"உடம்பு உயிரெடுத்ததோ உயிர் உடம்பெடுத்ததோ
உடம்பு உயிரெடுத்தபோது உருவமேது செப்புவீர்
உடம்பு உயிர் இறந்தபோது உயிரிறப்ப தில்லையே!
உடம்பு மெய் மறந்து கண்டுணர்ந்து ஞானமோதுமே.'
-சிவ வாக்கியம்
உடலென்பது நம் செயல்களினால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. செயல்படாவிட்டால் உடலின் மொத்த இயக்கமும் நின்றுவிடும். பிடித்தது- பிடிக்காதது, இன்பம்- துன்பம் என எதுவானாலும் செயலின் முடிவில் கிடைக்கிறது. ஆனால் நாம் விரும்புவதோ இன்பம் மட்டுமாகவே இருக்கும். துன்பமானது துயரத்தில் ஆழ்த்திவிடும்.
உடல் தொடங்கும் செயலின் ஆரம்பம்- பிறப்பு;
செயல்பாடு நடத்தல்- வாழ்க்கை; செயலின் முடிவு- மரணம் என்று கொள்வோம். இந்த முடிவின் உண்மை பயமும் வ-யும் கொடுக்கிறதா?
மரணம் துன்பம்தான். ஆனால், அதைவிட கொடியது மரணபயம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivan_88.jpg)
அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் எங்ஙனம்?
பிறப்பிற்குப்பின் சரி யான முறையில் நல் வாழ்க்கை வாழ்ந்து, நிறைவான முடிவாக மரணத்தை எண்ணிக்கொள்ள மனம் பக்குவப்பட வேண்டும். மரணபயம் வாழ்நாள் முழுமையையும் துன்பமாக்கிவிடும். என்றோ வரப்போகிற ஒன்றுக்காக துன்பப்பட்டுக்கொண்டே இருப் பதைவிட, "வருவது திண்ணம்; தப்பிக்க இயலாது' என்றறிந்த நிலையில் ஆனந்தமாக கிடைத்த வாழ்க்கையை நன்முறையில் வாழப் பழகிக்கொள்வோம்.
இறைவனின் படைப்பில், நமது இந்த தூல உடலைவைத்து, இயற்கையாகவே எல்லா ரகசியங் களையும் உள்வைத்து அற்புதமான நாடகம் நடக்கிறது. இந்த நாடகத்தில் நாம் நடிகராக மட்டும் இருக்காமல், பார்வையாளராகவும் இருந்து ரசித்துப் பார்க்கவேண்டும்.
அப்பொழுதுதான் உண்மைகள் நமக்குப் புரியவரும்.
சாதாரணமாகவே மனிதரின் மனம் உலக ஆசைகளின்பின் செல்லும் இயல்புடையது. அதனா லேயே நாம் சுகம் பல பெற்றாலும் எந்நாளும் நிம்மதி பெறுவதில்லை. சுகத்திலேயே மூழ்கிப்போய், அது நிலைக்கவேண்டுமே என்னும் பயத்திலேயே வாழ்கிறோம். எனவேதான் மரணத்தை நினைத்து பயம் ஏற்படுகிறது.
இந்த உண்மையை உணர்ந்து, செயலை- அதாவது வாழ்க்கையைத் துவங்கும்போதே, "நான் என் வேலையை கர்மசிரத்தையுடன் செய்கிறேன். இறைவா, உடனிரு. பலன் எதுவானாலும் ஏற்கும் மனதிடம் கொடு' என்று வாழ்ந்தால், மரணம் ஒரு பொருட்டே அல்ல.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு அனுபவம்- அவரவர் வாழ்க்கையை நடத்தும்விதமாய் அமைகிறது. எப்படி வாழ்ந்தாலும், என்ன அனுபவ மானாலும் மரணம் சர்வ நிச்சயம்.
எனவே, நல்விதை விதைத்து, நல்ல உரமிட்டு, நல்லவிதமாய்ப் பராமரித்தால் நல்ல பயிர், இனிய கனி எப்படி உறுதியோ, அது எவ்வளவு சந்தோஷமோ, கொண்டாட்டமோ அவ்விதமே மரணத்தை எதிர்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும், மனப் பக்குவத்தையும் பெறும்வகையில் வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.
நல்விதை: பிறப்பு.
நல்ல உரம், பராமரிப்பு, பயிர் வளர்க்கும்விதம்: நாம் வாழும் முறை. தியானம், யோகம், இறையன்பு ஆகியவையே வாழ்வின் பராமரிப்பு முறைகள்.
பலன்: நல்ல பயிர், இனிய கனியாய் நல்ல மரணம். அடுத்தநிலை நோக்கி ஆத்மாவின் நற்பயணம்.
வாழும்முறை நல்ல விதத்தில் அமைத்தால், மரணத்தின் அர்த்தம் புரிந்துவிடும். மரண மென்பது தற்காலிகமான- அணியும் சட்டைபோல் உடலுக்கு மட்டுமே; ஆன்மா வுக்கு அல்ல! ஆன்மாவுக்கு என்றுமே அழிவில்லை.
ஆன்மாவுக்கு அழிவில்லை எனில், உடல் சட்டையைக் கழற்றியப்பின் ஆன்மா என்னவாகிறது?
நாம் இறக்கவில்லை. ஆன்மாதான் நாம்; நாம் என்பதுதான் ஆன்மா. சட்டையை மாற்றுவதுபோல், ஒரு உட-னின்று வெளியேறி வேறு உடல் என்னும் சட்டையைப் போட்டுக்கொள்கிறது ஆன்மா. அவரவர் கர்மவினையைப் பொருத்து, இறைவனால் அடுத்த சட்டை தரப்படுகிறது. மறுபடியும் மனித உடலோ, விலங்கோ, தாவரமோ ஏதோ ஒரு சட்டை! ஏதாவது உட-னுள் அடுத்த புதுவாழ்வை நோக்கி ஆன்மா குடிபுகுந்துவிடுகிறது.
நசிகேதன் என்னும் சிறுவன் தன் பன்னிரண்டு வயதிலேயே எமனை சந்தித்து மரண ரகசியம் கேட்டறிந்த நிகழ்வை "கடோபநிஷத்'மூலம் நாமறிவோம். சிறு வயதிலேயே ஞானியாக, "உலக இன்பங்கள் வேண்டாம்; மரண ரகசியம் மட்டுமே தெரியவேண்டும்' என எமனிடம் தர்க்கம் செய்து, ரகசியம் அறிந்த ஞானச் சிறுவன்.
உலக இன்பங்கள், பணம், பொருள், புகழ், மண் போன்றவையெல்லாம் மனிதரின் மனம் விரும்புவது. இந்த விருப்பங்கள் மனதைவிட்டு விலகும்போது, மரணமில்லா நிலை கிட்டுகிறது. வாழும்போதே உலக ஆசைகளைத் துறந்தால், தூய்மையான மனம் இறைவனை மட்டுமே நாடிப்போகும்.
அத்தகையவர் மறுபிறவியில்லா வரம் கிடைக்கப் பெறுவர்.
உயிர்காக்கும் சிகிச்சை செய்யும் மருத்துவர் எப்படி முழு விழிப்புணர்வோடு சிகிச்சையில் மட்டும் கவனம் செலுத்துகிறாரோ, அத்தகைய விழிப்புணர்வு நமக்குள் வந்துவிட்டால், ஆன்மாவை நாம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வுலக இன்பங்களுக்கு அடிமைப்பட்டு, அவற்றிலேயே ஆழ்ந்திருந்தால் மரணமும், மரண பயமும் நிச்சயம்தான். நிலையற்ற உலக- உடல் வாழ்க்கையினின்று விலகி, அழிவற்ற ஆண்டவனை அறிய முயல்வோம். இறையருள் பெறுவதோடு மட்டுமின்றி, மரண பயத்தையும் வெல்வோம்.
மனிதன் ஆசைகளை விலக்கும் முயற்சியாய், நம்மில் இருந்துகொண்டே நம்மில்-ருந்து வெளிவந்து, நம்மைநாமே தள்ளிநின்று ஒரு சாட்சியாய்ப் பார்ப்போம். நம அகத்தைப் பார்ப்போம். தியானம், யோகம், நல்வாழ்க்கைமுறை, இறைநம்பிக்கை ஆகியவை இந்த அக ஆராய்ச்சிக்குத் துணைநிற்கும்.
நசிகேதன்போல் அற்புதமான கேள்விகளும், தேடுதல்களும் நம் மனதில் தோன்ற ஆரம்பித்தால், இறைவன் தானாக நம் கைப்பிடித்து ஏற்றிவிடுவார். மரணமும் தனியான ஒரு நிகழ்வாகாமல், வாழ்வின் நிகழ்வுகளில் ஒன்றாய்க் கடந்துபோகும்.
"கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே
கற்றதெல்லாம் பொய்யே நீர் களித்ததெல்லாம் வீணே
உண்டதெல்லாம் மலமே உட்கொண்டதெல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலரே
விண்டதனால் என் பயன் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே.'
-வள்ளலார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/sivan-t.jpg)