டன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' எனும் சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் இராமாயண யுத்தம் குறித்த ஒரு சிறு குறிப்பினைப் பார்க்கலாம். இராமனுக்கும், இராவணனுக்கும் ஆரம்பக்கட்ட யுத்தம் நடக்கிறது. யுத்தம் வீரியமடைந்து இராமன் விடும் அஸ்திரங்கள் இராவணனை நிலைகுலையைச் செய்கிறது. இராவணனின் அஸ்திரங்கள் தீர்ந்துபோகின்றன. இராமன்விட்ட அஸ்திரமோ இராவணனின் கிரீடத்தையும் கவர்ந்து செல்கிறது. இராவணனோ செய்வதறியாது திகைத்து நிற்கிறான். அவன் தவறு செய்திருப்பினும் மிக சுத்தமான வீரணல்லவா? எனவே யுத்தக் களத்தைவிட்டு ஓடாமல் நிற்கிறான்.

இராமனோ திருமாலின் அவதார மல்லவா? அந்தக் கணமே இராவ ணனை அழித்திருக்க முடியும். ஆனால் இராமன் அதைச் செய்ய வில்லை. "இராவணா... நீ களைத்துப் போயிருக்கிறாய். இப்போது நான் உன்னுடன் யுத்தம் செய்தல் ஆகாது. எனவே, நீ போய் ஓய்வெடு. இன்று போய் நாளை வா'' என்று கூறினான்.

இராமன் இப்படிச் செய்ததைவிட தன்னைக் கொன்றிருக்கலாமே என்று மனம் நொந்தவாறு இராவ ணன் அரண்மனை திரும்பினான்.

இராவணனின் மனமோ மிகுந்த கலக்கத்தில் இருந்தது. அந்த சூழ்நிலையில் அவன் மனம் இருந்த நிலையை, "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்னும் ஒப்பீட்டுடன் கூறுவதுண்டு. இது கதையாக இருப்பினும் சரி; வேறு எதுவாக இருப்பினும் சரிலி இதனுள் புதைந் துள்ள உட்பொருளை நாம் உணர வேண்டும். நாம் தவறிழைத்து விட்டோம் என்ற எண்ணம், நமது மனசாட்சி நமக்கு உணர்த் தும்போது, நாம் ஒவ்வொரும் கண்டிப்பாக கலங்கித்தான் ஆகவேண்டும். தவறு செய்தவன் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்பது இயற்கைவிதி. வட்டிக்குக் கடன் வாங்குவது, கைமாற்றாகக் கடன் வாங்குவது என்பதையெல்லாம் கடந்து பிறவிக்கடன் என்று ஒன்றுள் ளது! நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்த தவறுகள்லி அதனால் உண்டாகும் விளைவு கள்லி விளைகளினால் உண்டா கும் பலன்கள்லி இவையனைத் தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு டையவை. அதைத்தான் நம் முன்னோர்கள் வினைத்தொடர்பு என்கின்றனர். இது தவறு செய்தவனை மட்டும் பாதிக்காது. அவனது சந்ததியையே பாதிக்கும். திருக்குறள் கூறும் உண்மையைப் பார்ப்போம்.

Advertisment

"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றுள்

நாமம் கெடக்கெடும் நோய்.'

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்று குற்றங் களும் தன்னைச் சாராமல் ஒருவன் நடக்கவேண்டும். தனது பெயரும்கூட கெடாதவாறு ஒருவன் நடக்கும்போது, அவற்றின் விளைவாகிய துன்பங்கள் ஒருபோதும் அவனுக்கு வராமல் கெடும்.

Advertisment

ra

எனவே ஒருவன் செய்யக் கூடிய செயல்களில் அறமும், ஒழுக்கமும், கருணையும் கலந்தி ருக்கவேண்டும். ஒரு தவறை செய்வதற்கு முன்னதாக தான் செய்யும் செயலினைப் பகுத்தறிந்து செயல்படவேண்டும். இதைப் பற்றி திருக்குறள் கூறும் இன்னுமொரு கருத்தினைப் பார்ப்போம்.

"எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றுன்ன செய்யாமை நன்று.'

"ஐயோ... எவ்வளவு தீமையான தவறை, அதன் தன்மையை அறியாமலும், அதன் விளைவை உணராமலும் செய்துவிட்டேன்!' என்று பின்னர் நாம் வருந்துவதற்குக் காரணமான செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது. ஒருவேளை தப்பித்தவறி கொடிய தீமையைச் செய்யும் நிலை நேர்ந்துவிட்டால், அதன்பிறகாவது அத்தகைய இழிவானலி தவறான செயல் களைச் செய்யாமலிருப்பது நல்லது.

எனவே, பொறாமைப்படுதல், துரோக மிழைத்தல், பிறன்மனை நோக்குதல், களவு செய்தல், கொலை பாதகச் செயல்களில் ஈடுபடுதல், அதோடு மட்டுமின்றி பிறரையும் அத்தகைய செயல்களில் ஈடுபடுத்துதல் போன்ற செயல்களில் ஒருவன் ஈடுபடுவானேயானால், எப்போதாவது ஒரு நேரம் அவன் மனசாட்சி அவனைத் தூங்கவிடாமல் செய்து, அவனது நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். இதையும் திருக்குறள் இவ்வாறு இயம்புகிறது.

"பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற் றென்று

ஏதம் பலவும் தரும்.'

பற்றுகளை எல்லாம் துறந்துவிட்டேன் என்று சொல்பவரின் பொய்யொழுக்கம்லி அதாவது தன் மனமறிந்து செய்த தீவினைகளின் பலனை அனுபவிக்கும்போது, நாம் அப்படி என்ன செய்தோம்லி என்ன செய்தோம் என்று வருந்திப் புலம்புமளவுக்கு பலவகை துன்பங்களையும் உண்டாக்கும்.

எனவே பிறஉயிர்களை நேசிக்கும்போது நாம் பிறவிக்கடனில் இருந்து விடுபட முடியும். அனைத்து உயிர்களையும் சமநோக் கில் பார்க்கும்போது நமது பிறவியானது நமக்குத் துன்பத்தைக் கொடுக்காது. வளையாபதி எனும் சங்க இலக்கியம் கூறுவதைப் பார்ப்போம்.

"ஆற்றுமின் அருள் ஆருயிர் மாட்டெல்லாம்

தூற்றுமின் அறம் தோம்நனி துண்ணன்மின்

மாற்றுமின் கழி மாயமும் மானமும்

போற்றுமின் பொருளா இவைகொண்டு நீர்.'

எல்லா உயிர்களிடத்தும் அன்புசெலுத்த வேண்டும். இரக்கம் காட்டுதல் வேண்டும். நல்லறச் செயல்களையே நாளும் செய்யப் பழகவேண்டும். தீமையை விலக்குங்கள். எந்த வொரு உயிர்க்கும் தீங்கிழைக்க எண்ணாதீர் கள். பிறரை வஞ்சிக்காதீர்கள். சூழ்ச்சி செய்யா தீர்கள். தான் எனும் அகந்தையைலி இறுமாப் பைத் தள்ளிவையுங்கள். மேலே சொல்லப் பட்ட நற்செயல்களையே உயர்ந்த செல்வமாகப் போற்றி, அவற்றையே வாழ்வில் கைக்கொண் டொழுகக் கற்றுக்கொள்ளுங்கள்.

எனவேதான், இலங்கை வேந்தன் தான் செய்த வினைப்பயனை எண்ணி மனம் வருந்தும் நிலை உருவானது. இது அவனுக்கு மட்டுமல்ல; ஆறறிவு பெற்ற அனைவருக்கும் பொருந்தும். எனவே வினைப்பயன் என்பது வாழ்க்கையில் மரபு சார்ந்து தொடர்ந்து நீடிக்கும் தன்மையுடையது.

நாம் இப்போது ரிண விமோசன லிங்கேஸ்வரர்லி அதாவது "கடன் நிவர்த்தீஸ் வரர்' எனும் வினைகளை விலக்கி, கடன் களை நிவர்த்திசெய்து பிறவிப்பயனை அருளும் பரம்பொருளின் உறைவிடமாக விளங்கும்லி மிக உன்னதமான புண்ணிய தலத்தை அறிந்துகொள்வோம். "கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயம் கும்பகோணம் மாவட்டத்தில், நாச்சியார் கோவிலுக்கு அருகில், திருச் சேறை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலின் மூலவர் செந்நெறி யப்பர் என்ற சாரபரமேஸ்வரர் ஆவார். எம்பெருமான் முக்திநெறியைக் கண்டிப் பாகத் தருபவர் என்பதால் செந்நெறியப்பர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு மனிதனி டம் எத்தனைச் செல்வம் இருந்தாலும், விளைப்பயனிலிருந்துலி அதாவது பிறவிக் கடனிலிருந்து மீள்வதற்கு ஞானம் வேண்டும். அத்தகைய ஞானத்தையும், உலக உண்மையை அறியும் தன்மையையும், வழங்குவதால், இத்தல அம்பாள் ஞானாம் பிகை எனும் பெயரோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

ஆதிகாலத்தில் திருச்சேறை கிராமத்தில் சாரபரமேஸ்வரரும், ஞானாம்பிகையும் மட்டுமே அருள்பாலித்து வந்துள்ளனர். ஒரு சமயம் சாரபரமேஸ்வரரை தரிசிக்கவந்த மார்க்கண்டேய மகாமுனிவர், திருச்சேறை யிலேயே தங்கி சாரபரமேஸ்வரருக்கு அருகில் ரிணவிமோசன லிங்கேஸ்வரரைப் பிரதிஷ்டை செய்து வணங்கிவந்தார்.

ரிணவிமோசன லிங்கேஸ்வரர் எனும் கடன்நிவர்த்தீஸ்வரர் பிறவிப் பெருங்கடனைத் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல், இப்பிறவியில் நமக்கு ஏற்படும் சகலவிதமான கடன்களையும் தீர்த்து, முன்வினை, பின்வினைகளை நீக்கி, மீண்டும் பிறவாநிலை எனும் மாபெரும் வரத்தை நமக்கு அருள்கிறார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையேனும் திருச்சேறை சென்று கடன்நிவர்த்தீஸ்வரரை வணங்கி பிறவிப் பெருங்கடனைத் தீர்ப்போம்.

வினைகளிலிருந்து எவ்வாறு விலகியிருக்க வேண்டும் என்பதற்கு திருமந்திரம் கூறும் உபாயத்தைப் பார்ப்போம்.

"நில்லாது சீவன் நிலையன்றென் றெண்ணி

வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்

கல்லா மனித்தர் கயவர் உலகினில்

பொல்லா வினைத்துயர் போகம்செய் வாரே.'

உடலில் பொருந்தியுள்ள உயிர் எப்போதும் அதிலேயே நிலைத்து நிற்காது. இதனை உணர்ந்து, கல்வி கேள்விகளில் சிறந்த அறிவு டைய பெரியோர்கள் அறச் செயல்களில் ஈடுபட வும், தவம் செய்யவும் முயலுவார்கள். கல்வியறி வற்ற மூடர்களோ கீழ்மக்களாக உலகில் வாழ்ந்து கொண்டு, பிறவித் துயருக்குக் காரணமான சிற்றின்பச் செயல்களில் ஈடுபட்டுப் பாவத்தைப் பெருக்கிக் கொண்டிருப்பார்கள்.

எனவே மனதாலும் பிறருக்குத் தீங்கிழைக் காமல், "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' எனும் கோட்பாடுகளுடன் நாம் வாழும்போது, எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமா னின் பேரருள் நமக்குக் கிட்டுமென்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அறம் செய்வோம்.

அரனின் அருளாசியோடு ஆனந்த ஆரோக்கியம் பெறுவோம்.