Advertisment

அன்பே சிவம்! அறமே தவம்! - யோகி சிவானந்தம்

/idhalgal/om/love-god-virtue-penance-yogi-sivananda

ருசமயம் ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது மடத்திலுள்ள சமையலறையில் காய்கறிகளை நறுக்கிக்கொண்டும், வெங்காயம், தக்காளி போன்றவற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

Advertisment

அந்த சமயம் அங்குவந்த சிஷ்யன் ஒருவர் ராம கிருஷ்ண பரமஹம்சரைப் பார்த்து, சுவாமி மக்கள் உங்களை மிகப்பெரிய மகான் என்று சொல்கிறார் கள். ஆனால் நீங்களோ, சமையலறையில் வேலை செய்துகொண்டும் வெங்காயம் உரித்துக் கொண்டும், காய்கறிகளை நறுக்கிக்கொண்டும் இருக்கிறீர்களே! இது என்ன நியாயம்? என்று கேட்டுள்ளார். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், இதுவும் ஒருவகையான தியானமே என்று பதில் அளித்திருக்கின்றார். இங்கே நாம் எதை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், எந்த ஒரு செயலாகட்டும், நாம் செய்யக் கூடிய செயலில் முழுமையான உள்ள(மன) ஈடுபாட் டோடு செயல்படவேண்டும் என்பதே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கவன ஈடுபாட்டோடு செயல்படும் செயலே மிக உயர்ந்த தியானமாகும். அதாவது ஒன்றைப்பற்றி நினைத்து, அந்த செயலிலேயே நமது மனதை குவித்து இருப்பது அட்டாங்க யோகத்தில் தாரனை என்று கூறப்படுகிறது. இப்போது தாரணையைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.!

Advertisment

ss

கடுமையான புயல் தமிழகத்தில் சில மாவட்டங்களை புரட்டிப் போட்டுவிட்டது. அளவற்ற தண்ணீர் அது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அதைவிட முக்கியமான நாம் செய்த ஒரு மாபெரும் தவறு, குறையே இத்தகைய பெரும் இழப்பிற்கு காரணமாகும். அது என்ன என்றால்? கடந்த 100 வருடங்களில் ஒவ்வொரு ஊரிலுள்ள ஏரிகளையும், குளங்களையும், கால்வாய்களையும், நீர் ஆதாரங்களையும் அகலப்படுத்தி, ஆழப்படுத்தி முறையாகப் பராமரிப்பு பணியை செய்யாததன் விளைவே இத்தகைய துயர சம்பவத்துக்கு ஒரு காரணமாகும். இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் இன்று காலை நிலவரப்படி சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 137 உயிர்கள் பறிக்கப்பட்டி ருக்கிறது. அமெரிக்காவில் கொடூரமான வெள்ளம் ஏற்பட்டு நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு சுதாரிக்கவில்லை என்றால் எந்த உபகரணமும் நம்மைக் காப்பாற்றமுடியாது. ஏனென்றால் பிரபஞ்ச பேரருள் தன் ஆட்டத்தின் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டது. அதை பகுத்தறிவு வேண்டு மானால் இப்படி வைத்துக்கொள்ளட்டும். அதாவது சுற்றுச்சூழல், காலநிலை மாறு

ருசமயம் ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது மடத்திலுள்ள சமையலறையில் காய்கறிகளை நறுக்கிக்கொண்டும், வெங்காயம், தக்காளி போன்றவற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

Advertisment

அந்த சமயம் அங்குவந்த சிஷ்யன் ஒருவர் ராம கிருஷ்ண பரமஹம்சரைப் பார்த்து, சுவாமி மக்கள் உங்களை மிகப்பெரிய மகான் என்று சொல்கிறார் கள். ஆனால் நீங்களோ, சமையலறையில் வேலை செய்துகொண்டும் வெங்காயம் உரித்துக் கொண்டும், காய்கறிகளை நறுக்கிக்கொண்டும் இருக்கிறீர்களே! இது என்ன நியாயம்? என்று கேட்டுள்ளார். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், இதுவும் ஒருவகையான தியானமே என்று பதில் அளித்திருக்கின்றார். இங்கே நாம் எதை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், எந்த ஒரு செயலாகட்டும், நாம் செய்யக் கூடிய செயலில் முழுமையான உள்ள(மன) ஈடுபாட் டோடு செயல்படவேண்டும் என்பதே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கவன ஈடுபாட்டோடு செயல்படும் செயலே மிக உயர்ந்த தியானமாகும். அதாவது ஒன்றைப்பற்றி நினைத்து, அந்த செயலிலேயே நமது மனதை குவித்து இருப்பது அட்டாங்க யோகத்தில் தாரனை என்று கூறப்படுகிறது. இப்போது தாரணையைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.!

Advertisment

ss

கடுமையான புயல் தமிழகத்தில் சில மாவட்டங்களை புரட்டிப் போட்டுவிட்டது. அளவற்ற தண்ணீர் அது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அதைவிட முக்கியமான நாம் செய்த ஒரு மாபெரும் தவறு, குறையே இத்தகைய பெரும் இழப்பிற்கு காரணமாகும். அது என்ன என்றால்? கடந்த 100 வருடங்களில் ஒவ்வொரு ஊரிலுள்ள ஏரிகளையும், குளங்களையும், கால்வாய்களையும், நீர் ஆதாரங்களையும் அகலப்படுத்தி, ஆழப்படுத்தி முறையாகப் பராமரிப்பு பணியை செய்யாததன் விளைவே இத்தகைய துயர சம்பவத்துக்கு ஒரு காரணமாகும். இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் இன்று காலை நிலவரப்படி சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 137 உயிர்கள் பறிக்கப்பட்டி ருக்கிறது. அமெரிக்காவில் கொடூரமான வெள்ளம் ஏற்பட்டு நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு சுதாரிக்கவில்லை என்றால் எந்த உபகரணமும் நம்மைக் காப்பாற்றமுடியாது. ஏனென்றால் பிரபஞ்ச பேரருள் தன் ஆட்டத்தின் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டது. அதை பகுத்தறிவு வேண்டு மானால் இப்படி வைத்துக்கொள்ளட்டும். அதாவது சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு என்று எப்படி வேண்டுமானா லும் வைத்துக்கொள்ளலாம்!? என்னைப் பொறுத்தவரை இயற்கையின் கோபம் என்றே சொல்வேன். பக்தி செய்கிறோம், பக்தி செய்கிறோம்... என்று மற்றவர்களை ஏமாற்றுவதோடு நாம் நம்மையும் ஏமாற்றிக்கொண்டிருக்கி றோம் என்பதை உடனடி யாக புரிந்துகொண்டு ஒட்டுமொத்த மக்களின் அத்தி யாவசியமான தேவைகளில் தாரணை யுடன்கூடிய பக்தி செலுத்த வேண்டும்.

பக்தி என்றால் சுய ஒழுக்கம். பக்தி என்றால் உண்மை அன்பு. அன்பு, கருணை இதெல்லாம் இப்போது எப்படி யிருக்கிறது! ஒரு இயற்கை பேரிடர் நாட்டின் எந்த மூலையில் நடந்தாலும் அது பேரிடர்தான்; பெரும் இழப்புதான். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டிய கடமையை நம்மை ஆட்சிசெய்யும் அரசுக்கு இருக்கிறது. அது மாநில அரசாக இருந்தாலும் சரி; மத்திய அரசாக இருந்தாலும் சரி. சரி இங்கே எப்படி பக்தி வந்தது. ராமலிங்க வள்ளலார் அதைத் தெளிவாக விளக்குகிறார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்வண்டி மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. நான்கு நாட்களாக அந்தத் தொடர்வண்டியில் சிக்கி இருந்த மக்களுக்கு, ஸ்ரீவைகுண்டம் கிராம மக்களே உள்ளன்போடு உணவளித்து, அவர்கள் அனைவரையும் ஊர் கோவிலில் பாதுகாப்பாக தங்கவைத்து, உணவளித்து உபசரித்து உதவிசெய்து தந்துள்ளனர்.

இதுவே இறைவனுக்கு செய்யும் நைவேத்தியம் என்றால் அது மிகையாகாது. இதுவே சிறந்த பக்தி. இதுவே சிறந்த அறம். இதுவே உயர்ந்த ஆன்மிகம். சக மனிதனின் துன்பத்தை போக்கமுடியாத எந்த ஒரு நிர்வாகமும் சட்டம் பேசி பயனில்லை. இத்தகைய பேரிடரின் பாதிப்பிலும் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட, குறிப்பாக விமான போக்குவரத்து நிறுவனத்தினர் பலரும் பயணக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளனர். இதைவிட அவலமான விஷயம் வேறு இல்லை. இந்த சூழலில் மக்களுக்கு ஒவ்வொருவரும் உதவிகரமாக இருக்க வேண்டும். அதுவே சிறந்த பக்தி. மனிதர்கள் சக மனிதர்களைப் பற்றி குறை கூறலாம். அதிகாரிகள் சக அதிகாரிகளைப் பற்றி குறை கூறலாம். ஆனால் ஒருவரும் இயற்கையைப் பற்றி குறை கூறமுடியாது; குறை கூறவும் கூடாது. ஏனென்றால் இயற்கையை, அதனுள் மறைந்திருக்கும் இறைவனை குறை கூற மனித இனத்திற்கு அருகதை இல்லை. இறைவனின் இயல்பைப்பற்றி திருவள்ளுவர் கூறி அருளியுள்ளதை பார்க்கலாம்.

"மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்'

நினைப்பவர் மனம் ஆகிய மலரில் அமரும் இறைவனின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர், இவ்வுலகில் நெடுநாள் நீங்கா புகழ்பெற்று, நிலைபெற்று வாழ்வர்.

எனவே ஒரு மனிதன் அடிப்படையில் பக்திமானாக இருக்கவேண்டும்.பக்தி என்றால் அன்பு... பக்தி என்றால் கருணை... பக்தி என்றால் இரக்க சிந்தனை... பக்தி என்றால் சுய ஒழுக்கம்... பக்தி என்றால் சமத்துவம்.... பக்தி என்றால் பாரபட்சம் பார்க்காமல் கூடிவாழும் தன்மையை உடையது. ஒவ்வொருவரிடமும் உண்மையான பக்தியிருந்தால் இங்கே ஏழை, பணக்காரன், பிச்சைக்காரன் என்ற பாகுபாடு இருக்காது. இன்று ஊட்டியில் பழங்குடியின மக்கள் சாக்கினால் (கோணிப்பை)யான ஒரு டெண்டு வீடு அமைத்து வாழும் அவல நிலை இருக்கிறது. பணம் படைத்தவனோ ஒரு வீட்டை குறைந்தபட்சம் 2 கோடி முதல் அதிகபட்சம் 15 கோடி, 100 கோடி என்ற அளவில் தனி ஒருவனுக்கு, தனி ஒரு குடும்பத்திற்கு வீட்டைக்கட்டி கொள்கிறார்கள். சமத்துவமும், சமாதானமும், சமதர்மமும் இல்லாதவனிடத்தில் பக்தி இருப்பது சாத்தியமில்லை. ஆனால் இவற்றையெல்லாம் பிரபஞ்ச பேராற்றல் கவனித்துக்கொண்டே இருக்கிறது. இங்கே மீண்டும் ஒரு நிகழ்வினை நினைவு கூறவேண்டிய அவசியம் இருக்கிறது.

சினிமா துறையில் நடிகர்களிடையே பல ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஹீரோ என்றால் ஒருநிலையும், நகைச்சுவை நடிகர் என்றால் ஒருநிலையும், வில்லன் நடிகர் என்றால் ஒருநிலையும், துணை நடிகர்கள் என்றால் அந்தோ பரிதாபமான நிலையும் என்ற பாகுபாடு இருக்கிறது. அதே வேளையில் இவர் ஒரு துணை நடிகர் என்றால்கூட உடனே மக்கள் அவரை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இங்கே ஒரு வேதனையான விஷயம் என் மனதை மிகவும் நொடிந்து போகச்செய்தது. இரண்டு நாட்களுக்குமுன்பு எனது நண்பர்மூலம் உலகின் தலைச்சிறந்த மனிதரான அதாவது "ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்'' (ஙஹய் ர்ச் ஙண்ப்ப்ண்ய்ண்ன்ம்) எனும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 30 கோடி பரிசாகப்பெற்ற உயர் திரு. ஐயா பாலம் கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்தேன்.

அவர் அந்த தொகை முழுவதையும் தனக் கென்று ஒரு பைசாகூட வைத்துக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு உதவும்படி அளித்துவிட்டார். அவர்களை சந்திக்க அவர் குடியிருக்கும் இடத்திற்கு சென்றேன், மிகவும் ஒரு குறுகலான இடங்களைக் கடந்து அடித்தட்டு மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் இருக்கிறார். நான் அங்கே சென்று ஐயாவின் வீடு எங்கே இருக்கிறது என்று ஒரு பட்டதாரி பெண்ணிடம் கேட்டேன். அதற்கு அந்தப் பெண் எனக்குத் தெரியாது, இங்கே கேட்டுப் பாருங்க அப்படி என்று சொன்னார் கள். சொன்ன அந்தப் பெண்மணி அந்த வீட்டின் மாடியில் இருந்து கீழே வந்தவர். நான் கீழத்தளத்தில் சென்று விசாரித்தேன். அதுதான் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா வசிப்பிடம் என்று தெரிந்தது. ஒரு துணை நடிகரின் பெயரை சொன்னால்கூட அவரை எனக்குத் தெரியும் என்று சொல்லும் இந்த உலகம் மிகப்பெரிய தர்ம சிந்தனை உள்ள ஒரு மாமனிதனை மறந்தது மட்டுமல்லாமல் அவரது முகவரியை சொல்லக்கூட மனமற்ற நிலையில் இருக்கிறது. இதுபோன்ற நிலை மனித சமுதாயத்தின் அழிவு நிலைக்கு அச்சாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அறம் செய்ய விரும்பு என்பது ஆத்திச்சூடி. அறம் செய்ய மனம் விரும்புவதற்கே இங்கு ஆயிரத்தெட்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

பாலம் அய்யாவை பார்த்த அந்த நொடி யில்கூட, அவர் இருக்கும் அந்த எளிமை யான நிலையில்கூட மூன்று பேருக்கு உதவிச் செய்வதை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருந்தார். நான் என் உள்ளம் நெகிழ்ந்து போனேன். இதுவே மிக உயர்ந்த, ஆகச்சிறந்த பக்தி. சாமியைப் பற்றி பேசுவ தாலோ, பக்தி வழிபாட்டில் ஈடுபடுவதி னாலோ, பரிகாரங்கள் செய்வதினாலோ, மனிதநேயத்தை மறந்து மதவெறிகளை தூண்டுவதினாலோ, நீ பெரியவன், நான் பெரியவன் என்பதையோ, இவற்றையெல்லாம் இயற்கையில் இருக்கும் இறைவன் பக்தியாக கருதமாட்டான். அன்பே சிவம்... அறமே தவம்... அதன் மறுபெயர் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா.

இப்போதாவது நாம் அறம் செய்ய பழகவேண்டும்... பழகி பகிரவேண்டும்...

அதுவே தலைசிறந்த பக்தி. கோடிகோடியாக அதாவது ஒரு படத்திற்கு 100 கோடி, 150 கோடி, 200 கோடி என்று அளவிற்கு அதிகமாக சம்பாதிக்கும் உச்ச நடிகர்கள் வயதான காலத்தில் கட்சி ஆரம்பித்து தங்களின் அசையும்- அசையாத சொத்து களை காப்பாற்றிக்கொள்ளவே ரசிகர்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் தமிழ்நாட்டில் பல கிராமங்களிலுள்ள ஏழைகளின் நிலையை, வாழ்வாதாரத்தை சிறப்பாக மாற்றமுடியும். அதற்கு அவர்கள் தயாரா என்பது...? நீ ஒருவனை ஏமாற்ற நினைத்தால், ஒருநாள் நீ இயற்கையால் ஏமாற்றப்படுவாய்... இப்போதாவது இதை புரிந்துக்கொண்டு செயல்படவேண்டும். பக்தி என்பது "பகுத்துண்டு பல்லுயிர் போற்றுதல்' என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பக்தியைப் பற்றி திருமந்திர சிற்பி திருமூலர் அருளிச்செய்ததை பார்க்கலாம்.

"முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்

அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்

சுத்தனைத் தூய்நெறியாய் நின்ற சோதியைப்

பத்தர் பரசும் பசுபதி தானென்று.'

பூமிப் பந்தில் இருக்கும் ஆருயிர்களைப் பிறவித்துயரிலிருந்து விடுவித்து, அவை களுக்கு முக்தி இன்பம் பெறும் அறிவைத்தந்து, முக்தியாகிய பேரின்ப பெருவீட்டை அடையச்செய்யும், அறிவு வடிவாகவும்,

அதற்கு துணை செய்யும் நமசிவாய (பஞ்சபூதம்) என்ற நல்லறிவாகவும் இருக்கும் நாதனே, இறவா நிலை பெற்ற தேவர்களின் (நன்னடத்தை உள்ளவர்கள்) தலைவன் ஆவான். பேரருளுடைய பெருமான். தூயவன்...

தூய நன்னெறிக் காட்டி அருளும் சோதிச் சுடராகத் திகழ்கின்றவன். உண்மையான பக்தி செய்தவர்களுக்குப் பரிந்து அன்பு செய்யும், ஆன்மாக்களை ஆட்கொண்டருளும் இறைவன் ஆகிய அவனே சிவப்பரம் பொருள் என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதை பின்வரும் திருமந்திரம் மூலம் அறிவோம்.

"ஆன்கன்று தேடி அழைக்கும் அதுபோல்

நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை

ஊன்கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள்

ஊன்கன்றால் நாடிவந்து உள் புகுந்தானே.'

தாய்ப் பசுவைப் பிரிந்த இளம் கன்று தாயைத் தேடும். தாய் இருக்கக்கூடிய இடத்தை அறிந்துகொள்ள பெரும் குரல் கொடுத்து கதறி அழைக்கும். அதுபோல நானும், தாயைப் பிரிந்து தவிக்கும் பசும் கன்றைப்போல, என் தலைவனாகிய சிவப்பரம் பொருளை நாடி, வருந்தி அழைத்தேன். வான் கன்றுகளாகிய தேவர் உலகத்தினர் யாவருக்கும் அப்பாலாய் விளங்கும், வேத விழுப்பொருளாகிய சிவம், எனது ஊன் உடம்பு வாடி வருந்தவிடாமல், என்னைத்தேடி வந்து என் உள்ளம் புகுந்து கொண்டான் எம்பெருமான்.

இந்த உடம்பு சுமந்துகொண்டிருக்கும் உயிர் ஒரு பறவையைப் போன்றது. ஒருநாள் இக்கூட்டைவிட்டு இது பறந்து ஓடிவிடும். அது எப்போது என்று தெரியாது. ஏ மனித இனமே.... இப்போதாவது, விழித்துக்கொண்டு அறம் செய்வதில் காலதாமதம் செய்யாதே.

ஏனென்றால் அது கடவுளுக்கும் பிடிக்காது.... கால தேவனுக்கும் (எமன்) பிடிக்காது. நன்றே செய்... அதுவும் இன்றே செய்...

இயன்றவரை இல்லாதவர்க்கு அறம் செய்வோம்... கரம் கோர்த்து அதனை தினம் செய்வோம்... தில்லை அம்பலத்தானின் திருவருளைப் பெறுவோம்.

om010324
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe