மேஷம்

இந்த மாதம் 20-ஆம் தேதிவரை மேஷ ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். பிறகு 2-ஆம் இடத்துக்கு மாறுகிறார். எனவே உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடந்த மாதம் ராகு 3-ல் மாறிவிட்டார். சகோதர வகையில் சகாய மும், நண்பர்களால் ஆதாயமும் உண்டாகும். சிலர் அடிமை வேலையை விட்டுவிட்டு சுயதொழில் முயற்சியில் இறங்கலாம். ராசிநாதன் செவ்வாய் 2-ல் மாறியபிறகு குருவால் பார்க்கப்படுகிறார். குரு, செவ்வாய் பார்வை மாத முற்பகுதிவரை இருக்கிறது. பொருளாதாரத்தில் நிலவும் தட்டுப்பாடு விலகும். 2-க்குடைய சுக்கிரன் 11-ல் இருப்ப தால் காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். வீண்கற்பனை, எதிர் காலம் பற்றிய கவலை மாறும். 14-3-2019-ல் குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு மாறுகிறார். தனுசு குரு 9-ல் ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பது மேலும் சிறப்பு. திறமை, செயல்பாடு திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் பணி புரிவோர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர் பார்க்கலாம். தேக சுகத்தில் ஆரோக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மதிப்பு உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதிவரை 9-ல் இருக்கிறார். கடந்த மாதம் 2-ல் மாறிய ராகு குடும்பத்தில் சில குழப்பங்களையும், நிம்மதிக் குறைபாடுகளையும் உருவாக்கினாலும், குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே மாத முற்பகுதிவரை இடர்பாடுகளையும், இன்னல் களையும் சமாளித்துச் செயல்படலாம். இந்த மாதம் 14-ஆம் தேதிமுதல் குரு அதிசாரமாக 8-ஆமிடத்துக்கு மாறுகிறார். 8-க்குடையவர் 8-ல் ஆட்சிபெறுகிறார். சஞ்சலம், இழப்பு, ஏமாற்றம், அதிர்ஷ்டம் போன்ற பலன்களைச் சந்திக்கலாம். திருமணமானவர்களின் மணவாழ்க்கையில் குழப்பங்களும் பிரச்சினைகளும் தோன்றி மறையும். உடன்பிறந்தவர்களால் தேவை யற்ற வாக்குவாதம், அமைதிக்குறைவு, சச்சரவு போன்றவை ஏற்படலாம். நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையைத் தரும். 8-ல் மாறிய அதிசார குரு 12-ஆம் இடத் தைப் பார்க்கிறார். வீண் விரயங்களை சுப விரயமாக மாற்றும் முயற்சியை மேற் கொள்ளலாம். ராகு- கேது, சனி, குருவின் சம்பந்தம் இருப்பதால் கடும் முயற்சிக்குப் பின்புதான் திருப்தி ஏற்படும் சூழ்நிலை அமையும். படிப் பில் மந்தப்போக்கும் மறதித் தன்மையும் காணப்படும். ஹயக்ரீவரை வழிபடவும்.

Advertisment

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் இந்த மாதம் 20-ஆம் தேதிவரை வக்ரமாக இருக்கிறார். 11-க்குடைய செவ்வாய் 11-ல் ஆட்சி. நீண்ட நாட்களாக இழுபறி நிலை யாக செயல்பட்ட காரியங்கள் நிறைவேறும். ஜென்மத்தில் மாறிய ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் அலைச்சல் திரிச்சலை உண்டாக்கினாலும், முடிவில் அனுகூலமான பலனைத் தரும். இம்மாதம் 14-ஆம் தேதிமுதல் குரு அதிசாரமாக தனுசுக்கு மாறி ராசியைப் பார்க்கிறார். எனவே உங்க ளது திறமை, செயல்பாடுகளிலிருக்கும் தடைகள் விலகி ஜெயம் உண்டாகும். ராசிநாதன் புதன் வக்ரத்தில் உக்ரபலம் பெறுகிறார். 7-ல் உள்ள சனி கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது சச்சரவு, வாக்குவாதம், அனுசரிப்பற்ற தன்மையை ஏற்படுத்தினாலும், குரு மாறியபிறகு அவை யாவும் சுமுகமாகும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடையே கருத்து வேறுபாடு, பகைமைநிலை மாறி ஒற்றுமை உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்கம், வியாஜ்ஜியங்களில் சமாதான முடிவுகளை எதிர்பார்க்கலாம். நண்பர்களின் சகாயமும் உதவிகளும் கிடைக் கும். தாயார் வகையில் சில விரயங்களைச் சந்திக்கநேரும். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

கடகம்

Advertisment

கடந்த மாதம்முதல் கடக ராசியில் நின்ற ராகுவும், 7-ல் நின்ற கேதுவும் 12, 6-ஆம் இடங்களுக்கு மாறியது ஒரு பெரிய ஆறுதல் என்றே கூறலாம். 11-க்குடைய சுக்கிரன் 7-ல் நின்றும், குரு 5-ல் நின்றும் ராசியைப் பார்க்கின்றனர். எனவே உங்கள் காட்டில் மழைதான்! துணிந்து செயல்படலாம். வெற்றியையும் சந்திக்கலாம். சனி 6-ல் கேதுவோடு கூடியிருக்கிறார். பொதுவாக ராகு- கேதுவுக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் நல்ல இடங்கள் என்பதுபோல, சனிக்கு 6-ஆம் இடம் நல்ல இடம். குரு 14-ஆம் தேதிமுதல் 6-ஆமிடத்துக்கு மாறுகிறார். ராகு- கேது, சனி, குரு 6-ஆம் இடத்தில் சம்பந்தப்படுவதால் பழைய கடன்கள் அடை படும். தொழில் சம்பந்தமாகவோ, கட்டடம் சம்பந்தமாகவோ புதிய கடன்கள் உருவாகும். எதிரி, போட்டி, பொறாமைகளைச் சந்தித்தாலும் சமாளித்து வெற்றிபெறலாம். தோல்விக்கு இடமில்லை. ராகு 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10-க்குடைய செவ்வாய் 10-ல் ஆட்சி. தொழில், வேலை, வாழ்க்கை ஆகியவற்றில் முன்னேற்றமும் யோகமும் ஏற்படலாம். புதிய முயற்சிகள் கைகூடும். பூமி, வீடு, மனை சம்பந்தமாக பிரச்சினைகள் உருவானாலும், 6-ஆமிடத்துச் சனி அவற்றை மாற்றி அனுகூலமான பலனைத் தருவார் என்பதில் ஐயம் தேவையில்லை.

சிம்மம்

சிம்ம ராசிக்கு இதுவரை 4-ல் இருந்த குரு இப்போது 5-ஆம் இடம் தனுசுவுக்கு அதிசாரமாக 14-ஆம் தேதி மாறி, ராசியைப் பார்க்கிறார். அதுவரை சிம்ம ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்க்கிறார். இந்த மாதம் முழுவதும் கழுவின மீனில் நழுவின மீன்போல உங்களைத் தழுவிய பிரச்சினைகளிலிலிருந்து தப்பிக்கலாம். 5-ல் மாறிய கேதுவும், 5-ல் இருக்கும் சனியும் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளையும், பிள்ளைகளால் சங்கடம், வருத்தத்தையும் உண்டாக்கினாலும், குரு அதிசாரமாக மாறுவதால் அவற்றிலிலிருந்து ஓரளவு விடுபடலாம். நீண்டகாலத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள லாம். 3-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவதால் சகோதர சகாயம், உதவி ஆகியவற்றை எதிர் பார்க்க முடியாது. குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தகப்பனார் வகையில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மாறும். செல்வாக்குள்ள பிரமுகர் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்த மும் உண்டாகும். மன தைரியம், துணிவு எல்லாம் அமையும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் வக்ரமாக இருக்கிறார். 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் கடந்த மாதம் மாறியிருக்கிறார்கள். 4-ல் உள்ள சனி அர்த்தாஷ்டமச் சனி- அஷ்டமத் தில் பாதி- சங்கடங்களை அனுபவிக்கும் நிலை. பிள்ளைகள் வகையில் கவலை, கணவரால் நிம்மதிக்குறைவு போன்றவற்றை சந்திக்கும் சூழ்நிலை. என்றாலும் தொழில்துறையில் போட்டி, பொறாமைகள் விலகும். ராகுவும் கேதுவும் கேந்திர ஸ்தானத் தில் நிற்பதும் ஒருவகையில் நன்மைதான். புதிய முயற்சிகள் கைகூடும். வியாபார அடிப் படையில் வெளியூர்ப் பயணம் ஆதாயம் தரும். சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் பொறுப்புகளைச் சுமந்து, கடமை உணர் வோடு பணியாற்றி சிறப்புகளை அடைய லாம். இந்த மாதம் முற்பகுதிவரை 7-ஆமிடத் தைப் பார்க்கும் குரு திருமணமானவர்களுக் குள் கருத்து ஒற்றுமையையும், அன்யோன்யத் தையும் ஏற்படுத்தும். ராகு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால்- 4-ல் கேதுவும் இருப்பதால் பூமி, வீடு, வாகன யோகங்களை அடையலாம் அல்லது பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை எனப்படும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் 22-ஆம் தேதிவரை 4-ல் (கும்பம்) சஞ்சரிக்கிறார். 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 2-ல் இருக்கும் குருவும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். தொழில்துறையில் புதிய அணுகுமுறைகளைக் கையாளலாம். சிலருக்கு வேலையில் இடமாற்றம் அல்லது ஊர்மாற்றத்தை சந்திக்கநேரும். கடந்த மாதம் நடந்த ராகு- கேதுப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும் அதேசமயம், சில விஷயங்களில் சங்கடத்தை யும் உண்டாக்கும். என்றாலும் கேது மாறிய 3-ஆம் இடம் நல்ல இடம். அங்கு சனியும் இருக்கிறார். சகோதர வகையில் நிலவும் ஒற்றுமைக்குறைவையும், பிரச்சினைகளையும் மாற்றி, சகாயத்தையும், நண்பர்களின் நட்பை யும் உதவியையும் அடைவதற்கு உதவி செய்வார். 14-ஆம் தேதி குரு 3-ல் அதிசாரமாக மாறுகிறார். 9-ல் உள்ள ராகுவைப் பார்க்கிறார். பூர்வபுண்ணியம் பலப்படும். ஆன்மிக வழிபாடு கைகூடும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தகப்பனாருக்கு வைத்தியச்செலவு, தேக சுகக்குறைவு உண்டாகலாம். தாடிக் கொம்பில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலிலில் தன்வந்திரியை வழிபடவும்.

விருச்சிகம்

rasipalan

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். எனவே மறைவு தோஷம் பாதிக்காது. ஏழரைச்சனி நடந்துகொண்டிருப்பதாலும், அதோடு கடந்த மாதம் நடைபெற்ற ராகு- கேதுப் பெயர்ச்சியாலும் சில அலைக்கழிப்பு களையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும். 2-ஆம் இடம் வாக்கு, தனம், வித்தை, கல்வி, குடும்பம், நேத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம். எனவே வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற முடியாதபடி சோதனை, பணத்தட்டுப்பாடு, சிக்கல், கல்வி மந்தம், மறதி, குடும்பத்தில் குழப்பம், சஞ்சலம், வறட்டுப் பிடிவாதம் போன்றவற்றை எதிர்கொள்ளநேரும். என்றா லும் 14-ஆம் தேதி குரு அதிசாரமாக 2-ஆம் இடத்துக்கு மாறி ஆட்சிபெறுவதால் பொருளாதாரத்தில் காணப்படும் கிடுக்கிப் பிடி நிலை மாறும். 8-ல் உள்ள ராகு அலைச் சல் திரிச்சலைக் கொடுத்தாலும், ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கைகூடும். இறைவழிபாடு, தியானம் ஆகியவற்றில் மனதைச்செலுத்தி தீர்வுகாணவேண்டுமே தவிர, பிரச்சினைகளால் லாகிரி வஸ்துகளில் மனதைச் செலுத்தாமல் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. கடந்த மாதம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் மாறிப் படுத்துகிறார்கள். உடல்நலத்தில் வைத்தியச் செலவு, மனக் குழப்பம், நிம்மதிக்குறைவு போன்றவற்றை சந்தித்தாலும், இந்த மாதம் 14-ஆம் தேதி குரு ஜென்மத்தில் ஆட்சியாக- அதிசாரமாக வந்தமர்கிறார். 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். இது பாதி பாரத்தைக் குறைப்பதுபோல! கணவன்- மனைவிக்குள் பிரச்சினைகள் மாறும். தகப்பனாருடன் உருவான கருத்து வேறுபாடுகள் விலகும். மதிப்பும் மரியாதை யும் கூடும். தொழில்முயற்சிகளில் முன்னேற்றமும், கீர்த்தியும், செல்வாக்கும் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடும், வி.ஐ.பி.க்களின் அறிமுக மும் நட்பும் ஆதரவும் கிடைக்கும். 5-ல் செவ்வாய் ஆட்சி, ராகு பார்வை. பிள்ளை களால் எதிர்பார்த்த உதவியும் ஒத்தாசையும் கிடைக்காமல் போனாலும், குரு ஜென்மத் தில் மாறியபிறகு 5-ஆம் இடத்தைப் பார்ப்ப தால், அவர்களின் எதிர்கால நலன்கருதி செயல்பட்ட காரியங்கள் பூர்த்தியாகும். பணத்தேவைகள் நிறைவேறும். ஆன்மிகப் பயணம் ஏற்படும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 12-ல் நிற்க, அவருக்கு ராகு- கேது சம்பந்தம். ஒரு செயலை முடிக்க இத்தனை நாள் அவகாசம் எடுக்கலாம் என்று திட்டம் போட்டால், அதைக் குறிப்பிட்ட நாளில் முடிக்கமுடியா மல் இழுபறியான நிலையையும், அலைக் கழிப்பையும் சந்திக்க வேண்டியநிலை. ஏற்கெனவே ராகுவும் கேதுவும் இருந்த இடம் சாதகமும் இல்லை; பாதகமும் இல்லை. என்றாலும் ஏழரைச்சனி நடந்த காரணத் தால் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. சிலருக்கு தொழில்துறையில் எதிர்பாராத சிரமங்களும் சிக்கல்களும் ஏற்பட்டு, அதை சமாளிக்க கடன் வாங்கவேண்டிய அவசிய மும் ஏற்படும். 11-ல் உள்ள குரு 14-ஆம் தேதி அதிசாரமாக 12-ஆம் இடத்துக்கு மாறுவ தால், 12-ஆம் இடத்துப்பலனை விருத்தி செய்வார். 6-ஆம் இடத்துக்கு மாறிய ராகு கடனை அடைக்கும் வழிகளைத் தந்தாலும், குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் பழைய கடன் அடைபட்டு புதிய கடன் உருவாக லாம். 10-க்குடைய சுக்கிரன் ஜென்மத்தில் இருக்கிறார். வேலையில் நல்ல மாற்றங்கள் நிகழும். தேக சுகம் தெளிவுபெறும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அது ஒருவகையில் அனுகூலம்தான். தவிர, கடந்த மாதம் ராகு- கேதுப் பெயர்ச்சியானதில் ராகு 5-லும், கேது 11-லும் மாறியிருக்கிறார்கள். கேது மாறிய இடம் மிக அற்புதமான இடம். இந்த மாதம் 14-ஆம் தேதி விருச்சிகத்தில் இருக்கும் குரு தனுசுவுக்கு (11-ஆம் இடத்துக்கு) மாறுகிறார். அது மேலும் ஒரு பிளஸ் பாயின்ட். அவர் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். 5-ஆமிடம் என்பது மக்கள், திட்டம், மனது, உபதேசம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம் முதலிலியவற்றைக் குறிக்கும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் மேற்கண்டவற்றில் நல்ல பலன்களை சந்திக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகத்தொடர்பால் வியாபாரிகளின் லாபம் அதிகமாகும். சிலருக்கு கடல்கடந்து வேலைக்குச் செல்லும் வாய்ப்புகளும் ஏற்படலாம். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பையும் பெறலாம். திடீர் அதிர்ஷ்டம், ராஜயோகமும் ஏற்பட வாய்ப்புண்டு. தெய்வ கைங்கர்யங்களில் கலந்துகொள்ளும் அமைப்பும் உண்டாகும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு இம்மாதம் 14-ஆம் தேதி அதிசாரப் பெயர்ச்சியாக தனுசுவுக்கு (10-ஆமிடம்) வருகிறார். 10-க்குடைய குரு 10-ல் ஆட்சி பெறுவது ஒரு பலம். தொழில்துறையில் ஏற்பட்ட தொய்வுகளை சரிசெய்யலாம். விலகிப்போன வேலைக்கே மீண்டும் சேருமாறு அழைப்புவிடுத்து முதலாளியே உங்களைக் கேட்கலாம். இவ்வாறு நற்பலனை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். 2-க்குடைய செவ்வாய் 2-ல் ஆட்சி. எனவே பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள் படிப்படியாக விலகும். 2-ஆமிடத்தை குருவும் பார்க்கிறார். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். சிலர் இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவற்றைச் சந்திக்கலாம். உத்தியோக உயர்வும் உண்டாகும். உடன்பிறப்புகள் வகையில் இருந்துவரும் மனக்கசப்புகள், சலசலப்புகள் மாறாது. உடல் நலத்தில் அவ்வப்போது சில தொந்தரவுகள், வைத்தியச்செலவுகள் வந்து விலகும். பாதிப்புக்கு இடமிருக்காது. சிலருக்கு மனைவிபேரில் தொழில்செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். அதற்கான உதவியும் வங்கிக்கடனும் கிடைக்கும்.