"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு.'
-திருவள்ளுவர்
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கிறார்களோ, அவர்களோடு சேர்ந்து தானும் அப்படியே வாழ்வது அறிவுடைமையாகும்.
முன்பொரு காலத்தில் காந்தார நாட்டில் ராம்குமார் என்ற தச்சர் வாழ்ந்துவந்தார். அது மன்னராட்சிக் காலம். நேர்மை, நீதி, இறைசிந்தனையுடன் பிறருக்கு உதவிபுரியும் எண்ணமுடையவர் அவர். தொழிலை நேர்த்தியாகச் செய்வார். அதனால் நாட்டில் நற்பெயர் பெற்றிருந்தார்.
அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷியாம்குமார் வண்ணம் பூசும் வேலையைச் செய்துவந்தார். ராம்குமாருக்கு மக்களி டையே இருந்த புகழ்கண்டு வெறுப்படைந்தார். ஒழித் துக்கட்ட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sooranishwar.jpg)
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இறந் தார் நாட்டு மன்னர்.
இறுதிச் சடங்குகள் முடிந்தன. அடுத்து இளவரசர் சத்யதேவன் மன்னராக முடிசூடினார். இளவரசர் சத்யதேவன் தந்தைமீது அதீத பாசம் வைத்திருந்தார்.
அவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி, ராம்குமாரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார் ஷியாம்குமார்.
அதன்படி அரண்மனையில் மன்னரை சந்தித்து, "உங்கள் தந்தை என் கனவில் வந்தார். சொர்க்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அங்குள்ள மாளிகையில் தச்சுவேலை செய்ய ராம்குமாரை அனுப்ப வேண்டுமாம்'' என்று மிகப்பெரிய பொய்யைச் சொன்னார்.
தன் தந்தை கனவில் வந்து சொன்னாரே என்று நம்பிய புதிய மன்னர் ஒரு கட்டளையைப் பிறப் பித்தார்.
அதன்படி ராம்குமார் சொர்க்கம் செல்ல முடிவானது. அவரை தீயில் குளிப்பாட்ட ஏற்பாடு நடந்தது. உண்மைநிலையை அறிந்த ராம்குமார் தப்பும் வழிவகைப் பற்றி யோசித்தார். குடும்பத்திற்குரிய பணிகளை முடிக்க கால அவகாசம் கேட்டு, ஒரு வாரத்திற்குப் பின் தீயில் புகுவதாகத் தெரிவித்தார்.
நடப்பவையெல்லாம் நமசிவாயன் செயலே என்று மனதைத் தேர்த்திக் கொண்டு, தீக்குண்டம் அமைய விருந்த இடத்திற்கு அடியில் ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை அமைத்தார் ராம்குமார். அது அருகிலிருந்த காட்டிற்குச் செல்வதாக இருந்தது. ராம்குமாரை சொர்க்கத்துக்கு அனுப்ப நிச்சயிக்கப்பட்ட நாளும் வந்தது. தீக் குண்டத்தில் குதித்த ராம்குமார் சுரங்கப்பாதை வழியே தப்பிவிட்டார்.
மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்தார். பின்னர் அரண்மனை திரும்பி மன்னரை சந்தித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sooranishwar1.jpg)
"தங்கள் தந்தையை சொர்க்கத்தில் சந்தித்தேன். நலமாக இருக்கிறார். தச்சு வேலை சிறப்பாக செய்துள்ளதாகப் பாராட்டினார். அதற்கு வண்ணம் பூச ஷியாம்குமாரை உடனே அனுப்ப வேண்டுமாம் என்று கூறினார்'' என்றார்.
அதன்படி ஷியாம்குமாரை சொர்க்கத் திற்கு அனுப்பும் வேலைகளை துரிதமாகச் செய்ய உத்தரவிட்டார் மன்னர். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஷியாம்குமார். வஞ்சக எண்ணம் தலைதூக்கியிருந்ததால் அவரால் சிந்திக்க முடியவில்லை. தப்பிக்கமுடியாமல் தீயில் கருகினார்.
முகலாயப் பேரரசர் அக்பர் இந்துக்களிடம் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார். சமயம் நேரும்போதெல்லாம் இந்து மதத்தைப் பற்றியும், இந்துக்களைப் பற்றியும் அமைச்சர் பீர்பாலிடம் கேட்டுவந்தார்.
ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், "கடவுளால் எல்லாக் காரியங்களையும் செய்யமுடியுமல்லவா?'' என்று கேட்டார்.
"ஆம் அரசே! கடவுளால் அனைத்தையும் செய்யமுடியும்'' என்றார் பீர்பால்.
"அவரிடம் அநேக வேலைக்காரர்கள் இருக்கிறார் கள் அல்லவா?''
"ஆம் அரசே.''
எத்தனையோ வேலைக்காரர்கள் இருந்தும் அவர் ஏன் தாமே அவதாரங்கள் எடுக்கிறார்? அவர் தனது பணியாளர்கள் எவரிடமாவது சொல்லி தம் பக்தர்களின் துயரங்களைத் தீர்க்கமுடியுமல்லவா?' ஓடோடி வந்து இறைவனே பக்தர்களைக் காப்பது ஏன்?'' என்றார்.
பீர்பால் சிறிது நேரம் யோசித்தார். பிறகு, "அரசே, தங்களுடைய இந்தக் கேள்விக்கு இப்போதே விடையளிப்பது சாத்தியமல்ல. இன்னும் ஒரு மாதத்தில் பதில் சொல்றேன்'' என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
நாளடைவில் இந்த விஷயத்தை அக்பர் மறந்துவிட்டார். ஒரு மாதம் கடந்துவிட்டது. ஒருநாள் பீர்பால் அக்பரிடம் சென்று, "அரசே, நாம் நாளைக்கு நதியில் உல்ல

நாளடைவில் இந்த விஷயத்தை அக்பர் மறந்துவிட்டார். ஒரு மாதம் கடந்துவிட்டது. ஒருநாள் பீர்பால் அக்பரிடம் சென்று, "அரசே, நாம் நாளைக்கு நதியில் உல்லாசப் படகு சவாரி செய்வோமா?'' என்று கேட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sooranishwar2.jpg)
அக்பருக்கு நிரம்ப மகிழ்ச்சி. மறுநாள் படகுப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி உடனே கட்டளையிட்டார்.
மறுநாள் காலை எட்டுமணி இருக்கும். படகுகள் புறப்படத் தயாராக இருந்தன. படகுகளில் அக்பர் பாதுஷாவும், அவருடைய மந்திரி பிரதானிகளும், மற்ற வேலைக்காரர்களும் இருந்தனர். பீர்பால் மட்டும் இன்னும் வரவில்லை.
எல்லாரும் பீர்பாலின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
மணி எட்டேகால், எட்டரை என்று ஓடி ஒன்பது ஆயிற்று. அப்போதும் பீர்பால் வரவில்லை. அக்பருக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது.
ஓடக்காரர்களிடம் ஓடங்களைச் செலுத்தச் சொன்னார். படகுகள் நகரத் தொடங்கின. அப்பொழுது பீர்பால் இரைக்க இரைக்க ஓடிவருவது தெரிந்தது. "நிறுத்துங்கள் நிறுத்துங்கள், இதோ வந்துவிட்டேன்'' என்று கூவிக்கொண்டே ஓடிவந்தார் பீர்பால்.
அவர் தனது தோளின்மேல் இளவரசர் குர்ரத்தை சுமந்தபடி ஓடிவந்துகொண்டிருந்தார். இளரசரின்மேல் ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. படகுக்காரர்கள் படகுகளை நிறுத்தினர். பீர்பால் அவசர அவசரமாக படகில் ஏறிக்கொண்டார்.
அக்பர் மிகவும் கோபத்துடன், "பீர்பால், இந்நேரம்வரை எங்கே போயிருந்தாய்?'' என்று வினவினார்.
"மன்னிக்க வேண்டும் அரசே! நான் வரும்போது நம் இளரவசர் அழ ஆரம்பித்துவிட்டார். என்னுடன் கூட வரமேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். எவ்வளவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தேன். பயனில்லை. கடைசியில் அவரையும் அழைத்துக்கொண்டு வந்ததால் தாமதமாயிற்று'' என்றார் பீர்பால். அவர் படகில் ஏறியதும் படகுகள் நகர ஆரம்பித்தன. படகுகளில் பல பாடகர்கள் அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அக்பர் படகுகளிலிருந்து கிளம்பிய இனிய இசையைக் காதால் பருகியபடியே நதியில் துள்ளி விளையாடும் வெள்ளைநிற மீன்களின் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ நீரில் விழும் சத்தம் கேட்டது. அக்பர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். பீர்பால் இளவரசன் குர்ரத்தை நதியில் வீசியிருப்பது கண்டு திடுக்கிட்டார். அவருடைய உடலும் உள்ளமும் பதைபதைத்தன. சடாரென்று அடுத்த வினாடியே இளவரசனை மீட்க நதியில் குதித்துவிட்டார்.
எப்படியோ நீந்திக் கஷ்டப்பட்டு குர்ரத்தைப் படகுக்குக் கொண்டு வந்தபோது அவருக்கு மூச்சு வாங்கியது. படகுக்கு வந்தபிறகு தான் தாம் காப்பாற்றி எடுத்து வந்தது தம் பிள்ளை குர்ரத் அல்லவென்றும், குர்ரத்தைப்போல ஒரு மெழுகு பொம்மையே என்றும் அறிந்தார்.
"பீர்பால்! இதெல்லாம் என்ன விளையாட்டு?'' என்று கோபமாகக் கேட்டார்.
"அரசே, மன்னியுங்கள். தாங்கள் ஒரு மாதத்திற்குமுன்பு, "கடவுள் ஏன் ஒவ்வொரு காரியத்தையும் தாமே செய்கிறார்?
தம் வேலைக்காரர்களிடம் செய்யச் சொல்லாமல் தாமே ஏன் அவதாரங்கள் எடுக்கிறார்?' என்று கேட்டீர்களே, அதற்கு பதில் இதுதான்.
இந்தப் படகுகளில் தங்களுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் யாரிடமாவது இளவரசரைக் காப்பாற்றச் சொல்லியிருக்கலாம். ஆனால், உங்கள் மகன்கூட அல்ல; தங்கள் மகனைப் போன்ற ஒரு மெழுகு பொம்மைக்காக தாங்களே நதியில் குதித்துவிட்டீர்களே. இதைப்போல கடவுளும் தம்முடைய குழந்தைகளுக்கு இன்னலென்று தெரிந்ததும், மற்றவர்களை நம்பியராமல் தாமே அவர்களைக் காப்பாற்ற பூமியில் அவதாரங்கள் எடுக்கிறார்'' என்றார் பீர்பால். இதைக்கேட்டதும் பீர்பாலை இறுகத் தழுவி கண்ணீர் சொரிந்தார் அக்பர்.
தெய்வீகம், அசுரம் என இரண்டு குணங்கள் உள்ளன. பகவானின் கோட்பாடுகளை, கட்டளைகளை கடைப்பிடிப்பவர்கள் தெய்வீக குணமுடையோர். பகவானின் கோட்பாடுகளுக்கு எதிராக நடப்பவர்கள் அசுர குணம் உடையோராவர். தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப, அசுர குணமுடையோர் (முன்னர் சொன்ன கதையில் வந்த ஷியாம்குமார் போன்றோர்) அழிந்துவிடுவர்.
தெய்வீக குணத்தில் முதன்மையானது பயமின்றி இருத்தல். மனிதனுக்கு தோல்வியை அளிப்பது பயமேயாகும். எப்பொழுது இதயத்திற்குள் பயம் நுழைகிறதோ, அப்பொழுதே தோல்வி யும் ஆரம்பமாகிறது. மனிதனிடம் உடலபலம் குறைவாக இருந்தாலும், மலையளவு ஆத்மபலம் இருந்தால் எச்செயலையும் செய்து சாதித்து விடலாம்.
அத்தகைய தெய்வீக குணத்துடன் ஆத்மபலத்தைத் தந்து வாழ்வில் ஆனந்த நிலையை வரவழைக்கின்றதொரு உன்னதமான திருத்தலம்தான் ஆத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: சொர்ணபுரீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்.
இறைவி: அபயாம்பிகை, கயற்கண்ணி (அஞ்சனாட்சி).
விஷேச மூர்த்தி: சொர்ணபைரவர், கயற்கண்ணியம்பிகை.
புராணப் பெயர்: ஆற்றூர் மந்தாரம்.
ஊர்: ஆத்தூர்.
தலவிருட்சம்: மந்தார மரம்.
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம்.
சோழவள நாட்டில் அமைந்த திருத்தலங்கள் ஒவ்வொன்றும் மகிமைகளின் சங்கமம். அதில் அன்னை பராசக்தி மயில் வடிவில் (மயூரம்) அப்பன் ஈசனை வழிபட்டுப் பேறுபெற்ற மாயவரம் என்றழைக்கப்படும் மயிலாடு துறைக்கு அருகில், மண்ணியாற்றுக்கும் பழவாற்றுக்குமிடையே அமைந்துள்ளதுதான் ஆற்றூர் என்ற திருத்தலம்.
ஆதியில் இத்தலம் வெண்மந்தார வனமாக இருந்ததால் "மந்தாரம்' என பெயர் உண்டானது. தற்போது ஆத்தூர் என வழங்கப்படுகிறது. இத்தலத்தின் புராணத்தை "புராணம் பாடும் புலவன்' என்று போற்றப்படும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் இயற்றியுள்ளார். ஆலயமிருக்கும் பகுதி திருவிடைத்திட்டை எனப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் இப்பதியை நினைவுகூர்ந்து பாடியிருப்பதால் இத்தலம் வைப்புத்தலமாகப் போற்றப் படுகின்றது.
"மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்கு
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை யருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காணலாமே.'
-திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் "வக்கரை மந்தாரம்' என்று குறிப்பிட்டுள்ளது இந்தத் தலத்தைதான்.
கயிலையிலிருந்து புறப்பட்ட கந்தக்கடவுள் பொன்னி வளநாட்டிலுள்ள திருப்பதிகளை தரிசித்தபடி இந்த மந்தாரவனம் அடைந்து, தனது வேலாயுதத்தால் கொள்ளிடத்தின் தென்கரையில் ஒரு கிளை நதியை உண்டாக்கினார். அந்நதியில் நீராடி ஈசனையும் அம்பிகையையும் அபிக்ஷேகித்தார். மந்தார மலர்கள்கொண்டு பூஜித்து வணங்கினார். அந்நதி சுப்ரமணிய நதி என்றழைக்கப்படுகிறது. கந்தக்காவேரி என்றும் வழங்கப்படுகிறது. இந்நதியின் சிறப்பால் ஆற்றூர் என்று வழங்கப்பட்டது.
அசுரர்களை அழிக்கும் ஆற்றல் வேண்டி திருமால் இந்த அற்புதப் பதிக்கு வந்து சிவனை வழிபட்டார். சிவபெருமான் காட்சிதந்து வேண்டும் வரம் கேட்க, "அசுரர்களை அழிக்கும் ஆற்றலோடு, இத்தலத்தில் தங்களோடு சுகமாக இருந்திட வேண்டும்'' எனவும் வரம் வேண்டினார் திருமால். அதன்படியே அருளினார் அரன். அதுமுதல் திருமால் ஆற்றூரிலேயே குடிகொண்டு சுகாசனப் பெருமாளாக சேவை சாதித்துவருகிறார்.
தல வரலாறு
ஆற்றூரில் அந்தணர்கள் நெறிதவறாது சிவசிந்தனையோடு வாழ்ந்துவந்தனர்.
அவர்களுள் ஒருவருக்கு முன்வினைப் பயனால் ஓர் அற்புத மகள் பிறந்தாள். கயற்கண்ணி என்று பெயரிடப்பட்டு சீரும்சிறப்புடன் வளர்ந்தாள். திருமணப் பருவமடைந் தாள். அவளுக்கு சிவபெருமானையே மணந்துகொள்ளவேண்டுமென்ற பேராசை எழுந்தது. பெற்றோர் எவ்வளவு சொல்லியும் தன் முடிவில் விடாப்பிடியாக இருந்தாள். இறைவனிடம் ஒவ்வொரு நொடியும் தன்னை மணக்கவேண்டுமென வேண்டுதல் வைத்துக்கொண்டே இருந்தாள்.
