ஞாயிறு போற்றுவோம்! மாமழை போற்றுவோம்!

/idhalgal/om/lets-celebrate-sunday-lets-celebrate-rain

ர்ப் பின்னர் சுழலும் உலகில், பசிப்பிணி மருத்துவர்களாகிய உழவர்களின் திருநாளே பொங்கல் பண்டிகையானது.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் வயலில் வியர்வைசிந்தி உழைக்கும் உழவர்கள், பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். "தை பிறந்தால் வழி பிறக் கும்' என்பது ஆன்றோர் வாக்கு. தைத் திருநாளில் இதுவரை இருந்துவந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்னும் நம்பிக்கையோடு இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

pongal

வேளாண் தொழில் தொடர்பாக விதைநெல் (இந்திரன்), மழை (மாரியம்மன்), ஏரி காத்தல் (ஐயனார்), உழவுக் கருவி (பலராமன்) என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கடவுள் வழிபாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இயற்கை வழிபாட்டில், முதலாவதாக இடம்பெறுவது போகிப் பண்டிகை. இது தமிழ் ஆண்டில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று- அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகையில் பூளைப்பூக் கட்டினை வீட்டின் கூரையில் வைப்பர். இது வெற்றியின் சின்னமாகக் கருதப்படுகிறது.

"போக்கி' என்ற சொல் மருவி, போகி என்றாகிவிட்டதாக சொல்வோரு முண்டு. இந்தநாள் "பழையன கழித்து புதியன புகவிடும்' நாளாக- பழையவற்றையும், பயனற்றவையையும் அகற்றும் நாளாகக் கருதப்படுகிறது. அசுத்தங்களைப் போக்கி சுத்தத்தை வரவேற்பது என்பதே இந்தப் பண்டிகை யின் தத்துவம். அசுத்தம் எண்பது வீட்டில் மட்டுமல்லாது, நமது மனதிலும் உள்ள அசுத்தங்களைப் போக்குவதும் இதில் அடங்கும். போகி, போகம் துய்ப்ப வனாகிய இந்திரனுக்காக ஒதுக்கப்பட்டது. போகி பண்டிகைக்கும், இந்திரதேவன் (மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ண பகவானுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

தேவர்களின் அரசனாக விளங்கும் இந்திரனை மக்கள் வணங்கிவந்தனர்.

தலைமைக் கடவுளாகப் போற்றப்பட்ட வன் இந்திரனே. இந்திரனுக்குக் கொடுக்கப் பட்டுவந்த இந்த மரியாதை அவனுக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்கச் செய்தது. மற்றவர்களைக் காட்டிலும் தானே மிகவும் சக்திவாய்ந்தவனாகக் கருதினான். குழந்தை கிருஷ்ணருக்கு இது

ர்ப் பின்னர் சுழலும் உலகில், பசிப்பிணி மருத்துவர்களாகிய உழவர்களின் திருநாளே பொங்கல் பண்டிகையானது.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் வயலில் வியர்வைசிந்தி உழைக்கும் உழவர்கள், பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். "தை பிறந்தால் வழி பிறக் கும்' என்பது ஆன்றோர் வாக்கு. தைத் திருநாளில் இதுவரை இருந்துவந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்னும் நம்பிக்கையோடு இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

pongal

வேளாண் தொழில் தொடர்பாக விதைநெல் (இந்திரன்), மழை (மாரியம்மன்), ஏரி காத்தல் (ஐயனார்), உழவுக் கருவி (பலராமன்) என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கடவுள் வழிபாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இயற்கை வழிபாட்டில், முதலாவதாக இடம்பெறுவது போகிப் பண்டிகை. இது தமிழ் ஆண்டில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று- அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகையில் பூளைப்பூக் கட்டினை வீட்டின் கூரையில் வைப்பர். இது வெற்றியின் சின்னமாகக் கருதப்படுகிறது.

"போக்கி' என்ற சொல் மருவி, போகி என்றாகிவிட்டதாக சொல்வோரு முண்டு. இந்தநாள் "பழையன கழித்து புதியன புகவிடும்' நாளாக- பழையவற்றையும், பயனற்றவையையும் அகற்றும் நாளாகக் கருதப்படுகிறது. அசுத்தங்களைப் போக்கி சுத்தத்தை வரவேற்பது என்பதே இந்தப் பண்டிகை யின் தத்துவம். அசுத்தம் எண்பது வீட்டில் மட்டுமல்லாது, நமது மனதிலும் உள்ள அசுத்தங்களைப் போக்குவதும் இதில் அடங்கும். போகி, போகம் துய்ப்ப வனாகிய இந்திரனுக்காக ஒதுக்கப்பட்டது. போகி பண்டிகைக்கும், இந்திரதேவன் (மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ண பகவானுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

தேவர்களின் அரசனாக விளங்கும் இந்திரனை மக்கள் வணங்கிவந்தனர்.

தலைமைக் கடவுளாகப் போற்றப்பட்ட வன் இந்திரனே. இந்திரனுக்குக் கொடுக்கப் பட்டுவந்த இந்த மரியாதை அவனுக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்கச் செய்தது. மற்றவர்களைக் காட்டிலும் தானே மிகவும் சக்திவாய்ந்தவனாகக் கருதினான். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரியவந்தவுடன், இந்திரதேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

கிருஷ்ணன் தன்னுடன் ஆநிரை மேய்க்கும் நண்பர்களை கோவர்த்தன மலையை வணங்குமாறு தூண்டினார். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினான். ஆநிரை மேய்ப்பவர்களையும், ஆநிரைகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்த்தன மலையைத் தன் சிறிய கைகளில் தூக்கினார் கண்ணன். இந்திரன் உருவாக்கிய புயலி-ருந்து அனைவரையும் காக்க அந்த மலையைச் சுமந்தபடியே நின்றார். மூன்று நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன்பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டான் இந்திரன். பணிவுடன் இருப்ப தாக வாக்களித்த இந்திரன், கண்ணனிடம் மன்னிப்பு கோரினான். அன்றுமுதல் இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகிப் பண்டிகை யைக் கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார் என்பது புராணம்.

போகிப் பண்டிகையானது இந்திரனை சிறப்பிக்கும் வகையில், மருதவளம் நிறைந்த சோழநாட்டில் காவிரி ஊடறுத்துப் பாயும் புகார் நகரில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.

பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பமடை யாது இருத்தல் பொருட்டு தெய்வத்தைக் கருதிச்செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். மழை, இடி, மின்னல்களின் கடவுளாக இருப்பவன் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழிக்குமென மக்கள் நம்பினர். மழைக் கடவுளான இந்திரனை வழிபட்டனர். சங்க காலத்திலேயே இந்திர வணக்கமும் அவனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் தமிழர்களிடையே இருந்திருக்கிறது. இதை சங்க இலக்கியமான "ஐங்குறுநூறு' குறிப்பிடுகிறது.

இந்திரவிழா கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் மழையேயாகும். மழைக் கடவுளான இந்திரனுக்கு விழா எடுத்து வணங்கி அவனது அருளாகிய மழையைப் பெறுவதே இதன் குறிக்கோளானது. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதேயாகும்.

pongal

சோழமன்னன் தொடிதோட் செம்பியன் எடுத்த காமன்விழாவே இந்திர விழாவானது.

இருபத்தெட்டு நாட்கள் அரசாங்க விழா வாகவே இந்திர விழா கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளை யானைக் கொடி ஏற்றப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. காவிரிப்பூம்பட் டினத்தை மையமாகக்கொண்ட ஐம்பெருங் காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அன்றைய இந்திர விழாவே இன்றைய பொங்கலுக்கு வழிசமைத்தது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளதை ஒரு சான்றாகக் கருதலாம். (கரும்பு வில் மன்மதனுக்குரியதாக புராணம் கூறுகிறது. மன்மதனின் தலைவன் இந்திரன். போகத்தில் திளைப்பவன். இந்திரனே மன்மதமனாகக் கருதப்பட்டான். எனவே அதன் அடையாளமாக கரும்பு குறிப் பிடப்படுகிறது.) இப்படி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப் பட்டமையால்தான் காவிரிப்பூம்பட்டினத் தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் நம்பிக்கையுண்டு.

பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத் தைக் கடல்கொண்டதால், பேரரசின் தலை நகரம் உறையூராகி, பின் தஞ்சையானது.

சங்ககாலம் தொட்டு தட்சிணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டா டும் வழக்கம் இருந்துவந்தது. பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல்கொண்ட பின், உத்தராயண காலத்தின் தொடக்கத்தில் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் வழக்கம் உண்டானது. காலப்போக்கில் இந்திர வழிபாடும், விழா எடுக்கும் வழக்கமும் அருகி மறைந்துவிட்டது. கண்முன்னே தெரியும் சூரியனே காலநிலையை நிர்ணயிப்பவன் என்ற நம்பிக்கை வந்தது. மழைக்கடவுளான மாரியம்மன் வழிபாடு வலுப்பெற்றது.

விவசாயம் சிறக்க வழிவகுக்கும் முதற்காரணி காலநிலை. அந்தவகையில் சூரியனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக, அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளன்று சமைத்து சூரியனுக்குப் படைத்து நன்றி செலுத்தினர். அது தைப் பொங்கலாகியது. அறுவடை கண்ட பூரிப்பால் அந்த மகிழ்வைக் கொண்டாடுவதே பொங்கல் பண்டிகையானது.

ஒரு காலத்தில் ஊரே திரண்டு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிய பண்டிகைகள் எல்லாம் இன்று வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்படுவனவாக முடங்கிவிட்டன. புது மண்பானையில் மஞ்சள் கிழங்கு சுற்றி முற்றத்தில் பொங்கல் பொங்கிய காலமொன்றும் இருந்தது. அது இன்று தொல்சமய முறைகளில் பின்பற்றப்பட்ட ஒரு சடங்காக மட்டுமே மாறிவிட்டது.

பொங்கல் பண்டிக்கைக்கு விசேஷம் ஒன்றுண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம்வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்குநோக்கி பயணிக்கி றார். இதை உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடிமுதல் மார்கழிவரை வடக்கிலிருந்து தெற்குநோக்கிப் பயணமாகிறார். இதை தட்சிணாயனம் என்பார்கள். உத்தராயண காலத்தின் தொடக்க நாட்களை போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள் (மாட்டுப் பொங்கல்) என கொண்டாடுகிறார் கள். உத்தராயண காலம் என்பது தேவர் களின் பகல் பொழுது. மங்களகரமான காரியங்களைச் செய்ய உத்தராயணமே சிறந்த காலம் என்கிறது புராணம்.

மாட்டுப் பொங்கல் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றிகூறும் நாளாகும். உழுவதிலிருந்து உழுத நிலத்திற்குத் தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் பயன்படும் மாடுகளை கௌரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் என்றழைக்கப்படும் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடு கின்றனர். வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றுக்கு மாலையிட்டு, மஞ்சள், குங்கும மிட்டு அவற்றுக்குப் பூஜைசெய்வர். அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப் பொலிவு பெறும். மாடுகள் அழகாக அலங்கரிக் கப்பட்டு, அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு, அவை ஊர்வலமாக அழைத்து வரப்படும். அவை தாள கதியுடன் "ஜல்ஜல்' என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற் கரிய காட்சியாகும்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவி களையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும், தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன்பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்றுள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராணக் கதையின்படி, சிவபெருமானின் சாபத்தைப்பெற்ற நந்திதேவர், அந்த சாபத்திற்குப் பரிகாரத்தை சிவனிடமே கேட்டார். நந்தி செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்குப் பஞ்சம் ஏற்படு மென கூறிய சிவபெருமான், அதற்குப் பரிகாரமாக நந்தி பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டுமென கூறினார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். சமீபகாலமாக, பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக, தை மாதத்தின் இரண்டாவது நாளான வான்புகழ் தந்த வள்ளுவரைப் போற்றிப் புகழும் திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. சூரியனின் ஒரு மகர ராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு.

காணும் பொங்கல் என்பது உற்றார்- உறவினர், பிரிந்துசென்ற நண்பர்களை மீண்டும் கண்டு உறவைப் புதுப்பிக்கும் நிகழ்வாகும். இது பொங்கல் பண்டிகையின் நான்காவது தின கொண்டாட்டமாகும். வீட்டிலிருக்கும் வயதில் மூத்தவர்கள் கால்களில் விழுந்து ஆசிபெற்றுக்கொள்வது போன்றவை நடைப்பெறும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். பொங்கல்பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினைக் கட்டி, அதனையெடுத்து முதிய தீர்க்கசுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசிபெற்று, அதனை கல்லில் இழைத்து பாதத்தில், முகத்தில் பூசிக்கொள்வார்கள். இதுதவிர, உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திக்கும் நோன்பாகவும் கொண்டாடப்படுகிறது.

இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டா டப்படும் பொங்கல் திருநாள், தமிழர் வாழ்வில் வளம் சேர்க்கும்.

om010122
இதையும் படியுங்கள்
Subscribe