Advertisment

மலேஷியாவில் மேலும் ஒரு மந்த்ராலயம்!

/idhalgal/om/malaesaiyaavaila-maelauma-orau-manataraalayama

ந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள், தமிழகத்தில் சிதம்பரம் அருகே யுள்ள புவனகிரியில் கி.பி. 1595-ல் அவதரித்து, கும்பகோணத்தில் கல்விகற்று, வேங்கடநாதனாக இருந்தவர் 1621-ல் ஸ்ரீராகவேந்திரராக தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் சந்நியாசம் ஏற்றார்.

Advertisment

பாரத தேசமெங்கும் சஞ்சாரம்செய்து, துவைதத்தைப் பரப்பி, மக்களுக்கு நல்லுபதேசம் செய்து, மாஞ்சால கிராமத்தில் (தற்போதைய மந்த்ராலயத்தில்) கி. பி. 1671-ஆம் ஆண்டு தானே முன்னின்று அமைத்துக்கொண்ட பிருந்தாவனத்துள் ஜீவனோடு பிரவேசம் செய்தார்.

rag

அப்படிப் பிரவேசம் செய்தபோது, பக்தர்கள் கலங்கி நின்றபோது, தாம் இன்னும் 700 ஆண்டுகள் பிருந்தாவனத்துள் ஜீவனோடு இருப்பேன் என்றும், அதன் அறிகுறியாய் உலகெங்கும் 700 மிருத்திகா பிருந்தாவனங்கள் தோன்றுமென்றும், எங்கிருந்து தன

ந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள், தமிழகத்தில் சிதம்பரம் அருகே யுள்ள புவனகிரியில் கி.பி. 1595-ல் அவதரித்து, கும்பகோணத்தில் கல்விகற்று, வேங்கடநாதனாக இருந்தவர் 1621-ல் ஸ்ரீராகவேந்திரராக தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் சந்நியாசம் ஏற்றார்.

Advertisment

பாரத தேசமெங்கும் சஞ்சாரம்செய்து, துவைதத்தைப் பரப்பி, மக்களுக்கு நல்லுபதேசம் செய்து, மாஞ்சால கிராமத்தில் (தற்போதைய மந்த்ராலயத்தில்) கி. பி. 1671-ஆம் ஆண்டு தானே முன்னின்று அமைத்துக்கொண்ட பிருந்தாவனத்துள் ஜீவனோடு பிரவேசம் செய்தார்.

rag

அப்படிப் பிரவேசம் செய்தபோது, பக்தர்கள் கலங்கி நின்றபோது, தாம் இன்னும் 700 ஆண்டுகள் பிருந்தாவனத்துள் ஜீவனோடு இருப்பேன் என்றும், அதன் அறிகுறியாய் உலகெங்கும் 700 மிருத்திகா பிருந்தாவனங்கள் தோன்றுமென்றும், எங்கிருந்து தன்னைத் துதித்தாலும் அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவேன் என்றும் அருளினார்.

அதன்படி அவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்து, 12-08-2022 தேதியின்படி 351 ஆண்டுகள் நிறைவடைகிறது. அவர் அருளியதற்கேற்ப உலகின் பல பாகங்களிலும் ஸ்ரீராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனங்களும் தோன்றிவருகின்றன.

மிருத்திகை என்பது புனித மண். மந்த்ராலய ஸ்ரீமடத்திலிருந்து எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்யப்படுவது.

பாரத தேசத்தில் பிருந்தாவனத்தினுள்ளே மிருத்திகையை சிறிய சம்புடத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்வார்கள். அயல் நாடுகளில் சிறிய பிருந்தாவனத்தில் மிருத்திகையை சம்புடத்தில் வைத்து, பெரிய பிருந்தாவனத்தின்மீது வைத்து ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடுவர்.

அந்த வகையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக தீபகற்ப மலேஷிய நாட்டில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பக்தி இப்போது அபரிமிதமாய் இருக்கிறது.

1995-ஆம் ஆண்டு வாக்கில் ராஜ்யோகன் பிள்ளை என்பவரால் மலேஷிய பத்து மலையில் வெகு விமரிசையாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ராகவேந்திர ஆராதனையும் வழிபாடும் இன்று கிளைபரப்பி செழித்து வளர்ந்துள்ளது.

1998-99-ல் தமிழகத்திலிருந்து "ஸ்ரீ ராகவேந்திர மகிமை' நூலாசிரியர் அம்மன் சத்தியநாதனை வரவழைத்து, மலேசியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று சொற்பொழிவாற்ற வைத்து, ஸ்ரீ ராகவேந்திர பக்தியை கோலாலம்பூர்முதல் சிறுசிறு கிராமம்வரை அழுத்தமாகப் பதியவைத்த பெருமை இவரைச் சாரும்.

Advertisment

gg

அதேபோல் ஜோலார்பேட்டை பால்ராஜ், சென்னை சகோதரிகள் வேதிகா, ஐஸ்வர்யா போன்ற இன்னும் பலரையும் வெவ்வேறு காலங்களில் மலேஷியா வரவழைத்து ஒரு எழுச்சியை இவர் ஏற்படுத்தினார்.

இன்று மலேஷியாவில் ஸ்ரீ ராகவேந்திர மிருத்திகா பிருந்தாவனங்கள், வழிபாட்டு மையங்கள், தியான மண்டபங்கள் என கிட்டத்தட்ட முப்பத்தைந்திற்கும் மேற்பட்டவை உள்ளன என்றால் அதற்கு இவர்களைப் போன்றவர்களை ஸ்ரீ ராகவேந்திரர் ஒரு கருவியாக்கியுள்ளார் என்பதே நிஜம்.

அவ்வகையில் ஜெகந்நாதன் என்பவர் மலேஷிய சுங்கை பட்டாணியில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு மிகப்பெரிய பிருந்தாவனம் ஒன்றை குருவருளால் தற்போது அமைத்துள்ளார்.

அதற்கான பிரதிஷ்டாபனம் மற்றும் கும்பாபிஷேகம் 6-7-2022 அன்று திரளான பக்தர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு சொற்பொழிவுகளையும், "கந்தர்வகான- தேனிசைக் குரலோன்' நாஞ்சில் தென்கரை மகராஜனின் பக்திப் பாடல்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

rr

30-6-2022 முதல் 6-7-2022 வரை கோலாலம்பூர் செராஸ் ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனத்தில் துவங்கி, கிள்ளான் தாமன் சந்தோசா, ஈபோ பெராக், புலவ் பினாங்கு, பட்டர்வொர்த், சுங்கை பட்டாணி என பல இடங்களில் "இஷ்டமான அனைத்தையும் தரும் எட்டு சொற்பொழிவுகள்' எனும் தலைப்பில் சொற்பொழிவும் பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்து பக்தர்களைப் பரவசப்படுத்தியது.

மந்த்ராலய மடாதிபதிகள் ஸ்ரீ ஸுபுதேந்த்ர தீர்த்த ஸ்வாமிகளிடம் விசேஷ ஆசிபெற்றுவந்து பிரதிஷ்டாபனத்தை நடத்தினர். தற்போது மண்டலபூஜையும் சிறப் பாக நடைபெற்றுவருகின்றது.

மலேஷியாவில் மிருத்திகையோடுகூடிய இன்னுமொரு "மலேஷிய மந்த்ராலயமாக' இந்த சுங்கை பட்டாணி ஸ்ரீ ராகவேந்திர மிருத்திகை ஜெய பிருந்தாவனத்தை பக்தர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

மலேஷியாவிற்குச் செல்லும் ஸ்ரீ ராக வேந்திர பக்தர்கள் அங்குள்ள இதைப் போன்ற ஸ்ரீ ராகவேந்திர வழிபாட்டுத் தலங்களை தரிசித்து அருள்பெறலாம்.

om010822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe