"ஹலோ ஜி... வாங்க ஜி... சௌக்கியமா ஜி? எப்படி இருக்கீங்க ஜி...' இப்படித்தான் விளையாட்டாக ஆரம்பித்ததுபோல இருந்தது. அது இப்போது அபரிமிதமான பரிணாம வளர்ச்சியடைந்து 3ஜி, 4ஜி, 5ஜி எனும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது பூமிப்பந்தை நாசமாக்கி சகல உயிரினத் தையும் ப− வாங்கும் "5ஜி' எனும் தொழில்நுட்பம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. எதிர்மறை (நெகடிவ்) செயல்பாடுகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும், செயல் படுவதிலும் அசுத்த ஆற்றல் ஜெயித்துக் கொண்டே வருகிறது. ஜெயிப்பது (வெற்றி) போன்று தோன்றுகிறது. ஆனால் எல்லாம் மாயையாகும். இறுதியில் வெற்றிபெறப்போவது நேர்மறை ஆற்றல் (பாஸிடிவ்) எனும் சுத்த சக்தியாகிய "சிவசக்தி' எனும் மாபெரும் இறைசக்தியே! இதனை ஞானமுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவிருக்கிறது. ஆனால் பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால் மட்டுமே ஞானம் என்பதை உணரவும் அறியவும் முடியும். தொட்டால் சிணுங்கி (சுருங்கி) எனும் ஒரு மூலி−கைச்செடி இருக்கிறது. அந்த செடி மனிதனின் மூச்சுக் காற்று பட்டாலே அல்லது மெல்லத் தொட்டாலே அந்த தாவரத்தின் இலைகள் சுருங்கிவிடும். தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.'
(திருக்குறள்: 90).
அனிச்ச மலரை முகர்ந்து (மோந்து) பார்த்த மாத்திரத்தில் வாடிவிடுமாம். அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதில், நம் முகத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறையான சிறு அசைவுகளைப் பார்த்த மாத்திரத்தில் அவ
"ஹலோ ஜி... வாங்க ஜி... சௌக்கியமா ஜி? எப்படி இருக்கீங்க ஜி...' இப்படித்தான் விளையாட்டாக ஆரம்பித்ததுபோல இருந்தது. அது இப்போது அபரிமிதமான பரிணாம வளர்ச்சியடைந்து 3ஜி, 4ஜி, 5ஜி எனும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது பூமிப்பந்தை நாசமாக்கி சகல உயிரினத் தையும் ப− வாங்கும் "5ஜி' எனும் தொழில்நுட்பம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. எதிர்மறை (நெகடிவ்) செயல்பாடுகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும், செயல் படுவதிலும் அசுத்த ஆற்றல் ஜெயித்துக் கொண்டே வருகிறது. ஜெயிப்பது (வெற்றி) போன்று தோன்றுகிறது. ஆனால் எல்லாம் மாயையாகும். இறுதியில் வெற்றிபெறப்போவது நேர்மறை ஆற்றல் (பாஸிடிவ்) எனும் சுத்த சக்தியாகிய "சிவசக்தி' எனும் மாபெரும் இறைசக்தியே! இதனை ஞானமுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவிருக்கிறது. ஆனால் பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால் மட்டுமே ஞானம் என்பதை உணரவும் அறியவும் முடியும். தொட்டால் சிணுங்கி (சுருங்கி) எனும் ஒரு மூலி−கைச்செடி இருக்கிறது. அந்த செடி மனிதனின் மூச்சுக் காற்று பட்டாலே அல்லது மெல்லத் தொட்டாலே அந்த தாவரத்தின் இலைகள் சுருங்கிவிடும். தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.'
(திருக்குறள்: 90).
அனிச்ச மலரை முகர்ந்து (மோந்து) பார்த்த மாத்திரத்தில் வாடிவிடுமாம். அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதில், நம் முகத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறையான சிறு அசைவுகளைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் முகம் வாடிப்போய்விடும் என்கிறார்.
இக்குறளை இங்கு குறிப்பிடக் காரணம், முகர்ந்து பார்த்தவுடன் வாடக்கூடிய உயிரினங்கள்- குறைந்த அறிவுடையன என குறிப்பிடப்படும் செடிகொடிகள், புல்பூண்டு, மரங்கள், நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்னும் அனைத்து ஜீவன்களும் அதனதன் வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கின்றன. இயற்கையாகவும், இயற்கையோடும் இயைந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன; வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த இயற்கையே கடவுள்; கடவுள்தான் இயற்கை.
இயற்கை தனது இயல்பு நிலையில் மாறாமல் தனது பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. மரமானது அடர்ந்த வனங்களில் இருந்தபோதும் சரி; தனிமரமாக இருந்தபோதும் சரி- அந்த மரம் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பொதுநலத்தோடு பிற உயிர்களுக்கும் நிழலைத் தந்து உதவிக் கொண்டிருக்கிறது. ஒரு புல்லி−னம் அல்லது ஒரு கீரை அல்லது ஒரு மூலி−கை பிறிதொரு விலங்கினத் திற்கு உணவாகப் பயன்படுகிறது. அதேவேளையில் விலங்காக மாறிக்கொண்டுவரும் மனித இனத் திற்கும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதுதான் இயற்கை... அதுவே கடவுள். கடவுள் தூணிலும் இருக்கிறார்... துரும்பிலும் இருக்கிறார்... அணுவிலும் அணுவாகவும் இருக்கிறார். அவரே மாபெரும் கருணைக்குச் சொந்தக்காரரான எம்பெருமான் ஈஸ்வரன்.
கொடூரச் செயல்களைச் செய்துவரும் மனிதர்களின் கண்களுக்கு அவர் கண்டிப்பாகப் புலப்படமாட்டார். ஏனெனில் இந்த மனித இனம் தவறான வழிகளில் 100, 200, 500, 2,000 எனும் எண்கள் பொறித்த பணம் எனும் காகிதத் தைக் கட்டுக்கட்டாக எவருக் கும் தெரியாமல் பதுக்கிவைப் பதிலே குறியாக இருக்கிறது. அதில் கொஞ்சத்தை எடுத்து தன் பாவச்சுமையைப் போக்கிக் கொள்ள ஒருவர் 100 பேருக்கு அன்னதானம் செய்கிறார்; மற்றொருவர் 1,000 பேருக்கு உதவி செய்கிறார். வேறொரு வர் 10,000 பேருக்கு அன்னதானமோ, வேறு ஏதேனும் மருத்துவ உதவியோ செய்கிறார்.
இதனாலெல்லாம் கண்டிப்பாக கர்மாவின் விளைவு குறையாது. இதற்கு என்னதான் தீர்வு? ஒருவன் தீயவழியில் பொருள் ஈட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, பத்து ரூபாய் பொருளை இருபது ரூபாய்க்கு ஒருவன் விற்கிறான். மற்றொருவன் அதே பொருளை ஐம்பது ரூபாய்க்கு விற்கிறான். இருபது ரூபாய்க்கு விற்பனை செய்யும்போது, அதில் அவனது உழைப்பு, ஏற்றுக்கூலி−, இறக்குக் கூ−, வண்டி வாடகை எனும் செலவினங்கள் போக, ஒரு உழைப்பிற்கான நியாயமான லாபத்தை அவன் பெறமுடியும். இந்த லாபத்தில் ஒரு சிறு பகுதியை உள்ளன்போடு பிறிதொரு உயிருக்கு உதவுகிறான். இவனை கர்மா பாதிப்பதில்லை. அதேவேளையில் மற்றவன் அநியாய விலைக்கு விற்பனை செய்யும்போது, உபயோகிப்பவனை ஏமாற்றுவது மட்டுமில்லாமல், கொள்ளையடிப்பதற்கும் சமமாகிறது. அப்போது இவன் கர்மா எப்படியிருக்கும்? செல்வம் வருவதுபோல இருக்கும். விரயம் பன்மடங்கு இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமும் கெட்டுவிடும். இது வியாபாரத்தில் மட்டுமா? இன்று விற்பனையென்று வரும்போது வீடாகட்டும், வாகனமாகட்டும், உணவு தானியங்களாகட்டும்- அனைத்துத் துறைகளிலும் இந்த ஏமாற்றுத்தன்மை இருக்கிறது.
அப்படி பொருளை சம்பாதிப்பவனே 1,000 பேருக்கோ, 10,000 பேருக்கோ அன்னதானம் செய்கிறான். அவன் மனம் தான் செய்த பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்று தப்புக் கணக்கு போடுகி றது. அதுமட்டுமல்லாமல் வாஸ்து பார்க்கிறேன் என்று ஏமாற்று பவரும், ஜோதிடம் பார்த்துப் பரிகாரம் செய்துவிடலாம் என்று ஏமாற்றுபவரும், தானும் பாவ மூட்டையைச் சுமந்து, பரிகாரம் என்று நம்பி வருபவரையும் சேர்த்துப் பாவமெனும் படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள்.
இவர்களெல்லாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் ஈஸ்வரனின் மூன்றாவது கண்ணி−ருந்து எவரும் தப்பமுடியாது. திருவள்ளுவர் சொல்லும் தீர்வைப் பார்ப்போம்.
"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.' கையில் பொருள் சேர்வதற்கும், அதை நல்லவிதமாகப் பயன் படுத்துவதற்கும் காரணமான நற்செயல்களே சோர்வில்லாத முயற்சி உண்டாகவும் வழி வகுக்கும். அதுபோன்று கையி லுள்ள பொருள் போவதற்கு- அதாவது கெட்டழிவதற்குக் காரணம் தீயசெயல்களேயாகும். அதனால் சோம்பல் உண்டாகும்; குடி அழிவதற்கும் காரணமாகிவிடும்.
மேற்சொன்ன வியாபாரக் கொள்ளை கள் போதாதென்று உஷ்ணத்தை அதிகரித்து பேரழிவைத் தரும் "5ஜி' தொழில் நுட்பத்தைவேறு பயன்படுத்தப் போகிறோம்.
இதனை உருவாக்கியவர்களும், இதனை செயல்படுத்தத் துணை போகிறவர்களும் நாம் வேற்று கிரகத்திற்குச் சென்று தப்பித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவ னின் கணக்கிலி−ருந்து தவறு செய்தவர் கள் யாரும் தப்பமுடியாது. தவறு செய்பவன் மட்டுமல்ல; அவனது பரம்பரையும் மீளாத் துயரத்தை அனுபவிக்கும் என்பது சத்தியமான உண்மையாகும்.
உக்ரைன் நாட்டில் செர்னோபில் எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அணு உலைகளில் ஒன்று 26-4-1986 அன்று மிக மோசமாக வெடித்துச் சிதறியது. விளைவு மிகக்கொடூரமாக இருந்தது. மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். கதிர்வீச்சு தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவும், மக்களைக் காப்பாற்றவும் அந்நாட்டு அரசு இப்போது பாதுகாப் புக் கட்டமைப்பு ஒன்றை சுமார் 17,000 கோடியில் நிறைவு செய்திருக்கிறது. இதனால் பயன் ஏற்படுமா? உறுதியாகச் சொல்லமுடியாது. இயற்கை சக்தியைப் பயன்படுத்தாத மனித அறிவு செயற்கையாக உருவாக்கிய கெடுதியி−ருந்து தப்பிக்க முடியாது. எனவே இயற்கையோடியைந்த வாழ்க்கையே துன்பமில்லா மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக இருக்கும். அணுவைக் கண்டுபிடித்து அதை உலகுக்கு முதலி−ல் உணர்த்தியது நம் தமிழ்ச் சான்றோர்களே. திருமந்திரத் தைப் படித்தால் தெரியும். அணு வைக் கண்டுபிடித்த நமக்கு அணு குண்டைக் கண்டுபிடிக்கத் தெரியாதா? நமது தமிழ்ச் சான்றோர்களின் அடிப்படைத் தத்துவமே ஜீவகாருண்யமாகும்.
அறம் பற்றி திருமந்திரம் கூறுவதைப் பார்ப்போம்...
"வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்களும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்(டு)
ஒழிநடப் பார்வினை ஓங்கி நின்றாரே.'
அறத்தின்வழியில் செல்பவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறில்லாமல், வானுலகப் பேறு நீங்கத் தீயவழிகளிலேயே செல்பவர்கள், இருண்ட நரகத்திலே நடப்பவர்களாவார்கள். தீவினையாகிய குற்றங் களைச் செய்யத் தூண்டும் காம, குரோத நினைவுகளை முற்றிலும் மனதாலும் நினையாமல் அகற்றிவிட்டு, இதுபோன்ற அசுத்த வினைத் தொடர்புகளை விட்டுவிலகி நடப்பவர்களே, பாவ வினைகளைக் கடந்து பரம்பொருளாகிய ஈஸ்வரனின் வழியில் நிற்பவர்களாவார்கள்.
காலம் குறைவாக இருக்கிறது. எனவே, நாம் நம்மை நற்செயல்களிலும் அறச் செயல்களிலும் ஈடுபடுத்திக்கொண்டு, சுயநலமில்லாமல் அறம் செய்வதில் சிறந்து ஈசனின் ஈடில்லா அன்பைப் பெறுவோம்... அன்பில் உயர்வோம்.