்வுசெய்து, அதன் குணநலன்களையும், அதற்குண்டாகியிருக்கும் நோய்களையும், அவற்றுக்கான மருத்துவ முறைகளைப் பற்றியும் விரிவாகக் கூறும் நூலாகும்.
இதனில் கைதேர்ந்தவர்களுக்கு மிகுந்த மதிப்புண்டு. இவர்கள் எத்தனை குதிரைகளை ஆய்வுசெய்து விலை நிர்ணயம் செய்கிறார் களோ அத்தனை துளைப்பொன் பரிசு கிடைக்கும். இவர்கள் அந்தக் காலத்தில் ஒவ்வொரு துறைமுகப் பட்டினங்களிலும் தங்கியிருந்து செல்வாக்கு மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர். தங்களைத் தனித்து அடை யாளம் காட்டிக்கொள்வதற்காக, கால் வரை இவர்கள் கவச அங்கிகள் அணிந்திருப்பர்.
இவர்களால் நிர்ணயிக்கப்பட்ட விலை களை, குதிரை வியாபாரிகள் குதிரை வந்திறங் கிய அயல்நாட்டுப் மொழிகளில் விளக்கிச் சொல்லி, குதிரைக்காரர்களிட மிருந்து வாங்குவதில் திறமைவாய்ந்தவர்களாக இருப்பர். வாங்கிய குதிரைகளுக்குத் தகுந்து மன்னரிடம் சிறப்பான வெகுமதி களையும், பரிசுகளையும், புகழையும் அடைவார்கள்.
குதிரை வியாபாரத்திற்குள் தொடர்ந்து பயணிப்போம்...
தொடர்புக்கு:
அலைபேசி: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்