மேஷம்
இந்த மாதம் எண்ணியதை நிறைவேற்ற லாம். நீங்கள் வைராக்கியமாகவும் நம்பிக்கை யாகவும் இருந்ததற்குக் கிடைக்கும் பரிசு இதுவென்று ஆறுதல் அடையலாம்; பெருமைப் படலாம். உங்களுக்கு யோகம் வரும்போது முன்னால் இருப்பவர்கள் விலகி வழி விடுவார்கள். உடன்பிறந்தவர்களும் ரத்தபந்த சொந்தக்காரர்களும் உங்களைப் புறக்கணித்து ஒதுக்கிய நிலை மாறும். உங்களை ஏளனம் பேசி ஏசியவர்களும் போற்றி உபசரிக்குமளவு உங்கள் அந்தஸ்து உயரும்; மதிப்பும் மரியாதை யும் கூடும். நமக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறதென்ற நம்பிக்கை உதயமாகும். மனித வாழ்க்கைக்கு காசு பணம் முக்கியம்தான். அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையும் தைரியமும்தான்! அதை 3-ல் உள்ள ராகு தருவார் என்பதில் சந்தேகமில்லை. 5-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் உச்சமாக இருப்ப தால் காரிய வெற்றிக்கு இடமுண்டு. 2-க்குடைய சுக்கிரன் 12-ல் இருப்பதால் (மாத முற்பகுதி வரை) பயனுள்ள விரயங்கள் இருக்கத்தான் செய்யும். உங்களது ஆற்றலும் திறமையும் அற்புதமாக விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய பயம் விலகும். அவர்கள்வழியில் நன்மைகளும் உண்டாகும்.
ரிஷபம்
மாத முற்பகுதிவரை (12-5-2019) ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சமாக இருப்பார். எடுத்த காரியத்தில் வெற்றி. 18-ஆம் தேதிமுதல் தனுசு குரு மீண்டும் விருச்சிகத்துக்கு மாறி ராசியைப் பார்க்கிறார். எனவே உங்கள் செயல்பாடுகள் பூர்த்தியாகும். வருமானமில்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கும், நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கும் நல்ல வேலை அமையும். அட்டமத்துச்சனி நடப்பதால் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் சில சங்கடங்களை உருவாக்கினா லும், ரிஷப ராசிக்கு சனி 9, 10-க்குடையவர்- ராஜயோகாதிபதி. சனி ராகுவைப் பார்க்கிறார். எனவே சனி கெடுதல் செய்யமாட்டார் என்று நம்பலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம், குடும்பம் அமையும். இந்த நன்மைகளை ராகு தந்து, குடும்பப் பொறுப்புகளையும் சுமைகளையும் தருவார். பேச்சில் மட்டும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது மிக அவசியம். பொருளாதாரத்திலும் செயல் பாட்டிலும் முன்னேற்றமும் திருப்தியும் எதிர்பார்க்கலாம். உடன்பிறப்புகள்வகையில் சுமுகமான உடன்பாடும், உதவி ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
பொதுவாக ஜென்ம ராசியிலோ அல்லது 7-ஆம் இடத்திலோ ராகு- கேது நின்றாலும், பார்த்தாலும் நாகதோஷம் எனப் படும். அதனால் திருமணம் தாமதமாகும்; தடையாகும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமைக்குறைவு, பிரிவு ஆகிய துர்ப்பலன்களையும் சந்திக்கநேரும் என்பது ஜோதிடப் பொதுவிதி. ஆனால், ராகு- கேதுவுக்கு வீடு கொடுத்த கிரகமோ அல்லது குருவோ அல்லது மிதுன ராசிக்கு 5, 9-க்குடைய கிரகமோ சம்பந்தப்பட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.
மேஷம்
இந்த மாதம் எண்ணியதை நிறைவேற்ற லாம். நீங்கள் வைராக்கியமாகவும் நம்பிக்கை யாகவும் இருந்ததற்குக் கிடைக்கும் பரிசு இதுவென்று ஆறுதல் அடையலாம்; பெருமைப் படலாம். உங்களுக்கு யோகம் வரும்போது முன்னால் இருப்பவர்கள் விலகி வழி விடுவார்கள். உடன்பிறந்தவர்களும் ரத்தபந்த சொந்தக்காரர்களும் உங்களைப் புறக்கணித்து ஒதுக்கிய நிலை மாறும். உங்களை ஏளனம் பேசி ஏசியவர்களும் போற்றி உபசரிக்குமளவு உங்கள் அந்தஸ்து உயரும்; மதிப்பும் மரியாதை யும் கூடும். நமக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறதென்ற நம்பிக்கை உதயமாகும். மனித வாழ்க்கைக்கு காசு பணம் முக்கியம்தான். அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையும் தைரியமும்தான்! அதை 3-ல் உள்ள ராகு தருவார் என்பதில் சந்தேகமில்லை. 5-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் உச்சமாக இருப்ப தால் காரிய வெற்றிக்கு இடமுண்டு. 2-க்குடைய சுக்கிரன் 12-ல் இருப்பதால் (மாத முற்பகுதி வரை) பயனுள்ள விரயங்கள் இருக்கத்தான் செய்யும். உங்களது ஆற்றலும் திறமையும் அற்புதமாக விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய பயம் விலகும். அவர்கள்வழியில் நன்மைகளும் உண்டாகும்.
ரிஷபம்
மாத முற்பகுதிவரை (12-5-2019) ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சமாக இருப்பார். எடுத்த காரியத்தில் வெற்றி. 18-ஆம் தேதிமுதல் தனுசு குரு மீண்டும் விருச்சிகத்துக்கு மாறி ராசியைப் பார்க்கிறார். எனவே உங்கள் செயல்பாடுகள் பூர்த்தியாகும். வருமானமில்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கும், நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கும் நல்ல வேலை அமையும். அட்டமத்துச்சனி நடப்பதால் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் சில சங்கடங்களை உருவாக்கினா லும், ரிஷப ராசிக்கு சனி 9, 10-க்குடையவர்- ராஜயோகாதிபதி. சனி ராகுவைப் பார்க்கிறார். எனவே சனி கெடுதல் செய்யமாட்டார் என்று நம்பலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம், குடும்பம் அமையும். இந்த நன்மைகளை ராகு தந்து, குடும்பப் பொறுப்புகளையும் சுமைகளையும் தருவார். பேச்சில் மட்டும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது மிக அவசியம். பொருளாதாரத்திலும் செயல் பாட்டிலும் முன்னேற்றமும் திருப்தியும் எதிர்பார்க்கலாம். உடன்பிறப்புகள்வகையில் சுமுகமான உடன்பாடும், உதவி ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
பொதுவாக ஜென்ம ராசியிலோ அல்லது 7-ஆம் இடத்திலோ ராகு- கேது நின்றாலும், பார்த்தாலும் நாகதோஷம் எனப் படும். அதனால் திருமணம் தாமதமாகும்; தடையாகும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமைக்குறைவு, பிரிவு ஆகிய துர்ப்பலன்களையும் சந்திக்கநேரும் என்பது ஜோதிடப் பொதுவிதி. ஆனால், ராகு- கேதுவுக்கு வீடு கொடுத்த கிரகமோ அல்லது குருவோ அல்லது மிதுன ராசிக்கு 5, 9-க்குடைய கிரகமோ சம்பந்தப்பட்டால் தோஷம் நிவர்த்தியாகும். ஜாதக தசாபுக்திகளும் யோகமாக நடந்தால் எல்லா பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்த்துவிடலாம். எந்தவொரு கிரகத்துக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்தியமும் கிடைக்கிறதோ அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதி எனப்படும். கேதுவின் பார்வை ஜென்ம ராசிக்குக் கிடைப்பதால், எல்லாரும் வணங்கத் தக்க அளவு மதிப்பும் மரியாதையும் கூடும். நண்பர்களால் சகாயமும் ஆதரவும் உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் தீர்வு உண்டாகலாம். அல்லது சாதகமான தீர்ப்பு தள்ளிப்போகலாம். ஆன்மிகத் தொடர்பு உண்டாகும்.
கடகம்
உங்களுடைய விருப்பங்களும் தேவைகளும் நிறைவேறும். குரு இம்மாதம் பிற்பகுதியில் 5-ஆம் இடத்துக்கு மாறி மீண்டும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். பழைய கடன்களை அடைத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி வட்டிவாசியை நாணயமாகச் செலுத்தலாம். வெளிநாட்டுப் பயணம், வெளியூர் வேலை ஆகியவை இடம்பெறலாம். 8-ஆம் இடத்தைக் கேது பார்ப்பதால், சிலருக்கு தேவையற்ற விமர்சனங்களும் கவலைகளும் ஏற்பட்டாலும், ஜென்ம ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் அப்பழுக்கற்றவர் என்ற முத்திரையைப் பதிக்கலாம். குருவருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். அதனால் உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். 9-ஆம் இடம் என்பது 10-ஆம் இடத்துக்கு 12-ஆம் இடம் என்பதால், வேலை அல்லது உத்தியோகத்தில் சிலருக்கு இட மாறுதல் ஏற்படலாம். அல்லது வெளிநாடு போகலாம். தாராளமான வரவு- செலவும் பணப்புழக்கமும் திருப்தியாக இருக்கும். கையில் காசு பணம் வந்தாலே மனதில் நிறைவு ஏற்பட்டுவிடும். போட்டி, பொறாமை கள் விலகும்.
சிம்மம்
ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதிவரை 9-ல் உச்சமாக இருக்கிறார். சொத்துப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு தகப்பனார் வழியில் சங்கடங்களும் வருத்தங்களும் ஏற்பட லாம். 5-ல் உள்ள கேதுவால் உங்கள் எண்ணங் கள், திட்டங்கள், செயல்பாடுகளில் தாமதம் இருக்கலாமேதவிர, தடைகள் ஏற்படாது. பொருளாதாரத்தில் சில முன்னேற்றங்கள் எதிர்பார்க்கலாம். சகோதர சகாயம், நண்பர்களின் உதவி, நட்பின் அருமை பெருமை எல்லாம் இனிமையாக இருக்கும். ஏற்கெனவே உடன்பிறப்புகள் வகையில் பிரச்சினைகளும், ஒட்டுதல் உறவில்லாமல் வீதியில் பார்த்தால் யாரோ போகிறார்கள் என்று பார்த்த நிலையும் மாறி நல்லுறவும் இணக்கமும் ஏற்படலாம். வேலை, உத்தியோகம், தொழில்துறையில் லாபமும் முன்னேற்றமும் கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற பெருமையும் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். மற்றவர்களால் சாதிக்கமுடியாத பெரிய காரியங்களையும் சாதித்து பாராட்டுப் பெறலாம். பொதுக் காரியங்களில் முக்கிய பொறுப்பு வகிக்கலாம்.
கன்னி
இந்த மாதம் 12-ஆம் தேதிவரை கன்னி ராசிநாதன் புதன் மறைவாக இருக்கிறார். (8-ஆமிடம் மேஷம்). பிறகு 9-ஆமிடமான ரிஷபத்துக்கு மாறுகிறார். பொதுவாக புதனுக்கு மறைவு தோஷமில்லை என்ற அடிப்படையில் கவலைப்படத் தேவையில்லை. சிலருக்குத் தொழில் மாற்றம், சிலருக்கு குடியிருப்பு மாற்றம் போன்றவை ஏற்படலாம். 10-ல் உள்ள ராகு தொழில்துறையில் முன்னேற் றம், புதிய முயற்சிகளை ஏற்படுத்துவார். மாதப் பிற்பகுதியில் தனுசு குரு மீண்டும் விருச்சிகத்துக்கு மாறுவார். சகோதர வகையில் சகாயம், ஆதரவு உண்டாக லாம். 7-ஆமிடத்தை குரு பார்ப்பார். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை நிலவும். 7-ஆம் தேதி செவ்வாய் மிதுனத் துக்கு மாறுகிறார். சனி, செவ்வாய் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தைச் சந்திக்கலாம். 8-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகு அபகீர்த்தி, சஞ்சலம், தன்பயம், பீடை, கவலை போன்ற 8-ஆமிடத்துப் பலனைக் கெடுப்பார்; விரட்டியடிப்பார். சிலர் பூமி, வீடு, வாகன வகையில் நற்பலனை சந்திக்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உரிய பரிகாரம் செய்துகொள்வது நல்லது. ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் கௌரவப் பட்டமும் பாராட்டும் கிடைக்கும்.
துலாம்
இந்த மாதத்தின் ஆரம்ப நாட்கள்வரை (11-ஆம் தேதிவரை) துலா ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்சமாக இருக்கிறார். கடந்த மாதம் தொழில்துறையில் ஏற்பட்ட தொய்வுகள் இந்த மாதம் சரியாகும். சகோதர- சகோதரி கள் வகையில் சில குழப்பங் களும் பிரச்சினைகளும் உருவானாலும், நீரடித்து நீர் விலகாது என்ற பாணியில் விட்டுக்கொடுத்துச் செல்ல வும். அந்தஸ்து, கௌரவம், பூர்வபுண்ணிய பாக்கியம் ஆகிய நன்மைகளுக்குக் குறைவிருக்காது. புதிய தொழில் வாய்ப்பும், பழைய தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். நெருங்கிப் பழகிய நண்பர்கள் வட்டாரத்தில் அர்த்தமற்ற பிரச்சினைகள் உருவாகி சங்கடங்களைத் தரும். கணவர் அல்லது மனைவிக்கு எதிர்பாராத சிறுசிறு வைத்தியச்செலவு உருவாகலாம். சிலர் பெற்றோருடன் வறட்டுப் பிடிவாதத்தால் பேசாமலிருந்த நிலைமாறி ஒற்றுமையுணர்வு உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சம்பந்தமாக நல்ல தீர்வு கிடைக்கும். 11-க்குடைய சூரியன் 7-ல் உச்சம். (மாத முற்பகுதி வரை). குடும்பத்தில் சுபமங்கள காரியம் நிறைவேறும். சிலர் ஆன்மிக யாத்திரை போகலாம். வி.ஐ.பி.களின் தொடர்பும் அறிமுகமும் உங்கள் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரம் அமைக்கும்.
விருச்சிகம்
மாதத்தின் முதல் வாரம் ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ஆரம்பத்தில் வேகமாக நடைபெறுவதுபோலத் தோன்றும் எல்லா காரியங்களும், நாளடைவில் மந்தப்போக்காக செயல்படும். பிறகு செவ்வாய் 8-ல் மறைகிறார். சனி அவரைப் பார்க்கிறார். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களில் சிலர் காதல் அல்லது கலப்புத் திருமணத்தை சந்திக்கநேரும். மாதப் பிற்பாதியில் 2-ல் இருக்கும் குரு மீண்டும் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனியில் சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள் மட்டும் சற்று சிரமங்களைச் சந்திக்கநேரும். பொருள் சேதம், வருத்தமூட்டும் சம்பவம் போன்ற பலன்களைச் சந்திக்க லாம். சிலர் கம்பெனியில் பார்த்த வேலையை விட்டுவிட்டு தனியாக ஏஜென்ஸி, டிரேடிங் என்று செய்து நஷ்டங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளலாம். ஜென்ம குருவும், மிதுனத்தில் இருக்கும் ராகுவும் சஷ்டாஷ்டகமாக இருப்பதால், ஆரம்பத்தில் ராகு கெட்ட பலனையே செய்யும் என்றாலும், ஜாதகத்தில் தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் மேற்கூறிய பலன்களிலிருந்து தப்பிக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. ஜென்மத்தில் இருக்கும் குருவும் இந்த மாத முற்பகுதியில் விருச்சிகத்துக்கு மாறுகிறார். குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 7-ஆம் தேதி முதல் மிதுனத்துக்கு மாறி தனுசு ராசியைப் பார்க்கிறார். தேக சுகத்தில் இருந்துவரும் பாதிப்புகள் விலகும். ஜென்மத்தில் உள்ள கேது 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். 3-க்குடைய சனியும் 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பிரிந்திருக்கும் உடன்பிறப்புகளிடையே நெருக்கமும் இணக்கமும் உருவாகலாம். "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்ற அடிப்படையில், சகோதரத்துவத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை விலக்கி ஒற்றுமையைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். மூத்த சகோதரம்மூலம் ஆதாயம், ஆதரவு உண்டாகலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம். உத்தியோகத்தில் உயர்வும் மதிப்பும் மரியாதையும் பெருகும். பூமி, வீடு, மனை சம்பந்தமாக சுபச்செலவுகள் ஏற்படலாம். குடும்பம், பொருளாதாரம், நட்பு எல்லாவற்றிலும் அன்பு, யோகம் உண்டாகும். தெய்வத்திடம் பக்தி மோகம் உண்டாகும். வள்ளலார் "பசித்திரு, விழித்திரு, தனித்திரு' என்று கூறினார். அதன் உண்மை விளக்கம் இக்காலகட்டத்தில் உங்களுக்கு விளங்கும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. 12-ல் கேது, குரு; 6-ல் ராகு இருக்கி றார். இந்த மாதப் பிற்பாதியில் 12-ல் உள்ள குரு 11-ஆம் இடமான விருச்சிகத்துக்கு மாறுகிறார். விரயச்சனி இருந்தாலும் சுபவிரயச் சனியாக மாறி பொங்குசனியாக செயல்படும். குரு மாறியபிறகு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் தடைப்பட்ட திருமணங்கள் நிறைவேறும். நல்ல வாரிசுகள் உருவாகும். சுபமங்களச் செலவுகள் உண்டாகும். 6-ல் உள்ள ராகு நோய், கடன், எதிரி போன்றவற்றை அழிப்பார். கடன்சுமை குறையும். வைத்தியச்செலவுகள் விலகும். தொழில்துறையில் போட்டி போட்ட எதிரிகள் ஒதுங்குவார்கள். 12-ஆம் இடம் கெட்ட இடம்- விரய ஸ்தானம். அதில் வந்திருக்கும் கேது அந்தக் கெடுபலனைக் கெடுத்து நன்மையாக்குவார். மைனஸ் ஷ் மைனஸ்= ப்ளஸ் என்பதுபோல! பூமி, வீடு வகையில் ஏற்படும் விரயங்களை சுபச்செலவுகளாக மாற்றியமைத்துக் கொள்வதன்மூலம் வீண்விரயங்களைத் தடுக்கலாம். பொருளாதாரப் புழக்கம் தாராள வரவு- செலவுகளாக அமையும். குடும்பத்தில் உங்கள் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப் படும் சில ஆசாமிகள் குழப்பத்தை உருவாக்க லாம். தைரிய ஸ்தானாதிபதி குரு தைரிய ஸ்தானத்தையே பார்க்கப்போவதால் பதிலுக்கு பதிலடி கொடுத்து சவாலை சமாளிக்கலாம். குருவருள் துணைபுரியும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் கேதுவும் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பு. உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பு மரியாதையும் கூடும். 11-ல் இருக்கும் கேதுவும் அதை மேம்படுத்தும். 11-ஆம் இடம் கேதுவுக்கு நல்ல இடம். எனவே யோகத்தையும் நன்மைகளையும் அடையலாம். குரு இம்மாதப் பிற்பாதியில் 10-ஆம் இடத்துக்கு மாறி 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். விரயங்கள் கட்டுப்படும். ஆன்மிகம், தெய்வத் திருப்பணி அறக்கட்டளை போன்ற வகையில் பொறுப்பு, பதவிகள் உருவாகும். புத்திர வகையில் நன்மதிப்பும் பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டு வேலை அமையும். அல்லது அயல்நாட்டு வர்த்தகத் தொடர்பால் வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். தொழில்துறையில் புதிய யுக்திகளைக் கையாளலாம். செவ்வாய், சனி பார்வை ஏற்படுவதால் சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தைச் சந்திக்கலாம். இது ஜோதிட விதி! தாய்மாமன்வழியில் சில சங்கடமும் பிரச்சினைகளும் உருவாகலாம். அனுசரித்து கவனமுடன் நடந்துகொள்ளவும்.
மீனம்
இந்த மாதம் 18-ஆம் தேதி தனுசுவுக்கு அதிசாரமாக மாறியிருந்த குரு மீண்டும் விருச்சிகத்துக்கு மாறுகிறார்; வக்ரமாகவும் இருக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம் தருவார். மீன ராசியை ராசிக்குடைய குருவே பார்ப்பது ஒரு பலம். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் துவக்கி வெற்றிபெறலாம். உங்கள் செல்வாக்கை உயர்த்தலாம். புகழைப் பரப்பலாம். சிலர் இடமாற்றம், ஊர் மாற்றங்களைச் சந்தித்தாலும், அங்கு சென்றாலும் தனித்தன்மை பெறலாம். தொழில்துறையில் தொய்வுகளைச் சந்தித்து, பழகியவர்களின் பழக்கவழக்கம் மற்றும் நட்புகளை இழந்தாலும், அதை மீண்டும் பெறும்வகையில் உங்களின் உழைப்பும் முயற்சியும் அமைந்து சாதனையைத் தரும். பூமி, வீடு, வாகன வகையில் செலவுகள் ஏற்படலாம். அது சுபச்செலவாக அமையும். 4-ல் உள்ள ராகு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். அலங்கார மனை அமையும். அதற்கு வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். தாயார் உடல் நலனில் மருத்துவச் செலவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். என்றாலும் பாதிப் பிற்கு இடமிருக்காது.