மீனம் என்பது காலபுருஷனின் 12-ஆவது ராசி. இதன் அதிபதி குரு ஆவார். இங்கு சுக்கிரன் உச்சமும், புதன் நீசமும் அடைவர்.

மீன ராசியினர் அமைதியான குணம் கொண்டவர்கள்தான். ஆயினும் சிற்சில சமயம் கொஞ்சம் நக்கல், கிண்டல், கே-, புத்திசா-த்தனம், அலைவதில் ஆர்வம் என இருப்பர். இவர்களது குடும்பம் சற்று கோப குணம் கொண்டது. இளைய சகோதரி லட்சணமாக இருப்பார். தாய் அதி புத்திசா-யாகவும், அதிகம் வம்பு பேசுபவராகவும் இருப்பார். பூர்வீகமும், குலதெய்வமும் நீர் சார்ந்த இடங்களில் இருக்கும். இவர்களுடைய வேலையில் அரசு சார்பு இருக்கும். தாய்மாமன் மிக கம்பீரமாக- யாரையும் மிரளச் செய்பவராக இருப்பார். வாழ்க்கைத் துணை அதிகம் படித்த புத்திசா-யாக அமைவார்.

இளம் பெண்கள், கலை சம்பந்தமான அவமானங்கள் ஏற்படும். தந்தை சற்று ஆர்ப்பாட்டமான நபராக, உள்ளே தைரியம் இல்லாதவராக இருப்பார். இவர்களுடைய தொழில் ஆன்மிகம், சட்டம், நிதித்துறை சார்ந்திருக்கும். மூத்த சகோதரர் சற்று சோம்பலுடன் இருப்பார். தூங்குவதில் ஆசையும், அலைவதில் எரிச்சலும் இருக்கும். இவை பொதுவானவை. அவரவர் பிறப்பு ஜாதகத்தைப் பொருத்து சற்று முன்பின்னாக இருக்கும்.

குரு இருக்குமிடப் பலன்

Advertisment

மீன ராசிக்கு இதுவரையில் 11-ஆமிடத்தில் அமர்ந்திருந்த குருபகவான் தற்போது 12-ஆமிடமான கும்பத்தில் குதித்துள்ளார். குரு, மீன ராசிக்கு 10 மற்றும் ராசி அதிபதியாவார்.

உங்களின் ராசி மற்றும் 10-ஆம் அதிபதியாகிய குரு தற்போதைய கோட்சார மாற்றத்தில் விரய ஸ்தானத்தில் வீறுகொண்டெழுந்துள்ளார். விரய ஸ்தானமென்பது செலவு, அலைச்சல், அயன சயனம், துறவு என இவ்விதப் பலன்களைக் கூறுமிடம். இதில் உங்கள் ராசியாதிபதி குரு அமர்வு.

முத-ல் உங்கள் தொழி-ல் அலைச்சல் வரும். அல்லது தொழில் செய்யுமிடத்தை மாற்றுவீர்கள்.

Advertisment

செலவு அதிகரிக்கும். அது சுபச்செலவாக இருக்குமென்பது பெரும் ஆறுதல். கூடவே சிலபல முதலீடுகளும் இருக்கும். அசையும் சொத்துகள் வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விசேஷம் சம்பந்த செலவுகள் உண்டு.

பேரன்- பேத்திகள் முடி காணிக்கை விஷயமாக அலைச்சலும் செலவும் வரும். சிலர் வீட்டில் ஹோமம் செய்வீர்கள். வெளிநாட்டுக் கல்வி பயணச் செலவு செய்யவேண்டி வரும். தந்தையின் கண் விஷயமாக அலைய வேண்டியிருக்கும். தெய்வவழிபாடு பயணம் தரும்.

சிலர் ஆராய்ச்சி விஷயமாக நிறைய அலைய வேண்டியிருக்கும். குழந்தைகள் சம்பந்தமான புத்தகம், வீட்டுக் குறிப்புகள் பற்றிய புத்தகம் வெளியிடுவீர்கள். வழக்கறிஞர்கள் சிலசமயம், வேறிடம் சென்று வாதாடவேண்டி இருக்கும்.

சிலர் மழை பெய்தாலும் குடைபிடித்துக்கொண்டு போய், வதந்தியைப் பரப்பிவிட்டு வருவார்கள். பேச்சை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர்கள், ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள் போன்றவர்கள் இடம்விட்டு வேறிடம் மாறி தொழில் செய்வர். கௌரவம் கிடைக்கும் என்பதற்காக இடம்விட்டுச் சென்று அலைவார்கள்.

ஆன்மிகவாதிகள், கோவி-ல் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், ஓதுவார்களும் கோவில் விட்டு வேறு கோவில் அலையக்கூடும்.

அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், பயணம் செய்துகொண்டே இருப்பர். கோவில் யானைகளின் நலன் பொருட்டு அலையவேண்டி வரும். சிலர் தர்ம, புண்ணிய விஷயங்களுக்காக அலைவர்.

5-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 5-ஆம் பார்வையால் மீன ராசியின் 4-ஆமிடத்தைப் பார்க்கிறார்.

4-ஆமிடத்தைப் பார்வையிடும் குரு அதனை செழிக்கச் செய்கிறார். முத-ல் எப்பாடுபட்டாவது ஒரு வீட்டை வாங்கிக் கொடுப்பார். அந்த வீடு குடும்பத்தினர் தாராளமாகப் புழங்கும் அளவுக்கு பெரிய வீடாக இருக்கும். சில வாரிசுகள் தந்தையின் பெயரில் வீடு வாங்கிக் கொடுப்பர். உழவு சார்ந்த வாகனம், இயந்திரம் வாங்குவீர்கள்.

மீன ராசி குழந்தைகளின் கல்வித் தகுதி மேம்படும். கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தொழில் செய்யுமிடத்தை வாங்கக்கூடும். அல்லது தொழில் செய்ய புதிதாக வேறிடத்தில் சொந்த கட்டடம் வாங்குவீர்கள்.

ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள் ஒரு அறையை சொந்தமாக்கிக்கொள்வர். சிலர் வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை அல்லது தொலைதொடர்பு சேவை, ஆன்மிகப் பயணச்சேவை, வாகன சம்பந்தம், விவசாய ஆர்க்கானிக் பொருள் விற்பனை போன்ற சிறுசிறு தொழில் சேவைக்கடைகளை ஆரம்பித்துவிடுவீர்கள். இவ்வளவு நாளும் யோசனை, ஆசையாக இருந்ததை குரு பார்வை நடைமுறைப்படுத்தும்.

சிலர் ட்யூஷன் சென்டர் ஆரம்பித்து சிறப்படைவீர்கள். பள்ளி, கல்லூரி தாளாளர்கள் மேன்மையடைவர். வாகன விற்பனை ஏஜென்சிக்கு இடம்பிடித்து விடுவீர்கள். சொந்த தோட்டம், பண்ணை வாங்க இயலும். சிலர் கோவில் சார்ந்த வயல்களின் வேளாண்மை ஒப்பந்தம் பெறுவீர்கள். மீன ராசிக்கு இந்த குருவின் பார்வை, தொழில் செய்வோருக்கு இடம் வாங்கித் தருவதில் முனைப்பாக இருக்கும்.

7-ஆம் பார்வைப் பலன்

மீன ராசியின் 6-ஆம் வீட்டைத் தனது 7-ஆம் பார்வையால் குரு ஆற்றுப்படுத்துகிறார். 6-ஆம் வீடு என்பது கடன், எதிரி, நோய் ஸ்தானம்.

இதுபோன்ற இடத்தை குரு பார்க்கும்போது அதிகப்படுத்துவாரா? அமைதிப் படுத்துவாரா? இரண்டும் நடக்கும். குருவின் பார்வை பெருக்கவும் செய்யும்; பாதுகாக்கவும் செய்யும்.

இந்தக் காலகட்டத்தில் மீன ராசியினருக்கு சற்று இதய படபடப்பு, கெட்ட கனவு காணுதல், நரம்புகளில் பிடிப்பு, சற்று மயக்கம் வருவதுபோல் இருத்தல் போன்ற உணர்வுகள் ஏற்படுவதால் பயம் ஏற்படும். எனினும் குரு பார்வை இந்த நோய்கள் முன்பே இருந்தாலும்கூட, இப்போதைய காலகட்டத்தில், அதனை குறைந்தபட்ச மருந்துகள்மூலம் சரிப்படுத்திவிடும். சித்த, ஆயுர்வேத மருந்துகள் சரியாக இருக்கும். சில இல்லத்தரசிகளும், வேலைக்குப் போகும் பெண்களும் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். இதனை காரணமாகக் கொண்டாவது அவர்கள் சற்று வேலையைக் குறைத்து ஓய்வெடுக்கலாம். இது குரு பார்ப்பதால் ஏற்படும் சிறப்பம்சமாகும்.

அரசு சார்ந்த வம்பு, வழக்குகள் இருந்து அவை வளர்ந்துகொண்டே இருப்பின், குருபகவான் அதனை நிவர்த்தி செய்வார். மேலும் அரசு ஆணை மூலம் வரவேண்டிய தொகை அல்லது மனை என கிடைக்கவேண்டியதைக் கிடைக்கச் செய்வார்.

இதுவரை உங்கள்மீது இருந்த களங்கம், அவமானம், அவச் சொல், பழி பாவம் நீங்கும். உங்களைப் பற்றிய ஒரு வதந்தியை மறைக்க, மறக்கச் செய்வார். குறிப்பாக ஒரு பெண்மூலம் ஏற்பட்ட பழிச்சொல் அகன்றுவிடும்.

குரு பார்வை எதிரிகளின் பெருக்கத்தை ஏற்படுத்தினாலும், குரு அவர்களை ஒரு கட்டுக்குள் அடக்கிவிடுவார். உங்களைப் பற்றிய நல்ல உண்மையான செய்திகள் அலையடிக்கும்போது, எதிரிகள் பொறாமையில் பூத்துக் கருகுவர். குரு 6-ஆமிடத்தைப் பார்த்துப் பெருக்கினாலும், அதனைக் கட்டுப்படுத்தி விடுவார்.

9-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 9-ஆம் பார்வையால், மீன ராசியின் 8-ஆமிடத்தை ஏறிட்டுப் பார்க்கிறார். 8-ஆமிடம் என்பது நஷ்டம், விபத்து, அவமானம், கவலை போன்ற மனிதர்கள் வெறுக்கும் தகைமைகள் உடைய இடம். குரு பார்த்த இடம் செழிக்கும். இந்த 8-ஆமிடத்தைப் பார்த்து எவற்றை செழிக்க வைப்பது?

உங்களுக்கு பணக்கஷ்டம் இருப்பின், குரு தனது பார்வையால் எதிர்பாராத பணவரவைக் கொடுத்து, அந்தக் கஷ்டத்தை நீக்கிவிடுவார். இந்த காலகட்டத்தில் அடிவயிறு அருகில் ஏதோவொரு கட்டி தென்பட்டு, அது அறுவை சிகிச்சையால்தான் நீக்கவேண்டுமெனும் நிலை ஏற்படும்போது, குரு தனது பார்வையால் வருடி அதனை மாத்திரை, மருந்தால் சரிப்படுத்திவிடுவார். அறுவை சிகிச்சை தவிர்க்கப்படும். சிலருக்கு திருமாங்கல்யம் திருட்டுப்போகவிருந்து, பின் காப்பாற்றப்படும். மீன ராசிப் பெண்கள் கழுத்தை மூடிக்கொண்டு வெளியில் செல்லவும்.

மீன ராசிப் பெண்களின் கணவருக்கு உடல்நலம் சீர்கெட்டால், குரு பகவான் நல்ல மாத்திரை, மருந்துகளால் அவரை சீர்செய்து சரியாக்கி மாங்கல்ய பலத்தைக் காப்பாற்றித் தருவார். மீன ராசிப் பெண்கள் அருகிலுள்ள சிவன் கோவில் அம்பாளுக்கு தா-தானம் (அம்பாள் தா- என்றே கிடைக்கும்) செய்யவும். உங்கள் தொழி-ல் நஷ்டம், சரிவு, பின்னடைவு ஏற்படுவதுபோல் தோன்றினாலும், குரு தனது பார்வையால் அதனை சரி செய்துவிடுவார்.

விபத்து ஏற்படும் காலங்களில், சிறு சிராய்ப்போடு காப்பாற்றுவார். தனது பார்வையால் எட்டாமிடப் பலன்களைத் தரும் குரு, அதி-ருந்து ஜாதகரை மீட்டுக் காப்பாற்றியும் விடுவார் என்பது திண்ணம்.

பொதுப் பலன்கள்

மீன ராசிக்கு குரு விரயத்தில் அமர்ந்திருப்பதும், துர் ஸ்தானங்களான 6, 8-ஆமிடங்களைப் பார்ப்பதும் சற்று மைனஸ் பாயின்ட்தான். அவரின் 4-ஆமிடப் பார்வை மட்டுமே பயன்தரும் விதத்தில் உள்ளது. குருவின் தன்மை ஜாதகரை ரட்சித்துக் காப்பதாகும். இந்த ஒரு ஜோதிட விதியினால் மீன ராசிக்கு கெடுபலன்கள் குறையுமென்றும், ஜாதகர் அதிகம் பாதிக்கப்பட்டமாட்டார் என்றும் நம்பலாம். இந்த குருப்பெயர்ச்சி மீன ராசிக்கு 50 சதவிகித நற்பலன் தரும்.

பூரட்டாதி 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வித்தியாசமான, அலைச்சலான அனுபவம் தரும். எதைத் தொட்டாலும்- எந்த விஷயத்தை ஆம்பித்தாலும் ஒரு முயற்சியில் முடியாது. பலமுறை அலைந்தால்தான் ஒரு விஷயம் நடக்கும். எப்போதும் அலைந்துகொண்டே தொழில், வேலை பார்ப்பவர்களுக்கு அவ்வளவாக வித்தியாசம் தெரியாது. ஆனால், ஒரே இடமாக அமர்ந்து தொழில், வேலை செய்கிறவர்கள், இந்த குருப்பெயர்ச்சியில் அலைய வேண்டியிருக்கும். இருந்த இடத்திலேயே இருந்து பழகியவர்கள் சற்று தவித்துப்போக நேரிடும். ஆனால் இதைப்பற்றி அதிகம் யோசித்து அலுத்துக்கொள்ளாமல், வாழ்வில் குருபகவான் இதையொரு அனுபவமாகக் கொடுத்துள்ளார்; இதி-ருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்னும் மனநிலை கொண்டீர்களானால் எல்லாம் சௌக்கியமே! கடலருகிலுள்ள சுப்பிரமணியரையும், சிவனையும் வணங்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களுக்கு அலைச்சல், விரயம் எல்லாம் உண்டுதான். ஆனால் அதனை அலுத்துக்கொள்ளாமல் விரும்பிச் செய்வீர்கள். ஏனெனில் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள். அந்த வாய்ப்பு வந்தவுடன், "ஆஹா வந்திருச்சு, ஆசையில் ஓடிப்போறேன்' என பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு ஓடுவீர்கள். பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைத்தால் ஒரே தாவாகத் தாவி இடம் மாறுவீர்கள். "அரசியல் பதவி! ஆனால் செலவுடன் வெளியூரில் அல்லது வடக்கே' என்றாலும், "இதோ வர்றேன்' என அடுத்த நொடி அங்கு ஆஜராகிவிடுவீர்கள். ஆக, அலைச்சல், செலவு, விரயம் என எல்லாம் உங்களின் விருப்பப்படி, எண்ணியபடி இருக்கும்போது, அலுப்பாவது ஒன்றாவது! கடலருகில் இருக்கும் ஆஞ்சனேயர், தர்மசாஸ்தாவை வணங்கவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கு ஒரு வீட்டையும், ஒரு கல்யாணத்தையும் கொடுத்துவிடும். வீடு, வாகனத்துடன் வாழ்க்கைத் துணை கிடைப்பார். நல்ல படிப்பாளியான, வேலை பார்க்கும் வாழ்க்கைத் துணை வருவார். வேலை செய்யுமிடத்தில் வாகன வசதி தருவர். வாகனம் சம்பந்தமான வேலை கிடைக்கும். குட்டியானை வண்டி வைத்திருப்போரை வியாபாரப் பங்குதாரராக்கிக் கொள்வீர்கள். வண்டி இல்லாதவர்களுக்கு வேலை கிடையாது என்று கண்டிப்பு காட்டுவீர்கள். உங்களில் சிலர் ஆசிரியப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் வெளிநாட்டு வாகனம் வாங்கி அல்லப்படுவீர்கள். வர்த்தகம் சம்பந்தமான கல்வித் துறையில் சேர்வீர்கள். கடலருகிலுள்ள பெருமாளை வணங்கவும்.

பரிகாரங்கள்

சிவனையும், பெருமாளையும் வணங்கவும். தினப்படியும் அலைந்து திரிந்து காய், கீரை, பழம் விற்போருக்கு உதவவும். அதிக சிரம தசையிலுள்ள அந்தணருக்கு உதவவும். அரசு மருத்துவமனை அல்லது பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவையறிந்து மருந்து, மாத்திரை வாங்கிக்கொடுக்கவும். நோயாளிக்கு உதவும் வகையில் திட்டம் ஏதேனும் இருந்தால், அதில் பணம் செலுத்தவும். அடிபட்டு ரத்தக்காயமுடைய அந்தணர் அல்லது இஸ்லாமிய மதப் பெரியவருக்கு சமயமறிந்து உதவவும். "கல்லால் நிழல் மேயவனே கரும்பின் வில்லான் எழில் வேவ விழித்தவனே' எனும் பஞ்சபுராணப் பாடலை ஓதவும்.