கண்களுக்கும் புலன்களுக்கும் புலப்படாதது மனம். சாமானிய மனிதன்முதல் சர்வாதிகார மனிதன்வரை அனைவரையும் ஆட்டுவிக்கும் மந்திரக்கோல் மனமாகும்.
பலவற்றையும் உருவாக்கும் மனித மூளையையும், உடல் என்னும் இயந்திரத்தையும் சாதாரணமாகக் கீழே தள்ளிவிடும். அதே சமயம் ஒரு தனிமனிதனை மிகச்சிறந்த பண்புகள்கொண்ட உயர்ந்த ஞானியாக மாற்றும் வல்லமையும் மனதிற்கு உண்டு. மனமே அனைத்து செயல்களுக்கும் காரணியாக உள்ளது.
மனமென்பது ஒன்றுதான். ஆனால் அது செயல்படும் விதத்தில்தான் வேற்றுமை உள்ளது. மனம் செயல்படும்போது நீ, நான், எனது, ஆண்- பெண், ஏழை- பணக்காரன், முட்டாள்- அறிவாளி, அழகு- அழகற்றது என்று பலவாறாக உருமாறி வித்தியாசப்படுத்திப் பார்க்கிறது. எப்போதும் மனதைக் குழப்பிக்கொண்டே இருப்பவர் குழப்பவாதி. மனதைச் சிதறச்செய்து தாழ்வுமனப்பான்மையோடு செயல்படுபவர் மன நோயாளி. மனம் தன்னை உயர்த்திக் கொள்வதிலும், தன்னையே தாழ்த்திக்கொள்வதிலும் மாறிமாறி செயல்பட்டு வருகிறது. இருபத்தைந்து வயதில் தான் இருந்த தோற்றத்தையே ஐம்பது வயதிலும் விரும்புகிறது.
இருபத்தைந்து வயதில் ஒருவரது தலைமு

இருபத்தைந்து வயதில் ஒருவரது தலைமுடி கருப்பாக- அழகாக இருக்கும். ஐம்பது வயதைத் தொடும்போது அதே தலைமுடி நரைத்துவிடும். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. மாறாக உடனே தலைமுடிக்கு வண்ணம் தீட்டுகிறார்கள். தலைமுடி நரைத்தால் அதை அப்படியே விட்டுவிட்டால் அதுவும் அழகாகத்தான் தெரியும்.
என்னதான் தலைமுடிக்கு வண்ணம் பூசினாலும் மனிதனது முகமும் உடலும் வயதானதைக் காட்டிவிடுமல்லவா?
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. ஒருவரின் அகமென்பது உடலினுள்ளே இருக்கும் மனமாகும். மனம் பரிபூரணமான மகிழ்ச்சியோடு இருந்தால் முகம் மட்டுமல்ல; உடலின் மொத்த உறுப்புகளும் இளமை குறையாமல் அழகாகத் தோன்றும்.
என்னிடம் யோகா பயிற்சி கற்று வரும் மாணவனொருவன் மிகவும் முகம் சோர்ந்து காணப்பட்டான். என்னவென்று கேட்டபோது, ""ஐயா, என் தோற்றம் அழகாக இல்லையென்பதால் பலரும் கேலி பேசுகிறார்கள்'' என்று வருத்தத்துடன் சொன்னான். நான் அவனிடம் நாய், குரங்கு, பூனை, முயல், சிங்கம், கரடி, பன்றி, ஆடு, மாடு என்று வரிசையாக சில விலங்குகளின் பெயரைக் குறிப்பிட்டு, அவற்றில் அழகானது எதுவென்று கேட்டேன். அவன் சட்டென்று, ""முயல்தான் எனக்கு அழகாகத் தோன்றுகிறது'' என்றான். பின்னர் சுதாரித்து, ""இல்லை யில்லை; இறைவனின் படைப்பில் அனைத் துமே அழகுதான்'' என்றான்.
""எனக்காக சொல்லவேண்டாம். உன் மனதில் பட்டத்தைக் கூறு'' என்றேன். அவன் சற்று தயங்கி, ""முயல்தான் அழகு. குரங்கு, பன்றி இவையெல்லாம் அழகின்றி இருக்கின்றன'' என்று சொன் னான். ஆனால் உண்மை என்ன?
விலங்குகளெல் லாம் தங்கள் தோற்றத்தைப் பற்றியோ அழகைப் பற்றியோ சிந்திப்பதில்லை. அவை குட்டியாக இருக்கும்போது எத்தகைய தோற்றத்தில் இருந்தனவோ வளர்ந்தபின்பும் அவ்வாறே இருக்கும். அவை வயதாகிவிட்டதென்று கவலைப்படுவது மில்லை. பசித்தபோது கிடைத்த உணவை உண்கின்றன; உறங்குகின்றன. வேறு எதைப் பற்றியும் கவலைகொள்வதில்லை. அதனால் தான் அவை எப்போதும் அழகாக இருக்கின்றன. அவை தங்கள் இயல்புத் தன்மையிலிருந்து மாறுவதில்லை.
ஆனால் மனிதனின் மனம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. பேராசை என்னும் பேய்பிடித்து ஆட்டுவிக்கிறது. பிறரை பற்றிக் குறைகூறிக்கொண்டே இருக்கிறது.
"அவனிடம் இருப்பது என்னிடம் இல்லையே' என்று அலைபாய்கிறது. இத்தகைய எண்ணங்கள் ஒருவனை மன நோயாளியாக மாற்றிவிடும 'எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறொருவருடையதாகும்' என்பதே இயற்கைத் தத்துவம். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும். சங்கநூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை-
"படினும் பயனிலவும் பட்டி உரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத்தவர்'
என்று கூறுகிறது. உடல், உயிர், உள்ளம் நலமாக இருக்கவேண்டும். நல்ல உள்ள முடையவர்கள் பொய்பேசமாட்டார்கள். பயனற்ற சொல்லைக் கூறமாட்டார்கள். பிறரைப் பழித்துப் புறம்பேசமாட்டார்கள். நடுநிலை தவறாதவர்களாக இருப்பார்கள். மனிதன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருந்துவிட்டால் யாருக்கும் எவ்விதத் துன்பமும் ஏற்படாது.
"அரனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை'
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அறமென்று ஒன்மில்லை என அழித்துப் பேசிவிட்டு, அறம்ல்லாதவற்றைச் செய்வது தவறு. அதைவிட தவறு, ஒருவன் இல்லாத இடத்தில் அவனைப் பழித்துப்பேசிவிட்டு, அவனை நேரில் காணும்போது பொய்யாக சிரித்துப் பேசுவது.
"பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண்டவர் தமைப்போல
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறையறி வோமென்பர் நெஞ்சிலர் தாமே'
என்கிறார் திருமூலர். புறங்கூறாமை என்பதற்கு, உள்ளத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக, பிறர்மீது பழிகூறாமல் இருப்பது என்று பொருளாகும். கீற்றுபோல சிறு பிறையாகவுள்ள நிலவு வளர்ந்து முழுமதியாகும்போது, அதனுள் கருநிழல் சற்று காணப்படும். அதை நிலவின் களங்கமென்றும், முயலென்றும் கூறுவர். அதை உண்மையென நினைத்து ஒருவன் வாள் ஏந்திக் கொண்டு அதைக் கொள்கிறேன் என்று புறப்பட்டால் எவ்வாறிருக்கும்? அதுபோன்றது தான் கருநீல மணிபோன்ற கழுத்துடைய நீலகண்டன் சிவபெருமானை நெஞ்சுக்குள்ளே காணக் கிடைக்காதவர்கள், நாங்கள் மனநிறைவை உணர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். இவர்கள் வீணர்கள். வெற்றுரையாளர்களேயன்றி விவரமறிந்தவர்களாக மாட்டார்கள்.
எனவே மனத்தில் உறையும் பரம்பொருளைப் பற்றி சிந்திப்போம்; துதிப்போம். அழகு- அழகற்றது என்ற பேதம் விலகும். மனமே அனைத்திற்கும் காரணம் மனம் அழகாகனதானால் எண்ணம் அழகாக இருக்கும். எண்ணம் அழகானதானால் நம் கண்முன்னே தெரியும் அனைத்துமே அழகாக இருக்கும். அங்கே சிவப்பரம்பொருள் இருப்பதை உணரமுடியும். மனமே சிவம்; சிவமே மனம்.