மார்கழி மாதத்தின் சிறப்பை இந்த உலகிற்கு உணர்த்தியவள் ஆண்டாள். "கோதை என்னும் ஆண்டாள், இறைவனிடம் சரணாகதி அடைவதற்கு வழிதேடும் பக்தர்களைக் கடைத்தேற்றம் செய்வதற்காக துளசி வனத்தில் அவதரித்தாள்' என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
ஆண்டாள் காட்டிய வழியில் மார்கழி நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் வாழ்நாளில் சுகமும், இறுதிக்காலத்தில் மோட்சமும் கிட்டும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும்
மார்கழி மாதத்தின் சிறப்பை இந்த உலகிற்கு உணர்த்தியவள் ஆண்டாள். "கோதை என்னும் ஆண்டாள், இறைவனிடம் சரணாகதி அடைவதற்கு வழிதேடும் பக்தர்களைக் கடைத்தேற்றம் செய்வதற்காக துளசி வனத்தில் அவதரித்தாள்' என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
ஆண்டாள் காட்டிய வழியில் மார்கழி நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் வாழ்நாளில் சுகமும், இறுதிக்காலத்தில் மோட்சமும் கிட்டும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக தினமும் ஒரு மலர்மாலையைத் தொடுத்து அளிக்கும் கைங்கர்யத்தை ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்தவர்கள் இன்றும் மேற்கொள்கிறார்கள். வேதபிரான் பட்டர், சுதர்சன் பட்டாச்சாரியார் இந்தப் பணியினை மேற்கொள்கிறார்கள்.
நாள்தோறும் ஒரே ஒரு மாலை மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி நாச்சியார்கோவில் மூலவர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்படுகிறது. அந்த மாலை மறுநாள் விஸ்வரூபத்தின்போது, வடபத்ரசாயி சந்நிதிக்கு மேளதாளங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சாற்றப் படும். பிறகு உஷத்கால பூஜையின்போது, பெரியாழ்வாருக்கு சாற்றப்படுகிறது. இந்த மாலையை பல தலைமுறைகளாக ஒரே குடும்பத் தைச் சார்ந்தவர்களே தொடுத்துவருகின்றனர்.
தினமும், இவர்கள் தங்கள் வீட்டு நந்தவனத் திலிருந்து மாலைக்கான மலர்களைப் பறிக்கிறார் கள். குறுக்கத்திப்பூ, சாமந்தி, சிவப்பு விருட்சி, தாழம்பூ, செங்கழுநீர்ப்பூ, இருவாட்சி, பாதிரி ஆகிய ஏழு மலர்கள் ஆண்டாள் மாலையில் இடம்பெறும். மிகவும் தூய்மையாக- மூச்சுக் காற்றோ எச்சிலோ படாதவாறு வாய்ப்பகுதியைத் துணியால் மூடிக்கொண்டு, யாரிடமும் பேசாமல் மாலை தொடுக்கப்படுகிறது. பிறகு கோவிலில் ஆண்டாளுக்கு பாசுரங்கள் முழங்க மாலை அணிவிக்கப்பட்டு, பூஜை நடைபெறுகிறது.
ஏதேனும் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறவர்கள் இந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்று அணிந்துகொண்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்று கூறப் படுகிறது. இதற்காக முன்கூட்டியே கோவில் நிர்வாகத்தினரிடம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்கிறார்கள். மேலும் ஆண்டாள் அவதரித்த துளசிவனத்தின் மண்ணை எடுத்து நெற்றியில் அணிந்துகொண்டாலும் திருமணத்தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
அந்தத் துளசி நந்தவனத்திற்குள் ஒரு சிறு கோவில் இருக்கிறது. அங்கு ஆண்டாள் சிறுமி வடிவத்தில் எழுந்தருளியுள்ளாள். இக்கோவில் வடபத்ரசாயி கோவிலுக்கும் ஆண்டாள் நாச்சி யார்கோவிலுக்கும் இடையே அமைந்துள்ளது.