சிற்ப வடிவங்களில் தேவ அளவு, மனித அளவு, அசுர அளவு என மூன்று பிரிவுகள் உள்ளன.

இதைத் தவிர்த்து விநாயகர் அளவு, குழந்தைப் பருவத்து அளவு என இரு பிரிவுகள் உள்ளன.

தேவ அளவு

தேவ அளவென்பது அனைத்து அங்கங்களும் சற்று நீண்டும், பருமனாகவும், கம்பீரமாகவும் அமையும். இந்த அளவைத்தான் நாம் பெரும்பாலும் அலங்காரங்களுக்கு அமைக்கவேண்டும். பெருமாள், சிவன், பார்வதி, லட்சுமி, முருகன், ஐயப்பன் போன்ற தெய்வங்களின் உயரங்கள் அதிகமாகவே காணப்படும்.

Advertisment

அளவுகளும் பெரும்பாலும் மிக அதிகமாகவே காணப்படும். மேலும், இந்த தெய்வ அளவு களில் கிரீடம், கை, கால்கள் அதிக நீளமாக அமைப்பது அழகு தரும்.

மனித அளவு

மனித அளவுகள் பெரும்பாலும், மத்திமமாகவே அமைந்திருக்கும். அதாவது தேவ அளவில் சற்று குறை வாகக் காணப்படும். ரிஷிகள், யோகிகள், பக்தர்கள் என உருவம் அமைத்திடும் பொழுது, இந்த மனித அளவையே எடுத்துக்கொள்ளவேண்டும். தேவ அளவில் கூறியதுபோல், மனித மனதிற் கேற்ப அவர்கள் உயரமும் மத்திம மாகவே காணப்படும். மனித அளவில் அனைத்தும் மிதமாகவே அமைந்தி ருக்கும். அதாவது மிக நீண்டும் இல்லாமல் மிகக்குறைந்தும் இல்லாமல் மிதமாக அமைத் தல் கூடுதல் அழ கைத் தரும்.

Advertisment

அசுர அளவு

அசுர அளவென் பது மிகக் குறைந்து காணப் படும். கைகளும் கால்களும் நீளம் குறைந்த அளவில் அமைந்தால் அதை அசுர லட்சணமென்று கூறுவர். இந்த லட்சணம் அசுரர் களுக்கே உரியது. இதில் மனித வடிவோ தேவ வடிவோ அமைப் பது மிகத்தவறா னது. ஜீவனில்லாமல் போய்விடும்.

விநாயகரின் உருவ அமைப்பு மற்றும் அளவுகள்

முற்கால சிற்பிகள், ஓவியர்கள் கற்பனையில் விநாயகர் அமைப்பானது ஒப்பற்ற கற்பனை வளத்துடன் கூடிய சிறந்த உருவமாகும். உலகிலுள்ள அனைத்து மக்களின் கவனத்தை ஈர்த்த சிறப்பிற்குரியதாகும். விநாயகர் உருவத்தை ஓங்கார வடிவத்திற்கு ஒப்பவும், உகார வடிவத்திற்கு ஒப்பவும் அமைப்பதுண்டு. ஓங்கார விநாயகரின் அமைப்பு வலம்புரி விநாயகர் போன்றதாகும். உகார விநாயகர்- சித்தி விநாயகரின் அமைப்பை ஒத்ததாகும். அமர்ந்த, நின்ற, வளர்ந்து நின்ற, கூத்தாடுதல் போன்ற பல வகைகளில் செய்வதுண்டு. தற்போது அனைத் துத் தொழிலும் செய்வதுபோல் அமைக்கின் றனர் சிற்பிகள். படிப்பது, விளையாடுவது, இசைப்பதுபோன்ற அமைப்புகள்.

சிற்ப நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அளவுகளைக் கூறியிருப்பினும், விஸ்வகர்மியம் என்னும் நூ-ல் கூறிய அளவைத் தான் தற்போது கைக்கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.

உடல் அமைப்பின் அளவுகள்

நாம் இதுவரை பார்த்தது முழுவடிவ அளவு கள். இப்பொழுது அதன் நளினம் பற்றிக் காண லாம். நளினம் பற்றிக் காணலாம். நளினம்- அதாவது உடலமைப்பின் வளைவுகளை வங்கம் என்று கூறுவதுண்டு. இவ்வளைவானது மூன்று வகைப்படும்.

ஆவங்கம்: இவ்வமைப்பு வேறு எந்த நாட்டிலும் காணமுடியாது.

சமவங்கம்: ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

அதிவங்கம்: இது நமது தமிழ் மரபிற்கே உரிய தாகும்.

ஆவங்கம் என்பது குறைந்த வளைவை யுடையது. உட-ல் வளைவு, நெளிவுகள் மிதமாக அமைந் துள்ளதால் ஆவங்கம் என்று சொல்லப்படுகிறது. கால்கள் மட்டுமே வளைந்த பாணியில் அமைந்தி ருக்கும்.

சமவங்கம் என்பது மத்திம வளைவையுடை யது. உட-ல் வளைவு, நெளிவுகள் நடுநிலை யாக அமைந்துள்ளதால் சமவங்கம் என்று சொல்லப்படுகிறது. கால்கள் மற்றும் உடல் வளைந்த பாணியில் அமையப் பெற்றிருக்கும்.

அதிவங்கம் என்பது முழுமையாக வளைவை உடையது. கால்கள், உடல், தலை வளைந்த பாணியில் அமைக்கப்படுவது அதிவங்கம் என்று சிறப்புடன் சொல்லப்படுகிறது. இதுவே பிம்ப லட்சணம் என்றும், வடிவ நளின அமைப்பென்றும் சொல்லப்படுகிறது.

இனி இறைவனின் திருக்கோலங்களைக் காண்போம்.

இறைவன் அமர்ந்திருக்கும் திருக்கோலம் என்பது யோகாசனத்தை சார்ந்து அமைக்கப் பட்டவையாகும். மற்றும் இதில் நின்ற, அமர்ந்த, கிடந்த நிலைகளையும் தெளிவாக விளக்கி யிருக்கிறார்கள்.

நின்ற கோலம்

சமநிற்கை- சமபாத ஸ்தானகம்

விரிநிற்கை- வைதஸ்திக ஸ்தானகம்

அரைவிரிநிற்கை- அர்த்த வைதஸ்திக ஸ்தானகம்

தாழ் தடக்கை- கயோத் சர்க்கம்

ff

அமர்ந்த கோலம்

நேரமர்வு- சுகாசனம்

தாமரை அமர்வு- பத்மாசனம்

செம்பாதித் தாமரை- அர்த்த பத்மாசனம்

அழகமர்வு- லளிதாசனம்

பேரரசமர்வு- மகாராஜ லீலாசனம்

வீரமர்வு- வீராசனம்

அரசமர்வு- ராஜ-ங்காசனம்

மண்டலமர்வு- உத்தகுடிகாசனம்

யோகவமர்வு- யோகாசனம்

குறுக்கமர்வு- ஸ்வஸ்திகாசனம்

கருடமர்வு- கருடாசனம்

கிடந்த கோலம்

சமக்கிடக்கை- சமசயனம்

அரைக்கிடக்கை- அர்த்தசயனம்

குறைகிடக்கை- அர்தாசயனம்

நின்ற கோலங்களும் யோகாசனமும்

சாய்வுநிற்கை- வைசாக ஸ்தானகம்

சிறு சாய்வுநிற்கை- வைஷ்ணவம்

ஒரு நிற்கை- ஆலீடாசனம்

விரைவோடு நிற்கை- பிரத்பாவீடாசனம்

ஒருகால் நிற்கை- ஏகபாதாசனம்

இதில் சொல்லப்பட்ட ஆசனங்களின் அமைப்பில்தான் இறைவனின் அலங்காரங் களை அமைத்திடல் வேண்டும். அடுத்து இறைவனின் வேறு வடிவங்களைக் காண்போம்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் சுந்தர ரூபம்

புருஷ லட்சணத்தின் கம்பீரம், முகம், இடுப்பு மற்றும் கால்கள் வளைந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணர், அம்பிகை போன்ற தெய்வங்களின் நின்றநிலை அலங்காரங் களுக்கு இதைப்போன்ற அமைப்பில் அமைப் பது கூடுதல் அழகைத் தரும். மேலும், இதன் அமைப்பை ஸ்நாநாசனம் என்றும் திரிபங்க அமைப்பென்றும் கூறுவர். இது மூலவர் அலங்காரம், உற்சவர் அலங்காரம் மற்றும் விசேஷ அலங்காரங்களுக்கும் எடுத்துக் காட்டாகும்.

மகாலட்சுமி தேவியின் தியான வடிவம்

தேவி பத்மாசனத்தில் அமர்ந்த திருக் கோலம். பெண் தெய்வத்தின் அமைப்பை நன்கு புரிந்துகொள்ள முடியும். நேர்முகம் மற்றும் அரைமுக அமைப்பு. இதைப்போன்று மூலவர் மற்றும் உற்சவர் அலங்காரங்களில் அமைத்திடல் வேண்டும். மேலும் இந்த அமைப்பு ரிஷிகள் மற்றும் தியானநிலையில் அமைக்கும் அனைத்து அலங்காரங்களுக்கும் பொருந்தும்.

அர்ஜுனனின் வடிவமைப்பில் மனிதனின் அமைப்பு பாதியும், தெய்வாம்சம் கொண்ட தேவனின் வடிவும் பிரித்துக் காட்டப்பட்டுள் ளது. இதுபோன்றவற்றை சந்தன அலங் காரங்களில் அமைக்கும்பொழுது மிகவும் நேர்த்தியாக இருக்கும். மேலும், இவை தேவ அளவுகளின்கீழ் அமைக்கப்படுபவை.

பரசுராமரின் சம்ஹார வடிவமைப்பு ஆசனத்தின் பெயர் ஊர்த்துவ ஜானுவாசனம்.

மஹிஷாசுரமர்த்தினி போன்ற சம்ஹார திருக்கோலங்களுக்கு இவ்வாறு அமைக்கலாம்.

தவழும் கண்ணனின் வடிவமைப்பு

குழந்தைத் தோற்றத்தில் கண்ணனின் அமைப்பு. இதற்கு "ஆலீடாசனம்' என்று பெயர். இவ்வமைப்பு குழந்தை லட்சணத்திற்கு உட்பட்டு அழைக்கப்படுகிறது. இதுபோன்று விநாயகரையும் அமைக்கலாம். முகபாவங்கள் மற்றும் அங்க வடிவுகளை குழந்தை அளவின்கீழ் அமைத்திடல் வேண்டும்.

புத்தரின் வடிவமைப்பு

மனிதனின் அளவு, லட்சணங்களைத் தெரிந்துகொள்ள புத்தரின் வடிவு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மனிதவடிவை அலங்காரம் செய்யும்பொழுது மனித அளவை மேற்கொண்டு செய்யவேண்டும். இந்த வடிவம் ஸ்நாநாசனம் மற்றும் சின்முத்திரையுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

சுதர்சனர் வடிவம்

இது பிரத்யலீடாசனத்தில் அமைக்கப் படுவது. 16 கரங்களுடன் சேவை சாதிக்கும் திருக்கோலம். பெரும்பாலும் இதைப்போன்ற அலங்காரங்கள் விசேஷ அலங்காரங்களில் அதிகம் செய்யப்படுகின்றன.

ஸ்ரீ நரசிம்மரின் வடிவமைப்பு

நரசிம்மரின் சுந்தர வடிவம் சுகாசனத்தில் அமைந்திருக்கிறது. அபயஹஸ்தம், பின் கத்ரி ஹஸ்தத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி, சிம்மமும் யாழியும் சேர்ந்த முகபாவத்துடன் சேவை சாதிக்கிறார். பெரும்பாலும் சிம்ம முகம் என்பது, சிம்மமும் யாழியும் கலந்த முகபாவம் தெய்வீகத் தன்மையைக் கொடுக்கும். அக்காலம் முதலே சிம்மம், யாழி கலந்த முகபாவத்துடன் விக்ரகங்களை சிற்ப சாஸ்திரப்படி அமைத் தார்கள். இதுபோன்று பிரத்யங்கரா தேவி அலங்காரம் செய்வது கூடுதல் அழகைத் தரும்.

இனி, அலங்காரங்களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் காணலாம்.

மூலவர் அலங்காரம்

கருங்கற்களினாலான சிற்பங்களுக்குச் செய்யப்படும் அலங்காரங்களே மூலவர் அலங்காரம் என அழைக்கப்படுகிறது.

அந்த கோவில்கள் மற்றும் தேசங்களைக் கருத்தில்கொண்டு செய்யப்படுவதால் சில மாற்றங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் மூலவர் விக்ரகங்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்வது வழக்கமாகும். வேறுசில அலங்காரங்களும் செய்கிறார்கள். சந்தனக்காப்பு மற்றும் குங்குமக்காப்பு அலங்காரங்கள் சந்தனத்தை மூலமாகக் கொண்டு செய்யப்படுகின்றன.

வெண்ணெய்க்காப்பு, லட்டு அலங்காரம், தாம்பூல அலங்காரம், இனிப்பு அலங்காரம், வடை அலங்காரம், புஷ்ப அலங்காரம், நவதானிய அலங்காரம், பழ அலங்காரம் இவையனைத்தும் வெண்ணெய்யால் செய்யப்படுகின்றன.

அரிசி மாவு மற்றும் செந்தூரத்தாலும் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆக, மூலவர் அலங்காரங்கள் இந்த மூன்று பொருட் களை மூலமாகக்கொண்டே செய்யப்படு கின்றன. இவற்றுடன் விதவிதமான வண்ணங் கள், வண்ணக் காகிதங்கள், திருவாபரணங் கள், கருப்பு நூல்கள், பலவகைப் பழங்கள், இனிப்புகள், வெற்றிலை, பருப்புகள், வடை, தானியங்கள், புஷ்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

உற்சவர் அலங்காரங்கள்

முன்பு பார்த்ததுபோலவே அனைத்து அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

ஆனால், சார்த்துப்படி என்று சொல்லப்படும் அலங்காரமே தனித்துவமானது. அதில்தான் வண்ணங்கள் மிகத் தெளிவாகக் காணப்படும். இதில் அதிக கவனம் செலுத்தவேண்டியது, சந்தனத்தைப் பிசையும்பொழுதுதான். மிதமான பக்குவத்தில் இருக்கவேண்டும். இல்லையெனில் நாம் நினைத்த வடிவத்தைக் கொண்டுவர இயலாமல் போகும். ஒரு அடி விக்ரகத்திற்கு இரண்டு கிலோ சந்தனம் சரியான அளவாகும்.

வாட்டர் கலர் (Water Color) வண்ணங்கள் ஏற்றவை. ஏனெனில் அவைதான் சந்தனத்துடன் நன்கு கலக்கும். அழகான தோற்றத்தைத் தரும். கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் மிகவும் முக்கியமானவை.

திருவாபரணங்கள் என்றாலே அதிலுள்ள நுட்பமான வேலைப்பாடுகள்தான் நம் நினைவுக்கு வரும். நாம் எத்தனை அதிகமாக நகைகள் சேர்க்கிறோமோ, அத்தனை அழகைக் கொடுக்கும். முடிந்த அளவுக்கு நகைகளை கற்பனைக்குத் தக்கவாறு அலங்கரிக்கலாம்.

கருப்பு நூல் என்பது சாதாரண நூல்தான்.

அது மிக மெல்-யதாக இருக்கும். ஏனெனில் அது கண்களுக்கு வைப்பது; மிகவும் முக்கிய மானது. கண்களுக்கு நூல்கள் பயன்படுத்து வதே சரியான அலங்கார அமைப்பாகும்.

அப்பொழுதுதான் கண்களில் கருணையையும் ஈர்ப்பையும் முழுமையாகக் காட்டமுடியும். அலங்காரங்களுக்குப் பயன்படுத்தும் வெண்ணெய்யை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதோ அல்லது வேறு ஏதேனும் செய்வதோ தவறானதாகும். அதை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் வைப்பதே சரியானது.

அத்துடன் அது ஊத்துக்குளி வெண்ணெய் யாக இருக்கவேண்டியது அவசியம். ஒரு அடி விக்ரகத்திற்கு ஒன்றரை கிலோ வெண்ணெய் இருந்தால் நன்றாக அலங்காரம் செய்யலாம்.

பழ அலங்காரத்தில் அனைத்து பழங் களையும் பயன்படுத்தலாம். முக்கியமாக ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் மிகவும் அழகான தோற்றத்தையளிக்கும்.

இனிப்பு அலங்காரம் என்றாலே முடிந்த வரை அனைத்துவிதமான இனிப்புகளையும் பயன்படுத்துவது நன்றாக இருக்கும். வெற்றிலை, கொட்டைப் பாக்கு மற்றும் சாமந்திபூ அழகைத் தரும்.

பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு (உப்பு சேர்க்காதது) மற்றும் சிலவற்றையும் பயன்படுத்தலாம்.

(அலங்காரம் தொடரும்)

சந்தேகங்களுக்கு கைபேசி: 73584 77073

தொகுப்பு: படங்கள்: விஜயா கண்ணன்