Advertisment

செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்யும் மங்கள்நாத் ஆலயம்!

/idhalgal/om/mangalnath-temple-which-cures-mars-evil

ங்கள்நாத் மந்திர்...

இந்த ஆலயம் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜெய்னில் இருக்கிறது.

புராணத்தில் உஜ்ஜெய்ன், "செவ்வாய் அவதரித்த இடம்' என்று கூறப்பட்டிருக்கிறது.

Advertisment

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த தோஷத்தை சாந்தப்படுத்த நினைப்பவர்கள் ஏராளமாக இந்த ஆலயத்திற்கு திரண்டுவந்து பூஜை செய்வார்கள்.

பாரதத்தில் செவ்வாய்க்கு பல ஆலயங்கள் இருக்கின்றன. எனினும், உஜ்ஜெய்ன் செவ்வாய் பிறந்த தலமாக இருப்பதால், இங்கு நடைபெறும் பூஜைக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். "மங்கள்' என்றால் இந்தியில் "செவ்வாய்' என்று அர்த்தம்.

இந்த ஆலயத்திலிருக்கும் மங்கள் கிரகம், லிங்க வடிவத் தில் (சிவனின் தோற்றத்தில்) இருக்கிறது.

சிந்தியா வம்ச மன்னர்

ங்கள்நாத் மந்திர்...

இந்த ஆலயம் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜெய்னில் இருக்கிறது.

புராணத்தில் உஜ்ஜெய்ன், "செவ்வாய் அவதரித்த இடம்' என்று கூறப்பட்டிருக்கிறது.

Advertisment

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த தோஷத்தை சாந்தப்படுத்த நினைப்பவர்கள் ஏராளமாக இந்த ஆலயத்திற்கு திரண்டுவந்து பூஜை செய்வார்கள்.

பாரதத்தில் செவ்வாய்க்கு பல ஆலயங்கள் இருக்கின்றன. எனினும், உஜ்ஜெய்ன் செவ்வாய் பிறந்த தலமாக இருப்பதால், இங்கு நடைபெறும் பூஜைக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். "மங்கள்' என்றால் இந்தியில் "செவ்வாய்' என்று அர்த்தம்.

இந்த ஆலயத்திலிருக்கும் மங்கள் கிரகம், லிங்க வடிவத் தில் (சிவனின் தோற்றத்தில்) இருக்கிறது.

சிந்தியா வம்ச மன்னர்கள் இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டினார்கள்.

உஜ்ஜெய்ன் நகரம் பகவான் சிவனின் நகரமாக...

மகா காளேஸ்வரின் நகரமாக மக்களால் கருதப்படுகிறது.

Advertisment

பகவான் மங்கள் நாத், சிவனின் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் பக்திப் பெருக்குடன் வந்து பகவானை தரிசிக்கிறார்கள்.

ver

இந்தக் கோவிலைப் பற்றிய ஒரு கதை இது...

புராண காலத்தில் அந்தகாசுரன் என்றொரு அரக்கன் சிவனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். தன் ரத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கான அரக்கர்கள் பிறக்க வேண்டுமென்ற வரமே அது.

அங்குள்ள அவந்திபுரம் என்ற பகுதியில் அப்படிப் பிறந்த அரக்கர்கள் மக்களைப் பெரிய அளவில் துன்பங்களுக்கு ஆளாக்கு கிறார்கள்.

அரக்கர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களைக் காப்பாற்றும்படி பகவான் சிவனிடம் வேண்டுகின்றனர்.

சிவன் அந்தகாசுரனுடனும் மற்ற அரக்கர் களுடனும் போர் புரிகிறார். அப்போது பகவான் சிவனின் வியர்வைத் துளிகள் பூமியில் சிந்துகின்றன. அந்த வியர்வையின் வெப்பத்தில் பூமி இரண்டாகப் பிளக்கிறது. அப்போது செவ்வாய் கிரகம் பிறக்கிறது.

சிவன், அந்த அரக்கர்கள் அனைவரையும் அழிக்கிறார். அரக்கனான அந்தகாசுரனை பகவான் சிவன் வதம் செய்கிறார்.

அப்போது செவ்வாய் கிரகம், அரக்கனின் ரத்தத்தை தனக்குள் எடுத்துக் கொள்கிறது. அதைத் தொடர்ந்து செவ்வாயின் பூமி சிவப்பாக ஆகிறது.

ஸ்கந்த புராணத்தில்... அவந்தி காண்டத்தில் இந்தக் குறிப்பு இருக்கிறது.

அனைத்து செவ்வாய்க்கிழமை களிலும் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக இந்த ஆலயத்திற்கு பக்தர் கள் வருகிறார்கள். இங்கு வந்து பக்திப் பரவசத்துடன் பூஜை கள் செய்கிறார்கள்.

ஜாதகத்தில் லக்னத்தில், 4-ஆம் பாவத் தில், 7-ஆம் பாவத்தில், அஷ்டமத்தில், 12-ஆம் பாவத்தில் செவ்வாய் இருப் பவர்கள் இங்குவந்து சிறப்பு பூஜைகள் நடத்துவார்கள்.

மார்ச் மாதத்தில் அங் காரக சதுர்த்தியன்று இங்கு யாகம், பூஜைகள் நடக்கும்.

இந்த ஆலயத்தில் சாதத்தைச் சமைத்து, அதை சிவலிங்கத்தின்மீது அபிஷேகம் செய்வார்கள். அதற்குப் பெயர் "அன்ன அபிஷேகம்'. இந்தியில் "பாத் பூஜா' என்று அதைக் கூறுகிறார்கள்.

இங்கு காலை 6.00 மணிக்கு முதல் பூஜை நடக்கிறது. பூஜை முடிந்தவுடன், அந்தப் பகுதி முழுக்கக் கிளிகள் நிறைந்திருக்கும்.

கிளிகளுக்கு பக்தர்கள் உணவு தருவார்கள். கிளிகளின் வடிவத்தில் செவ்வாய்க் கிரகமே வந்து உணவு சாப்பிடுவதாக பக்தர்கள் நம்பு கிறார்கள்.

இந்த ஆலயத்திற்குச் சென்று பகவான் மங்கள்நாத் எனும் செவ்வாயை வழிபட நினைப்பவர்கள் 1,670 கிலோமீட்டர் தூரம் பயணித்து உஜ்ஜெய்னுக்குச் செல்ல வேண்டும்.

சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் பயணிக்கவேண்டும். பயண நேரம் 28 மணிகள். உஜ்ஜெய்ன் ரயில் நிலையத் திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத் தில் ஆலயம் இருக்கி றது. பேருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.

விமானத்தில் பயணிப்பவர்கள் இந்தோரில் இறங்க வேண்டும். இந்தோரி லிருந்து 65 கிலோ மீட்டர் தூரத்தில் மங்கள்நாத் ஆலயம் இருக்கிறது.

om010424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe