1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதுமே மிக நல்ல பலன்கள் நடக்குமென்று எதிர்பார்க்கலாம். என்ன ஒன்று... மாத முற்பகுதியில் நேர்மையான செயல்கள்மூலமும், பிற்பகுதியில் சட்டப் புறம்பான செயல்கள்மூலமும் நல்லது நடக்கும். இந்த மாதம் முழுக்க எவ்வளவு நல்லவராக இருந்தாலும், கையில் லஞ்சப் பணத்தைக் கொடுத்து விட்டு "வாங்கினால்தான் ஆச்சு' என வற்புறுத்துவர். உங்கள் தொழில் வகையில் இதுபோன்ற சில நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரும். வீடு அல்லது தொழிலில் இடமாற்றம் உண்டு. தாய்லி தந்தை அல்லது வாழ்க்கைத் துணையின் வழியில் நல்ல லாபமும், லட்சியம் ஈடேறலும், வருமானமும் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்க கடன் கிடைக்கும். தண்ணீரும் இரும்பும் சார்ந்த, சேர்ந்த உபகரணங்களை வாங்குவீர்கள். திருமணவாழ்வு சற்று நெருடலாகும். சிலருக்கு தந்தையாகும் யோகமுண்டு. வேலையில்லி அதுவும் அரசு சார்ந்த பணிகளில் உயர் பதவி கிடைக்கும். சிலருக்கு அரசியலில் பதவியேற்க வாய்ப்புண்டு. சிலரது அடாவடிப் பேச்சு, பணப் புழக்கம் காரணமாக அடங் கிப் போய்விடும். சகோதர வகையில் லாபமுண்டு. எதிரிகள் தொல்லை, நோய்த்தாக்கம் நீங்கிவிடும். விவசாயிகள் மிக மேன்மை பெறுவர். அலைச்சலுடன் வேலை கிடைக்கும். வீட்டில் வாரிசுகளின் திருமணம் நிச்சயமாகும். சிலரது மாமியார் குயுக்தியாக யோசிப்பார். மறுமணம் செய்துகொள்ள எண்ணுபவர்களுக்கு வேலைசெய்யும் துணை கிடைக்கும். சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து விளையாடும் வழக்கறிஞர்கள் பேரும் புகழும் பெறுவர். மனை, வாகனம் போன்றவற்றைப் பிரித்து விற்பவர்கள் நல்ல யோகம் பெறுவர். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இந்த மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும். தொட்டது துலங்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: மாதப் பிற்பகுதியில் வேற்றின, மத ஆட்களிடம் கவனமாக இருப்பது அவசியம். சந்தனம் பயன்படுத்துவது மேன்மை தரும். இந்த மாதம் உங்கள் புகழ், பெருமைகளை சுய விளம்பரம் செய்யவேண்டாம். இதுவே பரிகாரம்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அரசியல், அரசுப் பேருரைகள் ஆற்றுவீர்கள். சொற்கள் வளமும் வலிமையும் பெறும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை கிடைக்கும் அல்லது அவைசார்ந்த தொழில் தொடங்குவீர்கள். கைபேசியின் எதிர்மறை செயல்பாட்டின்மூலம் லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் அரசின் கவனமும் கருத்தும் செயலாக்கம் பெற்று வேகம்பெறும். தாயாரால் மேன்மையும், தந்தையால் பெருமையும் கூடவே சற்று இம்சையும் உண்டு. புது வீட்டுக்கு முதலீடு செய்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செலவுண்டு வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்களிடம் சற்று மனக் கசப்பு ஏற்படலாம். எனினும் முடிவில் அதுவே ஒரு நன்மையையும் தரும். திருமண ஏற்பாடுகள் வேகம்பெறும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடும்போது சில அல்லல்கள் ஏற்படும். பணப்பரிமாற்றம், கடன் கொடுக்கும் அலுவலகங்கள் போன்றவை மேம்பாடு காணும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அரசு வகையில் நிறைய பணப்புழக்கம் அல்லது கடன் தள்ளுபடி ஆவதால் பணச்சேர்க்கை கிட்டி பெருமகிழ்ச்சி அளிக்கும். உங்களில் சிலருக்கு வங்கி அல்லது அரசு சார்ந்த நில அளவு, பத்திரப் பதிவுத்துறை போன்றவற்றில் வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. குழந்தைகள் விஷயமாக செலவு வரலாம். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும். சிலருக்கு மாமியாரால் செலவும், மாமனாரால் வரவும் ஏற்படும். சகோதரர் வகையில் வரவுலி செலவு இரண்டும் உண்டு. அரசியல்வாதிகள் ஆதாயம் பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19 28.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: மனை விஷயங்களில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. சாம்பிராணி தூபம் பயன்படுத்துங்கள். மிகவும் சிரமப்படும் வயதான அந்தணருக்கு உதவவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத முற்பகுதியில் கிடைக்கும் அதிர்ஷ்ட நிகழ்வுகள் பிற்பகுதியில் தொய்வடையும், எனவே, உங்களுக்கு நடக்கவேண்டிய முக்கியமான வேலைகள், முடிவுகளை மாத முற்பகுதியில் முடித்துக்கொள்ளுங்கள். வேலை தேடுவோருக்கு இந்த மாதம் எப்படியாவது வேலை கிடைத்துவிடும். உங்களில் சிலரது பேச்சு சமயங்களில் மிகப்பெரிய சண்டையை இழுத்துவிடும். சிலசமயம் உங்கள் உடன்பிறந்தவரால் இவ்விதம் நிகழ வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் மாற்றும் எண்ணம் ஏற்படும். மாத முற்பகுதியில் உங்கள் பிள்ளைகள்மூலம் அதிர்ஷ்டம் கிடைக்கும். குழந்தைவரம் வேண்டுவோர் அந்த பாக்கியம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு மருமகள் வரும் நேரமிது. உங்கள் தொழில், வேலையில் வெளிநாட்டு சம்பந்தம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடும், இடமாற்றமும் உண்டு. சிலருக்கு முகத்தில், கண்களில் அடிபட வாய்ப்புள்ளது. மாதப் பிற்பகுதியில் தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் தங்கள் தொழிலில் கண்டிப்பாக கள்ளக்கணக்கு எழுதவேண்டியிருக்கும். ஒருசிலருக்கு மருமகளுடன் பிணக்கு ஏற்படும். அரசியல், அரசு சார்ந்தவர்கள் மாத முற்பகுதியில் கொண்டாட்டமாகவும் பிற்பகுதியில் திண்டாட்டமாக அலைவர். மாமனார்லி மாமியார் வேறிடம் செல்வர். விவசாயம் அதிக செலவை இழுத்துவிடும். கடன் விஷயங்களில் நிறைய மாற்றம் ஏற்படும். சிலருக்கு கேட்ட கடன் கிடைக்கும். சிலர் கடனை அடைத்துவிட்டு புதுக் கடன் வாங்குவர். இதுவரையில் கடனை வசூலிக்க முடியாதவர்களுக்கு இந்த மாதப் பிற்பகுதி அனைத்தையும் வட்டியுடன் வசூலித்துத் தந்துவிடும். மூத்த சகோதரிக்கு வேலை கிட்டும். சற்று பிணியும் உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுவோருக்கு இந்த மாதம் திருமணம் கைகூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: வேலையாட்களை நியமிக்கும்போது கவனம் தேவை. மருதாணி, குங்கிலிய தூபம் நல்லது. வீடு மாற்றும் போது தரகர்களின் கட்டணத்தை சற்று அதிகரித்துத் தரவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந் தவர்களுக்கு:
இந்த மாதம் பணம் சம்பாதிக்கும் விஷயத் தில் சில குயுக்தியான யோசனைகளும் குறுக்கு சிந்தனைகளும் தோன்றும். பேச்சின் தன்மையே மாறிவிடும். மாத முற்பாதியில் நிலம், வீடு, வாகனத்தில் முதலீடு செய்வீர்கள். அது அநேகமாக அரசு சார்ந்த மனை அல்லது வீடாக அமையும். உங்களில் சிலர் கடன்வாங்கி வாகனம், அடுக்குமாடி வீடு வாங்குவீர்கள். பங்குப் பத்திர விஷயங்களில் எதிர்மறையாக யோசித்து முடிவெடுப்பீர்கள். மாத முற்பகுதியில் எதிர்பாராத ஒரு நன்மை நடக்கும். திருமணம் கூடிவரும். வேலை விஷயமாக சிலருக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கும். இதன் பொருட்டு செலவுண்டு. தொழிலில் எதிர்பாராத நல்ல மாற்றமுண்டு. உங்கள் பேச்சு, நடவடிக்கை போன்றவை உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உங்கள்மீது சந்தேகம் கொள்ளச் செய்யும். ஒருசிலர் மது போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாக நேரும். ஆச்சாரமான சிலர் அசைவ உணவுண்ண செலவுசெய்வார்கள். சிலரது பிள்ளைகளின் தீய பழக்கங்கள் தெரியவரும். வாரிசுகளின் திருமண விஷயம் சற்று தளர்வடையும். இந்த தேதிகளில் பிறந்த அரசியல்வாதிகள் சற்று வருத்தப்பட்டு அலைபாயும் நிலையுண்டு. மாதப் பிற்பகுதியில் உடல்நலனில் கவனம் தேவை. கிருமிகள் சம்பந்தமான பாதிப்பு ஏற்படக்கூடும். மாத முற்பகுதியில் மறைந்திருக்கும் எதிரிகள், பிற்பகுதியில் உங்களுக்கு இணையாகத் திரிய ஆரம்பிப்பர். கலைஞர்கள் ஒருவித எதிர்மறை சிந்தனைகளோடு, வேண்டாத பேச்சுகளோடு வலம் வருவர். விவசாயி களின் நிலை மேம்பாட டையும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: பேசும்போது கவனமாக இருங்கள். உங்கள் சொற்களே உங்களுக்கு விரயத்தைக் கொண்டுவரும். மருதாணி, குங்கிலியம் சேர்ந்த தூபம் போடுவது நன்று. உங்கள் சிந்தனை நேர்மறையாக இருக்கட்டும். இதுவே பரிகாரம்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களில் பலருக்கு ஆன்மிக எண்ணம் பொங்கிப் பெருகும். ஆனாலும் என்ன? சாமி கும்பிடப் போனோமா கும்பிட்டோமோ என வரமாட்டீர்கள். அங்கு ஏதாவது வேண்டாதன செய்து சிலர் ஏழரையைக் கூட்டிவிடுவார்கள். இந்த மாதம் சிலரை கோவிலில் பார்த்தால் சுவாமியும் அர்ச்சகரும் சற்றே தடுமாறுவார்கள். மாத முற்பகுதியில் மணிபர்ஸ் மிகவும் வறண்டு போய், கார்டில் பைசா பேலன்ஸ் இல்லாமல் ஆகிவிடும். மாதப் பிற்பகுதியில் ஏதேதோ செய்து, குறுக்குவழியிலாவது கார்டை ஸ்வைப் செய்யுமளவுக்கு பணம் சேர்த்துவிடுவீர்கள். உங்கள் இளைய சகோதரர் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் தவறு செய்யக்கூடும். அதுவேறு உங்களுக்கு மன வருத்தம் தரலாம். உடல்நிலையிலும் சற்று தொய்வு ஏற்படக்கூடும் அதுவும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும். இதன்காரணமாக மனைவியுடன் சற்று மனக்கசப்பு ஏற்படலாம். நீங்கள் வேலை செய்யுமிடத்தில் அல்லது வியாபாரத்தில் அல்லது தொழிற்சாலையில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். தொழிற்கூடங்களில் தீயணைக்கும் கருவிகளை நன்கு பராமரிக்கவும். மாமியாரும் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும். கலைஞர்கள் தங்கள் தொழிலில் கவனமாக இருக்கவும். இல்லையெனில் அவமானப்படும் நிகழ்வுகள் ஏற்படக்கூடும். விவசாயிகள் கடன்வாங்க நேரிடும். அரசியல்வாதிகள் தங்களின் பழைய கௌரவத்தைக் காப்பாற்றி நிலைநிறுத்திக்கொள்வர். சிலரது கைபேசி "மக்கர்' செய்யும். இதுபோன்ற சில இம்சைகளோடு இந்த மாதம் ஓடும். அதுவாக ஓடாது. உங்களின் சில அதிரடி யோசனைகளால் இந்த மாதத்தைக் கடத்திவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 13, 22, 31.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. கற்பூரம், பச்சைக் கற்பூரம் சேர்ந்த தூபம் நன்று. மாமியாரிடம் கவனம் தேவை.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் திருமணம், வியாபாரம், மறுமணம் அல்லது பெரிய அரசியல், அரசு அதிகாரிகளை சந்திப்பதுபோன்ற முக்கிய விஷயங்களை மாத முதலிரண்டு வாரங்களுக்குள் முடித்துவிடுவது நன்று. மாதப் பிற்பகுதி சற்று இம்சை தரும். வழக்கமான பணவரவு வருமே தவிர, அதீத பண வெள்ளத்தை எதிர்பார்க்க இயலாது. சிலருக்கு உங்களுக்கு விருப்பமானவர்கள்மூலம் கைபேசி கிடைக்கும். உடல்நிலை அவ்வப்போது சற்று முரண்டு பிடிக்கும். சிலரது வாழ்க்கைத் துணைக்கு மாத முற்பகுதியில் அரசு, அரசியல் ஆதாயம் அதிகமாகக் கிடைக்கும். சற்றும் எதிர்பாராத ஒரு இனிய செய்தி கிட்டும். அது புதையல்போல் அமையும். தம்பதிகள் அடுத்தவர்களின் தலையீடில்லாமல் பார்த்துக்கொண்டால் இல்லறம் இனிக்கும். உங்களில் சிலரது வாரிசுகள் வாகனம் வாங்குவர். விவசாயிகளுக்கு வேலை அதிகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் வேகமாகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். மாத முற்பகுதியில் வீராப்பு காட்டும் மருமகன் பிற்பகுதியில் இம்சை தருவார். தாய் அமைதியாக இருக்க, தந்தை மாறுபாடான நிலையில் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடும். மாத முற்பாதியில் உங்கள் மூத்த சகோதரருக்கு ஒரு பெரிய நன்மை கிடைக்கும். உங்களில் சிலர் பூர்வீக சொத்தின் பெயரில் கடன் வாங்குவீர்கள். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் புதுவிதமான யோசனைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். நிறைய அதிர்ஷ்டம் கிடைக்குமென்ற கற்பனையில், எதையெல்லாம் வாங்கலாம் என அதிக யோசனை செய்துகொண்டிருப்பீர்கள். எனவே, அளவோடு ஆசைப்படுவது நல்லது. சிலருக்கு பூர்வீக இடத்திலிருந்து வேலையாட்கள் கிடைப்பார்கள். பயணங்களில் இடையூறு வரலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: இந்த மாதப் பிற்பகுதியில் சற்று பேச்சைக் குறைத்துப் பணிவாக இருப்பதே பரிகாரமாகும். லவங்க தூபம் காட்டுவது நல்லது.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
அரசு வேலைக்குக் காத்துக்கொண்டி ருப்பவர்களுக்கு இந்த மாதம் பெரும்பாலும் வேலை கிடைத்துவிடும். அதன் பொருட்டு சற்று பெரிய செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பூர்வீக வீடு உங்களுக்குப் பணம் தரும். வீடு, வாகனத் தைப் பழுதுபார்க்கும் நிலையுண்டு. நீங்கள் அரசியல் சார்ந்தவராக இருந்தால், பிறர் உங்களது அரிய பெரிய யோசனைகளை, சிந்தனைகளைக் கண்டு மிரட்சியடைவர். இந்த மாதம் வியாபாரத்தில், தொழிலில் உங்கள் பங்குதாரர் செய்யும் சில அதிரடி செயல்களைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடையக் கூடும். இந்த மாதம் முழுவதும் உங்களில் சிலர் சில வேண்டாத எண்ணங்களால், உங்களைச் சார்ந்தவர்களை அலையவிடுவீர்கள். சிலர் கலப்புமணம் செய்து நல்ல லாபம் காண்பர். மருமகன்லி மருமகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். தாயாருக்கு காது தொல்லை தரும். சிலரது மாமியாரின் அரசியல் அல்லது அரசுப் பெருமைகள் சற்று குறையும் நிலை ஏற்படும். சிலரது வியாபாரத் தொடர்பு இஸ்லாமிய நாடுகள்வரை பரவி விரியும். உங்களது எதிரிகள் விலகிச்செல்வர். மூத்த சகோதரர் அல்லது மருமகனுக்கு வேலை யில் வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். மறுமணம் கூடிவரும். திரைக்கலைஞர்கள் அரசு, நீதிமன்ற சட்டங்களால் பாதிக்கப்படக்கூடும். விவசாயிகள் கவனமாக இருக்கவேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: உங்கள் யோசனைகளைக் கட்டுப்பாடாக வைத்திருக்கவும். இதுவே பரிகாரமாகும். செம்மர தூபம் காட்டுதல் நன்று.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் "வரவு எட்டணா செலவு பத்தணா' என்னும் கதைதான். உங்களில் ஒருசிலருக்கோ அல்லது சிலரது வாரிசுகளுக்கோ சில தீய பழக்கங்கள் வர வாய்ப்புள்ளது; கவனமாக இருக்கவும். உங்களது மனை, வீடு விஷயமாக ஒரு இன்னலை சந்திக்க நேரும். அது அரசு சட்டம்மூலமாக அமையலாம். தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை. திரைக்கலைஞர்கள் சிலரும் ஒரு சரிவை, அவமானத்தை சந்திக்க நேரிடலாம். வாரிசு வேண்டுவோர் சிலர் மாற்றுமுறையில் வாரிசுயோகம் பெறுவர். சிலர் பூர்வீக வீட்டை வைத்துக் கடன் வாங்குவார்கள். தாய்வழி சொந்தத்தில் திருமணம் அமைய வாய்ப்புள்ளது. உங்களுக்கு வரும் மருமகன் அல்லது மருமகள் கலப்பாக அமையக்கூடும். மாமியாரின் உடல்நலம் பாதிக்க வாய்ப்புள்ளது. சிலரது மாமனா ரின் கைபேசி காணாமல் போகக்கூடும். மூத்த சகோதரருக்கும் சற்று உடல்நல பாதிப்புண்டு. மாதப் பிற்பகுதியில் பங்குப் பத்திர விஷயமாக ஒரு இன்னல் ஏற்படலாம். அரசியல்வாதிகளும் உடல்நலத்தில் கவனமாக இருக்கவேண்டும். அல்லது கடனால் பாதிக்கப்படக் கூடும். விவசாயிகளும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்களது உயர்கல்வி, வேலைசார்ந்து ஒரு வெளிநாட்டு விஷயம் கைகூடும். விளையாட்டுத் துறையில் சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: அரசு சட்டதிட்டங்களை மதித்து நடக்கவும். அரசியல்வாதிகளிடம் வம்பு வைத்துக்கொள்ள வேண்டாம். இதுவே பரிகாரம். வீடு, அலுவலகத்தில் கருங்காலி தூபம் காட்டுவது நன்று.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் மிக அருமையான நிகழ்வுகள் நடைபெறும். உங்களில் சிலர் மாத முற்பகுதியில் அரசு, அரசியலில் பதவி ஏற்பீர்கள். அல்லது உங்கள் வாழ்க்கைத்துணை பதவியேற்க வாய்ப்புண்டு. வெளிநாட்டு, உள்நாட்டுப் பணம் என கையில் பணப்புழக்கம் ஏராளம்; தாராளம். உங்கள் கைபேசி காணாமல்போக நேரலாம்; கவனம் தேவை. வாரிசுகளால் பெருமை சேரும் காலமிது. பங்குப் பத்திரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவை மேன்மை தரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலருக்கு வாராத கடன்தொகை வசூலாகும். திருமணம் சிறப்பாக அமையும். உங்கள் வியாபாரத்தில் வேற்றினத்தவர் பங்குதாரராக அமைவார். சொந்தத்தில் அருமையான மருமகன்லி மருமகள் அமைவார். ஆன்மிக அதிர்ஷ்ட நிகழ்வுகள் உண்டு. குழந்தை வரம் சிறப்பாக அமையும். தந்தைக்கு ஒரு மேன்மை கிடைக்கப்போகிறது. அது சில சிரமங்களுக்குப்பிறகு கிடைக்கும். உங்கள் மாமியார் வேலையின்போது சிறு அடிபட நேரும்; கவனமாக இருக்கவும். மாமனார் சற்று முரண்டு பிடிப்பார். உங்கள் பேச்சில் மட்டும் கவனமாக இருங்கள். மற்றபடி சிறப்பான மாதமிது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: வீட்டில், அலுவலகத்தில் குங்கிலிய தூபம் காட்டுவது நல்லது.
செல்: 94449 61845