Advertisment

பக்தனுக்காக பிரதான வாசலை திசை மாறிய சிவபெருமான்!

/idhalgal/om/lord-shiva-changed-direction-main-door-devotee

வுந்தநாகநாத் மந்திர்...

இந்த ஆலயம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் இருக்கிறது. ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பழமையான சிவன் கோவில் இது.

Advertisment

இந்த ஆலயம் மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரால் கட்டப்பட்டதாக வரலாறு. 14 வருட வனவாச காலகட்டத்தில் இது கட்டப்பட்டது. அப்போது இந்த ஆலயம் ஏழு தளங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தை தான் ஆண்ட காலத்தில் அவுரங்கசீப் சேதப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தின் அளவு 669 சதுர அடி.

இங்கு இருக்கும் சிவலிங்கம் தரை அளவிற்கும் கீழே இருக்கிறது. இங்கு 12 சிவலிங்கங்கள் இருக்கின்றன.

13-ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தை சேவ்னா யாதவ் வம்சத்தினர் புதுப்பித்து கட்டியிருக்கின்றனர்.

இப்போதிருக்கும் க

வுந்தநாகநாத் மந்திர்...

இந்த ஆலயம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் இருக்கிறது. ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பழமையான சிவன் கோவில் இது.

Advertisment

இந்த ஆலயம் மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரால் கட்டப்பட்டதாக வரலாறு. 14 வருட வனவாச காலகட்டத்தில் இது கட்டப்பட்டது. அப்போது இந்த ஆலயம் ஏழு தளங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தை தான் ஆண்ட காலத்தில் அவுரங்கசீப் சேதப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தின் அளவு 669 சதுர அடி.

இங்கு இருக்கும் சிவலிங்கம் தரை அளவிற்கும் கீழே இருக்கிறது. இங்கு 12 சிவலிங்கங்கள் இருக்கின்றன.

13-ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தை சேவ்னா யாதவ் வம்சத்தினர் புதுப்பித்து கட்டியிருக்கின்றனர்.

இப்போதிருக்கும் கோவில் அகல்யா பாய் கோல்கர் என்ற பெண்ணால் கட்டப்பட்டது.

Advertisment

இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சிவனை தரிசிப்பதற்காக இந்துக்களும் சீக்கியர்களும் ஏராளமாக வருவார்கள். சீக்கியர்களின் புராண நூல்களில் இந்த ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

s

இந்த ஆலயத்திற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. இதோ அந்த கதை...

சிவனின் பரம பக்தரான நாம்தேவ், சிவனை மனதில் நினைத்து வழிபட்டார். அப்போது மற்ற பூசாரிகள் அவரின் கையைப் பிடித்து வெளியேற்றினர்.

"நீ இந்த ஆலயத்தில் வழிபடக் கூடாது. பூஜை செய்யக்கூடாது. காரணம்- நீ தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன்'' என்று அவர்கள் கூறினார் கள். அதைக்கேட்டு மிகுந்த கவலைக் குள்ளானார் நாம்தேவ்.

தொடர்ந்து அவர் ஆலயத்திற்கு வெளியே வந்து, கோவிலின் பின் பகுதியில் அமர்ந்து சிவனை வழிபட்டார். தன் தற்போதைய நிலையைக் கண்ணீர் மல்க சிவனிடம் கூறினார்.

"சிவனே... நீதான் என்னைக் காப்பாற்றவேண்டும். நான் உன்னுடைய உண்மையான பக்தன். என்னை நான் இப்போதிருக்கும் ஜாதியில் பிறக்க வைத்தவன் நீதானே? நீ என்னை சொர்க்கத்திற்கு வரவழைத்து, உனக்கருகில் இருக்கச் செய்வாய் என்று எனக்குத் தெரியும் எனினும், நீ ஒரு அற்புதத்தை இப்போது செய்யவேண்டும். அதைப்பார்த்து இங்குள்ளவர்கள் திருந்த வேண்டும்'' என்று அவர் சிவனிடம் வேண்டினார்.

தன் பக்தரின் வேண்டுகோளைக்கேட்ட பகவான் சிவன், ஆலயத்தின் பிரதான வாசலையே மாற்றிவிட்டார். ஆலயத்தின் முன்பகுதியைத் தன் மாய சக்தியால் பின் பகுதிக்குக்கொண்டு வந்தார்.

அதன்மூலம் ஆலயத்தின் பிரதான வாசல் தெற்கு திசைக்கு வந்துவிட்டது. அனைத்து சிவன் ஆலயங்களிலும் பிரதான வாசல் கிழக்கு திசையில்தான் இருக்கும். இந்த ஒரு ஆலயத்தில் மட்டும்தான் பிரதான வாசல் மேற்கு திசையில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

தன் பக்தருக்காக ஆலயத்தின் பிரதான வாசலையே வேறு திசைக்கு சிவன் மாற்றினார் என்பது எப்படிப்பட்ட அற்புத செயல்!

அதனால்தான் இந்த கோவிலில் இருக்கும் சிவனின் பெயர் அவுந்த நாகநாத். "அவுந்த்' என்றால் எதிர்மறையாக, முரண்பாடாக, தலைகீழாக என்று அர்த்தம்.

சீக்கியர்களின் புராண நூலான "குரு கிராந்த் சாஹிப்' பின் 1292-ஆவது பக்கத்தில் இந்த ஆலயத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

புராண காலத் தில் பாண்டவர்கள் இங்கு இருந்தபோது, பசுக்கள் நீர் பருகுவதற்காக வந்திருக்கின்றன.

.அப்போது பசுக்களின் பால் நீரில் விழுந்திருக்கிறது.

.அதைப் பார்த்த பீமன் தன் அண்ணன் யுதிஷ்டரிடம் அதைக் கூறியிருக்கிறார்..

அதைத்தொடர்ந்து இருவரும் ஆற்றை நோக்கி வந்திருக்கிறார்கள்.

அப்போது நீரிலிருந்து அவர்களுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்திருக்கிறது.

அந்த சிவலிங்கத்தை வைத்து இந்த ஆலயத்தை யுதிஷ்டிரர் உருவாக்கியதாக வரலாறு.

‌முதலில் கீழ்தளம் மட்டுமே இருந்திருக்கிறது. தேவகிரி மன்னர்கள் பின்னர் அதை புதுப்பித்து கட்டியிருக் கிறார்கள்.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள், ஹிங்கோலிக்குப் பயணிக்கவேண்டும். பயண தூரம் 932 கிலோமீட்டர். அவுரங்காபாத்திற்குச் செல்லும் ரயிலில் பயணிப்பவர்கள், பூர்ணாவில் இறங்க வேண்டும்.

அங்கிருந்து 62 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

திருப்பதி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து நேரடி ரயில்கள் இருக்கின்றன.

om010824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe