உள்ளத்தை உருக்கிய ஆண்டவன் பிச்சையம்மாள்! -மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/lord-who-made-heart

சென்ற இதழ் தொடர்ச்சி...

த்து வயதுவரை ஜடமாயிருந்த- எட்டு வயதிலேயே திருமணமான மரகதம் என்ற பெண், எவ்வாறு முருகனருளால் பலவிதப் பாடல்கள் பாடி காஞ்சி மகாபெரியவரால் "ஆண்டவன் பிச்சை' என்று அழைக்கப்பட்டார் என் பதையும், அவரது வரலாற் றின் ஒரு பகுதியையும் கடந்த இதழில் கண்டோம். எஞ்சியுள்ளவற்றை சுருக்கமாக இங்கு காண்போம்.

கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை 700 சுலோகங்களில் உபதேசித்தார். பக்தி, கர்ம, ஞானயோகத்தை வலியுறுத்தும் அது எல்லா நாட்டவர்க்கும், எல்லா இனத்தவர்களும் பொதுவானது. எட்டு அயல்நாட்டு மொழிகள் உட்பட 32 மொழிகளில் புனையப்பட்டுள்ளது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் மட்டுமல்லாது, பல்வேறு இந்திய, அயல் நாட்டவர்களாலும் உரை எழுதப்பட்டது. சுமார் 1,300 உரைகள் உள்ளனவாம்.

ஆண்டவன் பிச்சை அம்மையாரும் முருகனரு ளால் நான்கு வரிகள் கொண்ட 400 எளிய தமிழ்ப் பாக்களில் "பகவத்கீதா போதம்' செய்தார்.

முருகன் மானச பூஜை

ஒருசமயம் ஆண்டவன் பிச்சையம்மாள் மார்பு வலியுடன், படுக்க முடியாமல் உடலில் சக்தியற்று சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். மனம் ஷடாக்ஷர மந்திரத்தை ஜெபித்தது. திடீரென ஒரு பிரகாச ஒளி! சிரமப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

அங்கே மஞ்சள் பட்டாடை யுடன் மலர் மாலைகள் அணிந்து தோன்றிய கணபதி, தும்பிக்கையால் சிரசைத்தொட்டு, "அதோ பார்' என்று சொல்லி மறைந் தார். ஜோதி சுழன்றது. ஸ்வர்ண பீடத்தில் ஞானவேல் தெரிந்தது. மயிலும் சேவலும் அண்ணாந்து பார்க்கின்றன. சுழன்ற வட்டம் அறுங் கோணமாக "சரவணபவ' என பிரகாசித்தது. நடுவே முருகன் மயிலின் கழுத்தை அணைத்தபடி நின்றான். மோகனப் புன்னகையால் புவன பக்தர்களுக்கு அருளும் காட்சி! ஆண்டவன் பிச்சைக்கு எழுந்து வணங்க சக்தியில்லை. "முருகா! கதிர்வேலா' என்று வாய்நிறைய கூவினார். மயில் சில இறகுகளை அவர்மீது உதிர்த்தது. ஆண்டவன் பிச்சை தன்னை மறந்தார். அம்மையாரின் அருகே தூங்கிக்கொண்டிருந்த மகன் எழுந்து, ""இங்கே எப்படியம்மா மயிலிறகுகள் வந்தன?'' என்று கேட்க, நடந்தது கனவல்ல; நிஜமே என்றுணர்ந்தார் அம்மையார்.

அச்சமயம், ஆதிசங்கரரின் "சிவ மானஸ பூஜை' போன்று "குஹ மானஸ பூஜை' தமிழ், வடமொழி இரண்டிலும் உதித்தது. அதனில் கடைசி இரு துதிகள் சிந்திப்போமா...

"என்னால் ஆவது யாதுமில்லையென் றுணர்ந்தேன்

உன்னாலன்றி ஓரணுவும் அசையாதே

பன்னாள் பாவியேன் படுதுயர் பார்த்திரங்கி

அன்னா ஆவித்துணையே அடியேனை ஆண்டருள்வாய்.'

"உண்டு உறங்கி உழல்கின்றேன் உத்தமனே

உன்னடியைத் தொழா பாவியெனைக் கைவிடேல்

பண்டு பாதகன் சூரனையும் பதாகையென ஆண்ட

அன்னா அடியேனையும் ஆண்டருள்வாய்.'

உள்ளம் உருகுதையா!

1940-ல் பிறந்து, சென்னை சைதாப் பேட்டையில் வளர்ந்தவன் நான். 1945- லிருந்து 1955 வரை சுப்ரமண்ய சுவாமி கோவில் அருகே வசித்தவன். தினமும் முருகன் கோவில் தரிசனம் உண்டு. பிரம்மோற்சவக் காலங்களில் ஒலிபெருக்கியில் டி.எம். சௌந்தரராஜன் இசையமைத்துப் பாடிய கீழுள்ள பாடல் ஒலிக்கும். இதைக்கேட்டு நெகிழாதவர் இன்றளவும் யார்? சில வரிகள் நினைப்போமா...

mm

"உள்ளம் உருகுதையா முருகா

உன்னடி காண்கையிலே

அள்ளி அணைத்திடவே எனக்கோர்

ஆசை பிறக்குதப்பா.

பாடிப் பரவசமாய் உன்னையே

பார்த்திடத் தோணுதய்யா

ஆடும் மயிலேறி முருகா

ஓடி வருவாயப்பா.'

1957-ல் சென்னை தம்புசெட்டித் தெருவிலிருக்கும் எனது சித்தப்பா வீட்டுக்குச் சென்றேன். திரும்பும்போது ஒரு கோவில்போல் தோன்றியது. அச்சமயம் கோபுரம் கிடையாது. அதுவே இன்று பிரமாதமாக விளங்கும் காளிகாம்பாள் கோவில். தேவி அழகில் மெய்சிலிர்த்தேன். பிராகாரத்தில் வள்ளி, தேவசேனையுடன் முருகன். வடகதிர்காமம் என்று பெயர். அங்கு "உள்ளம் உருகுதையா' பாடல் முழுவத

சென்ற இதழ் தொடர்ச்சி...

த்து வயதுவரை ஜடமாயிருந்த- எட்டு வயதிலேயே திருமணமான மரகதம் என்ற பெண், எவ்வாறு முருகனருளால் பலவிதப் பாடல்கள் பாடி காஞ்சி மகாபெரியவரால் "ஆண்டவன் பிச்சை' என்று அழைக்கப்பட்டார் என் பதையும், அவரது வரலாற் றின் ஒரு பகுதியையும் கடந்த இதழில் கண்டோம். எஞ்சியுள்ளவற்றை சுருக்கமாக இங்கு காண்போம்.

கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை 700 சுலோகங்களில் உபதேசித்தார். பக்தி, கர்ம, ஞானயோகத்தை வலியுறுத்தும் அது எல்லா நாட்டவர்க்கும், எல்லா இனத்தவர்களும் பொதுவானது. எட்டு அயல்நாட்டு மொழிகள் உட்பட 32 மொழிகளில் புனையப்பட்டுள்ளது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் மட்டுமல்லாது, பல்வேறு இந்திய, அயல் நாட்டவர்களாலும் உரை எழுதப்பட்டது. சுமார் 1,300 உரைகள் உள்ளனவாம்.

ஆண்டவன் பிச்சை அம்மையாரும் முருகனரு ளால் நான்கு வரிகள் கொண்ட 400 எளிய தமிழ்ப் பாக்களில் "பகவத்கீதா போதம்' செய்தார்.

முருகன் மானச பூஜை

ஒருசமயம் ஆண்டவன் பிச்சையம்மாள் மார்பு வலியுடன், படுக்க முடியாமல் உடலில் சக்தியற்று சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். மனம் ஷடாக்ஷர மந்திரத்தை ஜெபித்தது. திடீரென ஒரு பிரகாச ஒளி! சிரமப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

அங்கே மஞ்சள் பட்டாடை யுடன் மலர் மாலைகள் அணிந்து தோன்றிய கணபதி, தும்பிக்கையால் சிரசைத்தொட்டு, "அதோ பார்' என்று சொல்லி மறைந் தார். ஜோதி சுழன்றது. ஸ்வர்ண பீடத்தில் ஞானவேல் தெரிந்தது. மயிலும் சேவலும் அண்ணாந்து பார்க்கின்றன. சுழன்ற வட்டம் அறுங் கோணமாக "சரவணபவ' என பிரகாசித்தது. நடுவே முருகன் மயிலின் கழுத்தை அணைத்தபடி நின்றான். மோகனப் புன்னகையால் புவன பக்தர்களுக்கு அருளும் காட்சி! ஆண்டவன் பிச்சைக்கு எழுந்து வணங்க சக்தியில்லை. "முருகா! கதிர்வேலா' என்று வாய்நிறைய கூவினார். மயில் சில இறகுகளை அவர்மீது உதிர்த்தது. ஆண்டவன் பிச்சை தன்னை மறந்தார். அம்மையாரின் அருகே தூங்கிக்கொண்டிருந்த மகன் எழுந்து, ""இங்கே எப்படியம்மா மயிலிறகுகள் வந்தன?'' என்று கேட்க, நடந்தது கனவல்ல; நிஜமே என்றுணர்ந்தார் அம்மையார்.

அச்சமயம், ஆதிசங்கரரின் "சிவ மானஸ பூஜை' போன்று "குஹ மானஸ பூஜை' தமிழ், வடமொழி இரண்டிலும் உதித்தது. அதனில் கடைசி இரு துதிகள் சிந்திப்போமா...

"என்னால் ஆவது யாதுமில்லையென் றுணர்ந்தேன்

உன்னாலன்றி ஓரணுவும் அசையாதே

பன்னாள் பாவியேன் படுதுயர் பார்த்திரங்கி

அன்னா ஆவித்துணையே அடியேனை ஆண்டருள்வாய்.'

"உண்டு உறங்கி உழல்கின்றேன் உத்தமனே

உன்னடியைத் தொழா பாவியெனைக் கைவிடேல்

பண்டு பாதகன் சூரனையும் பதாகையென ஆண்ட

அன்னா அடியேனையும் ஆண்டருள்வாய்.'

உள்ளம் உருகுதையா!

1940-ல் பிறந்து, சென்னை சைதாப் பேட்டையில் வளர்ந்தவன் நான். 1945- லிருந்து 1955 வரை சுப்ரமண்ய சுவாமி கோவில் அருகே வசித்தவன். தினமும் முருகன் கோவில் தரிசனம் உண்டு. பிரம்மோற்சவக் காலங்களில் ஒலிபெருக்கியில் டி.எம். சௌந்தரராஜன் இசையமைத்துப் பாடிய கீழுள்ள பாடல் ஒலிக்கும். இதைக்கேட்டு நெகிழாதவர் இன்றளவும் யார்? சில வரிகள் நினைப்போமா...

mm

"உள்ளம் உருகுதையா முருகா

உன்னடி காண்கையிலே

அள்ளி அணைத்திடவே எனக்கோர்

ஆசை பிறக்குதப்பா.

பாடிப் பரவசமாய் உன்னையே

பார்த்திடத் தோணுதய்யா

ஆடும் மயிலேறி முருகா

ஓடி வருவாயப்பா.'

1957-ல் சென்னை தம்புசெட்டித் தெருவிலிருக்கும் எனது சித்தப்பா வீட்டுக்குச் சென்றேன். திரும்பும்போது ஒரு கோவில்போல் தோன்றியது. அச்சமயம் கோபுரம் கிடையாது. அதுவே இன்று பிரமாதமாக விளங்கும் காளிகாம்பாள் கோவில். தேவி அழகில் மெய்சிலிர்த்தேன். பிராகாரத்தில் வள்ளி, தேவசேனையுடன் முருகன். வடகதிர்காமம் என்று பெயர். அங்கு "உள்ளம் உருகுதையா' பாடல் முழுவதையும் செதுக்கியிருந்தனர். அப்போது தான் தெரிந்தது- இந்தப் பாடல் ஆண்டவன் பிச்சை அம்மையாரால் எழுதப்பட்டது என்று!

ஆறுபடைவீடு துதிப்பாடல்கள்

63 பேர் கொண்ட ஒரு குழுவுடன் ஆண்டவன் பிச்சையம்மாள் ஆறுபடை வீடு தரிசனம் செய்தார். அச்சமயம் மதுரை, வயலூர், விராலிமலை, திருவானைக்கா, ஸ்ரீரங்கம், திருச்சி உச்சிப் பிள்ளையார்- சிவனையும் தரிசித்தனர். ஆண்டவன் பிச்சையம்மாள் ஒவ்வொரு தலத்திலும் திருப்புகழோடு பத்து துதிகள் பாடியதை பி.டி. பாணி அவர்கள் பதிப்பித்தார். திருத்தணிகேசன்மீது அவர் பாடிய சில வரிகளை சிந்திப்போமோ...

"தணிகேசன் திருவருளால் தன்னை அறிந்தேனே

பணியாது இறுமாந்தேன் பவம் தீர்த்து ஆட்கொண்டான்

அணியாக என்னகத்துள் அமர்ந்த பெருமானைக்

கணமும் மறவாது கண்டு களிக்கின்றேன்.'

தண்டபாணி தரிசனம்

1950, மார்ச் மாதம் ஆண்டவன் பிச்சையம்மாள், அம்மாவின் சகோதரி மற்றும் இரு பெண்கள் திருவண்ணாமலை தலம், ரமணர் தரிசனம் செய்யச்சென்றனர்.

திருவண்ணாமலைக் கோவிலை அடைந்த போது இரவு பத்து மணி ஆயிற்று. அர்ச்சகர் கள், ""அர்த்தஜாம பூஜை முடிந்து கர்ப்பக் கிரகம் மூடிவிட்டோமே'' என்றனர். ""பிராகாரம் வலம்வந்து திரும்புகிறோம்'' என்று கூறி மேலே சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் பத்து வயது சிறுவன் படியில் அமர்ந்திருந்தான்.

அவன், ""என்னம்மா, அம்பாளுக்கு பூஜை செய்யணுமா?'' என்றான். ""அர்ச்சகர்கள் கர்ப்பக்கிரகத்தைச் சாற்றிவிட்டனர். எங்களிடம் அர்ச்சனைக்கு பூ, பழம், தேங்காய் எதுவும் இல்லையே'' என்றார். ""எல்லாம் இங்கேயே இருக்கிறது'' என்று, நன்றாக அர்ச் சனை செய்து பிரசாதம் தந்தான். அம்மா விடம் பணமில்லை. உடன் வந்த பெண்கள் வேறெங்கோ சென்றுவிட்டனர். பையனோ, ""பரவாயில்லை, நாளைக்கு வாங்கிக் கொள்கிறேன்'' என்றான். அம்மாவைக் கைப்பிடித்து கம்பத்து இளையனார் கோவில் அழைத்துச்சென்று, ""இந்த கோவில் விவரம் தெரியுமா? நான் இங்கேதான் இருக்கிறேன்'' என்றான். ""உன் பெயர் என்னப்பா'' என்று கேட்க, ""தண்டபாணி'' என்றான்.

மறுநாள் காலை அர்ச்சனைத் தட்டுக்குப் பணம் கொடுக்கவேண்டுமே என்று கோவில்வந்து, கம்பத்து இளையனார் கோவில், அம்மன் கோவில் அர்ச்சகர்களை விசாரித்தபோது, ""வயதான நாங்கள்தான் இங்குள்ளோம். தண்டபாணி என்ற பையன் கிடையாதே. நேற்றிரவு அம்மன் கோவிலில் நாங்கள் கர்ப்பக்கிரகம் மூடியபிறகு நீங்கள் பிராகார தரிசனம் செய்கிறோம் என்றீர்கள். கர்ப்பக்கிரகத்திலிருந்து மணி ஒலித்ததைக் கேட்டோம். எல்லாமே புதிராக இருக்கிறதே'' என்றனர். அப்படியானால் வந்த தண்ட பாணி யார் என்ற நினைத்து அம்மையார் சிலிர்த்தார்.

ரமண மகரிஷி தரிசனம்

மறுநாள் திங்கள்- பிரதோஷம். ரமணாஸ்ரமத்திற்கு நிறைய பேர் வந்திருந்தனர். அம்மா ஆசிரமத்தில் நுழைந்த துமே தன்னிலை மறந்தார். ஏதோ ஞானவெளியில்- ஒளியில் இருப்பதாக உணர்வு. மெதுவாக ரமணரின் அருகே சென்றார்.

நயன தீட்சை (அவரது கண் பார்வை இவர்மீது) கிடைத்ததாகத் தோன்றியது!

அதுமட்டுமின்றி "சரவணபவ' எனும் ஆறெமுத்து மந்திர உபதேசமும் கிடைத்ததாகத் தோன்றியது. அந்தப் பார்வை தன் மனதில் அஞ்ஞானம், அறியாமை, மாயை என்பதைக் கிழித்தகற்றி ஞான ஒளியைப் புகட்டியதாகவும், தனது ஜீவன் பரமாத்மாவுடன் இணைந்ததாகவும் தோன்றியது. அருணகிரியார் கூறும் "பேசா அனுபூதி' நிலையது. உடன்வந்தவர்கள் கொண்டுவந்த பழத்தட்டை நீட்ட, மகரிஷி விதையில்லாத திராட்சை ஒன்றை எடுத்து உண்டு, மற்றதை மற்றவர்களுக்கு விநியோகம் செய்யச் சொன்னார். மகரிஷி அம்மையாரிடம், ""என்ன, நேற்றிரவு தண்டபாணி தரிசனம் கிடைத்ததா'' என்றார்.

ஆஹா! அந்த "தண்டபாணியே'தான் வந்தானா! கைப்பிடித்து அழைத்துச்சென் றானே! வேதம், "சுயம்மே பகவான் ஹஸ்தோ'- "பகவானுக்கு ஆராதனை செய்யும் கையே பகவான் என்கிறதே' என்றெல்லாம் மெய் சிலிர்த்து உணர்ந்தார்.

(அதன்பின்னர் அம்மா சென்னை திரும்பி னார். அச்சமயம் ரமணர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே அவரை தரிசிக்க அம்மா 12-4-1950-ல் ரமணாஸ்ரமம் சென்றார். ரமணரை வணங்கி ஆசிர்வாதம் வாங்கினார். பேச இயலவில்லை. அதன்பின்னர் இரண்டு நாள் கழித்து 14-4-1950-ல் ரமணர் சாயுஜ்யம் எய்தினார்.)

பிள்ளைத்தமிழ்

முருகனுக்குப் பிள்ளைத்தமிழ் எழுத ஆசை கொண்டார் அம்மா. அவரது பேரன் எழுதவிடாமல் தொந்தரவு செய்தான். நேரம் நள்ளிரவு. மருமகளைக் கூப்பிட்டு, ""உன் மகனை உன்னோடு படுக்கவைத்துக்கொள்'' என வேண்டினார். மருமகளோ, ""என் மகன் என்னிடமல்லவா தூங்குகிறான்'' என்றாள். வியந்து பேரனைப் பார்க்க, முருகனாக தரிசனம் தந்து, பத்துப் பருவ லீலைகளைக் காண்பித்து மறைந்தான். ஆக, "குமரகுருபரன் பிள்ளைத்தமிழ்' எழுதமுடிந்தது.

1948 மார்ச் மாதம் அம்மா ஸ்ரீசைலம் சென்று தரிசனம் செய்தார். அங்கு திருப்புகழ் மணியைக் கண்டு அவரோடு உரையாடினார். திருப்புகழ்மணி அம்மாவுக்கு ஆறெழுத்து மந்திர உபதேசம் செய்தார். மீண்டும் சென்னை வந்து, ஒருநாள் திருப்புகழ்மணியுடன் பேசும்போது, ""நான் அந்தசமயம் ஸ்ரீசைலம் வரவில்லையே'' என்றார். அதுவும் முருகன் லீலை போலும்!

எனவே திருப்புகழ்மணி அம்மாவைத் தன் குருவாக ஏற்றார். அம்மாவோ திருப்புகழ் மணியை குருவாக ஏற்றார்.

ஸ்ரீசைலத்திலிருந்து திரும்பியபின் அம்மா நோய்வாய்ப்பட்டார். மாடிப் படி ஏறியபோது மயக்கமடைந்து கீழே விழ, இதயம் பாதிக்கப்பட்டது.

அவரது இரு பிள்ளைகள் மருத்துவர் கள். அம்மாவின் உயிருக்கு எந்த நிமிடம் என்ன ஆகுமோ என்ற கவலை சூழ்ந்தது.

இதுவும் ஒரு லீலை! திருமூலர்போல, ஆதிசங்கரர்போல, அருணகிரிபோல கூடுவிட்டுக் கூடுபாயும் லீலை என்று எவர் அறிவர்? அதனை சிந்திப்போமா!

அம்மாவின் உடலில் யோகி ராமகிருஷ்ணா திருச்சி- லால்குடி அருகே பின்னவாயல் என்ற தலம். அங்கு ராமகிருஷ்ணா என்ற தெலுங்கு பிராமணர் இருந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டார். மாணிக்க வாசகருக்கு சிவதீட்சை கிடைத்த ஆவுடையார் கோவில் அம்பாள்மீது பன்னிரண்டு வருட காலம் பீஜாக்ஷர ஜபம் செய்து வந்தார். எனவே அவர் யோகி ராமகிருஷ்ணா என பிரசித்தி பெற்றார்.

பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் புரிவித்தனர். அவருக்கு மணவாழ்க்கையில் நாட்டமில்லை. நாளடைவில் நிலைமை புரிந்து, மனைவி, "ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு வாய்த்த சாரதா அன்னை போன்று பணிவிடை செய்யலாமே- கணவனே தெய்வமல்லவா' என்றிருந்தாள்.

பரமஹம்சரின் மனோநிலை யோகிக்கு இல்லை. கணவருக்குப் பணிவிடை செய்ய மனைவி அருகில் வரும்போதெல்லாம் கடும்சொற்கள் கூறி விலக்கினார். பெண் இதயம்தானே? எவ்வளவு நாள் அவச் சொற்களைப் பொறுக்கமுடியும்? ஒருநாள், ""நீங்களும் என்னைப் போல பெண்ணாகப் பிறந்து, நான் படும் உடல், மனோதுன்பங்களை அனுபவிக்கவேண்டும்'' என்று சபித்துவிட்டாள். தூய பத்தினியின் சாபம் வீண்போகுமா?

அவருக்கு பல சீடர்கள். தான் பலருக்கு குருஸ்தானத்தில் இருந்தாலும், தான் ஒரு குருவிடம் சந்நியாச தீட்சை பெறவில்லையே என்ற தாபம் அவரை வருத்தியது.

1942-ல் ரிஷிகேஷ் வந்து ஸ்வாமி சிவானந் தரை தரிசித்து தனக்கு சந்நியாச தீட்சை தரவேண்டினார். அவர் ஒரு தீர்க்கதரிசி. பத்தினி சாபம் உணர்ந்தார் போலும். சந்நியாச தீட்சை தர இசையவில்லை. எனவே பின்னவாசல் திரும்பிய யோகி, நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரரை மானசீக குருவாக ஏறறார். 1943-ல் யோகி தன் உடல் சாயும் நேரம் நெருங்குவதை உணர்ந்தார். சதாசிவப் பிரம்மேந்திரரை வேண்டினார். அவரோ, ""உனக்கு இந்தப் பிறவியில் முக்தி கிடையாது. காரணம், உனது பத்தினியின் சாபம். நீ பெண்ணாகப் பிறந்து அவஸ்தைப்பட வேண்டியதே. கர்ப்பவாசம் வேண்டாம் என்றால் ஒரு பெண்ணின் உடலில் சூட்சும ரூபத்தில் புகுந்து அந்த இன்ப துன்பங்களை அடையலாம்'' என்றார். 1943, தை மாத வளர்பிறை துவாதசியன்று அவர் சமாதியடைந்தபோது, சமாதியில் ஒரு துவாரம் வைக்கச்செய்தார்.

1948 மார்ச் மாதம் அம்மா இருக்கிறாரா இல்லையா என்ற நிலையில் இருந்தார். அப்போது சதாசிவப் பிரம்மேந்திரர், ""இந்த மாதின் உடலில் புகுந்தால் உனது கர்ப்பவாசம் நீங்கும். இந்த உடல் முருகன் அருளால் தழைத்தோங்கும். ஆழ்ந்த ஆன்மிக உடல்'' என்று சூட்சுமமாக அறிவுறுத்த, அதன் படி யோகி ராமகிருஷ்ணா அம்மாவின் உடலில் புகுந்தார். இதற்காக யோகியார் ஆன்மா 1943 முதல் 1948 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அதன்பின்னர் அம்மாவின் உடலில் அசைவுகள் ஏற்பட்டன. இப்போது அந்த உடலில் அம்மாவின் ஜீவன் இல்லாததால் அங்கிருந்த எவரையும் அடையாளம் புரிந்துகொள்ள இயலவில்லை. உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் ஆறு மாதங்கள் படுக்கையிலேயே கிடந்தார். வெறும் நீராகாரம் மட்டுமே உணவு. யோகியாரின் ஆத்மா கூறியது- "பொறுத்திரு. இந்த உடல் முருகனருள் பெற்றது. பல தலங்களை தரிசித்துள்ளது. அதுவே மேலும் நடக்கும்.'

அம்மாவின் உடல் கொஞ்சம் கொஞ்ச மாகத் தேறியது. அவர் தன் பாடல்களைப் பதிப் பிக்கும் திருப்புகழ் மணியைக் காணச் சென்றார். அவர் "வேலைப்பளு அதிகம்; சந்திக்க இயலாது' என்று கூறிவிட்டார். திருப்புகழ் மணியின் குருதான் யோகி ராமகிருஷ்ணா. எனவே அவர் திருப்புகழ் மணியின் கனவில் தோன்றி, "நான் உன்னைக் காணவந்தேன். நீ முடியாது என்றாயே. வேறுருவில் வருவேன் என்று முன்னரே நான் கூறினேனே' என்றார். திருப்புகழ் மணி, "

ஆகா, தவறு நடந்துவிட்டது; மன்னிக்கவும்' என்றார்.

திருப்புகழ் மணியும் அம்மாவும் ஒருவருக் கொருவர் குரு- சீடர் போன்றவர்கள் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆன்மிக உலகில் பல அதிசயங்கள் நடக்கும்.

சென்னையில் அம்மாவுக்கு ரமணர் தரிசனம்

யோகியின் சூட்சுமத்துடன் அம்மாவின் வாழ்க்கை இன்ப துன்பங்களுடன் நடந்து கொண்டிருந்தது. 1951-ல் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். அச்சமயம் ரமண மகரிஷி யின் குரல் கேட்டது. "உனக்கு இரண்டு பேரக் குழந்தைகள் பிறக்கும். முதல்வனுக்கு ரமணா, அடுத்தவனுக்கு தண்டபாணி என பெயரிடு' என்றார். அவ்வாறே நடந்தது.

தண்டபாணியின் பிறந்த நாள். அன்று காயத்ரி ஜெபம். எனவே வீட்டில் பலரும் கூடி யிருந்தனர். சமைக்க துணைக்கு ஒரு பரிசாரகர் இருந்தார். அவர், ""அம்மா, காபிக்கு வெந்நீர் வைத்திருக்கிறேன். கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அம்மா "சரி' என்று சொல்லிவிட்டு, முற்றத்தில் விளக்கேற்றிவிட்டு வரலாம் என்று சென்றார்.

வீட்டு முற்றத்தின்தான் பஜனை, சத்சங்கம் நடக்கும். அங்கு விளக்கேற்றச் சென்ற அம்மா ரமண மகரிஷி அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிசயித்தார். அவர் அருகில் குழந்தை தண்டபாணி. ""என்ன, பயந்துவிட்டாயோ? அன்று பேச முடியவில்லை. எனவே இன்று உன்னிடம் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்றார். அம்மா அவரை வணங்கிவிட்டு அமர, பல தத்துவங்களை உபதேசித்தார்.

பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக் கூடாது என்பர். மகரிஷியோ, ""நான் காயத்ரி மந்திரம் உபதேசிக்கிறேன். திரும்பக் கூறு'' என்று உபதேசித்தார். அம்மா ஏதோ ஒரு அபூர்வ சக்தி தனக்குள் ஊடுருவுவதாக உணர்ந்தார். ரமணரை வணங்கி அவர் பாதங்களைத் தொட முயல, ""இது சூட்சும சரீரம். தொட இயலாது'' என்று சொல்லி, அம்மாவின் சிரசில் தன் கரங்களை வைத்து ஆசிர்வதித்தார். அடுத்து அம்மா தன்னை மறந்தார். ரமணர் மறைந்தார். அம்மா நமஸ்கார சமாதி நிலை எய்தினார்.

காயத்ரி ஜெபம் செய்தவர்கள் அம்மாவின் நிலை பார்த்து, தூக்கிப் படுக்க வைத்தனர். அம்மா சுயநிலைக்குவர இரண்டு நாட்கள் ஆகினவாம். திருப்புகழ் மணிவந்து அம்மாவைக் கண்டு, அவர் அனுபவித்த அனுபூதி சமாதிநிலையைக் கூறவேண்டினார். ""ஆறுபடை வீடுகளைக் கண்டு, அண்ணாமலை ஜோதியைக் கண்டேன்'' என்றார் அம்மா. ""மேலே என்ன?''என்று கேட்க, அம்மாவால் பேச இயலவில்லை. "சஷ்டி மாலை' என்ற ஆழ்ந்த தத்துவப் பாடல் வந்தது.

அம்மாவின் புகழ் பரவ, தரிசனத்திற்கு அன்பர்கள் வந்தனர். அம்மாவின் உடல்நிலையும் மாறி மாறி தொந்தரவுக்கு உள்ளானது. வீட்டு வேலைகளில் தடங்கல்கள் ஏற்பட்டன. எனவே கணவர் நரசிம்மன், ""டெல்லியில் இருக்கும் உன் மகன் வீட்டுக்குச் சென்றுவா. இடமாற்றம் உனக் கும் நல்லது செய்யும்'' என்றார். அம்மாவின் உடலில் சூட்சுமமாக இருந்த யோகியார் அம்மா வின் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டே இருந்தார்.

சந்நியாச தீட்சை

1953-ல் டில்லியில் அம்மா தன் இரண்டாவது மகன் வீட்டில் தங்கியிருந்தபோது, கி.வ.ஐ., தணிகை மணி, ஆதிசேஷ ஐயர் ஆகியோர் அம்மாவைக் காணச் சென்றனர். அவர்கள் பின்பு தல யாத்திரையாக ரிஷிகேஷ் செல்ல, அம்மாவும் உடன் சென்றார். அங்கே சிவானந் தரை தரிசித்தனர். அம்மாவைப் பாடச்சொல்ல, அம்மா பாட, தெய்வீக அதிர்வுகள் நிறைந் தன. மறுநாள் யாவரும் கிளம்ப, சிவானந்த ஸ்வாமிகள், ""தணிகை மணியும் அம்மாவும் இங்கிருக்கட்டும்'' என்றார்.

அம்மா உடலிலிருந்த யோகி ராம கிருஷ்ணா வுக்கு சிவானந்தரை தரிசித்தது ஆனந்தம். ஆழ்ந்த ஞானியான சிவானந்தர் உணர்ந்தார்- அம்மாவின் உடலில் யோகியார் வாசம் செய்கிறார் என்று. இச்சமயம் 1954-ல் அம்மாவுக்கு (யோகியாருக்கு) சந்நியாச தீட்சை ஸ்வாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது. ஆண்டவானந்த சரஸ்வதி என்னும் தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.

அடுத்த பத்து வருடங்கள் யோகியார் அம்மா உடலிலேயே இருந்தார். பின் சிவானந்தர் கூறியபடி அம்மா உடலைவிட்டுப் பிரிந்து முக்தி எய்தினார்.

சந்நியாச தீட்சையானபின் அம்மா சென்னை வந்து சந்நியாசினியாக இருந்தார். 4-7-1968-ல் திருமுல்லைவாயில் வைஷ்ணவி கோவில் சேர்ந்தார். வைஷ்ணவி தேவிமீது பல துதிகள், கும்மி கள் பாடினார். அங்கு நான் அம்மாவை 1972-ல் தரிசித்துப் பேசி வியந்தேன்; மகிழ்ந்தேன்.

இரண்டாவது அம்மா தரிசனம்

1984-ல் மே கடைசி... சிவானந்த ஆசிரமத்தில் மூன்று நாட்கள் தங்கினோம்.

அச்சமயம் ஆசிரமத்தில் அம்மாவை தரிசித்தோம். அம்மா மௌன விரதம் பூண்டிருந்ததால், அவருடன் தங்கியிருந்த பெண்மணியுடன் பேசினேன். அம்மா கேட்டு சந்தோஷித்து ஆசிர்வதித்தார். ஷடாக்ஷர உபதேசம் கேட்டேன்; அம்மா யாதும் கூறவில்லை. தன் இதயத்தைத் தொட்டார். அம்மாவின் "முருகன் மானஸ பூஜை'யை நான் துதிப்பதால், அதுவே போதும் என்றதுபோல தோன்றியது. சிவானந்த ஆசிரமத்தில்"The Gift of God or Andavan Pichai என்று புத்தகம் எழுதிய ஸ்ரீமதி ராதா, டாக்டர் கிருஷ்ண ராவை சந்தித்துப் பேசினேன். அம்மாவைப்பற்றி நிறைய கூறினார்.

அம்மாவின் "திருமயிலை கபாலி, கற்பகாம்பாள் இசை மாலை', "திருத் தணிகாசல முருகன் திருவருள் அந்தாதி' யுடன் (75 துதிகள்) ஆண்டவன் பிச்சை பஜன் மண்டலி, காமாட்சி குப்புசாமி யால் பிரசுரிக்கப்பட்டது. மேலும் 1985-ல் அதே பஜன் மண்டலியாரால் (கற்பகம் ஸ்ரீனிவாசன்) பிரசுரித்த "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இசை மாலை'யும் கிடைத்தது.

ரிஷிகேஷி-ல் பல வருடங்கள் இருந்து, பின்பு உடல்நிலைல் காரணமாக சென்னை வர, 1990 நவம்பரில் ஆண்டவன் பிச்சை யம்மையார் முருகனில் தோய்ந்தார்.

அவர் பாக்கள், துதிகள் இன்றும் மனதை உருக்கும்; மெய்சிர்க்கும்;

ஆனந்தப் பரவசம் அடையச்செய்யும்!

om011219
இதையும் படியுங்கள்
Subscribe