Advertisment

ஆண்டவன் அலங்காரங்கள்! - அலங்காரச் சக்கரவர்த்தி கௌதம் சென்ற இதழ் தொடர்ச்சி .

/idhalgal/om/lord-decorations-continuation-magazine-decorative-emperor-gautam

றை வாகனங்கள் சிலவற்றை கடந்த இதழில் கண்டோம். மேலும் சில வாகனங்களையும், வண்ணங்கள் குறித்தும் இங்கு காணலாம்.

Advertisment

பூத வாகனம்: சிவபெருமான் மற்றும் முருகப் பெருமானுக்கு அமைக்கப்படும் வாகனமாகும்.

Advertisment

புலி வாகனம்: இது முருகன், ஐயப்பன் போன்ற தெய்வங்களின் முக்கியமான வாகனமாகக் கூறப்படுகிறது. மேலும், தேவியின் வாகனமாகவும் விளங்குகிறது.

மயில் வாகனம்: இது முருகப் பெருமான் உலாவரும் வாகனமாகும். மேலும், கௌமாரி, மயூரகணபதி போன்ற தெய்வங்களின் வாகனமாகவும் கூறப்படுகிறது.

இராவண வாகனம்: இது சிவ பெருமானுக்கே உரியதான வாகனமாகும்.

மேஷ வாகனம்: ஆடு வாகனம் எனப்படும் இது முருகப் பெருமானின் வாகனமாகக் கூறப்படுகிறது. முருகப் பெருமானின் முதல் வாகனம் ஆடு. அதற்கு அடுத்துதான் மயில் வாகனமென்று கூறுவர்.

மான் வாகனம்: இது பொதுவாக திதி தேவதைகள் மற்றும் நட்சத்திர தேவதைகளுக்கு அமைக்கும் வாகனமாகும். வைணவத்தில்- குறிப்பாக வைகானச ஆகமத்தில் ஸ்ரீ விகநச ஆசார்யருக்கு அமைக்கப்படும் வாகனமாகும்.

சிம்ம வாகனம்: இது அனைத்து தெய்வங் களுக்கும் அமையும் வாகனம். துர்க்காதேவிக்கு மிக உயர்ந்த வாகனமாக அமைக்கப்படுகிறது. சக்தி வழிபாட்டில் மிக முக்கியமானது சிம்ம வாகனமாகும்.

புருஷாமிருகம்: இந்த வாகனம் சிவபெருமானுக்கு மட்டுமே உகந்த வாகனமாகக் கருதப்படுகிறது. இடுப்பிற்குமேல் ரிஷியின் தோற்றமும், அதன்கீழ் சிம்மத்தின் தோற்றமும் கொண்டது. புருஷாமிருகம் பற்றி மகாபாரதக் கதையில் விரிவாகக் கண்டறியலாம்.

ரதம்: ரதம் பெரும்பாலும் அனைத்து தெய்வங்களுக்கும் அமைக்கும் வாகனமாகும். இறைவனை கம்பீரமாக உட்கார்ந்த திருக்கோலம் அல்லது நின்ற திருக்கோலத்தில் அமைப்பது கூடுதல் அழகைத் தரும்.

திருத்தேர்: திருத்தேரும் ரதத்தைப்போல அனைத்து தெய்வங்களுக்கும் அமைக்கும் வாகனமாகும். இதில் இறைவனை ராஜகம்பீரத் துடன் அலங்காரம் செய்வது உத்தமமாகும்.

கந்தர்வ வாகனம்: இது முருகன் மற

கந்தர்வ வாகனம்: இது முருகன் மற்றும் ஆண் தெய்வங்களுக்குரிய வாகனமாகும். பெரும்பாலும் முருகன் அலங்காரங்களையே இதில் காணலாம்.

கந்தர்வி வாகனம்: தேவிக்கு மற்றும் பெண் தெய்வங்களுக்குரிய வாகனமாகும். பெரும்பாலும் அம்பிகைக்குரியதாகும்.

விமானம்: விமானமும் திருத்தேர், ரதம் போன்று அனைத்து தெய்வங்களுக்கும் உரிய வாகனமாகும். இதில் தர்பார் அலங்காரம் மற்றும் ராஜ அலங்காரங்கள் செய்வது உத்தமமாகும்.

புன்னை மரம்: இது பெருமாளுக்குரிய வாகனமாகும். இதில் பெரும்பாலும் கிருஷ்ணர் அலங்காரங்கள் செய்வது வழக்கமாகும்.

அனைத்துவிதமான கிருஷ்ணர் அலங்காரங் களும் செய்யலாம்.

எமதர்ம வாகனம்: இது சிவபெருமானுக்கு மட்டுமே உரியதான வாகனமாகும். இதில் இறைவனை அமர்ந்த திருக்கோலத்தில் அலங் காரம் செய்வது உத்தமமாகும்.

பல்லக்கு: பல்லக்கு அனைத்து தெய்வங் களுக்கும் உரியதான வானமாகும். இதில் இறைவனை மாப்பிள்ளை திருக்கோலம் அல்லது குழந்தை வடிவத் திருக்கோலம் அமைப்பது வழக்கமாகும்.

எருமை: எமதர்மருக்கு மட்டுமே உரிய வாகனமாகும். துர்க்காதேவி அலங்காரத்தின் பொழுது எருமையின் தலைபாகம் மட்டும் அமைப்பது வழக்கமாகும்.

திருமுக மண்டல பாவங்கள் நாம் மிகவும் கவனமாக அலங்காரத்தில் வடிவமைக்க வேண்டியது திருமுக மண்டல மாகும். லட்சணம், அழகு போன்ற அனைத்து வித வடிவங்களை சட்டென்று விளக்குவது திருமுகங்களாகும். அதில் காட்டும் பாவங்கள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் இறைவனின் முகங்களை சாந்தமாகவும், சிரிப்புடனும் அமைப்பதே தெய்வீகத்தைத் தரும். அதேபோன்று ஆண்- பெண் இருபாலருக்கு வித்தியாசங்கள் காட்டவேண்டியது அவசியமாகும்.

மகிஷாசுரமர்த்தினி போன்ற உக்ர அலங் காரங்களில் சற்று கோபத்துடன் காட்ட வேண்டியது அவசியமாகும். அதேசமயம் பக்தர்களுக்கு அருள்வழங்கும் முகம் போன்றும் அமைத்திடல் அவசியமாகிறது.

god

யானை முகம்

யானை முகம் என்றதும் விநாயகர்தான் நம் மனதில் தோன்றுவார். விநாயகர் முகம் அமைக்கும்பொழுது யானையின் வடிவில் தும்பிக்கையுடன் அமைத்திடல்வேண்டும். இதில் தும்பிக்கை சிறியதாகவும், கனம் குறைவாகவும் அமைப்பது சிறந்த அழகைத் தரும். அத்துடன் ஒரு தந்தம் உடைந்தும், மறுதந்தம் முழுவதுமாக அமைப்பதே வழக்கமாகும். கண்கள் இரண்டும் சாய்வாக அமைத்தல் மேலும் அழகைக் கொடுக்கும்.

சிம்ம முகம்

சிம்ம முகம் என்றதும் நம் நினைவிற்கு வருபவர் நரசிம்ம சுவாமியே ஆவார். சிம்ம முகம் செய்வது சிறிது கடினம். ஏனெனில் வாயை பாதி திறந்தாற்போன்ற தோற்றத்தைக் கொண்டதா கும். சைவத்தில் சரபேஸ்வரர், பிரத்தியங்கரா தேவி திருமுகங்கள் சிம்மமுகம்போல் அமைப் பது அவசியமாகும். அதிலும் பிரத்தியங்கரா தேவியின் முகத்தில் பெண் சிங்கத்தைப் போன்ற அமைப்பைக் காட்டவேண்டும். கண்களும் பற்களுமே தெய்வீக அழகைக் கொடுக்கும் அமைப்பாகும்.

குரங்கு முகம்

குரங்கு முகம் என்றதும் நம் நினைவுக்கு உடனடியாக வருபவர் அனுமன்தான். மிகவும் பிரசித்தியான முகம். அதில் அவர் குண்டான வாய்தான் அழகைத்தரும். சாந்தமும், பக்தியும் கலந்த உருவில் அமைத்திடல்வேண்டும். இதில் பஞ்சமுக அனுமன் உருவம் ஐந்து வித்தியாச மான அமைப்பில் உருவானது. அனுமன், நரசிம்மர், வராகர், ஹயக்ரீவர், கருடர் என ஐந்து விதமான முகங்களை அமைக்கும்பொழுது, மிகுந்த கவனத்துடன் தக்கமுறையில் அமைத்தி டுதல் கூடுதல் அழகைத்தரும்.

கழுகு முகம்

கழுகு முகம் என்றால் கருடரின் முகம்தான். ஆனால், பறவையைபோன்ற உருவமில்லாமல் மனித முகமும், மூக்கு மட்டும் கழுகின் அமைப் பில் வளைந்தும் காட்டப்படுவது அழகைத் தரும்.

கிளி முகம்

கிளி முகம் கொண்ட ஒரே ரிஷி சுகப்பிரம்ம ரிஷியாவார். இவரைப்போன்ற உருவத்தை அமைக்கும்பொழுது முற்றிலும் கிளியை போன்ற தோற்றத்தை அமைப்பது அழகைத் தரும். இவர் வடிவத்தை போன்ற அலங்காரங் களைக் காண்பது மிகவும் அரிது. ஸ்ரீநிவாச கல்யாணம் போன்ற அலங்காரங்களில் காணலாம்.

பன்றி முகம்

பன்றி முகம் என்றதும் நினைவுக்கு வருவது வராக சுவாமி முகமாகும். அதைப்போன்று வராகி தேவியின் திருமுகமும் பெண் பன்றியைப் போன்ற தோற்றத்தைக்கொண்டது. இதில் மூக்கு துவாரங்களும், இரண்டு கோரைப் பற்களும்தான் தெய்வீக அழகைக் கொடுக்கும். கண்களை சாய்வாக அமைத்திடல் அவசிய மாகும்.

குதிரை முகம்

குதிரை முகமென்றாலே ஹயக்ரீவர்தான். மேலும் நாரதரைப்போன்ற தும்புருவர் என்ற ரிஷிக்கும் குதிரை முகம்தான். இவரை அமைக்கும்பொழுது காதுகள் மேல்நோக்குவது போன்று அமைத்திடல்வேண்டும்.

குழந்தை முகம்

குழந்தை முகம் என்றாலே கண்ணன்தான். அதேபோல் ஆதிவிநாயகர் எனப்படும் விநாயக ரின் முந்தைய குழந்தை முகம், வாமன சுவாமி யின் குழந்தை முகம், முருகப் பெருமானின் குழந்தை முகம், திருஞான சம்பந்தரின் குழந்தை முகம், பிரகலாத சுவாமி மற்றும் துருவன் முகங்கள் குழந்தை வடிவத்தில் அமைத் திடல்வேண்டும். நன்கு கன்னங்கள் குண்டாக வும், சாந்தமானதாகவும் அமைத்திடுவது அழகைத்தரும்.

அலங்காரத்தில் வண்ணங்கள்

அலங்காரத்தில் மிக முக்கியமாக சொல்லப் படுவது வண்ணங்கள் மற்றும் அதன் கூட்டு. (ஈர்ப்ர்ன்ழ்ள் & ஈர்ம்க்ஷண்ய்ஹற்ண்ர்ய்ள்). இதை சரிவர அமைத் தல் மிகவும் அவசியம். இதில் பலவித வண்ணங் கள் சொல்லப்படுகின்றன. அதில் மிக முக்கிய மான சில வண்ணங்கள் பற்றிய விளக்கங்களை காண்போம். சாரஸ்வதீய சித்ரகர்ம சாஸ்திரத் தில், வண்ணமானது வெண்மை, மஞ்சள், சிவப்பு, கருப்பு என்று நான்கு விதமாகக் கூறப் படுகிறது.

வெண்மை

1. முத்துப் போன்ற வெண்மை. (முக்தாக வேதம்).

2. வெண்மைக்கல் அல்லது வெண்மை பாஷாணம் போன்ற வெண்மை.

3. சங்கைப் போன்ற வெண்மை.

4. வெண்மையான மணல் அல்லது கூழாங்கற்களைப் போன்ற நிறம்.

மஞ்சள்

1. பொன்போன்ற மஞ்சள் (ஹரிதாளம்).

2. குங்கும வண்ணக்கல் (சிவப்பு).

3. மஞ்சள் காவிக்கல் (திருஷத்ணாரம்).

4. பொன்னிறம், மஞ்சள் (பீதம்).

சிவப்பு

1. செம்போத்து நிறம் (குக்கில்).

2. செம்பஞ்சுக்குழம்பு அல்லது நீருடன் காய்ச்சிய அரக்கின் நிறம் (லாக்ஷனாரம்).

3. ரத்தம் போன்ற சிவப்பு (ரக்தம்).

கருப்பு

1. பச்சைநிற பாஷாணத்தைப் போன்ற பச்சை நிறம் (சியாம பாஷாண சியாமம்).

2. ராஜாவக்தம் என்ற பாஷாணத்தின் நிறம் (ராஜாவக்த சூரணம்).

3. மேகத்தைப் போன்ற நீலநிறம், நீலம், கருநீலம்.

வண்ணங்களின் கலவை

அரக்குச் சிவப்பு: குங்குமம், காப்பி பொடி நிறமாகும்.

கலவைப் பச்சை: மஞ்சள்+நீலம்- பச்சை (Green).).

செந்நீலம்: சிவப்பு+நீலம்- செந்நீலம் (Violet)..

சிச்சி-: சிவப்பு+மஞ்சள்- சிச்சி- (Orange).

பழுப்பு வண்ணம்: மஞ்சள்+சிவப்பு+நீலம்- பழுப்பு வண்ணம் (Burn Sienna).

வெண்சிவப்பு (தாமரை): சிவப்பு+ வெண்மை.

வெளிர்நீலம் (வானம்): நீலம்+மஞ்சள்.

பசுமை வண்ணம் (இளந்தளிர்): பச்சை+ மஞ்சள்.

செம்புச் சிவப்பு, செம்பொன்: சிவப்பு+ மஞ்சள்+பழுப்பு (Roasienna).

பொன்வண்ணம்: மஞ்சள்+பழுப்பு.

திண் சிச்சி-: சிவப்பு+மஞ்சள் (Chrome Yellow).

யானை வண்ணம்: கருப்பு+நீலம்+ வெண்மை.

கரும்பச்சை: பச்சை+பழுப்பு+கருப்பு (Olive green)..

கலப்புக் கருப்பு: சிவப்பு+கருநீலம்.

கருஞ்செவ்வரக்கு: கருப்பு+சிவப்பு+பழுப்பு.

சுவாமி அலங்காரம் என்பது மிகப்பெரிய கடல். அதில் இது ஒரு துளிதான். இறைவனின் அருளால் நன்றே அமைந்தேறியது. இந்தத் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங் கள், ஓவியம், சிற்பம் மற்றும் ஆகம புத்தகங் களைக்கொண்டு மேற்கோள் காட்டப்பட் டுள்ளன. அத்துடன் எப்பிழையிருப்பினும் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி றேன்.

சுவாமி அலங்காரத்தில் மிகப்பெரிய ஜாம்ப வான்கள் பலர் உள்ளனர். அவர்களின் பாதங்களைப் பணிந்து எனக்குத் தெரிந்தவற்றை இந்தத் தொடர்மூலம் பகிர்ந்துகொண்டேன்.

இந்த அரிய வாய்ப்பைத் தந்த "ஓம் சரவண பவ' ஆசிரியர் மதிப்புமிகு நக்கீரன் கோபால், பொறுப்பாசிரியர் மலரோன் மற்றும் இந்த கட்டுரைத் தொடரைப் படித்துப் பாராட்டிய, வாழ்த்திய வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!

என்றும் அன்புடன் கௌதம்

கைபேசி: 73584 77073

(முற்றும்)

தொகுப்பு, படங்கள்: விஜயா கண்ணன்

om010422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe