மாசிமகம் என்றதும் நினைவுக்கு வருவது கும்பகோணம் மகாமகக்குளம். புராணகால சம்பந்தம் பெற்ற இந்தக் குளத்தில் 22 புனித கிணறுகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு வருடமும் மாசிமாத மக நட்சத்திரத்தன்று புனித நீரூற்று பொங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மகாதேவனான ஈசனின் திருவருளால் ஏற்பட்டதாலும், அமிர்தம் நிறைந்த குளமாகத் திகழ்வதாலும், இக்குளத்தில் மாசிமக நட்சத்திரத்தன்று நீராடுவது போற்றப்படுகிறது. இக்குளத்தில் நீராடிவிட்டு, அருகிலுள்ள ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் எதிரிலுள்ள பொற்றா மரைக் குளத்திலும் நீராடினால்தான் அமிர்தம் நிறைந்த சக்தியை உடல் ஈர்த்துக்கொள்ளும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமிர்தம் என்பது நோய் எதிர்ப்பினைத் தரும், உடல் நலத்தை பலப்படுத்தும், ஆயுளை நீடிக்கும், வளமான வாழ்வினை வழங்கும் என்று விளக்கம் சொல்லப்படுவதால், இந்த மகாமகக் குளத்திலும், பொற்றாமரைக் குளத்திலும் நீராட வேண்டும் என்பது மரபாகும்.
அதேபோல் மாசிமக நாளில் கடலில் நீராடுவதும் சிறப்பிக்கப்படுகிறது. குறிப்பாக, நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கடல்மல்லை, மாமல்லபுரம் எனப்படும் மகாபலிலிபுரம் கடல
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வருவது கும்பகோணம் மகாமகக்குளம். புராணகால சம்பந்தம் பெற்ற இந்தக் குளத்தில் 22 புனித கிணறுகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு வருடமும் மாசிமாத மக நட்சத்திரத்தன்று புனித நீரூற்று பொங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மகாதேவனான ஈசனின் திருவருளால் ஏற்பட்டதாலும், அமிர்தம் நிறைந்த குளமாகத் திகழ்வதாலும், இக்குளத்தில் மாசிமக நட்சத்திரத்தன்று நீராடுவது போற்றப்படுகிறது. இக்குளத்தில் நீராடிவிட்டு, அருகிலுள்ள ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் எதிரிலுள்ள பொற்றா மரைக் குளத்திலும் நீராடினால்தான் அமிர்தம் நிறைந்த சக்தியை உடல் ஈர்த்துக்கொள்ளும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமிர்தம் என்பது நோய் எதிர்ப்பினைத் தரும், உடல் நலத்தை பலப்படுத்தும், ஆயுளை நீடிக்கும், வளமான வாழ்வினை வழங்கும் என்று விளக்கம் சொல்லப்படுவதால், இந்த மகாமகக் குளத்திலும், பொற்றாமரைக் குளத்திலும் நீராட வேண்டும் என்பது மரபாகும்.
அதேபோல் மாசிமக நாளில் கடலில் நீராடுவதும் சிறப்பிக்கப்படுகிறது. குறிப்பாக, நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கடல்மல்லை, மாமல்லபுரம் எனப்படும் மகாபலிலிபுரம் கடலிலில் நீராடுவது புனிதம் என்பர்.
மாசிமகத்தன்று இங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இங்குள்ள கடலிலின் அருகிலுள்ள கோவிலிலில் ஸ்தலசயனப் பெருமாள் கிழக்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் அருள்கிறார்.
தாயார் ஸ்ரீநிலமங்கை நாச்சியார்.
புண்டரீகரிஷி என்பவர், தாமரை மலர்களைப் பறித்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டு, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளுக்கு சமர்ப்பிக்க எண்ணிப் புறப்பட்டார். மலர்க்கூடையைக் கடற்கரை யில் வைத்துவிட்டு கடல்நீரை இறைத்துவிடலாம் என்று கைகளால் இறைக்கத் தொடங்கினார்.
அப்போது முதியவர் வேடத்தில் வந்த பெருமாள் தனக்குப் பசிப்பதாகவும், ஊருக்குள் சென்று உணவு வாங்கி வருமாறும், அதுவரை கடல்நீரைத் தான் இறைப்பதாகவும் கூறவே, முனிவரும் அதன்படி ஊருக்குள் சென்றார்.
சிறிது நேரத்தில் உணவு வாங்கி வந்த முனிவர், கடல்நீர் உள்வாங்கி இருப்பதைக் கண்டார். தண்ணீர் இறைப்பதாகச் சொன்ன அந்த வயோதிகரைத் தேடினார். அவரைக் காணவில்லை. அப்போது ஓர் ஒலி கேட்டது. ஒலிவந்த திசையை நோக்கிப் பார்த்தார் முனிவர்.
அங்கே, முனிவர் கடற்கரையில் வைத்துச் சென்ற தாமரைமலர்கள் அடங்கிய கூடை இருந்தது. அதிலிருந்த மலர்களைத் தனது திருவடிகளில் சேர்த்துக்கொண்டு சயனக் கோலத்தில் முனிவருக்கு சேவை சாதித்தார் ஸ்ரீமன் நாராயணன்.
திருமால், தன் திருக்கரங்களால் கடல்நீரை இறைத்ததனால் இத்தலம் அர்த்த சேது என்று போற்றப்படுகிறது. மாசிமக நன்னாளில்தான் இந்நிகழ்வு நடந்ததாகப் புராணம் கூறுகிறது. அன்று இக்கடலிலில் நீராடி ஸ்தலசயனப் பெருமாளை வழிபடின் சகலபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
தரிசன நேரம் காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரை; பிற்பகல் 3.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை.
மாசிமக நன்னாளில் பல நிகழ்வுகள் நடந்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்நாள் எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும். கோவில்களில் சிவபெருமான், பெருமாள், முருகப்பெருமான், அம்பாள் ஆகியோருக்கு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.
உமாதேவியார் அவதாரம் செய்த நாள் இதுவே. பாதாளத்திலிலிருந்த பூமியை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணந்த நாள் மாசி மகம்தான். சிவபெருமானுக்கு, முருகப்பெருமான் சுவாமிமலையில் உபதேசம் செய்ததும், காமதகன விழா நடைபெறுவதும் மாசி மகத்தன்றுதான்.
அண்ணாமலையார் குழந்தைச்செல்வம் இல்லாத வல்லாள மகாராஜனுக்கு மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசிமாத மக நட்சத்திரத்தன்று மன்னன் சித்தியடைந்த பள்ளிகொண்டப்பட்டு என்ற ஊருக்கு, மேளதாள வாத்திய கோஷமின்றி அமைதி யாகச் சென்று, அவ்வூரில் ஓடும் கௌதமி நதியில் நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்தும் வைபவம் நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் நடைபெறும் மாசிமகத் திருவிழாவின்போது ஆறுமுகநயினார் எனப் படும் பெரிய உற்சவ மூர்த்தி பவனி வருவார். இவரை முன்புறம் ஆறுமுகராகவும், பின்புறம் நடராஜராகவும் அலங்காரம் செய்து உலாவரச் செய்கின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள வலங்கை மான் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருநல்லூர் திருத்தலத்தில் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தல இறைவன் ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒருமுறைவீதம் ஐந்துமுறை நிறம் மாறுவதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருப்பெயர் பெற்றார். இத்தல இறைவி பர்வத சுந்தரி. இங்கு அகத்தியருக்கு இறைவன் திருக்கல்யாணத்தைக் காட்டியதாகப் புராணம் கூறுகிறது. கோவிலுக்கு முன்னுள்ள தீர்த்தத்தை சப்தசாகரத் தீர்த்தம் என்று போற்றுவர். குந்திதேவி, கர்ணனை ஆற்றில்விட்ட பாவம் நீங்க இத்தீர்த்தத்தில் மாசிமக நன்னாளில் நீராடி பாவ விமோசனம் பெற்றாள் என்பர். எனவே, இத்தீர்த்தத்தில் மக நட்சத்திரத்தன்று நீராட, பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும், புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தீர்த்தவாரி உற்சவம் சிறப் பாக நடைபெறும். இதேபோல், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிலிலிருந்து மாசிமகத்தன்று ஸ்ரீசந்திரசேகர சுவாமி அஸ்திரதேவருடன் கடற்கரைக்கு எழுத்தருளி தீர்த்தம் கொடுக்கும் வைபவம் நடைபெறும்.
மாசிமகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது. உயர்கல்வி கற்க விரும்புகிறவர்களும், ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற விரும்புகிறவர்களும் மாசிமக நன்னாளில் துவங்கினால் சிறந்து விளங்கலாம் என்று வேதம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
மாசிமக நன்னாளில் புனிதத் தீர்த்தங்களில் நீராடுவதையும், கடலில் நீராடலையும் பிதுர்மகாஸ்நானம் என்கின்றனர். அன்று முன்னோர்களுக்குரிய பித்ருக்கடன் என்ற வழி பாட்டினை வேத விற்பன்னர் மேற்பார்வையில் மேற்கொண்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.