புராணங்களின்படி யுகங்களானது கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்று நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் வாழும் மனிதர்களின் குணநலன்கள் மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. அதன்படி கிருதயுகத்தில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்ந்தார்கள். திரேதா யுகத்தில் வாழ்ந்த மனிதர்கள்; நான்கில் மூன்று பகுதியினர், அறநெறியுடனும், மறு பகுதியினர் அறநெறியில்லாமலும் வாழ்ந்தார்கள்.
இராமர் திரேதா யுகத்தில் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த துவாபர யுகத்தில் வாழ்ந்த மனிதர்களில் சரிபாதியினர் அறநெறியுடன் மறுபாதியினர் அறநெறி தவறியும் வாழ்ந்தார்கள். கிருஷ்ணன் மற்றும் பலராமன் இருவரும் துவாபரயுகத்தில் அவதரித்தவர்கள் ஆவார்கள். நிறைவாக நாம் வாழும் கலியுகத்தில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே அறநெறியுடனும், மூன்று பகுதியினர் அறநெறியில்லாமலும் வாழ்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூமியில் மக்கள் மனதில் அறநெறிகள் குறைந்து எப்போதெல்லாம் அதர்மம் தழைத்தோங்கி தர்மம் தாழ்வுறுகிறதோ அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் பல அவதாரங்கள் (தசாவதாரம்) எடுத்து அதர் மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்தினார்.
அவ்வாறு துவாபரயுகம் முடிந்து கலியுகம் பிறக் கும் சமயம் வந்தது, வரவிருக்கும் கலியுகம் எப்படியிருக்கும் என்பதை அறியும் பேராவ லில் பாண்டவர்களில் தர்மன் தவிர்த்து மற்ற நால்வரும் கிருஷ்ணரிடம் கலியுகத்தைப் பற்றிய விளக்கம் கேட்டனர். கிருஷ்ணர் திசைக்கு ஒன்றாக நான்கு அம்புகளை வீசி, தான் வீசிய அம்புகளை திசைக்கு ஒருவராகச் சென்று அவற்றை எடுத்து வருமாறும்; அவ்வாறு எடுத்து வரும்போது நீங்கள் நால்வரும் காணும் காட்சிபோல்தான் கலியுகம் அமையும் என்று கூறினார்.
நால்வரும் அதன்படி திசைக்கு ஒருவராகச் சென்றனர். பீமன் அம்பை எடுக்கும்போது; நான்கு கிணறுகளில் தேனமுதுபோல் தண்ணீர் நிரம்பி வழிவதையும், நடுவிலுள்ள கிணற்றில் ஒரு சொட்டுகூட தண்ணீரின்றி வறண்டு இருப்பதையும் கண்டான். அர்ச்சுனன் சென்ற திசையில் குயிலின் இனிமையான ஓசை கேட்டது. குயிலின் ஒலியை ரசித்தபடி சென்ற அர்ச்சுனன் அவன் கண்ட காட்சி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனிய குரலில் ஒலி எழுப்பிக்கொண்டிருந்த குயில் தன் அலகால் ஒரு முயலைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது. சகாதேவனும் தான் சென்ற திசையில், ஒரு பசு பாசமிகுதியால் தனது கன்றை நாவால் தடவிக்கொண்டிருந்தது. பசு நாவால் தடவிக்கொண்டிருந்த இடம் முழுவதும் புண் உண்டாகும் வலி பொறுக்க முடியாமல் கன்று கதறிக் கொண்டிருந்தைக் கண்டான். நகுலன் சென்ற திசையில் ஒரு ராட்சதப் பாறை மலை உச்சியில் இருந்து உருண்டோடி வந்து, பெரிய மரங்கள் மற்றும் பெரிய பாறை இடுக்குகள் என அனைத் தையும் தகர்த்து எறிந்துகொண்டே வந்த பாறை ஒரு சிறிய புல் தட்டி நின்றது கண்டு நகுலன் வியந்து போனான். நால்வரும் அம்பை எடுத்துக்கொண்டு கிருஷ்ணரிடம் வந்து தாங்கள் கண்ட காட்சிகளைக் கூறினார் கள். அதைக்கேட்ட கிருஷ்ணர் கலியுகம் நீங்கள் கண்ட காட்சிகள் போன்றுதான் இருக்கப்போகிறது என்றார். பின்னர் கிருஷ்ணர் அந்த நால்வர் கண்ட காட்சி களையும் விளக்கினார். "பீமா நீ கண்ட அந்த நான்கு கிணறுகள் செல்வந்தர்கள் போன்றவர்கள், நடுவில் தண்ணீர் இன்றி வற்றிய கிணறு வறுமையில் வாடும் ஏழை கள் போன்றவர்கள்.
செல்வந்தர்களிடம் அதிகமான செல்வம் நிறைந்திருக்கும். ஆனால் அவர்களோ அதிலிருந்து சிறிதளவும் வறுமையில் வாடும் ஏழைகளுக்குத் தரமாட்டார்கள்.
அவர்களைப் பற்றி சிந்திக்கவும் மாட்டார் கள் என்று விவரித்தார் அர்ச்சுனர்.
நீ கண்ட குயிலைப் போன்றவர்கள்தான் கலியுகத்தில் பல குருமார்கள் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்வார்கள். மக்கள் நலனில் அக்கறையுடன் அருமையாகப் பேசும் அவர்கள் அருகில் சென்று பார்த் தால்தான் தெரியும், இனிய குரலில் ஒலி எழுப்பிய குயில் எவ்வாறு முயலைக் கொத்தித் திண்கின்றதோ, அதைப்போலவே, அவர்களும் மக்களை உடனிருந்து அழித்துக் கொண்டிருப்பார்கள்.'' சகாதேவா கலியுகத் தில் பெற்றோர்கள் அந்த பசுவின் செயலைப் போலவே தங்கள் பிள்ளைகளின் மேலுள்ள பாசமிகுதியால் அவர்களின் எதிர்கால நலன் கருதி செய்யும் செயல்களே அவர்களை துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்றார். நகுலா நீ கண்ட ராட்சதப் பாறை போன்றவர்கள் தான் கலியுகத்தில் இளைஞர்கள் இருப் பார்கள். அவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் களின் அறிவுரைகளை மதிக்காமல் எடுத் தெறிந்துவிட்டு தன் மனம் போன போக்கில் கட்டுப்பாடுகளின்றி செயல்படுவார்கள். மலை உச்சியில் இருந்து பெரிய பாறைகளை யும், மரங்களையும், தகர்ந்தெரிந்தவாறே உருண்டு வந்த பாறை புல் தட்டி நின்றது போல், ஆன்மிக சக்தியால் மட்டுமே அவர் களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று நால்வர் கண்ட காட்சிகளின் பொருளை விவரித்தார் கிருஷ்ணர்.
இன்றைய சூழ்நிலையில் நாம் அன்றாடம் கண்டும் கேட்டும் வரும் செய்திகள் அன்று அவர்களிடம் கிருஷ்ணர் விவரித்த காட்சி களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை என்றே தோன்றுகிறது. "செல்வர்க்கழகு செழுங்கிளை தாக்குதல்'' என்று நறுந்தொகை கூறுகிறது. இவ்வாக்கியத்தின் பொருளானது செல்வம் படைத்தவர்கள், தங்களைச் சார்ந்த வறுமையில் வாடும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாவர்க்கும் தன்னிட முள்ள பொருளைக் கொடுத்து உதவவேண் டும் என்பதே ஆகும். ஆனால் இன்றோ பல செல்வந்தர்கள் தன் உடன்பிறந்தவர் களுக்குக்கூட தன்னிடமுள்ள சிறிய அளவி லான பொருளைக் கொடுத்து உதவ முன் வருவதில்லை. மாறாக கோவில்களில் அன்னதானம், காணிக்கையாகக் பொன்னும், பொருளும், கணக்கின்றி வாரி வழங்கிவருகி றார்கள் என்பதை பீமன் கண்ட காட்சி உறுதிப்படுத்துகிறது.
பலமத குருமார்கள், ஏன் நன்னெறியைப் போதிக்கக்கூடிய ஆசிரியர்களிடம்கூட நம் பிள்ளைகளை இன்று நம்பி பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை. தேர்தல் வந்தால் மக்களிடம் பல வாக்குறுதிகளை அள்ளி வீசும் பல அரசியல்வாதிகள், தங்களின் வெற்றிக்குப் பின் பொதுமக்களின் நலன்கருதாமல் பல வகைகளில் மக்களைத் துன்புறுத்துகிறார் கள் என்பதை அர்ச்சுனன் கண்ட காட்சி போன்றே உள்ளதை அறிகிறோம்.
சகாதேவன் கண்ட காட்சி போன்றே இன்றைய பெற்றோர்களும் தங்கள் பிள்ளை களின் மேலுள்ள பாசமிகுதியால் அவர் களின் எதிர்கால நலன்கருதி உயர்ந்த கல்வி, அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம். ஆனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் துணிவின்றி பல விபரீத முடிவை நாடுவதற்கு அதுவே காரணமாக அமைகிறது. நகுலன் கண்ட காட்சி போன்றே இன்றைய இளைஞர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்காமல் மனம் போன போக்கில் அறநெறி தவறி வாழ்வதால் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். அவர் களின் செயலை தடுத்து நிறுத்தி நல்வழிப் படுத்தும் சக்தி ஆன்மிகத்திற்கு மட்டுமே உண்டு.
ஒவ்வொரு யுகங்களாக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த ஒன்பது அவதாரங்களை எடுத்த இறைவன் இந்த கலியுகத்தை முடிவிற்கும் கொண்டுவர அடுத்த அவதாரத்தை இன்னும் ஏன் எடுக்க வில்லை என்ற சிந்தனையை, நமக்குத் தூண்டு கிறது. இந்த கலியுகத்தை முடிவிற்குக் கொண்டு வரவே பஞ்சபூதங்கள்மூலம், இயற்கைச் சீற்றங்களாக அவதாரம் எடுத்து நமக்கு எச்சரிக்கை விடுத்தான். கலியுகத்தை முடிவிற்குக் கொண்டுவரும் பொறுப்பை இறைவன் இம்முறை நம்மிடமே ஒப்படைத்து விட்டான். கலியுகத்திற்கு அடுத்த யுகம் சத்திய யுகமாகும். மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அவதாரம் எடுத்து தங்கள் மனதிலுள்ள அதர்ம எண்ணங்களைக் கொன்று தர்மவழியில் வாழ்ந்தால் நிச்சயமாக கலியுகத்தை முடிவிற்குக் கொண்டுவந்து சத்திய யுகமாக மாற்றும் சக்தியுண்டு. அச் சக்தியே ஆன்மிக சக்தியாகும். எனவே உண்மை ஆன்மிகம் உணர்ந்து, வரும் ஸ்ரீ விசுவாவசு ஆண்டை சத்ய யுகமாக மாற்றி புதுயுகம்