பேறு தரும் ஓரிரவு! மகாசிவராத்திரி- 4-3-2019

/idhalgal/om/maha-sivarathiri

றைவழிபாட்டில் சிவலிங்க வழிபாடு மிகவும் போற்றப்படுகிறது. லிங்க வகைகள் பல உள்ளன என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதில் தானே தோன்றிய சுயம்பு லிங்கங்கள் அதிக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல் இயற்கையாகக் கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம்.

சிவபெருமானின் சிரசினை அலங்கரிக்கும் சந்திரனிடமிருந்து, விழுந்த அமிர்தத் துளிகள்தான் ஸ்படிக லிங்கம் என்கின்றன வேத நூல்கள்.

ஸ்படிகம் என்பது தூய்மையான நிலையில் கண்ணாடிபோல் காணப்படுவது. இது மிகவும் குளிர்ந்த தன்மையுடையது.

இந்த ஸ்படிகம் இமயமலையின் அடி ஆழத்திலும், விந்தியமலைப் பகுதியிலும் மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும் அபூர்வமான கல் வகையைச் சார்ந்தது. இது மிகவும் விலை மதிப்புடையது. மேலும், மருத்துவ குணம் கொண்டதென்றும் ஆன்மிகர்கள் கூறுவர்.

இந்த ஸ்படிக லிங்கம் வடபகுதியிலிலிருந்து தென்பகுதிக்கு வந்தது குறித்து புராணம் கூறும் தகவல்:

ஆதிசங்கரர், சிவபெருமானை தரிசிக்க கயிலை நோக்கிச்சென்றார். அவரது பக்தியைப் போற்றிய சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்ததுடன், ஐந்து ஸ்படிக லிங்களை அளித்து, அதனைப் பூஜிக்கும் வழிமுறைகளையும் உபதேசித்தருளினார். அவை: முக்திலிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போகலிங்கம், யோகலிங்கம் என பெயர் பெற்றவை. இந்த பஞ்ச லிங்கங்களையும் ஆதிசங்கரர் ஐந்து திருத்தலங்களில் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.

siva

முக்தி லிங்கத்தை கேதார்நாத் திருத்தலத்திலும், வரலிங்கத்தை நேபாளில் உள்ள நீலகண்ட க்ஷேத்திரத்தி லும், மோட்சலிங்கத்தை தமிழகத்தில் சிதம்பரம் தலத்திலும், சிருங்கேரி திருத்தலத்தில் போகலிங்கத்தி னையும், காஞ்சியில் யோகலிங்கத்தினையும் ஸ்தாபித் தார் என்று புராண வரலாறு கூறுகிறது. இதில்

றைவழிபாட்டில் சிவலிங்க வழிபாடு மிகவும் போற்றப்படுகிறது. லிங்க வகைகள் பல உள்ளன என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதில் தானே தோன்றிய சுயம்பு லிங்கங்கள் அதிக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல் இயற்கையாகக் கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம்.

சிவபெருமானின் சிரசினை அலங்கரிக்கும் சந்திரனிடமிருந்து, விழுந்த அமிர்தத் துளிகள்தான் ஸ்படிக லிங்கம் என்கின்றன வேத நூல்கள்.

ஸ்படிகம் என்பது தூய்மையான நிலையில் கண்ணாடிபோல் காணப்படுவது. இது மிகவும் குளிர்ந்த தன்மையுடையது.

இந்த ஸ்படிகம் இமயமலையின் அடி ஆழத்திலும், விந்தியமலைப் பகுதியிலும் மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும் அபூர்வமான கல் வகையைச் சார்ந்தது. இது மிகவும் விலை மதிப்புடையது. மேலும், மருத்துவ குணம் கொண்டதென்றும் ஆன்மிகர்கள் கூறுவர்.

இந்த ஸ்படிக லிங்கம் வடபகுதியிலிலிருந்து தென்பகுதிக்கு வந்தது குறித்து புராணம் கூறும் தகவல்:

ஆதிசங்கரர், சிவபெருமானை தரிசிக்க கயிலை நோக்கிச்சென்றார். அவரது பக்தியைப் போற்றிய சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்ததுடன், ஐந்து ஸ்படிக லிங்களை அளித்து, அதனைப் பூஜிக்கும் வழிமுறைகளையும் உபதேசித்தருளினார். அவை: முக்திலிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போகலிங்கம், யோகலிங்கம் என பெயர் பெற்றவை. இந்த பஞ்ச லிங்கங்களையும் ஆதிசங்கரர் ஐந்து திருத்தலங்களில் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.

siva

முக்தி லிங்கத்தை கேதார்நாத் திருத்தலத்திலும், வரலிங்கத்தை நேபாளில் உள்ள நீலகண்ட க்ஷேத்திரத்தி லும், மோட்சலிங்கத்தை தமிழகத்தில் சிதம்பரம் தலத்திலும், சிருங்கேரி திருத்தலத்தில் போகலிங்கத்தி னையும், காஞ்சியில் யோகலிங்கத்தினையும் ஸ்தாபித் தார் என்று புராண வரலாறு கூறுகிறது. இதில் சிதம்பரத்திலுள்ள ஸ்படிக லிங்கம் சந்திரமௌலீஸ்வரராக வழிபடப்படுகிறார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திலும் ஸ்படிக லிங்கத்தைக் காணலாம்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இங்கு உற்சவ மூர்த்தி கண்ணாடிக் கருவறை யில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் எழுந்தருளியுள்ளார். இவருக்குமுன்னால் மற்றொரு சிறிய சந்நிதியில் ஸ்படிக லிங்கம், நந்தியோடு சேர்த்துப் பூஜிக்கப்படுகிறது.

அதேபோல் புனிதத் தீர்த்தங்கள் நிறைந்த ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இராவணனின் தம்பி விபீஷணனால் கொண்டு வரப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. இங்குள்ள ஸ்படிக லிங்கத்தை ராமபிரானும், சீதா தேவியும் பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அதிகாலை 4.00 மணியிலிருந்து 5.00 மணிவரை இக்கோவிலில் உள்ள ஜோதிலிங்கத்தின்முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டினை தரிசித்தபின் இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் நீராடுவது புனிதமாகக் கருதப் படுகிறது.

இவைதவிர, புதன் தலமான திருவெண்காடு ஸ்வேதாரண் யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. மேலும் சில கோவில்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.

சிவபெருமான் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்கின்றன வேத நூல்கள்.

ஸ்படிகலிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சிபோன்ற வடிவமும், சுமார் ஒரு அங்குலத்திலிருந்து பத்து அங்குலம்வரை உயரமும், ஆறுமுகங் கள் அல்லது பட்டைகள் உடையதாக வும் இருக்கும்.

இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு வினாடிக்கு 32,768 முறை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மையுடையதாம். அதனால்தான் ஒரு ஸ்படிக லிங்கம் கருங்கல்களால் உருவாக்கப்பட்ட ஆயிரம் லிங்கங் களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் பாண லிங்கங்கள் ஒரு ஸ்படிக லிங்கத் திற்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பாணலிங்கம் என்பது- கண்டகி நதிக்கரையில் இயற்கையாகக் கிடைக்கும் சாளக்ராமங்களைப்போல, நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் லிங்கங்களாகும்.

ஸ்படிக லிங்கத்தை முறையாக ஜபித்து, விபூதியால் அபிஷேகம்செய்து வழிபட்டால் கர்மவினைகள் நீங்கும்.

ஸ்படிக லிங்கம் வடநாட்டில் இமயமலைச் சாரலையொட்டிய திருத்தலங்களில் கிடைக்கும். இதனை விலைகொடுத்து வாங்கி வீட்டில் பூஜையறையில் வைத்தும் வழிபடலாம்.

ஸ்படிக லிங்கத்தின் நேர்மறையான அதிர்வுகளானது நவகிரகங்களின் கெட்ட பலன்களைத் தகர்க்கும் சக்தி கொண்டவை. இது உள்ள இடத்தில் தீயசக்திகள் அண்டாது. நம்மை விரோதியாகக் கருதுபவர்கள்கூட நட்புடன் பழகுவர்.

தூய்மையான மனதுடன், மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் கெடுதல் செய்யக்கூடாது என்ற மனப்பான்மை உள்ளவர்களுக்கு ஸ்படிலிங்க வழிபாடு பலவித நன்மைகளை அளிக்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

ஸ்படிக லிங்கம் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததோ, அதேபோல் ஸ்படிக மணிமாலை களும் சக்தி கொண்டவையாகத் திகழ்கின் றன. ஸ்படிக மணிகளை மாலையாகக் கோர்த்து சில சிவபக்தர்கள் கழுத்தில் அணிந்திருப் பதைக் காணலாம். உடல்நலனை சீராக வைத்திருக்கும் சக்தி ஸ்படிக மணிமாலைக்கு உண்டு. மேலும், இந்த மாலையை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஜபித்தால் விரைவில் பலன்கள் கிட்டும்.

ஸ்படிகம், நம் மனதில் தன்னம்பிக்கையை யும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியையும் அளிக்கும் வல்லமையுள்ளது.

சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்குரிய வழிபாட்டின் போது ஸ்படிக மணிமாலையை அணிந்துகொண்டு வழிபட்டால் சிவனருள் கிட்டுவதுடன், இறுதிக்காலத்தில் எமதேவனையின்றி சுகமுடன் முக்தி கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

"லிங்' என்றால் லயம்; "கம்' என்றால் தோற்றம். தன்னுள் லயித்த உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமாக நின்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்கள் புரிவதே லிங்கம் என்று வேத நூல்கள் கூறுகின்றன.

சிவலிங்கங்களில் பல வகைகள் உள்ளன. தர்ப்பை லிங்கம் ஆன்ம விடுதலையையும், பூ லிங்கம் ஆயுளையும், வெல்லத்தினால் உருவான லிங்கம் அனைத்து சுகங்களையும், மாவு லிங்கம் உடல் மற்றும் மனவுறுதியையும் தரும் என்கின்றன ஞானநூல்கள். இந்த லிங்கங்களையெல்லாம் வேதவிற்பன்னர்கள் உருவாக்கி, தகுந்த சமயத்தில் பூஜைசெய்து வேண்டுபவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வர்.

லிங்கங்களில் தெய்வீக லிங்கங்கள் எனப் படுபவை பொதுவாக, தீச்சுடர்போலவோ அல்லது ஒரு ஜோடி கரங்கள் வணங்கும்வகை யிலோ இருக்கும். இவை உளிகளால் உண்டாக் கப்படாதவை. இவை தெய்வங்களால் உண்டாக்கப்பட்டு தெய்வங்களால் வணங்கப் பட்டவை.

தேவகணங்களால் உண்டாக்கப்பட்ட கணலிங்கம் வெள்ளரி, எலுமிச்சை, விளாம் பழம், நுங்கு போன்ற வடிவங்களில் காட்சி தரும்.

ஆர்ஷலிங்கம் எனப்படுவது ரிஷிகளால் மந்திரங்கள் ஜெபித்து உண்டாக்கப்பட்டு வணங்கப்படுபவை. அவை பின்னர் சற்றுப் பெருத்து, கிட்டத்தட்ட தேங்காய் வடிவத்தில் காட்சிதரும்.

தானே தோன்றியதை சுயம்புலிங்கம் என்று கூறுவதுபோல, ராட்சதர்களால் உருவாக்கப்பட்டது ராட்சலிங்கம். மானுடர் களால் உண்டாக்கப்பட்டது மனுஷ்ய லிங்கம். இவை ஓரிடத்திலேயே நிலைகொண்டு அசையாமல் இருப்பதால் இவற்றுக்கு அசலலிங்கம்- அதாவது அசையாத லிங்கம் என்று பெயர். பெரும்பாலும் நாம் சிவலிலயங் களில் தரிசிப்பது.

அந்தந்த நேரத்தில் பூஜிக்க உருவாக்கப் படும் லிங்கம் க்ஷணலிங்கம் எனப்படுகிறது.

தங்கத்தாலான லிங்கத்தைப் பூஜித்தால் செல்வளம் பெருகும். சாதத்தால் லிங்கம் செய்து வழிபட்டால் நல்லுணர்வு கிட்டும். களிமண் லிங்க பூஜையால் ஸ்தாவர சொத்துகள் பெருகும். பசுஞ்சாணி, மஞ்சள் ஆகியவற்றால் லிங்கம் உருவாக்கி வழிபட்டால் நோய்நொடிகளை நீக்கும். வெண்ணெய் மனமகிழ்ச்சியைத் தரும். ருத்ராட்சம் ஞானத்தைப் பெருக்கும்.

சந்தனம் அனைத்து நலனையும். அளிக்கும். மேலும், முத்து, பவளம் போன்ற ரத்தினங்களால் உருவாக்கப்படுபவை ரத்னஜ லிங்கம் எனவும், பால் வடியும் மரங்களிலிருந்து உருவாக்கப்படுபவை தாருக லிங்கம் எனவும், கல்லால் செய்யப்படுபவை சிலா அல்லது சைலஜ என்றும் போற்றப் படுகின்றன.

பட்டை பட்டையாக நீளவாக்கில் உள்ள லிங்கங்களை தாரா, லிங்கங்கள் என போற்றுவர். 5 முதல் 64 பட்டைகள் வரை இருக்கும். 16 பட்டைகள் அமைந்த லிங்கங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

லிங்கப் பகுதியில் 107 லிங்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அது அஷ்டோத்ர

லிங்கம் எனப்படும். சிவலிங்க பாணத்தில் 999 அல்லது 1007 சிறிய லிங்க உருவங்கள் உள்ளவை. சகஸ்ரலிங்கம் என்று போற்றப் படுகின்றன. சிவலிங்க பாணத்தில் சிவபெருமானின் முகம் காணப்பட்டால் அது முகலிங்கம் எனப்படுகிறது. இவ்வாறு, லிங்க வகைகள் பல இருந்தாலும், மிகவும் அரிதான லிங்கத்தை காஞ்சிபுரம் தலத்தில் தரிசிக்கலாம். சிவன்- சக்தி ரூபத்தில் ஒருமித்த வடிவமாக அமைந்துள்ளது. இது "சக்திலிங்கம்' என்று போற்றப்படுகிறது. இதன் பாணத்தில் வீராசனத்தில் நான்கு கரங்களுடன் சக்தி அமர்ந்திருக்கும் கோலத் தினை தரிசிக்கலாம்.

சிவராத்திரி போன்ற சிவனுக்குரிய நாட்களில் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

om010319
இதையும் படியுங்கள்
Subscribe