இறை வடிவங்களுக் குச் செய்யப்படும் சில அலங்கார வகைகளைக் கடந்த இதழில் கண்டோம். மேலும் சிலவற்றை இங்கு காணலாம்.
சங்கு
இந்த அலங்காரம் அனைத்து தெய்வங் களுக்கும் செய்யலாம். ஆனால் அம்பிகை, விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு மிக விமரிசையாகச் செய்கிறார்கள். சங்கு அலங்காரத்தைப் பெரும்பாலும் காண்ப தரிது. எப்பொழுதாவது செய்வதுதான் வழக்கம். ஆயுள் விருத்திக்கும், நோய்கள் தீர்வதற்கும்தான் இது செய்யப்படுகிறது.
இந்த அலங்காரம் சந்தனத்தை மூலமாகக்கொண்டு செய்யப்படுகிறது. முதலில் பகவானின் திருமேனியில் சந்தனத்தை சாற்றி, மேடு பள்ளங்களை சரிசெய்து, அதன்பிறகு சிறுசிறு சங்குகளை எடுத்து அதில் ஒட்டிக்கொண்டே வருவார்கள். அந்த தெய்வம் சங்கினா லேயே உருவம் பெற்றாற்போன்ற தோற்றத்தைத் தரும்.
அந்த சங்கின்மீது பல வண்ணங்களைக் கொடுப்பது கூடுதல் அழகைத் தருகிறது. இந்த அலங்காரம் புராதனமாக உள்ள கோவில்களில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
செந்தூரம்
இந்த அலங்காரம் பெரும்பாலும் மூலவர் விக்ரகங்களுக்குச் செய்யப்படுகிறது. பொதுவாக அம்பிகை மற்றும அனுமன் விக்ரகங்களுக்கே செய்யப் படுகிறது. இராமாயணத்தில் இதைப்பற்றிய கதையே உள்ளது.
ஒருசமயம் சீதாதேவி நெற்றி வகிட்டில் செந்தூரம் இட்டுக்கொண்டாராம். அதைப் பார்த்த அனுமன், "ஏனம்மா நெற்றியில் செந்தூரம் இட்டுக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று கேட்டார். அதற்கு சீதாதேவி, "ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி எப்பொழுதும் சௌக்கியமாகவும், தீர்க்காயுளுடனும் இருக்கவேண்டுமென்று இட்டிருக்கிறேன்.
அனைத்து மனைவிகளும் கணவன் நன்றாக இருக்க வேண்டி இப்படி இடுவது வழக்கம்'' என்று கூறினாளாம். அதைக்கேட்ட அனுமன், தன் உடல் முழுவதும் செந்தூரம் பூசி, "ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நன்றாயிருக்க இப்படி பூசிக்கொண்டேன்'' என்று சொன்னாராம். அதைக்கேட்ட சீதாதேவி சிரித்துவிட்டு, அனுமனின் பக்தியைக் கண்டு வியந்தார் என்று கூறுவார்கள். அதை நினைவில் கொண்டு தீர்க்காயுள் வேண்டியும், திருமணமாகவும், கணவனுக்காகப் பிரார்த்திக் கொண்டும் இந்த அலங்காரம் செய்வதுண்டு.
அரிசிமாவைத் தண்ணீருடன் சந்தனக்காப்பு அலங்காரப் பதத்தில் கலந்து அனுமனின் உடலில் சாற்றி, அதன்மேல் செந்தூரம் பூசவேண்டும். பின் வண்ணக் காகிதங்கள், ஜிகினா பவுடர்கள்கொண்டு அலங்கரிப்பர்.
வளையல்
இந்த அலங்காரம் மூலவர்

இந்த அலங்காரம் மூலவர் மற்றும் உற்சவர் விக்ரகங்களுக்குச் செய்யப்படுகிறது. இதைப்போன்ற அலங்காரங்கள் ஆடிப்பூரத்திற்கு ஆண்டாள் மற்றும் மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்குச் செய்யப்படுவது வழக்கமாகும். சீமந்தம், நிச்சயதார்த்தம், கல்யாணங்கள் மற்றும் குழந்தை பிறக்கவென அனைத்து சுப காரியங்கள் கைகூட இந்த அலங்காரங்கள் செய்யப்படு கின்றன. பலவித வளையல்களை ஒன்றுசேர்த்து மாலையாக சாற்றுவதுதான் வளையல் அலங்காரமாகும். அம்பிகையின் திருமுக மண்டலத்திற்கு மட்டும் சந்தனத்தால் அலங்காரம் செய்து, மற்ற பாகங்கள் அனைத் திற்கும் வளையல்களை மாலையாக சாற்றுவர். சிறுசிறு வளையல்களைக் கோர்த்து சாற்றுவது அழகைக் கூட்டும். இந்த அலங்காரங்கள் குத்துவிளக்குப் பூஜை, சுமங்கலி பூஜை, லட்சுமி பூஜை, சுவாசினி பூஜை போன்றவற்றுக்கு செய்யப்படுகின்றன.
புஷ்பம்
புஷ்ப அலங்காரம் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் செய்யப்படுகின்றது. குறிப்பாக திருப் பதியில் திரு வேங்கடமுடைய வனுக்கு புஷ்பாங்கி சேவை அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத் தில் மூன்று வகை கள் சொல்லப்படு கின்றன. புஷ்ப சரங்களை அல்லது மாலைகளை பக வானின் திருமேனி யில் வரிசையாக சாற்றுவது ஒருவிதம். புஷ்பங்களை வைத்து அதை கவசம்போல் சாற்றுவது மற்றொரு வகையாகும். பகவான் திருமேனியில் வெண்ணெய்யை சாற்றி, அதன்மேல் புஷ்ப இதழ்களை ஒட்டுவது மிகுந்த அழகைத் தரும். இதைப்போன்ற அலங்காரம், மற்ற இரண்டு விதங்களைவிட அழகைத் தரும். இதில் பகவானின் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியே அழகுபட விளங்குவதைக் காணலாம்.
காய்கறி
இந்த அலங்காரம் பெரும்பாலும் அம்பிகைக்கே செய்யப்படுகின்றது. இது அனைத்துவிதமான காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுவதாகும். நவராத்திரி சமயங்களில் அம்பிகைக்கு மிகுந்த அன்புடன் செய்யப்படும் அலங்காரமாகும். மற்றும் பல விசேஷ தினங் களிலும் செய்யப்படுகின்றது. அம்பிகையின் திருமுக மண்டலத்திற்கு சந்தன அலங்காரம் செய்து, பின்பு அம்பிகையின் திருமேனி முழுவதும் அனைத்து விதமான காய்கறிகளைக் கோர்த்து மாலைபோல் சாற்றுவது வழக்கமாகும். அதில் சின்னச்சின்ன காய்களை முதலில் சாற்றி, பிறகு வரிசையாக அடுத்தடுத்து காய்களை மாலைபோல் சாற்றுவது மிகுந்த அழகைத் தரும். நாட்டில் மழை பொழியவும், செழிப்பாக இருப்பதற்கும், உணவுப் பற்றாக்குறையில்லாமல் இருப்பதற்கும், தானிய லட்சுமியின் பரிபூரண கிருபாகடாட்சம் கிடைப்பதற்கும் மிகுந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் அலங்காரமாகும்.
நவதானியம்
ஒன்பது விதமான தானியங்களைக் கொண்டு செய்யப்படுவது. இந்த அலங்காரம் பெரும் பாலும் விநாயகர் மற்றும் அனுமன் திரு வடிவங்களுக்குச் செய்யப்படுகிறது. இந்த அலங்காரமும் பகவானின் திருமேனியில் வெண்ணெய்யை மூலமாகக் கொண்டு, முதலில் அதைச் சாற்றி, அதன்பிறகு ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒவ்வொரு தானியங்களாக சாற்றுவதே நவதானிய அலங்காரமாகும். இந்த ஒன்பது விதமான தானியங்களுகம் ஒன்றுசேர்ந்தால் அழகைத் தராது. ஆக, மிக கவனத்துடன் செய்யவேண் டியது அவசியமாகும். ஒரு முடிச்சைப்போல் துணியைச் சுற்றி, அதில் சிறிதளவு எண்ணெ யைத் தடவி, அதை ஒவ்வொரு தானியமாகத் தொட்டு வெண்ணெய்யின்மீது மெல்ல வைத்துவர வேண்டும். அனைத்துவிதமான வியாதிகளும் குணமாக இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
விபூதி
விபூதி அலங்காரமென்பது குறிப்பாக சைவாகமத்திற்கு உரியதான அலங்காரமாகும். அதிலும் சிவபெருமான், முருகன், விநாயகர் போன்ற ஆண் தெய்வங்களுக்கு சிறப் பாகச் செய்வதைக் கண்டு தரிசிக்கலாம். இந்த விபூதி அலங்காரம், கெட்ட சொப்பனங்களை அகற்றி மரணபயத்தைப் போக்குவதற்கு செய்யப்படுகிறது. விபூதியை மட்டுமே மூலமாகக்கொண்டு செய்யப்படுகிறது. முதலில் இறைவன் திருமேனியில் விபூதியை அபிஷேகம் செய்வதைப்போல செய்து, அதில் எங்கெங்கு வேண்டுமோ அங்கெல்லாம் எண்ணெய்யால் பிரஷ்களைக்கொண்டு கண், கை அமைப்பு போன்றவற்றை வரைந்து கொள்ளவேண்டும். இதில் முக்கியமாக விபூதியை சுவாமிமேல் ஊதுவது, ஸ்பிரே செய்வது போன்றவற்றை தயவுசெய்து தவிர்ப்பது நன்மையைத் தரும். முதலில் தண்ணீரைக்கொண்டு வரைந்தபிறகு எண்ணெய்யைப் பயன் படுத்துவது எளிமையாயிருக்கும். தண்ணீர் காய்ந்தபிறகு எண்ணெய்யால் வரைவது அழகைக் கொடுக்கும். மிக உயர்ந்ததாக சொல்லப்படுவது விபூதியாகும். அதைக் கொண்டு அலங்காரம் செய்யும்பொழுது இறைவன் மனம் மகிழ்கிறார்.
காசுமாலை
காசுமாலை அலங்காரம் அனைத்து தெய்வங்களுக்கும் செய்யலாம். ஆனால், அம்பிகைக்குச் செய்வது மிகவும் பிரசித்தமாகும். 108 மற்றும் 1008 காசுகளைக்கொண்டு அலங்காரம் செய்வது வழக்கமாகும். இதில் தேவியின் வடிவை மிகவும் நேர்த்தியாக அமைப்பது அவசியமாகும். ஏனெனில் தேவியின் திருமேனியை ஒட்டினாற்போன்ற அமைப்பைத் தருவதால் அளவுகள் துல்லிய மாக அமைப்பது கூடுதல் அழகைத் தரும். சிறிய சிறிய காசுகளால் செய்யப்பட்ட மாலைகளை சாற்றுவது தெளிவான அமைப்பைத் தரும். இதைப்போன்ற அலங்காரங்கள் உற்சவர் தேவிகளுக்குச் செய்வது மிக்க அழகைக் கொடுக்கும். அம்பிகை காசுமாலையால் உருவெடுத்தாற்போன்ற அமைப்பைக் கண்டுகளிக்கலாம். பக்தர்களுக்கு பணத் தட்டுப்பாடு இல்லாமலும், பணலாபம் கிட்டவும், தனலட்சுமியின் பரிபூரண கடாட்சம் கிட்டவும் செய்யப்படுவது இந்த காசுமாலை அலங்காரமாகும். இதைப்போன்ற அலங்காரம் பல திருக்கோவில்களிலும் மற்றும் வீடுகளிலும் விசேஷ நாட்களில் செய்யப்படுகிறது. குறிப்பாக மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவிலில் கற்பகாம்பாளை இந்த அலங்காரத்தில் கண்டு தரிசிக்கலாம்.
"பவளக் கொடியிற் பழுத்த
செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகை யுந்துணை
யாவெங்கள் சங்கரனைத்
துவளாப் பெரு துடியிடை
சாய்க்குந் துணை முலையாள்
அவளைப் பணி மின்கண் டீரம
ராவதி யாலுகைக்கே.'
சிவந்த பவளக்கொடியில் பழம் பழுத்தால் மிகவும் சிவப்பாக இருக்கும். அது அன்னையின் சிவந்த இதழ்களைப் பெற்றிருக்கும். பனிபடர்ந்த இமயமலை வெண்மையாக இருக்கும். அது அன்னையவள் புன்னகைக்கும்போது ஒளிரும் வெண் பற்களைப் போன்றிருக்கும். தனித்திருந்து எம்பெருமான் ஈசனைத் தனது மெல்லிய இடையினால் மேவிவந்து, பின் துணையாகி நின்ற உண்ணாமுலையாளே, உன் பாதம் பணிபவர்களுக்கு அரசபோகம் சித்திக்குமே என்று அபிராமி பட்டர் அம்பிகையை வர்ணிக்கிறார்.
கோவில்களில் செய்யப்படும் அலங்காரங் கள் மூன்று வகைககளாகப் பிரிகிறது.
1. மூலவர் அலங்காரம்
2. உற்சவர் அலங்காரம்
3. விசேஷ அலங்காரம்
கருவறையிலுள்ள கருங்கல் சிலைகளை மூலவர் விக்ரகங்கள் என்று அழைப்பர். இந்த மூலவர் விக்ரகங்களுக்குச் செய்யப்படும் அலங்காரங்கள் 20 விதங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன். அதன் விளக்கங்கள் நாம் சென்ற பக்கங்களில் தெரிந்துகொண்டோம். அத்துடன் நாம் முன்பே சொன்னது போல் ஒவ்வொரு திருக்கோவிலும் ஒவ்வொரு சம்பிரதாயம், வழக்கங்களைக் கொண்டுள்ளன.
அதற்கேற்ப அலங்காரங்களில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. சில ஆலயங்களில் திருமுகத்திற்கு சந்தனம் அல்லது வெண்ணெய்யால் செய்யும் அலங்காரங்கள் வழக்கத்தில் கிடையாது.
அதைப்போல் சில ஆலயங்களில் சாத்துப்படி அலங்காரம் என்று சொல்லக்கூடிய அலங்காரங்கள் மூலவர் விக்ரகங்களுக்குச் செய்வது வழக்கமில்லை. இதுபோல எந்தெந்த ஆலயங்களில் எதைப்போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றதோ அதை அனுசரித்து அதற்கேற்ற முறையில் அலங்காரங்கள் செய்வது நன்மை தரும்.
பெரும்பாலும் கோவில்களில் உள்ள உற்சவர் விக்ரகங்களுக்கு- அதாவது பஞ்ச லோகத்தாலான விக்ரகங்களுக்குச் செய்யப்படும் அலங்காரங்கள் ஹஸ்தம், பாதங்களைக் கொண்டு (கை, கால்கள்) செய்யப்படுவது சாத்துப்படி அலங்காரம் என்றழைக்கபடுகிறது. இதைப்போன்ற அலங்காரங்கள்தான் பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் செய்யப்படுகின்றன. இதில் மேற்கூறிய 20 வகையான அலங்காரங்களையும் செய்யலாம். ஆனால், மிகவும் பிரசித்தமானது சாத்துப்படி அலங்காரமாகும். இதில் உற்சவர் விக்ரகத்திற்கு ஏற்றாற்போன்ற ஹஸ்தம், பாதங்களைத் தயார் செய்து, அதைத் துல்லியமான அளவுகளில் அமைத்து அலங்காரம் செய்வது அழகை மேலும் அழகுபடுத்தும். நாம் எப்படி பூஜைகள் செய்தால் பலன்கள் கிட்டுமென்று நம்புகிறோமோ, அதைப்போன்று பக்தியுடன் இறைவனை அழகுபடுத்திப் பார்க்கவேண்டும் என்று நினைத்து அலங்காரம் செய்வது கூடுதல் பலன்களைத் தரும்.
நாம் முன்பே பார்த்ததுபோல் வண்ணப் பொருத்தம் பார்த்து (Colour Combination) ஒவ்வொரு விஷயங்களையும் இந்த உற்சவர் அலங்காரங்களில் அமைப்பது நன்மையாகும். இதைப்போல் ஒவ்வொரு சுவாமிக்கும் வாகனங் கள் மற்றும் ஆயுதங்களின் அமைப்பைத் தெரிந்து வைத்திருப்பது நன்மையாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியால் அல்லது பித்தளை, செம்பு பாலிஷ்களால் செய்யப்படும் திருக்கரங்களையும் திருவடிகளையும் கொண்டு, அதை உற்சவர் விக்ரகத்திற்கு ஏற்றாற்போன்று அமைத்து, உற்சவர் விக்ரகத்துடன் இணைத்து பட்டுவஸ்திரம் மற்றும் திருவாபரணங்கள் சாற்றி, பூக்களால் அலங்காரங்கள் செய்யும்பொழுது இறைவனின் உண்மை வடிவை தெளிவாகக் கண்டு பக்தியில் லயிக்க முடியகிறது. இத்தகைய அலங்காரங்களில் அளவுகள் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் மிக்க அழகைக் கண்டு தரிசிக்கலாம்.
குறிப்பாக அடையாறு அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவில், மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் மற்றும் தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில், பீளைமேடு அனுமன் திருக்கோவில்களிலும் கண்டு தரிசிக்கலாம்.
(அலங்காரம் தொடரும்)
சந்தேகங்களுக்கு கைபேசி: 73584 77073
தொகுப்பு, படங்கள்: விஜயா கண்ணன்