கூர்மநாத சுவாமி ஆலயம் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலிருக்கும் காராமடல் என்ற இடத்தில் இருக்கிறது. மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மாவதாரத்தைக் கொண்டிருக்கும் ஆலயமிது. கூர்மம் என்றால் ஆமை. அங்கிருக்கும் மகாலட்சுமிக்கு கூர்மநாயகி என்று பெயர்.

இந்த மகாவிஷ்ணு ஆமை வடிவத்தில் இருக்கிறார். மிகவும் பழைமையான இந்த ஆலயம் இரண்டாவது நூற்றாண்டில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. கூர்மாவ தார வடிவத்துடன் விஷ்ணுவை வழிபடும் ஆலயம் உலகிலேயே இது ஒன்றுதான். முன்னர் இது சிவாலயமாக இருந்திருக் கிறது. அப்போது ஆலயத்திலிருந்த மூர்த்தியை "கூர்மேஸ்வரர்' என்று மக்கள் வழிபட்டிருக்கின்றனர். பின்னர் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீராமானுஜர் இதை விஷ்ணு ஆலயமாக மாற்றினாராம். அப்போதிருந்து இது வைணவர்களுக்கான ஆலயமாக விளங்கிவருகிறது.

இந்த கோவிலில் இரண்டு மிகப்பெரிய ஸ்தம்பங்கள் இருக்கின்றன. இவைதவிர, 108 ஒற்றைத் தூண்கள் இருக்கின்றன. (இந்த ஆலயத்திற்கு அருகிலேயே ஒரு ஆமைப் பண்ணை இருக்கிறது.) சைவர்கள், வைணவர்கள் என அனைவருமே இங்கு வந்து கூர்ம வடிவ விஷ்ணு பகவானை வழிபடுகின்றனர். தினமும் நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.

வருடத்தில் நான்கு சிறப்பு த்திருவிழாக் கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் டோலோற் சவத் திருவிழா மிக விசேஷமானது.

Advertisment

கஜபதிராஜு என்ற வம்சத்தைச் சேர்ந்தவர் கள் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்கின்றனர். கலிங்க மன்னன் அனந்த வர்மன் சோடகங்கன் இந்த ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை 11-ஆம் நூற்றாண்டில் ஏற்றிருக்கிறான்.

ஆலயத்தின் மேற்கூரை தாமரை மலரின் எட்டு இதழ்களின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ராமர், சீதை, ஆண்டாள் ஆகியோருக்கும் சந்நிதி உண்டு.

ஸ்ரீகூர்மநாத சுவாமி கருங்கல்லால் உருவாக்கப்பட்டவர். எனினும், தினமும் அவருக்கு சந்தனம் பூசப்படுவதால் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறார். ஒரு அடி உயரம், ஐந்தடி அகலம் கொண்டவர்.

Advertisment

n

இங்கு "சுத குண்டம்' என்ற பெயரில் ஒரு குளம் இருக்கிறது. அதற்கு மத்தியில் ஒரு மண்டபம் உள்ளது. இதை நரசிம்ம மண்டபம் என்கின்றனர். இந்தக் குளத்தின் அடியிலிருக்கும் மண் வெண்மை நிறத்தில் இருக்கிறது. கண்ணன் கோபியர்களுடன் விளையாடிய இடம் இதுவென்பது வரலாறு.

முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் முன்னோர்கள் மோட்ச மடைவார்கள் என்பது நம்பிக்கை.

பத்மபுராணத்திலும், நரசிம்ம புராணத்திலும் கூர்ம வடிவத் தைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. பகவத் புராணம், மகாபாரதம், பத்மபுராணம் ஆகியவற்றில், சந்ததிகள் உருவாவதற்காக மகா விஷ்ணு இந்த வடிவத்தை எடுத்த தாகக் கூறப்பட்டிருக்கிறது.

கடலுக்குள் மறைக்கப்பட்ட பூமியை, மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து மீட்டுவந்த வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.

பத்மபுராணத்தில் வரும் கதை இது... துர்வாச முனிவர் இந்திர னுக்குக் கொடுத்த மகாவிஷ்ணு வின் மாலையை அவன் அலட்சி யப்படுத்த, அதனால் அளவற்ற கோபத்திற்கு ஆளான துர்வாசர், ""உன் பிரகாசம் குறையட்டும். நீ பலவீனமானவனாவாய்...''

என்று சபித்தார். அதைத் தொடர்ந்து இந்திரனும், தேவர்களும் பலவீனர் களாகிவிட்டார்கள். அப்போது அரக்க னான "பலி' தன் அரக்கர் கூட்டத்துடன் தேவர்களுடன் போரிட்டான். தேவர்கள் பயந்து ஓடி, விஷ்ணுவிடம் தஞ்சமடைந்த னர்.

அப்போது அவர் ""பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுப்பதே ஒரே வழி'' என்று சொன்னார். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட தேவர்கள் தந்திரமாக அசுரர் களையும் கூட்டு சேர்த்துக்கொண்டனர். மந்தர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. பாரம் காரணமாக மந்தர மலை கடலுள் அமிழ்ந்தது. அப்போது மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து அம்மலையை அமிழ்ந்துவிடாமல் தாங்கினார்.

விஷ்ணு அவ்வாறு தோன்றிய நாளினை "கூர்மாவதார ஜெயந்தி'யாகக் கொண்டாடுகிறார்கள். அந்த நாளன்று விஷ்ணுவை வழிபட்டால் உடல்நலம் கிடைக்கும். பணவரவு சிறக்கும். புகழும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தைத் தேடி தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

சென்னையிலிருந்து ஸ்ரீகாகுளம் 911 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ரயில் பயண நேரம் 16 மணி. சென்னை யிலிருந்து 12 ரயில்கள் இருக்கின்றன. ஸ்ரீகாகுளத்திலிருந்து இந்த ஆலயம் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. விமானம் மூலம் பயணிப்பவர்கள் விசாகப்பட்டினத் தில் இறங்கி அங்கிருந்து 130 கிலோமீட்டர் பயணித்து இவ்வாலயத்தை அடையலாம்.