மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி#டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் "பா-சி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக "டீம் லீடராக' மதுரை கோட்டத்தில் "நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் ப.ச.ராதா கிருஷ்ணன் அவர்களைஅவருடைய துணைவியார் ட.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்திஅற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம். இருவரும் பக்தி உணர்வு பொங்க உன்னதமான விஷயங்களை நம்மிடம் கூறினார்கள்.
முதலில் ப.ச.ராதா கிருஷ்ணன் ரம்மியமாக இப்படி பேசினார்.
1988 ஆண்டில் எங்கள் திருமணம் நடந்தது. என் மனைவி சொந்த ஊர் நாகர்கோவில். அவர் சிறுவயது முதலே தீவிர விநாயகர் பக்தை ஆக இருந்தவர். நாகர்கோவில் செட்டித்தெரு புகழ்பெற்ற தேசிய விநாயகர் கோவிலுக்கு தினமும் தவறாமல் சென்று வழிபட்டு வந்தவர். அதன் தொடர்ச்சியாக விநாயகர் கோவில் எங்கிருந்தாலும் இப்போதும் தேடிச்சென்று வணங்கி அந்த கோவில்களுக்கு தேவைப்படுவதை செய்து பக்தி பணியை பரிபூரணமாக செய்து வருகிறார். அவர் குடும்பத்தலைவியாக இருந்தாலும் என்னை விட பிசியாக தெய்வ தொண்டுகளை தினமும் ஆற்றி வருபவர். அந்த பிள்ளையார் வழிபாடுகள் தான் எங்களுக்கு அருமையான காயத்ரி எனும் மகளை தந்து நல்ல ஐடி துறை அதிகாரி பணியில் இருக்கும் பாஸ்கர் என்ற தங்கமான குணம் உள்ள மாப்பிள்ளை தந்து, இரண்டாம் வகுப்பு படித்து முடித்த இஷா எனும் பேத்தி தந்து எங்களுக்கு மகிழ்ச்சி, திருப்தி தந்து பிரகாசமான, பிரமாதமான வாழ்க்கை பிள்ளையார் தந்திருக்கிறார் என்று உறுதியாக கூற
மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி#டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் "பா-சி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக "டீம் லீடராக' மதுரை கோட்டத்தில் "நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் ப.ச.ராதா கிருஷ்ணன் அவர்களைஅவருடைய துணைவியார் ட.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்திஅற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம். இருவரும் பக்தி உணர்வு பொங்க உன்னதமான விஷயங்களை நம்மிடம் கூறினார்கள்.
முதலில் ப.ச.ராதா கிருஷ்ணன் ரம்மியமாக இப்படி பேசினார்.
1988 ஆண்டில் எங்கள் திருமணம் நடந்தது. என் மனைவி சொந்த ஊர் நாகர்கோவில். அவர் சிறுவயது முதலே தீவிர விநாயகர் பக்தை ஆக இருந்தவர். நாகர்கோவில் செட்டித்தெரு புகழ்பெற்ற தேசிய விநாயகர் கோவிலுக்கு தினமும் தவறாமல் சென்று வழிபட்டு வந்தவர். அதன் தொடர்ச்சியாக விநாயகர் கோவில் எங்கிருந்தாலும் இப்போதும் தேடிச்சென்று வணங்கி அந்த கோவில்களுக்கு தேவைப்படுவதை செய்து பக்தி பணியை பரிபூரணமாக செய்து வருகிறார். அவர் குடும்பத்தலைவியாக இருந்தாலும் என்னை விட பிசியாக தெய்வ தொண்டுகளை தினமும் ஆற்றி வருபவர். அந்த பிள்ளையார் வழிபாடுகள் தான் எங்களுக்கு அருமையான காயத்ரி எனும் மகளை தந்து நல்ல ஐடி துறை அதிகாரி பணியில் இருக்கும் பாஸ்கர் என்ற தங்கமான குணம் உள்ள மாப்பிள்ளை தந்து, இரண்டாம் வகுப்பு படித்து முடித்த இஷா எனும் பேத்தி தந்து எங்களுக்கு மகிழ்ச்சி, திருப்தி தந்து பிரகாசமான, பிரமாதமான வாழ்க்கை பிள்ளையார் தந்திருக்கிறார் என்று உறுதியாக கூறுவோம்.
எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில் என்றா லும் பிறந்து வளர்ந்தது எல்லாமே திண்டுக்கல். அம்மா ஆசிரியை, அப்பா பஞ்சாயத்து யூனியனில் பணிபுரிந்தார். எனக்கு கோவில், பக்தி ஈடுபாடுகள் வந்ததே திருமணத்திற்கு பிறகுதான். 1992#ஆம் ஆண்டில் எல்.ஐ.சி முகவராக பணியில் சேர்ந்து ஆறு ஆண்டு கழித்து எல்.ஐ.சி பரிட்சை எழுதிஅதன் ஊழியராகி கடும் உழைப்பால் இன்று வளர்ச்சி# டெவலப்மெண்ட் ஆபீசராக இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு என் அன்பு மனைவியின் அற்புத தெய்வ பக்தி தந்த சக்தியால்தான் அரசு வேலை கிடைத்து உயர் அதிகாரியாக உயர்ந்துள்ளேன்.
நாங்கள் மதுரைக்கு வந்து இந்த வீட்டிற்கு வந்தபோதுதான் அடுத்த தெருவில் அழகு சுந்தர பரிபூரண விநாயகர் கோவில் வழிபாடு துவங்கியது. என் மனைவி பிள்ளையார் பக்தை என்பதால் அந்த விநாயகர் கோவில் தேடி வந்ததோ என்று உள்ளம் பக்தியில் பூரித்துப் போனோம். என் மனைவி இந்த விநாயகர் கோவிலுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்நல பாதிப்பு எது வந்தாலும் பொருட்படுத்தாமல் காலை, மாலை இருவேளையும் இன்றுவரை தவறாமல் சென்று வழிபட்டு வருகிறார். நானும் எங்கள் மாப்பிள்ளை, பெண், பேத்தியும் விசேஷ நாட்களில் சென்று வழிபட்டு வருகிறோம்.
எங்கள் வீட்டின் அருகில்ஸ்ரீ மகாலட்சுமி கணபதி கோவிலும் இப்போது வந்துள்ளது. அங்கும்என் மனைவி தினமும் தவறாமல் சென்றுவழிபட்டு வருகிறார். இரு விநாயகர் கோவிலுக்கும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் தந்து வருகிறோம். அதிகாலை ஐந்தரை மணிக்கு அபிஷேகம் செய்ய பால் தந்து வருகிறோம். குறிப்பாக மார்கழி மாதம் முழுவதும் முப்பது நாட்களும் விநாயகர் கோவிலுக்கு நாங்கள் கடுமையான விரதங்கள் இருந்து சுத்தமான, சுவையான பொங்கல், எலுமிச்சை சாதங்கள் செய்து வழங்கி விநாயகர் வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கும் வழங்கி வருகிறோம்.
எங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு மாதம் ஐந்து லிட்டர்நல்ல எண்ணெய் வாங்கி தந்து வருகிறோம்.
கண்மலர் தங்கத்தில் செய்து தந்தோம். கின்னிமங்கலம் என்ற ஊரில் உள்ள 81 சித்தர்கள் ஜீவ சமாதி ஆன சிவன் கோவிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சென்று வணங்கி வருகிறோம்.
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள் வீர ஆஞ்சனேயர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்து வருகிறோம். புத்தாண்டு ஜனவரி முதல் தேதி குடும்பத்துடன் இங்கு நித்திய பூஜைகளுக்கு காணிக்கை தொடர்ந்து தந்து வருகிறோம். இங்கு தங்க கோபுரம் அமைத்தபோது ஒரு பவுன் தங்கம் அளித்தோம்.
மதுரையின் அரசி மீனாட்சியம்மன் என்பதால் இந்த வீட்டிற்கும், எங்களுக்கு சொந்தமான வீடுகளுக்கும் "மீனாட்சி இல்லம்' என்றே பெயர் வைத்துள்ளோம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோவிலுக்கு பிரதோஷம் தோறும் சென்று வணங்கி வருகிறோம். இங்கே கிரிவலம் வந்த பக்தர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரசாதம் செய்து தந்திருக்கிறோம்.
கொரோனா காலத்தில் எங்கள் மாப்பிள்ளை வேலையை ராஜினாமா செய்து சோதனை வந்தது. கின்னிமங்கலம் கோவில் சித்தர் அருளானந்த சுவாமியை நாங்கள் வழிபட்டு அதன் பலனாக எங்கள் மாப்பிள்ளைக்கு புதிய நல்ல உயர் பதவி வேலை கிடைத்தது. அதனால் எங்கள் மாப்பிள்ளைக்கு புது வேலை தந்து புத்துணர்ச்சி தந்த தெய்வத்தை இன்றும் போற்றி நன்றியுடன் வணங்கி வருகிறோம்.
எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்க வில்லையே என்ற கவலை வந்தபோது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் சென்று வணங்கி வந்ததால் அழகான பெண் குழந்தையாக ஒரே செல்ல மகளாக காயத்ரி பிறந்ததையும் இன்றும் மன நெகிழ்ச்சியுடன் மனதிற்குள்நன்றி கூறி மகிழ்ந்து வருகிறோம். என் அக்காவின் தீவிர வேண்டுதலாலும் எங்களுக்கு மகள் பிறந்ததை மறக்கமுடியாது. அப்போது வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று வணங்கி வந்தோம்.
எங்களுக்கு திருமணம் ஆனபோது எனக்குவேலை இல்லை. சொந்த தொழில்சில நண்பர்கள் உதவியுடன் செய்து சுமாரான
வருமானமே பெற்று வந்தேன். என் மனைவியின் தீவிர திடமான உறுதியான விநாயகர் வேண்டுதலால் பேங்க் மேனேஜர் கண்ணப்பன்என்பவர் என்னை எல்.ஐ.சியில் முகவராக சேர்த்து விட்டார். பிறகு 34 வயதில் தான் எனக்கு எல்.ஐ.சி அரசு அதிகாரி வேலை கிடைத்தது. அதற்கு என் மனைவியின் மகத்தான தெய்வ வழிபாடுகள்தான் காரணமாக இருந்தது. திருமணமாகி 11 ஆண்டு கழித்து தான் அரசு வேலை எனக்கு 1999 ஆண்டில் கிடைத்து வளர்ச்சி அதிகாரி ஆனேன். லேட்டாக அரசு பணி கிடைத்தாலும் லேட்டஸ்ட்டாக அமைந்தது என் மனைவி வணங்கிய கணபதியின் கருணையே காரணம் என்பேன்.
11 வருடங்கள் தொடர்ந்து என் மனைவி தினமும் என் கணவருக்கு நல்ல வேலை கொடு என்று திண்டுக்கல் பூஞ்சோலை விநாய கரை வேண்டியதால் தான் மதுரையில் வேலை கிடைத்து மதுரைக்கு வந்தோம்.
என் மனைவிக்கு இஷ்ட தெய்வம் விநாயகர் என்பதால் நாங்கள்குடிவந்த மதுரை வீட்டிற்கு அருகிலும் இரண்டு விநாயகர் கோவில் அமைந்தது. வியக்க வைக்கும் விஷயமாகி விட்டது.
21#10#2021 அன்று வழக்கமாக என் காரில் செல்லாமல் டூவீலரில் நான் சென்றபோது காளவாசல் பகுதியில் பெரியவர் சாலையின் குறுக்கே திடீர் என்று வந்துவிட்டதால் நான்சட்டென்று பிரேக் போட்டு கீழே விழுந்துவிட்டேன். பஸ்கள், லாரிகள் வரிசையாக தொடர்ந்து செல்லும் மிகவும் பிசியானஅந்த சாலையில் நான் கீழே விழுந்தபோது தெய்வ அருள் சக்தியால் தோள் பட்டையில் அடிபட்டு வாகனங்கள் எதுவும் என்மீது ஏறிவிடாமல் வராமல் போனதால் மிக அதிர்ச்சியமாக பெரிய விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினேன். அதை இப்போது நினைத்தாலும் நானும், எங்கள் குடும்பத்தில் உள்ளஎல்லாரும் உடல் சி-ர்த்து நடுங்கி விடுவோம்.
தோள்பட்டையில் மேஜர் ஆபரேஷன் செய்து கைகள் வ- பாதிப்பில் இருந்து விடுபட்டேன்.
அந்த உயிருக்கு ஆபத்தான விபத்து நேரத்தில் என் மனைவி அனுதினமும் தவறா மல் வழிபடும் விநாயகப் பெருமான் என் நண்பர் "கணேசன்' என்பவர் வடிவில் அங்கு வந்து என்னை எழ வைத்து ஓரமாக அமர வைத்து தண்ணீர் கொடுத்து மருத்துவமனை அனுப்பி வைத்த கணபதி கருணையை எப்படி எங்களால்மறக்க முடியும்?'
ராதாகிருஷ்ணன் பக்தி பரவசத்துடன் பேசி முடித்ததும் அவர் மனைவி ஜீவாகுமாரி தொடர்ந்து நம்மிடம் பேசினார்.
"நான் பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் எம்.ஏ., எம்.எட்., பட்டம் பெற்று உயர்கல்வி படித்தவர் எனக்கு கணவராக வந்ததற்கு காரணமே நான் அன்றாடம் தவறாமல் வழிபடும் கணபதியின் கருணை பேரருள் என்று நம்புகிறேன். இன்றுவரை மலை போன்ற துன்பங்கள் பல வந்தாலும்அவை எல்லாம் பனிபோல விலகிவிடும் அற்புதங்களை நானும், என் கணவர், மாப்பிள்ளை, மகள், பேத்தி தினமும்மனம் உருக வழிபடும் மகாகணபதி நிகழ்த்தி எங்களை எங்களை காப்பாற்றி
நிம்மதியாக சந்தோஷமாக வாழ வைத்து வருகிறார்.
பிறருக்கு உதவும் மனித நேயம் மிக்கவர் என் கணவர். பல எளியோருக்கு தேவைப்படும் உதவிகளை தயங்காமல் செய்து பலரின் பரிபூரண நல்வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
எனவே, தர்மம் எங்கள் தலைகாக்கிறது. தாய்க்கு தலைமகன் விநாயகர் பெருமானும் அருள் தந்து காத்து வருகிறார். எல்லா புகழும் பிள்ளையாருக்கே!'
ராதாகிருஷ்ணன்-ஜீவகுமாரி பக்தி ஈடுபாடுகள், தர்ம சிந்தனைகள் தொடர வாழ்த்தி விடைபெற்றோம்.
மதுரை எல்.ஐ.சி டெவலப்மெண்ட் ஆபீசர் திரு.ப.ச.ராதா கிருஷ்ணன் தொடர்பிற்கு
கைபேசி எண் 98433 89575,
படங்கள்: விஜயாகண்ணன்