Advertisment

மகேசன் ஆணையில் எழுந்த மகாலிங்கவரர் ஆலயம்

/idhalgal/om/mahalingavarar-temple-was-built-orders-mahesan

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி' என்னும் வாக்கியத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில்- அதிலும் தென்னிந்தியாவில் மிக அதிக அளவில் சைவ- வைணவக் கோவில்கள் அமைந்துள்ளன. அதிலும் தமிழகத்தில் மிக அதிக அளவில் கோவில்கள் உள்ளன. அதற்குக் காரணம் நமது முன்னோர்கள் ஆன்மிகத்தின்மீது அளப்பரிய பற்று வைத்திருந்தனர். அதேபோன்று நம்மை ஆட்சி செய்த இந்து மன்னர்கள் கோவில்களைப் புதிதாகக் கட்டியும் பராமரிப்பு செய்தும் மிகுந்த இறையுணர் வோடு பாதுகாத்து வந்தனர்.

Advertisment

இப்படி வழிவழியாக நமது முன்னோர்கள் மேற் கொண்டுவந்த தெய்வத் தன்மையை, அவர்களது சந்ததிகளான நாமும் தொடர்ந்து பின்பற்றி வருவதோடு அதன்படி வாழ்ந்தும்வருகிறோம். மேலும் தமிழகத்தில் இறைவனுக்குப் புதியபுதிய ஆலயங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் இறைவனின் உத்தரவு.

Advertisment

dd

அவரது ஆசி இருந்தால்தான் புதிய கோவிலை உருவாக்கமுடியும். பல கோடிகளுக்கு அதிபதி யாக இருப்பவர்களால் ஒரு கோவிலைக் கட்டமுடியாது. ஆனால் சாதாரண எளிய மனிதர் ஒரு கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார். காரணம் இறைவன் அருள்.

அப்படி இறைவனின் அருள் பெற்ற நியூமராலஜி நிபுணர் மஹாதன்ஷேகர் ராஜா, திண்டி வனம் அருகிலுள்ள கூச்சிக்குளத் தூர் பகுதியில் சிவபெருமானுக்கு பிரம்மாண்டமான முறையில் ஆலயம் எழுப்பியுள்ளார்.

இவ்வாலயத்தில் ஸ்ரீ மகாலிங் கேஸ்வரர் மூலவராகவும், அம்மன் ஸ்ரீ சிவலிங்காஷானி என்னும் பெயருடனும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவருகிறார்கள். இவ்வாலய கும்பாபிஷேகம் கடந்த 9-6-2022 வியாழக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வெகுவிமரிசையாக நடந்தது. இந்த ஆலயம் உருவானது குறித்து மஹாதன்ஷேகர் ராஜா நினைவுகூர்ந்தார்.

"இறைவன் குடிகொண்டுள்ள ஒவ்வொரு கோவிலையும் உருவாக் கும்போது பல அதிசயங்கள் நிகழ்ந் திருக்கும். அதற்கு புராண- இதிகாச வரலாறுகள் காரணமாக இருந்திருக் கும். அதேபோன்று மன்னர்கள் காலத்தில் அவர்களுக்கு இறைவன் உணர்த்திய தன் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆலயங் களைத் தமிழகத்தில் அமைத்தார்கள். அப்படி இறைவன் எனக்கு உணர்த்தியதன் அடிப்படையில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. ஆன்மிக அதிசயங்களில் அதுவும் ஒன்று.

dd

ஆன்மிகத் தேடல்களில், வழிபா

ஆன்மிகத் தேடல்களில், வழிபாடுகளில் பலர் மிகத் தீவிரமாக இருப்பார்கள். அதுபோல எனக்கும் சிவபெருமான்மீது அளப்பரிய பக்தியுண்டு. அதன்படி ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது எனது கனவில் "நீ எனக்கு கோவில் எழுப்பு' என இறைவன் கூறினார். விடிந்ததும் இது கனவுதானே என்று நினைத் துக்கொண்டேன். பிறகு அடுத்தடுத்த இரவுகளில் என்னை யாரோ தட்டியெழுப்பி மீண்டும் மீண்டும் "எனக்கு கோவில் எழுப்பு' என்ற கனவின் நினைவுகள் தொடர்ந்துகொண்டே இருந்தது. பிறகு நானும் வழக்கம் போல எனது பணிச்சுமை காரணமாக கோவில் கட்டு வதை மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்தேன்.

ஒருமுறை நேரடியாக எனக்கு சிவன் கோவில் எழுப்பவேண்டும் என்று அறிவித்ததாக உணர்ந்தேன். இப்பொழுது வந்தது கனவல்ல; அவரது திருவுள்ளமே கூறியதாக உணர்ந்தேன். அப்போது எப்படியும் கோவில் கட்டுடியே தீருவதென்று முடிவுசெய்து அதற்கான பணிகளில் இறங்கினேன். முதலில் கோவில் கட்டுவதற்கான இடம் தேர்வுசெய்ய வேண்டும். எந்த இடத்தைத் தேர்வுசெய்வதென்ற எண்ணம் எழுந்தது. இந்த எண்ணங்களுடன் தினசரி அதிகாலை 5.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வரை சென்றுவருவேன். அதிலும் பயணத்தின்போது ஐந்து நிமிட பயண தூரத்தில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, அந்த இடத்தைத் தேர்வுசெய்யலாமா இந்த இடத்தைத் தேர்வுசெய்யலாமா என எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருந்தன. இப்படி தினமும் சென்னை யிலிருந்து திண்டிவனம் வரை ஆறு மாதங்கள் பயணம் செய்துகொண்டிருந்தேன்.

ஒருநாள் திண்டிவனம் அருகிலுள்ள கூச்சிக்குளத்தூர் அருகில் காரை நிறுத்திவிட்டு, தற்போது ஆலயம் அமைந்துள்ள இந்த இடம் முழுவதையும் சுற்றிப் பார்த்தேன்.

அப்போது அசரீரி குரல், "இங்கேதான் கோவில் கட்டவேண்டும்' என்று உத்தரவிட்டது.

அந்தக் குரல் இறைவன் அருள் குரலாக எதிரொலித்தது. உடனடியாக அந்த இடத்தின் சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துப் பேசிமுடித்து, இடம் முறைப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

mm

அதன்பிறகு ஆலயம் எழுப்புவது குறித்து அவ்வப்போது அந்த இடத்திற்கு வந்து பார்த்துவிட்டுச் செல்வேன். அப்படி ஒருநாள் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தபோது மிக வயதான முதிர்ந்த தோற்றமுள்ள ஒரு மனிதர் என்னருகே வந்தார். "தம்பி, இங்கு எதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? அதுவும் நீண்டநேரமாக..?' என்று பரிவோடு கேட்டார்.

நான் உடனே, "சுவாமி, நான் இந்த இடத் தில் ஒரு சிவன் கோவில் கட்டுவதற்குத் தீர்மானித் துள்ளேன்' என்று கூறினேன். அந்த பெரியவர், "உன்னை யார் சிவன் கோவில் கட்டச் சொன்னது?' என்று கேட்டார். "சிவபெருமான் எனக்குக் கட்டளையிட்டுள்ளார்' என்றேன். அந்தப் பெரியவர், "சிவபெருமானே நேரில் வந்து சொன்னாரா?' என்று கேட்டார். நானும் "ஆமாம்; சிவபெருமானே என்னிடம் நேரில் சொன்னார்' என்று பதில் கூறினேன்.

அதற்கு அந்த முதியவர், "சரி தம்பி; இந்த இடத்தில்தான் சிவபெருமான், பார்வதி இரு வரும் உலாவருகிறார்கள். அதனால்தான் இங்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளாயோ?' என்று கேட்டார். "ஆமாம் சுவாமி' என்று பணி வோடு கூறினேன். பிறகு கேள்வி கேட்கும் அவர் யார் என்ற உணர்வு ஏற்பட, அந்தப் பெரியவரி டம், "சுவாமி, நீங்கள் யார்... எங்கிருந்து வருகிறீர் கள்?' என்று கேட்டேன். அடியேன் இதைக் கேட்டு முடிப்பதற்குள் பெரியவர் கண்ணிமைக் கும் நேரத்திற்குள் மறைந்துவிட்டார்.

எனக்கு மெய்சிலிர்த்தது. யார் அந்த பெரியவர்? அவர்தான் இறைவனா? இந்தக் கேள்விகளோடு, அந்தப் பெரியவர் இந்த ஊரில் வாழும் மனிதரா என்ற சந்தேகத்துக்கு விடைதேடி அந்த ஊரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்றேன். நான் பார்த்த பெரியவரின் உருவ அடையாளத்தைச் சொல்லி அப்படிப்பட்டவர் இங்கு யாராவது வசிக்கிறார்களா என்று விசாரித்தேன்.

அப்படி யாரும் எங்கள் ஊரில் இல்லையென்று அனைவரும் கூறினார்கள். அப்பொழுதுதான் புரிந்தது- என்னிடம் உரையாடிய பெரியவர் வேறு யாருமல்ல; சாட்சாத் சிவபெருமானே என்பது! அப்போது ஏற்பட்ட அந்த உணர்வு எமக்கு மிகப்பெரிய பேரின்பத்தை உண்டாக்கியது. அதன்பிறகு கோவில் கட்டும் பணியில் தீவிரமாக இறங்கினேன்.

அப்போது இறைவன் ஒரு கட்டளை யிட்டார். "கோவில் கட்டுவதற்கு முன்பு கயிலாயமலைக்கு வந்து என்னை தரிசித்து பிறகு கோவில் எழுப்பு' எனும் கட்டளைதான் அது!

அதன்பிறகு நாம் தாமதிக்கலாமா? கடந்த 2012-ஆம் ஆண்டு கயிலாய மலைக்கு முதன்முதலாகச் சென்றேன். இறைவனை தரிசனம் செய்து திரும்பினேன். பிறகு 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி சிவனுக்கு ஆலயம் எழுப்புவதற்கு இந்த இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது. அன்றிலிருந்து கோவில் திருப்பணிகள் இறைவன் அருளால் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

அப்படி ஆலயம் எழுப்பும் பணியின்போது ஒருநாள் புள்ளி மான் ஒன்று காலையிலிருந்து மாலைவரை கோவில் கட்டுமான வளாகத்திற்குள் நின்று பார்த்துக்கொண்டே இருந்தது. இது 24 மணி நேரமும் போக்குவரத்து பரபரப்பாக உள்ள பகுதி. பொதுவாக மான் போன்ற மென்மையான விலங்குகள் சிறிய சத்தத்தைக் கேட்டால்கூட பயந்து ஓடி மறைந்து விடும். ஆனால் அந்த மான் அசையாமல் ஒரே இடத்தில் மாலைவரை நின்று கட்டடம் கட்டும் பணிகளைப் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தது. அதேபோல் மற்றொருமுறை கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, மயில் ஒன்று கோவிலின் உட்புறப் பகுதியில் ஒருநாள் முழுவதும் நின்றுகொண்டே இருந்தது. அந்த மயிலும் மாலையில் திடீரென மறைந்தது. இதன் அடையாளங்கள் அனைத்தும் சிவபெருமா னின் திருவிளையாடல்கள் என்பது தெரிய வந்தது. அவருக்கு அமைக்கும் ஆலயத்தின் பணிகளை சரியாகச் செய்கிறோமா என்று ஏதோவொரு ரூபத்தில் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார் என்று உணர்ந்தேன்.

இறைவனும் இறைவியும் அபரிமிதமான அருள்சக்தியை வெளிப்படுத்தும் இக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், பக்தர்கள் ஒரு பத்து நிமிடம் மௌனமாக நின்றுகொண்டிருந்தாலே அவர்களுக்கு தியானம் செய்யக்கூடிய உணர்வு, மன அமைதி, சந்தோஷம் கிடைக்கும். இறைவன்மீது பக்தி அதிகரிக்கும். மீண்டும் மீண்டும் இக்கோவிலுக்கு வரவேண்டுமென்ற எண்ணத்தை அவர்களுக்குத் தோற்றுவிக்கும். அதேபோன்று இவ்வாலய இறைவனும் இறைவியும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார்கள்.

அதன் அடிப்படையில்தான் இவ்வாலய இறைவனுக்கு ஸ்ரீ மகா சிவலிங்கேஸ்வரர் என்றும், அம்மனுக்கு ஸ்ரீ சிவலிங்காஷினி என்றும் பெயர்கள் உருவானது.

அமைதி சூழ்ந்த இந்த இடத்தில் அம்மனின் சக்தி அளப்பரியது. வேண்டிய வரத்தை அள்ளிக் கொடுப்பாள் சிவலிங்காஷினி.

அம்மனை தரிசனம் செய்ய வருபவர்கள் 12 எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்து, அந்த எலுமிச்சம் பழத்தை அம்பாளிடம் வைத்துப் பூஜைசெய்து திரும்ப வாங்கிச்சென்று அவரவர் வீட்டிலுள்ள பூஜையறை மற்றும் பீரோ, தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் தங்கள் பணம் பரிவர்த்தனை செய்யும் அறை போன்றவற்றில் வைக்கவேண்டும். இதனால் அவர்களுக்கு செல்வம் பெருகும். தொழில் வளர்ச்சிபெறும். வியாபாரம் செழிக்கும். வீட்டில் அமைதி நிலவும். கடன்போன்ற பிரச்சினைகள் தீரும். நியாயமான வழக்குகளில் சாதகமான நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு அந்த பாக்கியம் விரைந்து கிடைக்கும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். இப்படி அனைத்து செல்வங்களையும் தன்னை நாடிவருபவர்களுக்கு வாரி வழங்குகிறார் கள் இவ்வாலய இறைவனும் இறைவியும்'' என்கிறார் எண்கணித நிபுணர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா.

பொதுவாக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆலயத்தின் அமைப்பு, இறைவனின் ஈர்ப்புத் தன்மை, சக்தி அவர்களை ஆலய வளாகத்திலேயே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது மீண்டும் எப்போது திரும்புவது என்ற ஆவலை உருவாக்கும். இவையெல்லாம் இறைவனின் அருள் பெற்றவர்களுக்குக் கிடைக்கும். சிவபெருமானிடம் வேண்டுபவர்கள், "இறைவா, எங்களுக்கு மீண்டும் பூமியில் பிறவாத வரம் வேண்டும்; அப்படிப் பிறந்தாலும் சிவபெருமானுக்கு சேவை செய்யும் பிறவியை வழங்கவேண்டும்' என்று வேண்டுதல் செய்வார்கள்.

அதேபோன்று கூச்சிக்குளத்தூர் இறைவன் மஹாலிங்கேஷ்வரர், இறைவி சிவலிங்காஷினி அருளாட்சி செய்யும் ஆலயத்தில் இறைவனுக்குப் பணி செய்ய எங்களுக்கு மீண்டும் ஒருமுறை மனிதர்களாகப் பிறக்க வரம்கொடு என வேண்டுகிறார்கள் வழிபட வரும் பக்தர்கள். இறைவனை தரிசித்தபிறகு ஆலய வளாகத்திலுள்ள ஆலய நிர்வாகியும் எண்கணித நிபுணருமான மஹா தன்ஷேகர் ராஜா அவர்களின் ஆசிபெற்றுச் செல்கிறார் கள். மேலும் சிவபெருமானுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் ஷேகர்ராஜா அவர்களிடம் தீட்சை பெற்றும் செல்லுகிறார்கள்.

இவ்வாலயம் பல நூற்றாண்டுகளுக்குமுன்பு கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலைப் போன்றே கட்டப் பட்டுள்ளது என்று வியந்து பேசுகிறார் கள் பக்தர்கள். சிவன் மங்களகரமானவர்; அருளாளர்; சைவ சமயத்தினர் வழிபடும் பரம்பொருள். அவரே அனைத்தும்!

அவரே ஒரே நேரத்தில் படைத்தவராகவும் காப்பவராகவும் உள்ளார். ஆதி ஆன்மாவான பரமேஸ்வரரும் பராசக்தியான இறைவியும் அமைதி தவழும் கூச்சிக்குளத்தூர் பகுதியில் கோவில் கொண்டுள்ளார்கள். அனைவரும் வருக; அருளாசி பெறுக!

கோவில் அமைவிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகிலுள்ளது கூச்சிக்குளத்தூர். கம்பீரத் தோற்றத்துடன் உள்ளது ஆலயம். தொடர்புக்கு: 99404 23555, 99404 63555.

om010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe