மங்களம் பொழியும் மகா சிவராத்திரி!

/idhalgal/om/maha-shivaratri-mangalam-rain

னிதமனம் மண், பொன், பெண் ஆகிய மூவாசைகளையும் சுற்றியே அலைபாய்கிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூன்று ஆசைகளே விளங்குகின்றன. ஒவ்வொருவரின் மனமும் செல்வத்தில், அந்தஸ்தில், புகழில் மற்றவர்களைக் காட்டிலும் தான் சிறந்து விளங்கவேண்டுமென்று போராடுகிறது. பிறக்கும்போதே ஒருவர் செல்வச் செழிப்பான பெற்றோருக்குப் பிறப்பதற்கும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்குப் பிறப்பதற்கும் அவரவரின் ஊழ்வினையே காரணம். முன் ஜென்ம ஊழ்வினையை அறுக்க ஒவ்வொருவரும் பல வழிகளையும் தேடி அலைகிறார்கள்.

ஊழ்வினையிலிருந்து மீண்டு இறைவனை அடைய நம் முன்னோர்கள் பல்வேறு வழிகளை போதித்துள்ளார்கள்.

உலகிலுள்ள மதங்களில் எந்தவித கட்டுப்பாடுமில்லாமல், எந்தவகையில் பூஜித்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்னும் நம்பிக்கையுள்ள ஒரே மதம் இந்து மதம். கர்மவினையைத் தீர்த்து பிறவா நிலையடைய இந்து மதத்தில் நான்குவித உபாயங்கள் கூறப் பட்டுள்ளன.

siva

சரியை

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்குச் சென்று இறைவனைத் துதித்துப் பாடுவது; மலர்மாலை தொடுப்பது, சந்தனம் அரைத்துக் கொடுப்பது போன்ற இறைப்பணிக்கு உதவுதல்; திருக்கோவிலில் மெழுகிடுதல், தூய்மை செய்வது போன்ற உழவாரப்பணிகள் செய்து வணங்குதல் யாவும் சரியை வழியாகும்.

இதன்மூலம் பெறும் முக்தி சாலோக முக்தி என்படும்.

கிரியை

சிவச்சின்னங்களை அணிந்து, சிவனடி யாராக இறைச்சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய்க்கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும். இந்தவகையில் கிடைக்கும் முக்திநிலை சாமீப முக்தி எனப்படும்.

யோகம்

தகுதியான குருவைப் பணிந்து யோக முறைகளைக் கற்று, தொடர் பயிற்சியின்மூலம் உடல், மனம் ஆகியவற்றைத் தூய்மையாக்கி, இறைவனை வழிபாடு செய்து முக்திபெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்திநிலை சாரூப முக்தி எனப் படும்.

ஞானம்

"நான்' என்கிற அகந்தையை அழித்து, தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்திநிலை சாயுஜ்ய முக்தி எனப்படும்.

விரதம்

மேலே கூறிய நான்கு நிலை களைத் தவிர்த்து இறையருளைப் பெற சாஸ்திரங்களில் கூறப்பட்ட மற்றொரு உபாயம் விரதம்.

விரதமென்பது, ஒரு விசேஷ நாளில் விருப்பமான தெய்வத்தை நினைத்து, குறிப்பிட்ட வேண்டுதலுக்காக ஐம்புலனை அடக்கி, உண்ணாமலிருக்கும் நிலையாகும். விரதமிருப்பதால் ஆன்மா, மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மையடையும். உடலும் உள்ளமும் தூய்மை யடையும்போது நினைத்த காரியம் வெற்றியடையும். இந்து மதத்தில் கர்மவினை தீர்த்து காரியசித்தி தரும் கடவுளாகக் கருதப்படுபவர் சிவபெருமான். அவர் தன்னை வழிபடுவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதில் வள்ளல். சிவபெருமானை வழிபட்டு வேண்டிய வரத்தைப் பெற கூறப் பட்ட பல்வேறு விரதங்களில் சிறப் புப் பெற்றது மகா சிவராத்திரி விரதம்.

கடுங்குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்குவதைக் குறிக்கும் காலம்தான் மாசி மாதம். இந்த மாதத்தில் மாசி மகம், மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலிப் பண்டிகை போன்ற சிறப்புமிக்க வழிபாடுகள் கொண்டாடப்படுவதால், ஆன்மிகச் சிறப்புமிக்க மாதமாகிறது. மாசி மாதம் என்றாலே சிவ, சக்தி வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும்.

இந்த மாதத்தில் சிவபெருமானை வழிபடும் சிவராத்திரியும், அம்பிகையை வழிபடும் காரடையான் நோன்பும் இந்துக்களிடம் பிரசித்தி பெற்றது.

மகா சிவராத்திரி

ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருடம், மாசி மாதம் 27-ஆம் நாள், வியாழக்கிழமையன்று (1

ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருடம், மாசி மாதம் 27-ஆம் நாள், வியாழக்கிழமையன்று (11-3-2021) பிறவிப் பிணி தீர்க்கும் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ளது. பகலில் திரயோதசியும் இரவில் சதுர்த்தசி திதியும் கூடும் சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும். இதை கௌரீசங்கர சம்மேளன சிவராத்திரி என்றும் கூறுவர்.

இனி சிவராத்திரியின் மகத்துவத்தையும் அதனால் ஏற்படப்போகும் நன்மைகளையும் காணலாம்.

ஒருவர் தன் வாழ்நாளில் மிகுதியான சிரமத்தை அனுபவிப்பதற்கு ஜாதகத்திலுள்ள தோஷங்களே காரணம். அத்தகைய தோஷங் களை அழிக்கும் வல்லமை பெற்றவர் சிவ பெருமான். தன்னை வணங்குபவர்களின் மனதிலிருக்கும் கெட்ட எண்ணக் கழிவு களான காமம், கோபம், குரோதம். பேராசை, பொறாமை போன்ற கெட்ட கர்மவினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர்.

ஒருவர் தனது மூன்று பிறவிகளில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்களம், இன்பம் என்று பொருள். ஒருவர் தன் வாழ்வில் வினைப்பயனை அழிக்க எட்டுவிதமான சிவ வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்கலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற் றுள் மிகச் சிறப்புவாய்ந்ததாகக் கருதப்படுவது மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி திதியன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும்.

சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என்று பொருள்.

சிவராத்திரி விரத முறைகள்

11-3-2021 வியாழக்கிழமையன்று குளிர்ந்த நீரில் குளித்து, நெற்றியில் திருநீறு பூசி, கடவுள் படம்முன் விளக்கேற்றி, சிவராத்திரி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் புதன்கிழமை ஒருவேளை மட்டுமே உணவுண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவை உண்ணாமல், சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம். வியாழக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக் கூடாது. வயதானவர்கள், நோயாளிகள் சமைக்காத உணவுகளான பழங்கள், அவல் சாப்பிடலாம்.

மகா சிவராத்திரியன்று முழுவதும் மௌன விரதமிருந்து, மனதுக்குள் பஞ்சாட்சரமாகிய "ஓம் நமசிவாய' மந்திரம் சொல்வதால் புண்ணியப் பலன் மிகுதியாகும்.

வியாழக்கிழமை மாலை 6.30 மணிமுதல் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிவரை சிவன் கோவிவில்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபடவேண்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் நீராடி, பகல் முழுவதும் உறங்காமலிருந்து விரதத்தை முடித்தால், சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசிபோல் உடனே சாம்பலாகும்.

நான்குகால பூஜைகளும் பயன்களும்

சிவராத்திரியில் நான்குகால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6.00 மணிமுதல் மறுநாள் காலை 6.00 மணிவரையான காலகட்டமாகும். மாலை 6.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை முதல் ஜாமம். இரவு 9.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை இரண்டாம் ஜாமம்.

நள்ளிரவு 12.00 மணிமுதல் பின்னிரவு 3.00 மணிவரை மூன்றாம் ஜாமம். அதைத் தொடர்ந்து காலை 6.00 மணிவரையான மூன்றுமணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களை இங்கே பார்க்கலாம்.

முதல் ஜாமம்

முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேதப் பாராயணம் செய்து வழிபடவேண்டும். முதல் ஜாமப் பூஜையில் விரதமிருந்து கலந்துகொள்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். வேதங்களில் சிறந்து விளங்குவார்கள். ஜனன ஜாதகத்திலுள்ள கடுமையான விதிப் பயன்கள், ஜாதகரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடையமுடியும்.

இரண்டாம் ஜாமம்

இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பூஜிப்பதாக ஐதீகம். இந்த இரண்டாம் ஜாம வேளையில், யஜுர் வேதப் பாராயணம் செய்து சிவனை வழிபடவேண்டும். இதனால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனியின் தாக்கம் குறையும். நவகிரக தோஷம் விலகும். கண்திருஷ்டி, செய்வினை தோஷம் அகலும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாமப் பூஜையின் அபிஷேக நீரைப் பருகக் கொடுத்தால் சித்தசுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

மூன்றாம் ஜாமம்

மூன்றாம்கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்சகட்ட வழிபாட்டு நேரமிது. இதனை "லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். இரவு 11.30 மணிமுதல் 1.00 மணி வரையான இந்த நேரத்தில்தான் அடிமுடி காணா ஜோதியாகி நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாகக் காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதமிருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேதப் பாராயணம் மற்றும் சிவ சகஸ்ரநாமம் உச்சரிக்கவேண்டும். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, ஆண்- பெண் ஜாதகத்திலுள்ள திருமணத் தடை நீங்கும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழ்வார்கள். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். எந்த தீய சக்தியும் அண்டாது. சிவசக்தியின் அருள் அனைவரையும் காக்கும்.

நான்காம் ஜாமம்

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானைப் பூஜிப்பதாக ஐதீகம். பொழுதுபுலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேதப் பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடிவரும். உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி நீங்கும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகள், கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாம் நீங்கி உலகம் அமைதிப் பூங்காவாகும்.

சிவராத்திரியன்று இரவு முழுவதும் கண் விழித்து சுவாமி தரிசனம் செய்யமுடியா விட்டால்கூட, லிங்கோத்பவ காலமாகிய இரவு 11.30 மணிமுதல் 1.00 மணிவரையுள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபடவேண்டும். ஏனெனில் இந்த நேரம்தான் சிவன் ஜோதிலிங்கமாகத் தோன்றிய நேரமாகக் கருதப்படுகிறது.

வயதானவர்கள், குழந்தைகள், கோவிலுக்குச் செல்லமுடியாமல் உடல்நலக் குறைவோடு இருப்பவர்கள் சிவபுராணம், வில்வாஷ்டகம் படித்து, வில்வத்தால் சிவபூஜை செய்தால் அந்த நிமிடமே அவர்களுடைய அனைத்துப் பாவங்களும் நீங்கும். அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். பஞ்சமகா பாதகங்கள் அகலும்.

சர்ப்ப தோஷம் தீர்க்கும் மகா சிவராத்திரி வழிபாடு

ஆதிசேஷன் பூலோகத்தைத் தன் தலையில் சுமந்து தன் பலமனைத்தையும் இழந்து தவித்தபோது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார்.

அப்போது சிவபெருமான் பூமி முழுவதை யும் தாங்கும்படியான வலிமையை வழங்கி னார் என்பர். அஷ்ட நாகங்கள் இவ்வாறு வழிபட்டதாகவும் கூறுவர். இந்த மகா சிவராத்திரியன்று இரவு 9.46 மணிவரை அவிட்ட நட்சத்திரம் உள்ளது. அதன்பிறகு சதய நட்சத்திரம் உள்ளது. எனவே, சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால், ஜனனகால ஜாதகத்தில் 1, 2, 3, 5, 7, 8, 9 ஆகிய இடங்களில் ராகு- கேது நிற்பதால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம் நீங்கும்.

அதிக கிரகங்கள் ராகு- கேது சாரத்தில் இருப்பது போன்ற காரணத்தால் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை என பாதிப் படைந்தவர்ளுக்கு சர்ப்பதோஷம் நீங்கும். செவ்வாய் தோஷ பாதிப்பும் குறையும்.

மகா சிவராத்திரியன்று விரதமிருப்பவர் களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்க லோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதியடைந்து முக்தி யடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

உணவுண்ணாமல் பசியை அடக்கு வதன்மூலம் காமம், குரோதம், கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.

எல்லாருக்கும் இந்த மகா சிவராத்திரி விரதமிருக்கும் பாக்கியம் கிட்டாது. அவனரு ளாலே "அவன் தாள் வணங்கி' என்றபடி, அவன் (சிவன்) அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிட்டும்.

வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கவேண்டும்.

காரடையான் நோன்பு

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்து பேரன்- பேத்திகள் பார்த்தவர்களின் சுமங்கலித்துவத்திற்கு சிறப்பு கௌரவம் உண்டு. திருமாங்கல்யமானது ஒரு பெண்மணியின் கழுத்தில் எப்போதும் இருந்தால் காவல்தெய்வமாக இருந்து சுமங்கலித்துவதைக் கட்டிக்காக்கும். பெண்களுக்கு திருமாங்கல்யமே பிரம்ம முடிச்சாகும்.

திருமணமான அனைத்துப் பெண்களும் தங்கள் ஆயுள் முழுவதும் தீர்க்கசுமங்கலியாக வாழவே வாழவிரும்புவார்கள். அதனால் தான் பெண்களுக்கு ஆசிவழங்கும் பெரியவர் கள், "தீர்க்க சுமங்கலி பவா' என்று வாழ்த்து வார்கள். பெண்களின் சுமங்கலி பாக்கியத்தில் தான் கணவரின் ஆயுள் அடங்கியுள்ளது என்பதே இதன் சூட்சுமம். பெண்கள் தங்களின் சுமங்கலி பாக்கியத்தை வலுப்படுத்தவும், கணவரின் ஆயுளை அதிகரிக்கவும் வெள்ளிக்கிழமை விரதம், காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம், கேதார கௌவுரி நோன்பு போன்றவற்றைக் கடைப் பிடிக்கிறார்கள். இதையே நமது முன்னோர் கள் ஆண்களின் 60 வயது சஷ்டியப்த பூர்த்தி, 70 வயது பீமரத சாந்தி, 80 வயது சதாபிஷேம், 96 வயதில் கனகாபிஷேகம் போன்ற மணவிழாச் சடங்குகளைச் செய்து ஆயுள் நீட்டிப்பு பெற்றார்கள்.

இதுபோன்ற மணவிழா வைபவங்களைக் காணும் பேறு ஜனனகால ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமெனும் ஐந்தாமிடமும், பாக்கிய ஸ்தானமெனும் ஒன்பதாம் இடமும் பலம்பெற்றவர்களுக்கே அமைகிறது.

பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக்கொண்டு செய்யப்படும் இந்த சடங்குகளில் சகல தேவர்களையும் மகிழ்விக்கும் வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. இது போன்ற சடங்குகள் பணவசதி படைத்தவர்களுக்கு எளிதானது. எளியநிலையில் இருப்பவர்களுக்கும் ஆயுளும் மாங்கல்ய பாக்கியமும் முக்கியம்தானே...

வசதிபடைத்தவர்கள், வசதியில்லாதவர்கள் என அனைத்துப் பெண்களும் தங்களின் மாங்கல்ய பலத்தை அதிகரிக்க, சாஸ்திரத்தில் கூறப்பட்ட பூஜை முறைகளில் காரடையான் நோன்பு எளிமையானது. அதேசமயம் வலிமை யானது. இந்த நோன்பைக் கடைப்பிடிக்கும் முறையைக் காணலாம்.

திருமணமாகாத கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெறவேண்டியும், நல்ல கணவன் அமையவேண்டியும் மேற் கொள்ளும் விரதம் காரடையான் நோன் பாகும். சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் இந்த நோன்பினை மேற்கொள்ள வேண்டும். மாசி மாத முடிவில், பங்குனி மாதத் தொடக்கத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காரடையான் நோன்பு மாங்கல்ய பலம்தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரமருளும் நோன்பு எனவும் அழைக்கப் படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரத மென்றும், காமாட்சி விரதமெனவும் அழைப்பர்.

விரதமிருப்பது எப்படி?

காரடையான் நோன்பு 14-3-2021

ஞாயிறன்று வருகிறது. அன்றைய தினம் வீட்டைத் தூய்மைசெய்து மாக்கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டவேண்டும். காமாட்சியம்மன் மற்றும் சுவாமி படங் களுக்கு பூமாலை அணிவிக்கவேண்டும்.

ஒரு கலசத்தின்மேல் தேங்காய், மாவிலை வைத்து, கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறைக் கட்ட வேண்டும். அருகில் காமாட்சியம்மன் படம் வைத்து அதனை சாவித்திரியாகக் கருதி வழிபடவேண்டும். சாவித்திரி தன் கணவர் சத்தியவானுடன் காட்டில் வாழ்ந்தபோது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணி யையும் கொண்டு அடைசெய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப் பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக்குத்திக் கிடைத்த அரிசிமாவில் அடை தயாரித்து நைவேத்தியமாகப் படைக்கவேண்டும்.

நுனிவாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் சரடு உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்கவேண்டும். இலையின் நடுவில் வெல்ல அடையும், வெண்ணெயும் வைக்கவேண்டும். நோன்புச் சரடை அம்மனுக்கு சாற்றி, பின்னர் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்டலாம். பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம்.

காரடையான் நோன்பின் பலன்

இவ்விரத முறையை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பின்பற்றுவதால் கணவன்- மனைவிக்கிடையே உள்ள சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும் நேசமும் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றுகூடுவர். கன்னிப் பெண் களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை பெண்களுக்கு அமையும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ஆமிடமும், 8-ஆம் அதிபதியும், 8-ல் நின்ற கிரகமுமே ஆயுள், மாங்கல்ய பலத்தைத் தீர்மானிக்கும். 8-ஆம் அதிபதி சுபகிரக சம்பந்தத்துடன் வலுப்பெற்றுவிட்டால் அந்தப் பெண் தன் கணவனுடன் தீர்க்கசுமங்கலியாக, தனது சொந்த பந்தங்களுடன் நெடுங்காலம் வாழ்வார். அத்துடன் செவ்வாயும், சுக்கிரனும் பலம்பெற்றால் வட்சுமி கடாட்சம் நிறைந்த தீர்க்கசுமங்கலியாவார். இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகள் ஆசி வழங்கினால் எத்தகைய திருமணத்தடையும் அகலும்.

அனைவருக்கும், தேவி சகல சௌபாக்கியங்களும் அருளிடப் பிரார்த்திக்கிறேன்.

om010321
இதையும் படியுங்கள்
Subscribe