கயற்கண்ணியின் கோரிக்கையை ஏற்கத் திருவுளம் கொண்ட ஈசன், தனது கணங்கள்மூலமாக கயற்கண்ணியின் பெற்றோர், உற்றார் மற்றும் மன்னனுக்கு விவரத்தைச் சொல்லியனுப்பினர்.
ஊரே வியந்தது. கயற்கண்ணியின் தெய்வீகத்தன்மையைக் கண்டு அதிசயித்துப் போயினர். உடனே திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன. தை மாதம் வெள்ளிக்கிழமையன்று, தேவர் புடைசூழ ஈசன் இத்தலம் வந்து, தக்க தருணத்தில் கயற்கண்ணியின் கரம்பற்றி திருமணம் செய்துகொண்டார். அனைவருக்கும் இறைவன் காட்சியருளி கயற்கண்ணியுடன் மறைந்தார்.
சோழேந்திரன் எனும் அரசன் ஒருசமயம் வனங்களை சுற்றிப் பார்க்கச் சென்றான். யானையின்மீதேறி வனத்துள் நுழைய முற்பட்டான். அது இயலவில்லை. உடன் பொன்விமானம் ஒன்றை வரவழைத்து, அதிலேறி காட்டை வலம்வந்தான். இந்த மந்தாரவனம் அருகே விமானம் வந்தபோது அது தடைப்பட்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. காரணம் புரியாமல் குழம்பிய மன்னன், ஏதோ அதிசயம் இருக்கவேண்டுமென கீழிறங்கிப் பார்த்தான். அங்கே ஒரு மந்தார மரத்தின்கீழே புற்றினைக் கண்டான்.
அதைத் தோண்டிப் பார்க்க சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த லிங்கமூர்த்தியை மனமுருகி வணங்கினான். பிறகு அங்கே திருக்கோவில் எழுப்பினான். காடழித்து நாடாக்கினான். நித்திய பூஜையும் திருவிழாக் களையும் நடத்தினான். சோழ மன்னனது சொன்னயானத்தை (பொன் விமானத்தை) தடுத்தருளியதால் இத்தல ஈசர் சொன்னயான நிரோதர், சொர்ணபுரீஸ்வரர் என பெயர்பெற்றார்.
சிறப்பம்சங்கள்
ப் இறைவன் கயற்கண்ணியை மணம்புரிந்த தலமாதலால், கயற்கண்ணி அம்பிகையை வழிபட்டால் திருமணத்தடை, சுக்கிர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
ப் ஆலயத்தின் முன்புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஒரு தவளை வெகுநாட்களாக வசித்துவந்தது. ஒருசமயம் பெருமழை பெய்ய, கரையோரத்தில் ஒதுங்கியது. பசியால் இரை தேடிவந்த பாம்பொன்று இத்தவளையை விழுங்கியது. "நெடுநாளாக இக்கோவில் தீர்த்தத்தில் வாசம் செய்துவந்ததற்கு இதுதான் பலனா' என்று தவளை நினைத்து வருந்தியது. அம்பிகை அங்கு எழுந்தருளி தவளைக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, பாம்பின் பிடியிலிருந்து தவளை விடுபட்டது. தீர்த்தமும் மண்டூக தீர்த்தம் என்று பெயர்பெற்றது.
ப் இத்தலத்தில் ஒரு முனிவர் புத்திர பாக்கியம் வேண்டி சிவபெருமானை வெகுநாட்களாக வழிபாடு செய்துவந்தார். சிவனருளால் நந்தியெம்பெருமான் அந்த முனிவருக்கு மகனாக அவதரித்தார். முனிவர் தன் மகனுக்கு நந்தி என்று பெயர் சூட்டினார்.
நந்தி சிவபெருமானை பூஜித்துவர, இறைவன் நந்திக்கு ஞானம், அறிவாற்றல் ஆகிய வரங்களைத் தந்து ஞானத்தை உபதேசித்தார். இந்த நந்தியை வழிபாடு செய்தால் அறிவு, ஞானம், புத்திர பாக்கியம், பதவி உயர்வு பெறலாம். இந்த புராண வரலாற்றை நினைவுபடுத்துவதுபோல, நந்தி சிவபெருமானை வழிபடும் கல் சிற்பம் இவ்வாலயத்தில் உள்ளது.
ப் இத்தலத்தில் அஷ்ட புஜ துர்க்கை பூவும், கிளியும் ஏந்தி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறாள். வெள்ளிக் கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
ப் இங்குள்ள பைரவர் சொர்ணபைரவர் என்றழைக்கப்படுகிறார். இவரை அஷ்டமி தியன்று அபிஷேகம் செய்து, சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனைசெய்து வழிபட்டால் கண்திருஷ்டி, பில்லி, சூனியம், நீதிமன்ற விவகாரங்கள் போன்றவை நீங்கி நல்ல தீர்வு கிடைக்கும்.
ப் ஆற்றூரில் வாழ்ந்த சுகேது என்னும் அந்தணரின் மகன் சங்கரன் வேத ஆகமங்களைக் கற்று, சிவனே பரம்பொருள் என்பதை உணர்ந்து திருநீறு பூசி தலயாத்திரை மேற்கொண்டான். அப்போது ஒருநாள் சிதம்பரம் சென்ற சங்கரன் தில்லை அம்பலவாணரின் திரு நடனத்தைக் கண்டு இன்புற்று, "இனி தினமும் தில்லை நடராஜரைக் கண்டபின்பே உணவுண்பேன்; தரிசிக்க முடியா விட்டால் உயிர் துறப்பேன்' என்று சபதமெடுத்தான்.
ஒருசமயம் கொள்ளிடத்தில் பெரு வெள்ளம் பாய்ந்தோடியது. அப்படியிருந் தும் ஒரு மூங்கிலின் துணைக்கொண்டு நீந்தி, தில்லையை அடைந்து சபாபதியை தரிசனம் செய்தான். மாலை நேரமாகிவிடவே பசியால் துன்புற்றான். சற்றே உறங்கிட, கனவில் தோன்றிய பெருமான் "ஆற்றூரிலேயே எமது திரு நடனத்தைக் காட்டுவோம். கவலையினை நீக்குவாய்' என அருளினார்.
கண் விழித்த சங்கரன் சந்தோஷ மடைந்தான். பெருமான் கட்டளைப்படியே நித்தமும் சிவதீர்த்தத்தில் நீராடி, மூலவரை வணங்கி, நடராசப் பெருமானின் திருநடன தரிசனம் கண்டு ஆனந்த வாழ்வினையடைந்தான். இறுதியில் ஈசனோடு இரண்டறக் கலந்தான். இச்செய்தி கேட்ட முனிவர்கள் சிலர் இங்கு பெருமானை வணங்கி, அளப்பிலா ஆனந்தமடைந் தனர்.
ப் பிரம்மதேவர் இத்தலப் பெருமானைப் போற்றி பேறு பெற்றார். கருடனுக்கு செய்த குற்றம் தீர நந்திதேவரும் இங்குவந்து தீர்த்த நீராடி சொர்ணபுரீஸ்வரரை வணங்கி மகிழ்ந்தார். மேலும் ஐயனார், துர்க்கை, இந்திரன் ஆகியோரும் இங்கு பூசனைப் புரிந்து புண்ணியம் பெற்றனர். இத்தலத்தின் மகிமையை சூதமாமுனிவர் நைமிசாரண்யத் தில் முனிவர்களுக் கூறியருளியது குறிப்பிடத் தக்கது.
ப் பரகேசரி, இரண்டாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146-1163), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி. 1168-1173), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218), இராஜகேசரி மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-1256) திரிபுவன சக்ரவர்த்தி ஆகியோரது ஆட்சிக்கால கல்வெட்டுகள் இங்கு பல இடங்களில் காணப்படுகின்றன. இந்த ஊரினை விருதராஜ பயங்கர வளநாடு, குறுக்கை நாட்டு பிரமதேயம் இராஜ நாராயண சதுர்வேதி மங்கலம் என்றும், ஆற்றூர் என்றும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது.
ப்மண்ணியாறு மற்றும் பழவாறுகளுக் கிடையே இவ்வூர் அமைந்துள்ளதால் இடைத்திட்டை என்றும், இத்தல இறைவன் திருவிடைத்திட்டை உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆற்றூரை ஒட்டிய உத்திரங்குடி கேசிங்கன், கல்யாண சோழபுரம், நமசிவாயபுரம், பூதங்குடி ஆகிய ஊர்கள் சதுர்வேதி மங்கலத்தில் அடங்கும் ஊர்களாகும்.
ப் சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் நடந்தாலும், குறிப்பாக தை மாத வெள்ளிக்கிழமை, கயற்கண்ணியை கரம்பிடித்த நாளில் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடக்கும்.
ப் பரம்பரை அறங்காவலர் பி. சிவகுமார் பிள்ளையின் கண்காணிப்பில் தினசரி நான்குகால பூஜைகள் முறைப்படி நடக்கின்றன. "நந்தியே சிவபூஜை செய்து பேறுபெற்ற தலமாதலால் பிரதோஷ வழிபாடு சிறந்தது. கைமேல் பலன் கிட்டும்'' என்கிறார் பரம்பரை அறங்காவலர்.
"மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா? புத்திரர்கள் கல்வி வளர்ச்சியில் தளர்வா? நீதிமன்றப் பிரச்சினையா? நாட்பட்ட நோயால் அவதிப்பட்டு பயத்து டன் வாழ்பவரா? புத்திர பாக்கியம் கிட்ட வில்லையா? இதுபோன்ற தங்களது கோரிக்கைகளை ஆத்தூர் சிவாலயத்தில் சமர்ப்பணம் செய்யுங்கள்.
வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை நல்கும் அபயாம் பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் சொர்க்க வாழ்வைத் தந்தருள்வதோடு, தங்களது கோரிக்கைகளை ஒரு மண்டல காலத்திற்குள் நிறைவேற்றி, ஆனந்த நிலையை அனுபவிக்கச் செய்வார்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகர் சுரேஷ் சிவாச்சாரி யார்.
இயற்கை எழில் சுற்றிலும் சூழ்ந்திருக்க, நாற்புறமும் அழகிய மதில்களோடு, கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் இரண்டு பிராகாரத்தைக்கொண்டு அமைந்துள்ளது ஆலயம். முன்புறம் மண்டூகத் தீர்த்தக் குளம் உள்ளது. நந்தி, பலிபீடம் கடந்து ஆலயத்தின் உள்ளே சென்றால், ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் உள்நுழைவாயில் உள்ளது. அதில் அர்த்தமண்டபம், கருவறை மண்டபம் உள்ளன. மூலவர் கிழக்கு நோக்கி சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். மூலவரின் வாம பாகத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. அபயாம்பாள், கயற்கண்ணி (அஞ்சனாட்சி) அம்பிகை தெற்குநோக்கி நின்ற நிலையில் அருள்கிறார்கள்.
கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி உள்ளன. லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மகாவிஷ்ணு அருட்காட்சியளிக்கிறார். v அஷ்டபுஜ, துர்க்கை, சொர்ணபைரவர், வள்ளி, தெய்வானையுடன் முருகன்,
கஜலட்சுமி, விநாயகர், சனிபகவான் சந்நிதிகள் உள்ளன.
காலை 7.00 மணிமுதல் பகல் 11.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: பரம்பரை அறங்காவலர், ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், மணல்மேடு (வழி), ஆத்தூர் (அஞ்சல்)- 609 204.
பூஜை விவரங்களுக்கு: சுரேஷ் சிவாச்சாரியார், செல்: 96553 51754, 94424 30923, மெய்க்காவலர் ஜெகன், செல்: 82208 64104.
அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில்- திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து, அங்கிருந்து பந்தநல்லூர் சாலையில் சென்று கேசிங்கன் என்ற ஊரைத்தாண்டி வலப்புறம் பிரியும் சாலையில் ஆத்தூர் உள்ளது. வைத்தீஸ் வரன் கோவிலிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறைக்கு வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், பந்தநல்லூருக்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது ஆத்தூர். பேருந்து வசதிகள் உண்டு.
படங்கள்: போட்டோ கருணா
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us