தற்காலத்தில் தனிமனித ஒழுக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நாம் கற்கவேண்டிய தாய்வழி- தாய்மொழிக் கல்வியை முடிந்தளவு சிதைத்துவிட்டோம். கல்வியில் உயிர் வேண்டும். இன்றைய கல்வியில் அது இல்லை. ஆகவேதான், அதைப் படித்துக்கொண்டிருக்கும் நமது குழந்தைகளும் உணர்வில்லாமல் போகின்றன. உயிரில்லாத கல்வியில் ஒழுக்கமிருக்காது. ஒழுக்கமில்லாத கல்வியில் அன்பிருக்காது. அன்பில்லை என்னும்போது பண்பு தொலைந்துவிடும். பண்பில்லாதபோது- அதாவது நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாதபோது- அது ஒரு தனிமனிதனின் வாழ்க்கையோ கூட்டுக்குடும்ப வாழ்க்கையோ- ஆரோக்கியமும் ஆனந்த மும் கெட்டுப் பயனற்றதாகிவிடும்.
உயிர்க்கல்வி என்பது அவரவர் தாய்மொழிக் கல்வி. நமக்கு நமது தமிழ்வழிக் கல்வி. அதில்தான் வாழ்க்கை மற்றும் வாழ்வியலுக்கான ஆரோக்கியம் இருக்கிறது. நாம் இன்றைய காலகட்டத்தில் உயிர்க்கல்வியை விட்டுவிட்டு, உயிரற்ற கல்வியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நல்ல கல்வியே நற்பண்புகளையும் நற்குணங்களையும் கொடுக்கும். ஒரு காலத்தில் தீண்டாமை மிகக்கொடூரமாக இருந்தது. அப்போதெல்லாம் கல்வியின் பங்கு மிகக்குறைவு. ஆனால், இப்போது நவீன கல்வியில் வளர்ச்சியடைந்துவிட்டோமெனக் கூறுகிறோம். எனினும் இப்போதுதான் தீண்டாமை மிகவும் கொடூரமான நோயாகியிருக்கிறது.
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்னும் நிலை தொடர்கிறது. "கோவிட் 19' எனும் கொரோனா வைரஸ் தாக்கமுள்ள இந்த நேரத்தில், எனது நண்பர் சொன்ன தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பரின் ஊர் ஒரு அழகிய கிராமம். அங்குள்ள சிவன் கோவிலில் பூஜை செய்துகொண்டிருந்த சுமார் 35 வயதுள்ள அர்ச்சகரை கொரோனா நோய் தாக்கியது. தீவிர சிகிச்சையளித்தும் பயனின்றி இறந்து விட்டார்.
அவர்கள் குடும்பம் தனிமைப் படுத்தப்பட்டது. யாரும் அவர்களுடன் பேசவோ, பார்க்கவோ கூடாதென கடுமை யாக எச்சரிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் எவ்விதப் பாகுபாடும் பார்க்கவில்லை. ஆனால், அந்த நோய் பாதிக்கப்பட்டவரை சமுதாயம் தீண்டத்தகாதவராகப் பார்க்கிறது. காரணம், கற்ற கல்வியில் ஒழுக்கமும் அன்பும் இல்லை. அதனால் கருணையும் அரவணைப்பும
தற்காலத்தில் தனிமனித ஒழுக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நாம் கற்கவேண்டிய தாய்வழி- தாய்மொழிக் கல்வியை முடிந்தளவு சிதைத்துவிட்டோம். கல்வியில் உயிர் வேண்டும். இன்றைய கல்வியில் அது இல்லை. ஆகவேதான், அதைப் படித்துக்கொண்டிருக்கும் நமது குழந்தைகளும் உணர்வில்லாமல் போகின்றன. உயிரில்லாத கல்வியில் ஒழுக்கமிருக்காது. ஒழுக்கமில்லாத கல்வியில் அன்பிருக்காது. அன்பில்லை என்னும்போது பண்பு தொலைந்துவிடும். பண்பில்லாதபோது- அதாவது நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாதபோது- அது ஒரு தனிமனிதனின் வாழ்க்கையோ கூட்டுக்குடும்ப வாழ்க்கையோ- ஆரோக்கியமும் ஆனந்த மும் கெட்டுப் பயனற்றதாகிவிடும்.
உயிர்க்கல்வி என்பது அவரவர் தாய்மொழிக் கல்வி. நமக்கு நமது தமிழ்வழிக் கல்வி. அதில்தான் வாழ்க்கை மற்றும் வாழ்வியலுக்கான ஆரோக்கியம் இருக்கிறது. நாம் இன்றைய காலகட்டத்தில் உயிர்க்கல்வியை விட்டுவிட்டு, உயிரற்ற கல்வியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நல்ல கல்வியே நற்பண்புகளையும் நற்குணங்களையும் கொடுக்கும். ஒரு காலத்தில் தீண்டாமை மிகக்கொடூரமாக இருந்தது. அப்போதெல்லாம் கல்வியின் பங்கு மிகக்குறைவு. ஆனால், இப்போது நவீன கல்வியில் வளர்ச்சியடைந்துவிட்டோமெனக் கூறுகிறோம். எனினும் இப்போதுதான் தீண்டாமை மிகவும் கொடூரமான நோயாகியிருக்கிறது.
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்னும் நிலை தொடர்கிறது. "கோவிட் 19' எனும் கொரோனா வைரஸ் தாக்கமுள்ள இந்த நேரத்தில், எனது நண்பர் சொன்ன தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பரின் ஊர் ஒரு அழகிய கிராமம். அங்குள்ள சிவன் கோவிலில் பூஜை செய்துகொண்டிருந்த சுமார் 35 வயதுள்ள அர்ச்சகரை கொரோனா நோய் தாக்கியது. தீவிர சிகிச்சையளித்தும் பயனின்றி இறந்து விட்டார்.
அவர்கள் குடும்பம் தனிமைப் படுத்தப்பட்டது. யாரும் அவர்களுடன் பேசவோ, பார்க்கவோ கூடாதென கடுமை யாக எச்சரிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் எவ்விதப் பாகுபாடும் பார்க்கவில்லை. ஆனால், அந்த நோய் பாதிக்கப்பட்டவரை சமுதாயம் தீண்டத்தகாதவராகப் பார்க்கிறது. காரணம், கற்ற கல்வியில் ஒழுக்கமும் அன்பும் இல்லை. அதனால் கருணையும் அரவணைப்பும் காணாமல் போனது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர்-
"தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்'
என்கிறார்.
கற்றறிந்து தேர்ந்த அறிஞர் பெருமக்கள், தாம் கற்றுக்கொண்ட கல்வியால் தாம் இன்புறுவதோடு, உலக மக்களும் இன்புற வேண்டுமென எண்ணுவர். அதோடு, மேன்மேலும் தான் கற்றுக்கொள்ளவும், தான் கற்றுக்கொண்ட சிறந்த கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் விரும்புவர் என்கிறார்.
30 வயது இளைஞன் ஒருவனிடம், ""கடவுள் இருக்கிறாரா?'' என்று கேட்டேன். அவன் பலமாக யோசித்தான். சொல்லத் தயங்குகிறான் என்பதைப் புரிந்துகொண்டு, ""தம்பி... உனது புத்தி என்ன சொல்கிறதோ அதைத் தயங்காமல் சொல்'' என்றேன். உடனே அவன் ""கடவுள் இல்லை'' என்றான். ""எப்படி கடவுள் இல்லையெ னச் சொல்கிறாய்?'' என்றேன். அதற்கு அவன், ""நான் என் கண்களால் கடவுளைப் பார்த்ததில்லை. எனவே, கடவுள் என்பது இல்லவேயில்லை'' என்று கூறினான். அவன் பட்ட மேற்படிப்புவரை பயின்றுள்ளான்.
நான் அவனிடம், ""பூமியிலிருந்து சூரியனைப் பார்த்தால் அது உன் கண்களுக்குத் தெரிகிறதா?'' என்றேன். ""தெரிகிறது'' என்றான். ""சரி; நீ இப்போது சூரியன் இருக்குமிடத்தில் இருந்துகொண்டு பூமியைப் பார்க்கிறாய் என வைத்துக்கொள்வோம். அப்போது உன் கண்களுக்கு பூமி தெரியுமா?'' என்று கேட்டேன். அவன் சற்று யோசித்துவிட்டு ""தெரியாது'' என்றான்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது, ஒளியானது ஒரு விநாடி நேரத்தில் மூன்று லட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஓராண்டு காலத்தில் ஒளி கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் எனப்படுகிறது. அத்தகைய கணக்கின்படி, ஒரு ஒளியாண்டு என்பது ஒன்பது லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோமீட்டர் என ஆய்வுகள் சொல்கின்றன. எவ்விதமான அறிவியல் உபகரணங்களோ, நவீன வசதிகளோ இல்லாத- தோராயமாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் கள் வெறும் கண்களால் இதனைக் கண்டறிந்து நமக்கு அரிய பொக்கிˆமாகக் கொடுத்துச் சென்றுள்ளனர். கோள்களை விடுங்கள்; அணுவை ஆராய்ச்சி செய்த முதல்கல்வி நம் தமிழ்க்கல்வி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
""பூமியிலிருந்து சூரியனைப் பார்த்தால் அது கண்களுக்குப் புலப்படுகிறது.
அதற்கிணையான இடத்திலிருந்துகொண்டு பூமியைப் பார்த்தால், பூமி நம் கண்களுக்குத் தெரியாது என்கிறபோது, பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீ எப்படித் தெரிவாய்? அப்படியானால் நீ பூமியில் இருக்கிறாயா, இல்லையா? இருக்கிறாய்தானே? நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக அது இல்லாததாகிவிடுமா?'' என்றேன்.
அவன் விழித்தான். ""கடவுளைப் பார்க்க முடியும். அதற்கு நம் ஒவ்வொருவரிடமும் ஒரு சின்ன தகுதி வேண்டும். பொய் என்ற ஒன்றை கிஞ்சித்தும் சொல்லவே கூடாது. அப்படி உன்னால் இருக்கமுடியும்போது இறைவன் உன் கண்களுக்குத் தெரிவான்'' என்றேன்.
அவன் திருப்தியடையவில்லை. ""நீ எங்கு இருக்கிறாய்?''என்றேன்.
""சென்னையில்'' என்றான்.
""உன் சொந்த ஊர் எது?'' என்றேன்.
""மதுரை'' என்றான்.
""மதுரையில் எது சிறப்பு?''
""மீனாட்சியம்மன் கோவில்.''
""இங்கிருந்து உன் கண்களுக்கு மீனாட்சி யம்மன் கோவில் தெரிகிறதா?'' என்றேன்.
""தெரியவில்லை. ஆனால் இருக்கிறது'' என்றான்.
இப்போது அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர் கள் எல்லாரும் கடவுளைப் பார்த்தவர்களா? பார்த்துவிட்டேன் என்றால் அதற்கு என்ன உருவம்? இப்படிக் கேள்விகள் நீண்டுகொண்டே போகின்றன. இதற்குத் தீர்வுகள் எவை?
தெய்வப் புலவர் திருவள்ளுவர் இதற்கு விடைகூறுகிறார்-
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.'
ஒரு செய்தியை எவரொருவர் சொல்லக் கேட்டாலும் (கேட்டதைக் கேட்டவாறு கொள்ளாமல்), அந்த செய்தியின் உண்மை யான பொருளை, உண்மைத் தன்மையைக் காணவல்லதே அறிவாகும். உண்மைத் தன்மையை ஆராய்ந்தறிந்து அதனுடன் இணைந்து நாம் செயல்படுவதே மேலான அறிவாகும்.
மேலும், எந்த உயிரினத்துக்கும் கொடுக் கப்படாத மிக உன்னதமான உயர்ந்த பொருளை இயற்கையெனும் இறைவன் ஆறறிவு படைத்த மனித இனத்திற்கு மட்டும் கொடுத்திருக்கிறான்! அது என்ன?
அதுதான் 1,360 கிராம் எடைகொண்ட மனித மூளையாகும். அதுவே பல்வேறு பதிவுகள் மற்றும் முன்பதிவுகளின் (பூர்வஜென்ம) இருப்பிடமாகும். அதை நமக்குக் கொடுத்த இறைவன், "நீ இதை நன்றாகப் பயன்படுத்தி உன்னை கவனித்துக்கொள்ள வேண்டும். நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது' எனக் கூறுகிறான்.
மனிதர்கள் அனைவருக்கும் அறிவிருக் கிறது. அது வேலை செய்கிறதா? அங்கே தான் பிரச்சினை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக அறிவு செயலற்றுக் கிடக்கிறது. பார்த்ததையும் கேட்டதையும் படித்ததையும் வைத்துக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்னும் ஆணவத்தோடு பயணிக்கிறது. அதன்விளைவு மிகக்கொடிய நோய்களையும் அது சந்திக்கிறது. கடைசியில் "கடவுளுக்கு கண் இல்லை; கடவுளே இல்லை' என்கிறது. இறைவன் நமக்குக் கொடுத்த மாபெரும் பொக்கிˆம் மானிட உடலும், அதில் புதைந்திருக்கும் அறிவுமாகும். அதை வைத்து நல்ல விˆயங்களைச் செய்திருக்கிறோமா என்றால், மிகக்குறைந்த சதவிகிதமே செய்திருக்கிறோம். காரணம், அறிவிருக்கிறது. அது அப்படியே இருக்கிறது. அறிவு இயங்காமலிருக்கும்போது பகுத்தறிவு எங்கே செயல்படும்?
பார்த்ததையோ, கேட்டதையோ, படித்ததையோ அப்படியே செய்தால் அதன் பெயர் அறிவு. ஆனால், நினைவு என்ற ஒன்று எண்ணமாக மாறவேண்டும். எண்ணம் சிந்தனையாக மாறவேண்டும். யோசிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தொடங்கவேண்டும். அப்போதுதான் அறிவு பகுத்தறிவுடன் செயல்பட ஆரம்பிக்கிறது. பகுத்தறிவதில் ஒருவன் தொடர்ந்து பயணிக்கும்போது அவன் ஞானம் பெற்றவனாகிறான்.
ஞானம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியவகையில், பகுத்தறிவின் உச்சமே பேரறிவாகும். அவன் பேரறிவாளனாகிறான்.
பேரறிவு என்பதே பெரும் ஞானமாகும். ஞானம் பெற்றவன் அமைதியாகிறான். ஆரோக்கியமாகிறான். இதனை "ஞானக் கண்' என்று திருமந்திரச் சிற்பி தன் திருமந்திரத்தில் உரைக்கிறார்.
"கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யும்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.'
பொருள்: மேலான கல்வியறிவு அடையப் பெற்றவர்கள் சற்றே சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் "ஞானக்கண்' ஒன்றுள்ளது என்பதை உணர்ந்துகொள்வார்கள். இதனை நன்குணர்ந்த கற்றறிவாளர்கள் தாங்கள் பெற்ற அனுபவ ஞானமாகிய கல்வியை மற்றவர்களுக்கும் விளக்குவார்கள். இப்படி அவர்கள் விளக்கி வழிகாட்ட, அகக்கண், ஞானக்கண் இருப்பதை அறிவுள்ள அனைவரும் அறிந்துகொள்வார்கள்.
எனவே, கல்வியென்பது சாதாரணமானதல்ல. நம் மக்கள் அனைவரும் அறிவு வெளிச்சம் பெறவேண்டும். மூடநம்பிக்கை கள் ஒழியவேண்டும். உண்மை, இறைபக்திமூலம் இயற்கையாகவுள்ள இறைவனை உணரமுடியும்.
ஞான குருவே நல்ல ஒளி விளக்காகும். இதைப் பற்றித் திருமூலர்-
"தான்நந்தி சீர்மை உள்சந்தித்த சீர்வைத்த
கோன்நந்தி எந்தை குறிப்பறிவார் இல்லை
வான்நந்தி என்று மகிழும் ஒருவருக்குந்
தான்அந்தி அங்கித் தனிச்சுடர் ஆமே.'
என்று குறிப்பிடுகிறார்.
தானே சிவமாகவும், ஞான குருவாகவும் விளங்கும் நந்தியெம்பெருமான்தான் சிவஞானத்தோடு பொருந்தி என்னை சிறப்புறச் செய்த தலைவன் ஆவான். இப்படிப்பட்ட உயர்ந்த தந்தை போன்ற பெருமானின் உளக்குறிப்பை உணர்ந்தவர்கள் யாருமில்லை. மேலான பெருமையுடைய ஞானாசிரியன் என்று நந்தியெம்பெருமானை வழிபடுபவர்க்கு, அப்பெருமான் அந்திக் காலத்தில் ஏற்றிவைக்கப்படுகிற ஒளிச் சுடரைப்போல, இருளையகற்றும் அறிவு விளக்காக இருப்பான்.
மறந்ததை நினைப்போம். மறைபொருளான பரம்பொருள் சிவத்தை உணர்வோம். திருமந்திரம் பயில்வோம். திருவருள் பெறுவோம். ஆரோக்கியம் உயர ஔவைக் குறள் பயில்வோம். அறிவு முதிர்ச்சியடைந்து பேரறிவு பெற திருக்குறள் எனும் வாழ்வியல் கல்வியைப் பயில்வோம்.
அரனின் அன்பைப் பெற்று ஆரோக்கியமான, ஆனந்த வாழ்வில் திளைப்போம்.
_______
எது வாழும்?
ஒரு சந்நியாசி தன் சீடர்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிய வைக்க விரும்பினார். அந்திமக் காலத்தில் குரு என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலாகக் கூடிய சீடர்கள் அவரருகே வந்து நின்றனர். அவர்களிடம் தன் பொக்கை வாயைத் திந்து காண்பித்து ""வாழ்க்கைத் தத்துவம் இதுதான்!' என்றார். சீடர் களுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சீடன் தயக்கத்துடன் குருவை அணுகி விவரம் கேட்டான். குரு கேட்டார்: ""என் வாய்க்குள் என்ன இருந்தது?'' ""நாக்கும் உள்நாக்கும் இருந்தன.'' ""பல் இருந்ததா?''
""இல்லை.'' ""அதுதான் வாழ்க்கை. வன்மையானது
அழியும், மென்மையானது வாழும்.''